Monday, May 31, 2010

திமுக: துரோகங்களின் காலம் ?



திராவிட இயக்க வரலாற்றின் மிக முக்கியமான விழுதாக இருக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்தில், இது துரோகங்களின் காலமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ராஜ்ய சபைக்கு ஏற்பட்டுள்ள காலியிடங்களுக்கு, ஏராளமான பேர், திராவிட முன்னேற்றக் கழகத்திலேயே தகுதி உடையவர்களாக இருக்கும் சூழலில், தற்போது, திமுக உயர்நிலைக் குழு அறிவித்திருக்கும் வேட்பாளர்கள், திமுகவில் விசுவாசத்துக்கு இடம் இல்லையா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

தற்போது, திமுகவில் வேட்பாளர்களாக அறிவிக்கப் பட்டிருப்பவர்கள் யார் ?
முதலில் கே.பி.இராமலிங்கம்.

யார் இந்த கே.பி.இராமலிங்கம் ?



சேலம் ராசிபுரம் தொகுதியில், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சட்டமன்ற வேட்பாளராக நின்று, 1980ம் ஆண்டு வெற்றி பெற்று, அதிமுக எம்எல்ஏவாக இருந்தவர்.

1984 நடைபெற்ற தேர்தலில் மீண்டும் அதே ராசிபுரம் தொகுதியில் எம்எல்ஏவாக வெற்றி பெற்றவர்.

1987ல் எம்ஜி.ராமச்சந்திரன் திடீரென்று இறந்ததும், அவரின் இறுதி ஊர்வலம் பெரும் கலவரத்திற்கிடையில் நடந்தது. அப்போ, ராணுவ வாகனத்தில், எம்ஜிஆரின் உடல் ஏற்றி வைக்கப் பட்டிருந்த பொழுது, அந்த ராணுவ வாகனத்தில் ஏற, பலர் முண்டியடித்துக் கொண்டு முயற்சி செய்தனர்.

செல்வி.ஜெயலலிதா, எம்ஜிஆர், ப்ரூக்ளின் மருத்துவ மனையில் சிசிச்சை பெற்ற காலத்திலேயே இன்று கருணாநிதியின் அன்பு உடன் பிறப்பாக உருவெடுத்துள்ள, ஆர்.எம்.வீரப்பனால், ஓரங்கட்டப் பட்டு ஒதுக்கி விடப்பட்டிருந்தார்.
எம்.ஜி.ஆர் இறந்தவுடன் அவரது உடலைப் பார்க்க வந்த ஜெயலலிதா, பின்னாளில் ஒரு நாள் நாம், அதிமுகவின் தலைவராக ஆவோம், பிறகு முதலமைச்சராக ஆவோம், அதனால், இப்போது, எம்ஜிஆரின் இறுதி ஊர்வலம் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அந்த ராணுவ வண்டியில் ஏறி செல்லலாம் என்று திட்டமிட்டு செயல்பட்டார் என்று கருத முடியாது.


எத்தனையோ அரசியல் தலைவர்கள் அதிமுகவில் இருந்த போதும், ஜெயலலிதாவுக்குத் தான், எம்ஜிஆர் கொள்கைப் பரப்புச் செயலாளர் பதவியை வழங்கினார். ஜெயலலிதாவைத் தான் ராஜ்ய சபை உறுப்பினராக்கி, டெல்லிக்கு அனுப்பினார். அதனால், எம்ஜிஆரின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்கும், எம்ஜிஆர் உடல் வைக்கப் பட்டிருந்த ராணுவ வாகனத்தில் ஏறிச் செல்வதற்கும், செல்வி.ஜெயலலிதாவுக்கு, தகுதி உண்டா என்றால், கண்டிப்பாக உண்டு.


அந்தத் தகுதியின் அடிப்படையில், ஜெயலலிதா, ராணுவ வண்டியில் ஏறிய பொழுது, அந்த வண்டியில் ஏற முயற்சித்த ஜெயலலிதாவை வண்டியில் இருந்து, அன்றைய தூர்தர்ஷனில் நேரடி ஒளிபரப்பு நடந்து கொண்டிருந்த போதே, பிடித்துத் தள்ளிவயவர்தான் இந்த கே.பி.ராமலிங்கம். இப்படிப்பட்ட கே.பி.ராமலிங்கம், மற்றவர்கள் எல்லாரையும் போலவே, ஜெயலலிதா ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு செல்வாக்குப் பெறுவார் என்பதை எதிர்ப்பார்க்க வில்லை. நீதிபதியின் மருமகனெல்லாம் கஞ்சா வழக்கில் ஜெயிலுக்குச் சென்ற காலம் அது.

அப்போது அமலில் இருந்த தடா சட்டத்தின் கீழ், ஜெயலலிதாவுக்கு, யார் யாரையெல்லாம் பிடிக்காதோ, அவர்கள் அனைவரையும் கைது செய்து கொண்டிருந்தார். இதற்குப் பயந்துதான், இன்று, கருணாநிதியின் அடிவருடியாக இருக்கும், கி.வீரமணி, அன்று, ஜெயலலிதாவுக்கு, தஞ்சையில், “சமூக நீதி காத்த வீராங்கனை“ என்று பட்டம் கொடுத்து, வீர வாள் பரிசளித்தார்.

இன்றும் பெரியார் திடலில் நடக்கக் கூடிய கூட்டங்களில் “பாம்பையும் பார்பனரையும் கண்டால், பாம்பை விட்டு விட்டு, பார்ப்பனரை அடி“ என்றுதானே பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அன்று, கி.வீரமணிக்கு, ஜெயலலிதா பார்ப்பனராக தோன்றவில்லை.
அப்படி ஒரு நெருக்கடியான காலகட்டம். அந்தக் காலகட்டத்தில் தான், கே.பி.ராமலிங்கம், திமுகவுக்கு தாவுகிறார்.

தாவிய உடனேயே, அவருக்கு அடித்தது யோகம். உடனடியாக மக்களவைத் தேர்தலில் திமுகவின் சார்பாக சீட் வழங்கப் பட்டு, ஜெயித்தும் விட்டார். இதுதான் கே.பி.ராமலிங்கத்தின் வரலாறு.

அடுத்ததாக நாம் எடுத்துக் கொள்வது தங்கவேலு.




தங்கவேலு தங்கவேலு ஒரு தலித். தலித் எனறால் தலித் சமுகத்துக்காக இவர் உழைத்வர் என்றால் இல்லை. சரி யாருக்காக உழைத்திருக்கிறார் ? அவர் தனக்காக உழைத்திருக்கிறார்.
அப்படிப்பட்ட தலித் போராளிதான் இந்த தங்கவேல்.

இந்த தங்கவேலுவுக்கு ராஜ்ய சபா சீட் கிடைத்ததற்கு ஒரு சுவையான வரலாறு உண்டு. இந்த தங்கவேலு வைகோ திமுகவை விட்டு பிரிந்து மதிமுகவை ஆரம்பித்த பொழுது, இவர் தன்னை மதிமுகவின் ஒரு முக்கியமான தொண்டராக நினைத்து திமுகவை விட்டு விலகி, மதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.


இணைத்துக் கொண்டவர், மதிமுகவுக்கு விசுவாசமாக இருந்தாரென்றால் அதுவும் இல்லை. இந்த தங்கவேல், தன்னைத் தவிர யாருக்குமே விசுவாசமாக இல்லை.


சரி, இப்படிப்பட, விசுவாசமற்ற துரோகிக்கு, திமுகவில், எப்படி ராஜ்ய சபா சீட் கிடைத்தது என்றால் அது ஒரு சுவையான மற்றொரு கதை.

தமிழ்நாட்டில்,”பள்ளர்” என்றொரு சமூகம் இருக்கிறது. இந்தச் சமூகம் ஒரு பலம் வாய்ந்த சமூகம். ஆனால், இந்தச் சமூகத்துக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப் படவில்லை என்பது இந்தச் சமூகத்தவரின் குமுறல்.

இந்தச் சமூகம் பெரும்பான்மையாக உள்ள நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில், டாக்டர்.கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சி போட்டியிட்டு, இந்தச் சமூகத்தவரின் பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்று, திமுக அல்லது அதிமுகவின் வெற்றி வாய்ப்பை பல முறை தடுத்திருக்கிறது.

அப்படிப்பட்ட ”பள்ளர்” சமூகத்தைச் சேர்ந்தவர்தான் இந்த தங்கவேல். எதற்காக தங்கவேலுக்கு ராஜ்ய சபா பதவி ? எதற்காக என்றால், பள்ளர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் கூட, இதுவரை திமுக அமைச்சரவையில் இடம் பெறவில்லை என்பதுதான்.

பள்ளர் சமூகம், தங்களை ஒரு பெரிய பலம் பொருந்திய ஒரு அரசியல் சக்தியாக கருதி வந்தாலும், அவர்கள் ஒரு வெறும் ”கருவேப்பிலை கொத்தாகவே” பயன் பட்டு வந்திருக்கிறார்கள் என்பது, பள்ளர் சமூகத்தினரின் கருத்து. இதனால், தாங்கள் புறக்கணிக்கப் பட்டே இது வரை வந்ததாகவும், இனிமேல் தங்களுக்கு பிரதிநிதித்துவம் கொடுக்காத,திமுகவை கடுமையாக எதிர்ப்பதாகவும் திமுக தலைமைக்கு தகவல் வந்தது இதையடுத்தே, பள்ளர் சமூகத்தை சமாதனப்படுத்தவும், அவர்களை குளிர்விக்கவும், தங்கவேலுவை ராஜ்ய சபா எம்பியாக திமுக தலைமை அறிவித்திருப்தாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஆனால், திருச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய இடங்களில் உள்ள பள்ளர் சமூகத்தினரிடம் பேசிய போது, திமுக, மற்றும் அதிமுக இரண்டு கட்சிகளுமே, தங்களை பகடைக் காய்களாகவும், வாக்கு வங்கிகளாகவும் பயன் படுத்திக் கொள்வதாகவும், தங்கவேலுவை ராஜ்ய சபா எம்பியாக நியமித்திருப்பதால், எந்த ஒரு பயனும் ஏற்படாது என்றும், தங்கள் சாதியைச் சேர்ந்தவர்கள் ஒட்டு மொத்தமாக அதிமுகவுக்கே வாக்களிக்கப் போவதாகவும் தகவல் தெரிவித்ததனர்.


செல்வகணபதி பற்றிய விரிவான செய்திகள் நாளை தொடரும்.
சவுக்கு

Sunday, May 30, 2010

புதிய தலைமைச் செயலக கட்டிடமும், டாஸ்மாக் பாரும்




எதிர்க்கட்சித் தலைவர் செல்வி ஜெயலலிதா, புதிய தலைமைச் செயலக கட்டிடம் பார்த்தாலே அருவருப்பாக இருக்கிறது என்றும், 2011ல் அதிமுக ஆட்சி அமைத்ததும், பழைய புனித ஜார்ஜ் கோட்டையில் தான் ஆட்சி அமைப்பேன் என்றும், புதிய கட்டிடத்தை பயன் படுத்தப் போவதில்லை என்றும் அறிவித்துள்ளார்.

ஒரு வேளை, 2011ல் அதிமுக ஆட்சி அமைக்கும் பட்சத்தில், இந்தப் புதிய தலைமைச் செயலக கட்டிடத்தை என்ன செய்வது என்ற கேள்வி எழுகிறது. இது தொடர்பாக சவுக்கு ஆராய்ச்சியில் இறங்கிய போது, கிடைத்த ஆலோசனைகள் இதோ.. … ….

தமிழகம் முழுக்க, அரசு டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்திருந்தாலும், ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் இருப்பது போல சிறந்த பார்கள் எங்குமே இல்லை. புதிய தலைமைச் செயலக கட்டிடத்தில் உள்ள சட்டசபை வளாகம், குளிர் சாதன வசதியோடு, ஸ்பான்ஞ் வைத்த இருக்கைகளோடு, மேசைகளோடு இருப்பதால், இந்தப் புதிய தலைமைச் செயலக கட்டிடத்தை டாஸ்மாக் பார் என்று அறிவிக்கலாம்.




இப்போது சட்டசபை நடக்கும் நாட்களில் உறுப்பினர்கள் எப்படி உளறுகிறார்களோ, அதே போல “குடி“ மக்கள் அனைவரும் உளறுவது பொருத்தமாக இருக்கும். ஆனால் சட்டசபை போல அல்லாமல் ஆண்டில் சில நாட்கள் மட்டும் நடக்காமல், வருடம் முழுவதும், ஜே ஜே என்று கூட்டம் இருக்கும். காந்தி ஜெயந்தி, மகாவீர் ஜெயந்தி போன்ற நாட்களில் மட்டும் விடுமுறை விடலாம்.


ஓவராக குடித்து விட்டு, சளம்பும் குடிமக்களை, இப்போது உள்ள அவைக் காவலர்களை வைத்தே, தூக்கி வெளியே போடலாம். இப்போது நடுநாயகமாக சபாநாயகர் உட்கார்ந்திக்கும் இடத்தையே கிச்சனாக்கி, அங்கே சைடிஷ் ஐட்டங்களை சமைக்கலாம், இவ்வாறு சமைப்பதால், பார் முழுக்க, உணவுப் பொருட்களின் வாசனை பரவி சேல்ஸ் அதிகரிக்கும்.


இந்த பார் திறக்கப் பட்டால், உலகத்திலேயே பெரிய பார் என்று, பாரெல்லாம் புகழும் அளவுக்கு, தமிழகத்துக்கு பெருமை வந்து சேரும். இக்கட்டிடத்தை திறக்கும் முன்பு செட் போட்ட, தோட்டா தரணியையே வைத்து, உள் அலங்காரம் செய்யலாம்.


ஓவராக குடித்து விட்டு “மட்டை“ ஆகும், குடிமக்களை, புதிதாக கட்டப் பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியிலேயே குறைந்த கட்டணத்தில் தங்க வைக்கலாம். இப்போது சட்டமன்ற உறுப்பினர்களை ஏற்றிச் செல்வதற்காக, மாநகர போக்குவரத்து கழகம் இயக்கும் பேருந்தினை பெரும்பாலான உறுப்பினர்கள் பயன்படுத்துவதில்லை என்பதால், கோயம்பேடு முதல், சென்னை நகரின் பல்வேறு இடங்களிலும் இருந்து, இந்த பாருக்கு, பேருந்துகள் ஏற்பாடு செய்யலாம்.


பத்திரிக்கையாளர்கள் பல பேர், சென்னை நகரின் மோசமான டாஸ்மாக் பார்களிலும், ப்ரஸ் கிளப் அருகிலும், தண்ணியடித்து மிகுந்த கஷ்டத்துக்கு உள்ளாவதால், தற்போது உள்ள பத்திரிக்கையாளர் மாடத்தை, பத்திரிக்கையாளர்கள் தண்ணியடிப்பதற்கு மட்டும் என்று அறிவித்து விட்டால், பத்திரிக்கையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவது மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் பத்திரிக்கை சுதந்திரம் காக்கப் பட்டு விட்டது என்று சந்தோஷப் படுவார்கள்.

இந்தப் பகுதிக்கு “தண்ணீர் தேசம்“ என்று பெயர் வைக்கலாம்.


தற்போது, உயிரியல் பூங்கா, சென்னையை அடுத்த வண்டலூரில் அமைந்திருப்பதால், பொது மக்கள் அவ்வளவு தூரம் சென்று விலங்குகளை பார்க்க சிரமப் படுகிறார்கள்.




அதனால், புதிய தலைமைச் செயலக வளாகத்தை உயிரியல் சரணாலயமாக மாற்றி அறிவிக்கலாம். சபாநாயகர் அமரும் இருக்கையில், சிங்கத்தின் கூண்டை அமைப்பது மிகப் பொறுத்தமாக இருக்கும்.


திடீரென்று விலங்குகளுக்குள் சண்டை ஏற்பட்டு ஒன்றை ஒன்று அடித்துக் கொண்டால், சட்டசபை நடப்பது போன்ற உணர்வையே ஏற்படுத்தும். மேலும், விலங்குகள், தங்கள் பாஷையில், குய்யோ முறையோ என்று கத்துவது, சூடான விவாதம் நடப்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தும்.


பழக்கப் படுத்தப்பட்ட, சொன்னால் டைவ் அடிக்கும், குரங்கு, சைக்கிள் ஓட்டும் யானை, வளையத்தை தாண்டும் நாய் போன்ற விலங்குகளை, தற்போது, அரசுக்கு, ஜால்ரா அடிக்கும் விடுதலை சிறுத்தைகள் உறுப்பினர்கள், மற்றும், காங்கிரஸ் உறுப்பினர்கள் அமர்ந்திருக்கும் இடங்களில் வைக்கலாம்.




உலகிலேயே முழுக்க முழுக்க குளிர்சாதன வசதி செய்யப் பட்ட விலங்குகள் சரணாலயம் தமிழகத்தில்தான் உள்ளது என்ற பெருமை நம்மை வந்து சேரும்.


தற்போது சட்டசபை காட்சிகளை தொகுத்து இரவு தொலைக்காட்சிகளில் காட்டுவது போல, டிஸ்கவரி சேனல், அனிமல் ப்ளானெட் போன்ற தொலைக்காட்சி நிறுவனங்களோடு, லைவ் டெலிகாஸ்ட் செய்ய ஒப்பந்தம் போடலாம். இந்நிறுவனங்கள், இந்த விலங்குகளை படம் பிடிப்பதை விட, தற்போது நடக்கும் சட்டசபையை படம் பிடிப்பதில் ஆர்வம் காட்டக் கூடும். ஆனால், விலங்குகளின் நலன் மிக முக்கியம் என்பதால் விலங்குகள் பற்றிய ஒளிபரப்புக்கே அனுமதி அளிக்க வேண்டும்.


புலி, சிங்கம் போன்ற அரிய வகை விலங்குகள், அழிந்து வருவது குறித்து, பல்வேறு திட்டங்களை மத்திய அரசு இயற்றி வரும் சூழலில், இது போன்ற அரிய வகை விலங்குகளை, இந்த சட்டசபை வளாகத்துக்குள் பராமரித்தால், ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை, இந்த விலங்குகள், பல்கிப் பெருகி, பெரிய அளவு வளர்ச்சி அடைந்திருப்பதை காண முடியும். இந்த இடத்தை இது போல பயன் படுத்தவதன் மூலம், மிக மிக அரிதான அத்தனை உயிரினங்களையும் ஐந்து ஆண்டுகளுக்குள் ஏராளமாய் பெருக்கி விடலாம்.
பத்திரிக்கையாளர் மாடத்தில், விலங்கியல் ஆராய்ச்சியில் ஈடுபடும் விஞ்ஞானிகளுக்கு ஒதுக்கி விடலாம்.

இந்த இடத்துக்கு “மாக்கள் மன்றம்“ என்று பெயரிட்டு அழைத்தால் மிகச் சிறப்பாக இருக்கும்

நன்றி. நம்தினமதி நாளேடு
சவுக்கு

Saturday, May 29, 2010

வித்தாரக் கள்ளி விறகொடிக்கப் போனாளாம்….





வித்தாரக் கள்ளி விறகொடிக்கப் போனாளாம்…. கத்தாழ முள்ளு கொத்தோட வந்துச்சாம் என்று எங்கள் ஊரில், பெண்கள், புடவையை தூக்கி சொருகிக் கொண்டு சண்டையிடும்போது சொல்வார்கள். இதற்கு பொருள் என்னவென்றால், “என்னடி கதை விடுற…. நீ சொல்ற கதை தெரியாதா ? “ என்பதுதான் அர்த்தம்.

சென்னை பாஷையில் சொல்வதானால், “எருமை மாடு ஏரோப்ளேன் ஓட்டுதுன்னா, கேக்கறவன் கேனப் பயலா“ என்பதுதான் அர்த்தம். தெற்கே, இன்னும் பிரபலமான பழமொழி, “கேழ்வரகுல நெய் வடியுதுன்னா, கேப்பாருக்கு மதியெங்கே போச்சு“ என்பது.
இது போல பழமொழிகளை இப்போது குறிப்பிடக் காரணம் எதுவும் இல்லாமல் இல்லை. இருக்கிறது.


கருணாநிதியைப் பற்றி பதிவுகள் எழுதி, எழுதி, சவுக்குக்கு கை வலித்ததுதான் மிச்சம். கருணாநிதியும் விடுவதாய் இல்லை. சவுக்கும் விடுவதாய் இல்லை.

மரம் ஓய்வை விரும்பினாலும், காற்று விடுவதில்லை
கரை ஓய்வை விரும்பினாலும், அலைகள் விடுவதில்லை
ஓடி ஓடி ஒளிந்த போதும், வாழ்க்கை விடுவதில்லை…. விடுவதில்லை
என்று ஒரு கவிஞன் சொன்னான்.

இதோடு, சவுக்கு, சுருட்டி வைக்கப் பட்டாலும், கருணாநிதி விடுவதில்லை என்பதை சேர்த்துக் கொள்ளுங்கள்.


சவுக்கும் என்னதான் செய்வது ? சரி, செவனேன்னு இருக்கலாம்னு பாத்தா, கருணாநிதி விடமாட்டேங்குறாரு….


நேத்து, ஆர்.எம்.வீரப்பன் பொண்ணு கல்யாணத்துல, கருணாநிதி பேசின பேச்ச கேட்டதுக்கப் புறம், “சவுக்கு“ எப்படி சும்மா இருக்க முடியும் ?

ஜெயலலிதா சும்மா இருக்கலாம். ஏன்னா… யாராவது, ஸ்டேட்மென்ட் எழுதி குடுத்து, அதப் படிச்சதுக்கப்புறம், அதுல கையெழுத்துப் போடலாமா, வேண்டாமான்னு முடிவு செய்யறதுக்கே, ரெண்டு வாரம் ஆயிடும். சவுக்கு நியாயத்தப் பேசுற ஆள் இல்லையா ? நியாயம்னா, சூட்டோட பேசுனாத்தானே ? லேட்டா பேசுனா, அது அரசியல் ஆயிடும் இல்லையா ?



அதுனாலத்தான், சவுக்கு, உடனடியா சுழற்றப் படுது.




கருணாநிதி பேசியது என்ன ?

“மறைந்தும் மறையாத என் ஆருயிர் நண்பர் எம்.ஜி.ஆரின் அணுக்கத் தொண்டர்களில் ஒருவராக விளங்கியவர் ஆர்.எம்.வீ. 1945ல் பெரியாரின் குடியரசு பத்திரிகையில் துணை ஆசிரியராக பணியாற்றச் சென்ற காலந்தொட்டு எனக்கும் ஆர்.எம்.வீ.க்கும் நட்பு தொடர்கின்றது. அவர் என்னை எதிர்ப்பதாக காட்டிக் கொண்ட காலத்திலேயும் என்னிடத்தில் கள்ளக் காதல் கொண்டவர். தி.மு.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் இடையில் சில பிரச்னைகள் தோன்றும் போதெல்லாம் ஆர்.எம்.வீ.யிடமிருந்து எனக்கு ரகசிய கடிதம் வரும்.

எங்களிடையே பிரிவு ஏற்படக்கூடிய சூழல் 1971ல் ஏற்பட்ட போது என் இல்லத்திற்கு வந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக பேசி, நீங்கள் பிரியக் கூடாது, ஒன்றாக இயங்கவேண்டும்; பிரிக்கிறவர்கள் யார் என்பது எங்களுக்கு தெரியும், நீங்கள் ஒன்றுபட்டு தமிழகத்திற்காக பணியாற்றுங்கள் என்று கவலை தெரிவித்தவர் ஆர்.எம்.வீ. எம்.ஜி.ஆருக்கும் எனக்கும் இடையில் பிணக்கு விளைந்த போதெல்லாம், அதை சரி செய்ய பாடுபட்டவர் ஆர்.எம்.வீ. ஏன் அவருக்கு அந்தக் கவலை என்றால், நாங்கள் இருவரும் இணைந்து உழைத்த இடம் பெரியாரின் குருகுலம். எவ்வளவுதான் அரசியல் மாறுபாடுகள், வேறுபாடுகள் ஏற்பட்டாலும் அடிப்படை உணர்விலிருந்து பதவிக்காக எங்களை நாங்கள் மாற்றிக் கொண்டதில்லை.

ஆர்.எம்.வீ.க்கு பதவி கொடுங்கள் என்று திருநாவுக்கரசு சொன்னார். பதவிகளை பல பேருக்கு கொடுக்கிற இடத்தில் இருந்தவர் ஆர்.எம்.வீ. அவருக்கு நான் பதவி கொடுப்பது என்பதல்ல. அவர் பதவிகளை பகிர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டியவரே தவிர கேட்டு பெற்றுக் கொள்ள வேண்டியவர் அல்ல. அந்த அளவிற்கு இந்த இயக்கத்தினுடைய ஆணிவேராக இருந்தார். இன்றைக்கும் இருப்பவர்.

கோவை மாநாட்டு பணிகளை ஆய்வு செய்ய செல்கிறோம், அங்கிருந்து உதகமண்டலம் சென்று ஓரிரு நாட்கள் ஓய்வு பெறலாமே என்று எண்ணினேன். ஆனால் இந்த திருமண நினைவு சாட்டையாக விழுந்தது.

ஆர்.எம்.வீ. இல்லத் திருமணத்திற்கு செல்லாமல் ஓய்வு ஒரு கேடா என்று எனக்கு நானே கேட்டுக் கொண்டு இங்கே வந்திருக்கிறேன் என்றால் அது நட்பின் ஆழத்தை உணர்த்தக் கூடிய ஒன்று. “

வரலாற்றை சற்றே திரும்பிப் பார்ப்போம். 1981ம் ஆண்டு. அப்போது எம்.ஜி.ஆர் முதலமைச்சர். இப்போது கலைஞரை ஆதரிக்கும் ஆர்.எம்.வீரப்பன் அற நிலைய அமைச்சர். திருச்செந்தூர் கோயில் விடுதியில் கோவில் அதிகாரி சுப்பிரமணியப்பிள்ளை மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

உண்டியல் பணத்தை அவர் திருடி மாட்டிக் கொண்டதாகவும் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டதாகவும் ஆர்.எம்.வீ முதல் அ.தி.முகவினர் எல்லாரும் பிரசாரம் செய்தார்கள். கலைஞர் கருணாநிதியும் தி.முகவும் இதை மறுத்தார்கள். உண்டியலில் இருந்த வைர வேலைத் திருடிக் கொண்டது வீரப்பன்தான் என்றும் அதைத் தட்டிக் கேட்ட நேர்மையான அதிகாரி சுப்பிரமணியப்பிள்ளை கொலை செய்யப்பட்டதாகவும் தி.மு.க குற்றம் சாட்டியது.

உடனே விசாரணைக் கமிஷன் போட்டார் எம்.ஜி.ஆர். நீதிபதி சி.ஜெ.ஆர்.பால் அறிக்கையைக் கொடுத்துவிட்டு அடுத்த விமானத்தில் ஒரேயடியாக அமெரிக்கா சென்று செட்டிலாகிவிட்டார். கோவில் அதிகாரியின் மரணம் தற்கொலை அல்ல என்றும் கொலை என்றே சந்தேகிக்க இடமிருப்பதாகவும் அவர் அறிக்கை தெரிவித்தது. எம்.ஜி.ஆர் இந்த அறிக்கையை சட்டசபை முன்பு வைக்க மறுத்துவிட்டார். கலைஞர் கருணாநிதி அறிக்கையின் பிரதியைக் கைப்பற்றி 24.11.1981 அன்று நிருபர்களிடம் வெளியிட்டார்.

நீதி கேட்டு நெடிய பயணமாக மதுரையிலிருந்து திருச்செந்தூருக்கு 150 கிலோ மீட்டர் நடந்து சென்றார்.


அரசு ரகசியமான பால் கமிஷன் அறிக்கையை வெளியிட்டதாக எம்.ஜி.ஆர் குற்றம் சாட்டினார். அதற்காக அரசு அதிகாரிகள் சதாசிவம் (மொழி பெயர்ப்புத் துறை), இப்போதும் கலைஞரின் செயலாளராக இருக்கும் அன்றைய அரசு அதிகாரி சண்முக நாதன் இருவர் மீதும் எம்.ஜி.ஆர் அரசு கடும் நடவடிக்கை எடுத்தது.

இன்று கருணாநிதியால் பாராட்டப் படும் இந்த ஆர்.எம்.வீரப்பன் யார் தெரியுமா ?

எம்.ஜி.ஆர் நோய் வாய்பட்டு, ப்ரூக்ளின் மருத்துவமனையிலே சிகிச்சை பெற்று, திரும்பும் வரையில், தமிழ்நாட்டின், உளவுத்துறை ஐஜியாக இருந்தவர், மோகன்தாஸ். இவர் உட்பட, அனைவருக்கும், எம்ஜிஆருக்கு ஏற்பட்டிருக்கும் நோய், குணமாக்கக் கூடியதல்ல என்று ஒரு கருத்து. 1984ம் ஆண்டுகளிலேல்லாம், சிறுநீரகப் பழுது, இன்று போல, எளிதாக குணமாக்கும் ஒரு நோய் அல்ல. இந்நிலையில், ஆர் எம் வீரப்பன், தமிழ்நாட்டின் நிர்வாகத்தை கையில் எடுத்துக் கொண்டார். தமிழ்நாட்டில் தனக்கென்று ஒரு கோஷ்டியை வளர்த்து எடுத்தார்.


அப்போதெல்லாம் பெரிய அளவில் இன்று திருநாவுக்கரசர் ஆகியிருக்கும், திருநாவுக்கரசு அரசியல் ரீதியாக வளரவில்லை. ஆக, ஆர்.எம்.வீரப்பனுக்கு, அரசியல் ரீதியாக கட்சியில் எதிரி என்றால், அது ஜெயலலிதா தான்.

எம்.ஜி.ஆர், அமேரிக்காவில் சிகிச்சை முடிந்து திரும்பி வருகையில், அப்போது உளவுத்துறை ஐஜியாக இருந்த, மோகன்தாசிடம் சொல்லி, விமான நிலையத்தில், ஜெயலலிதா, எம்.ஜி.ஆரை பார்க்கக் கூடாது என்று ஆர்.எம்.வீரப்பன் உத்தரவு பிறப்பித்தார்.

அதன் அடிப்படையில், ஒரு டிஎஸ்பி, ஐந்து இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய குழு ஒன்று, ஜெயலலிதாவை, எம்ஜிஆர், இந்த நுழைவாயிலில் அல்ல, இன்னொரு நுழைவாயிலில் வழியாக வருகிறார் என்று நம்ப வைத்து, அழைத்துச் சென்றது. எம்.ஜி.ஆர். விமான நிலையத்திலிருந்து கிளம்பிச் சென்றதும், ஜெயலலிதாவை போயஸ் தோட்ட இல்லம் வரை பத்திரமாக கொண்டு சென்று விட்டு விட்டு வர வேண்டும் என்பது, இந்த ஆர்.எம்.வீரப்பன் அன்றைய போலீசாருக்கு வழங்கிய உத்தரவு.


அதன்படியே, போலீசார், ஜெயலலிதாவை, விமான நிலையத்தில், எம்ஜிஆரை பார்க்க விடாமல், பத்திரமாக வேறு வழி வழியாக ஏமாற்றி, போயஸ் தோட்டத்திற்கு அழைத்துச் சென்றனர். ஏமாற்றம் அடைந்த ஜெயலலிதா, கோபப் படாமல், அவரை ஏமாற்றி அழைத்துச் சென்ற போலீசார் அனைவருக்கும் காபி கொடுத்து, உபசரித்து, என்னை ஏமாற்றி விட்டீர்களே என்று வருத்தத்தோடு, சொல்லி விட்டு அறை உள்ளே சென்றதாக அப்போது, உளவுத் துறையில் பணியாற்றிய போலீசார் சொல்கின்றனர்.


இதுதான் இன்று கருணாநிதி பாராட்டும் இந்த ஆர்.எம்.வீரப்பன். இன்று கருணாநிதி, ஆர்.எம்.வீரப்பனை பாராட்டக் காரணம், நன்றி உணர்ச்சிதான்.





வேறு ஒன்றும் இல்லை. 1996ம் ஆண்டு, “பாட்சா“ பட, வெள்ளி விழாவில் பேசிய, ரஜினிகாந்த், தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாச்சாரம் வளர்ந்து விட்டது என்று, எப்போதும் போல, வாய்க்கு வந்ததை பேசிச் செல்ல, அது தமிழ்நாட்டில் ஒரு பெரிய புயலை கிளப்ப, 1996ல் ஆட்சிக்கு வருவதற்கு, கருணாநிதிக்கு, ஆர்.எம்.வீரப்பன் நடத்திய அந்த விழா உதவியது என்பதற்கான நன்றிதான், இந்த பாராட்டும், அடுத்து, “மேலவை உறுப்பினர் பதவி“ என்ற வாக்குறுதியும்.
ஆனால், கருணாநிதி தெரிவித்தது போலவே, அவருக்கும், ஆர்.எம்.வீரப்பனுக்கும் இருப்பது, “கள்ளக் காதல்“ தான்.

ஏனென்றால், தன்னை வாழவைத்த, எம்.ஜி.ஆர் என்ற மனிதருக்கு விசுவாசமாக இல்லாமல், கருணாநிதிக்கு ரகசியமாக கடிதம் எழுதினார் என்ற செய்தியும், எம்ஜிஆர் உயிரோடு இருக்கையிலேயே, நிழல் முதலமைச்சராக செயல்பட்டார் என்பதிலும், அவர் எம்ஜிஆருக்கு விசுவாசமாக இல்லாமல், கருணாநிதியோடு, “கள்ளக் காதல்“ கொண்டிருந்தார் என்பதை, கருணாநிதியே இன்று, வெளிப்படையாக சொல்லி விட்டார்.

இந்த லட்சணத்தில், 2006ம் ஆண்டுக்கான அண்ணா விருது, ஆர்.எம்.வீரப்பனுக்கு வழங்கப் பட்டது. அண்ணாவுக்கு, கருணாநிதி போலவோ, வீரப்பன் போலவோ, கயமை தெரியாது என்றாலும், அண்ணா விருதை வீரப்பனுக்கு வழங்கியதன் மூலம், அண்ணாவின் தம்பி என்று சொல்லிக் கொள்ளும் கருணாநிதி, அண்ணாவை இதை விட பெரிய அவமானத்துக்கு எப்படி உள்ளாக்க முடியும் ?




இவ்வாறு, கணவருக்கு விசுவாசமாக இல்லாமல், கள்ளக் காதலனுக்கு விசுவாசமாக இருந்ததற்கான பரிசுதான், நாளைக்கு ஆர்.எம்.வீரப்பனுக்கு கிடைக்கப் போகும், “மேலவை உறுப்பினர்“ பரிசு.


இவ்வாறு, கருணாநிதியும், ஆர்.எம்.வீரப்பனும், இன்றைய தலைமுறைக்கு தெரியாது என்று வாய்க்கு வந்த பொய்யை அவிழ்த்து விடலாம். ஆனால், வரலாறு வரலாறுதானே. அதை மாற்ற முடியுமா என்ன ?


சவுக்கு

Sunday, May 23, 2010

கருணாநிதியின் பல்வேறு பரிமாணங்கள்.




ஏதாவது ஒரு பிரிவோ, அல்லது அமைப்போ பாராட்டு விழா நடத்தினால், உடனே, அந்த அமைப்பில் தான் ஒரு அங்கம் என்று பேசுவது கருணாநிதிக்கு வழக்கம். விடுதலை (கழுதைகளின்) சிறுத்தைகளின் சார்பில் நடந்த பாராட்டு விழாவிலே பேசிய போது, என் வாழ்வே காலனியில் தான் துவங்கியது என்றார். நேற்று அரசு ஊழியர்களின் மாநாட்டில் பேசும் போது, நானும் ஒரு தொழிலாளி என்றார். பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினால், நானும் ஒரு பத்திரிக்கையாளர் என்பார். சினிமா பாராட்டு விழாவில் பேசினால் கேட்கவே வேண்டாம்.

இப்படிப் பேசும் கருணாநிதி, பல்வேறு அமைப்பினர் நடத்தும் விழாக்களுக்கு சென்று, அந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்டால், தன்னை எப்படி அடையாளப் படுத்திக் கொள்வார் என்று சவுக்கு கற்பனை செய்த போது…..

மென்பொறியாளர்கள் சங்கத்தின் சார்பிலே பாராட்டு விழா


இந்த விழாவுக்கு, இவனை அழைத்தது எப்படிப் பொறுத்தம், இவனுக்கு என்ன தகுதி உண்டு, இவன்தான் பள்ளிப் படிப்பையை தாண்டாதவன் ஆயிற்றே, என்று சிலர் கேள்வி எழுப்பக் கூடும். ஆணவத்தோடு அறிக்கை விடக் கூடும்.

நானும் பொறியாளன்தான். அதனால் இந்த விழாவிலே, கலந்து கொள்ள எனக்குத் தகுதி உண்டு. எப்படி என்று எதிர்க் கேள்வி கேட்போருக்காக சொல்கிறேன்.
2003ம் ஆண்டு என்று நினைக்கிறேன். தமிழ்நாட்டிலே, அந்த அம்மையாரின் இருண்ட ஆட்சி நடந்து கொண்டு இருந்த நேரம். அப்போது விவசாயிகள் எலிக் கறி சாப்பிடுகிறார்கள் என்ற செய்தி, என் காதிலே ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல வந்து இறங்கியது.

எலிக்கறி சாப்பிடும் விவசாயிகள், அந்த எலிகளை எப்படிப் பிடிப்பார்கள் ? வேகமாக ஓடும் எலியை பிடிப்பது விவசாயிகளுக்கு சிரமம் என்று, அப்போதே, கழக உடன் பிறப்புகளை அனைத்து விவசாயிகளுக்கும், அஞ்சுகம் அறக்கட்டளையின் சார்பாக, எலிப்பொறி வாங்கிக் கொடுக்க உத்தரவிட்டேன். அதனால் நானும் பொறியாளன் தான்.


முடிதிருத்துவோர் சங்கத்தின் சார்பிலே பாராட்டு விழா

திருக்குவளை கிராமத்திலே, ஒரு ஏழையின் குடும்பத்திலே பிறந்த, பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவனான இந்த கருணாநிதிக்கு, எப்படி, இந்த விழாவிலே கலந்த கொள்ளும் தகுதி என்று ஏளனக் கேள்வி எழுப்போருக்காகவே நான் இந்த விளக்கத்தை அளிக்கிறேன். ஏனென்றால், இது போல, பல விழாக்களிலே என்னோடு கலந்து கொண்டு, எனது இது போன்ற உரைகளை பல முறை கேட்டிருக்கும் அன்பழகன், நான் எது பேசினாலும் ஆமோதிப்பார்.

என்னை விட கட்சியிலும் வயதிலும், மூத்தவராக இருந்தாலும், இப்போது ஸ்டாலினை தனது தலைவர் என்று கூறும் அளவுக்கல்லவா அவரை நான் பக்குவப் படுத்தி வைத்திருக் கிறேன் ?


இவ்விழாவிலே எனக்கு கலந்து கொள்ள என்ன தகுதி என்று கேட்போரே… கேளுங்கள். ஐந்து முறை முடியேற்று, ஆட்சி புரிந்திருக்கிறேனல்லவா ? இதை விட என்ன தகுதி வேண்டும். குடி ஆட்சி என்று பெயருக்கு அரசியல் சட்டம் கூறினாலும், உண்மையில் முடியாட்சி போலல்லவா எனக்குப் பிறகு எனது மகனுக்கும் மகளுக்கும் பட்டம் சூட்டும் வேளையில் இறங்கியிருக்கிறேன் ?

இதை விட வேறு என்ன தகுதி வேண்டும் எனக்கு ?

என் தலையைப் பார்த்து விட்டு, என்னை “முடி சூடா மன்னன்“ என்றல்லவா கூறுகிறார்கள் ? இதை விட என்ன தகுதி வேண்டும் எனக்கு, முடி திருத்துவோர் சங்கம் நடத்தும் விழாவில் கலந்து கொள்ள ?



செருப்பு தயாரிப்போர் சங்கத்தின் சார்பிலே பாராட்டு விழா

இந்த விழாவிலே நான் எப்படிக் கலந்து கொள்ளலாம் என்று சிலர் ஐயப் பாட்டை எழுப்பக் கூடும். அவர்கள் அவ்வாறு ஐயப் பாட்டை எழுப்புவது, சில ஐயர்களும், ஐயங்கார்களும் சொல்லிக் கொடுத்ததனால் அன்றி, அவர்களாகவே இவ்வாறான ஐயங்களை எழுப்ப மாட்டார்கள். நான் செருப்பு போட்டுக் கொண்டிருக் கிறேனே .. இதை விட எனக்கு என்ன தகுதி வேண்டும் ?

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, சென்னையில் தம்பி திருமாவளவனின், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், எனக்கு, அம்பேத்கார் சுடர் விருது அளிக்கப் பட்டது. அந்த விழாவிலே நான் கலந்து கொண்டு பேசிய போது, நான் என் வாழ்க்கை தொடங்கியதே, “காலனியில்தான்“ என்று கூறினேன். அன்று நான் குறிப்பிட்டது, “காலணி“.

ஆனால், சில பார்ப்பன ஏடுகள் வேண்டுமென்றே விஷமத்தனத்தோடு, அச்செய்தியை திரித்து வெளியிட்டன.

திருமணப் பந்தியில் இலை எடுப்போர் சங்கத்தின் சார்பிலே பாராட்டு விழா

இந்த விழாவிலே, இந்த கருணாநிதி ஏன் கலந்து கொள்கிறான் என்று கேட்பார்கள் சிலர். நானும் இலை எடுப்பவன் தான். எப்படி என்கிறீர்களா ? தமிழ்நாட்டை திராவிட முன்னேற்றக் கழகம், கட்டிக் காத்து, பத்திரமாக பேணிப் பாதுகாத்துக் கொண்டிருந்த வேளையில், என் நண்பர் எம்.ஜி.ஆர், தெரியாத்தனமாக, சிலரின் பேச்சைக் கேட்டுக் கொண்டு, தனியாக சென்று ஒரு கட்சியை தொடங்கினார். அந்தக் கட்சிக்கு அவர் வைத்த சின்னம், இரட்டை இலை.

1989லே, மீண்டும் கழக ஆட்சியை நிறுவியதன் மூலம், இலையை எடுத்து தமிழ்நாட்டை விட்டு வெளியே போட்டவன் நான்தானே ?

அதனால் நானும் இலை எடுப்பவன் தான்.


இப்போதும் அந்த அம்மையார், தமிழ்நாட்டினுள்ளே, எப்படியாவது, இலையைக் கொண்டு வர வேண்டும் என்று விரும்புகிறார்கள். நான்தான் இலை எடுப்பவன் என்று சொன்னேனே. அந்த அம்மையர் இலையை கொண்டு வந்தால் நான் எடுத்துப் போட்டு விடுவேன். அதனால் தமிழக மக்கள் கவலையில்லாமல் இருக்கலாம்.


துப்புறவு தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பிலே பாராட்டு விழா

எத்தனையோ, பாராட்டு விழாக்களுக்கான அழைப்புகள் எனக்கு வந்த வண்ணம் தான் இருக்கின்றன. அத்தனை விழாக்களிலும், எனக்கு கலந்து கொண்டு, அந்த விழாக்களை சிறப்பிக்க வேண்டும் என்ற ஆவலும், உந்துதலும் இருந்தாலும், இந்த விழாவிலே நான் ஏன் கலந்து கொண்டேன் என்பதற்கு முக்கியமான காரணம் இருக்கிறது. ஏனென்றால், துப்புறவு தொழிலாளர்கள், ஊரிலே உள்ள குப்பைகளையும், கூளங்களையும் சுத்தம் செய்கிறார்கள். ஊரைச் சுத்தமாக வைத்திருக்கிறார்கள்.

நானும் அரசாங்க கஜானாவை சுத்தம் செய்து, அதில் இருக்கும், காசு பணம் என்ற கழிவுகளையெல்லாம், எனது வீட்டிலே வைத்து விட்டு, நாடும் மக்களும் நலன் பெற வேண்டும், நன்கு வாழ வேண்டும் என்ற ஒரே நோக்கில், சுத்தம் செய்து வைக்கிறேன். அதனால், நானும் ஒரு துப்புறவு தொழிலாளிதானே ? அதனால் தான் சொல்கிறேன், இந்த விழாவிற்கு நான் அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தேன்.



சவுக்கு

Friday, May 21, 2010

லைலாவுக்கெல்லாம் லைலா




அது என்ன லைலாவுக்கெல்லாம் லைலா? கோடையின் கடும் வெம்மையில், காதலியின் குளிர்ச்சியான பார்வையும், வார்த்தைகளுமே வறண்டு போய் எரிச்சலை உண்டு பண்ணும் வேளையில், இனிய தென்றலாய், நமக்கெல்லாம், அரிதிலும், அரிதான மழையை தந்து, நம்மை ஒரு நாள் கட்டாய ஓய்வு எடுக்க வைத்ததற்கு லைலாவுக்கு எத்தனை நன்றி சொன்னாலும் தகும். அட, அதாங்க லைலா புயல்!

இதுபோல பெயரிடுவதற்கு காரணம், புயலுக்கு இவ்வாறு பெயர் வைத்தால், எளிதாக தகவல் சொல்வதற்கும், அபாய எச்சரிக்கைகள் வழங்குவதற்கும் ஏற்ற வகையில் இருக்கும் என்பதால் தான் லைலா, பாண்டெல்லாம் புயலுக்கே பெயர் சூட்டும் கலாசாரம் வந்திருக்கிறது.

சரி, புயலுக்கு இப்படி பெயரிடும் வழக்கம் எப்போது வந்தது தெரியுமா? ஆரம்பத்தில், இவ்வாறு பெயரிடுவதை ஒழுங்குபடுத்தும் வரையில், அந்தந்த நாடுகள் அவர்களுக்கு தகுந்தாற்போல புயலுக்கும் பெயரிட்டு வந்தன.

2000-ம் ஆண்டு மஸ்கட்டில் நடந்த வானியல் அமைப்புகளுக்கான மாநாட்டில் வங்காள விரிகுடா மற்றும் அரேபியக் கடலில் ஏற்படும் புயல்களுக்கு பெயரிடுவது என்று ஒத்தக் கருத்துக்களின் அடிப்படையில் முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, செப்டம்பர் 2004-ம் ஆண்டு முதல் புயல்களுக்கு பெயரிடும் வழக்கம் தொடங்கி விட்டது.

இதற்காக, ஆசிய நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை போன்ற நாடுகளெல்லாம் ஒருங்கிணைந்து ஒரு அட்டவணை தயாரித்து, புதிதாக உருவாகும், ஒவ்வொரு புயலுக்கும், இந்த அட்டவணையின் படி பெயரிட்டு வருவதை வாடிக்கையாக்கி இருக்கிறார்கள். இப்படி அட்டவனைப் பட்டியலில் வந்ததுதான் லைலா. அதான் நம்ம சென்னையை குளிர்வித்து சென்றிருக்கிறதே, அதே லைலாதான்..

சரி, லைலா தென்றலாய் வந்து கோடையின் சூட்டைத் தணித்து விட்டுப் போயிருப்பது ஒருபக்கம் இருக்கட்டும், தமிழ்நாட்டை தினசரியும் தாக்கும் புயல்களுக்கு தமிழக அரசியல் தலைவர்களின் பெயரைச் சூட்டினால், அந்தப் புயல்களின் தன்மை எப்படிப்பட்டதாக இருக்கும், இது குறித்த வானிலை எச்சரிக்கைகள் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து தமாஸாக சிந்தித்தன் விளைவு - மேலே படிங்க...

’ராமதாஸ்’ புயல்:


தமிழ்நாட்டின் வடமாவட்டங்களின் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் வல்லமை பெற்றது என்று உத்தேசிக்கப்பட்ட இந்தப் புயல், குறுகிய இடமான தைலாபுரத்தில் மட்டுமே நீண்ட நெடுங்காலம் மையம் கொண்டதன் விளைவு, விரைவிலேயே வலுவிழந்து போனது. கடந்த 2009-ம் ஆண்டு இந்த ராமதாஸ் புயல், பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.

ஆனால், அந்தப் புயலால் ஒரு குடிசையையும் பெயர்த்துப் போடமுடியவில்லை. வந்த சந்தடி தெரியாமல் போனது. இனிமேல், இந்த ராமதாஸ் புயல் வந்தால் எவ்விதமான பாதிப்பும் இருக்காது என்ற காரணத்தால், வானிலை நிலையத்தில் எச்சரிக்கை செய்வதையே விட்டுவிடப் போகிறார்களாம்.

அவ்வப்போது ராமதாஸ் புயல் மையம் கொண்டுள்ளது என்ற தகவல் மீனவர்களுக்கு தெரிவிக்கப்பட்டால், அது ஒரு ’டம்மி பீசு’ என்று மீனவர்கள் கண்டு கொள்ளாமல் வழக்கம் போல, கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுவிடுகிறார்கள் என்பதைக் கேட்டு, தைலாபுரம் கொதித்திக் கிடக்கிறதாம்.

’வைகோ’ புயல்:

முதன்முதலில் இந்தப் புயல் எச்சரிக்கை வந்தபோது, அது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று வானிலை மையம் ஏகத்துக்கும் எச்சரிக்கை மணியை ஓங்கி ஒங்கி அடித்தது. அதற்கேற்பவே இந்தப் புயல், ’புரட்சிப் புயல்’ என்றும் அழைக்கப்பட்டது.

ஆனால், வந்த சில நாட்களிலேயே, இந்தப் புயல், பெரிய அளவு தாக்கம் எதையும் ஏற்படுத்தவில்லை. வெகு வேகமாக மையம் கொண்ட இந்தப் புயல், சில நாட்களாக, வேலூர் அருகே, ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகள் மையம் கொண்டிருந்தது. பிறகு, டெல்லியில் ஏற்பட்ட சில வானிலை மாற்றங்கள் காரணமாக, நெடுநாட்களாக மையம் கொண்டிருந்த வேலூரிலிருந்து வடக்கே நகர்ந்து, சென்னை போயஸ்தோட்டம் பகுதியில் மையம் கொண்டிருக்கிறது.

இப்போதைக்கு இந்தப் புயல், போயஸ்தோட்டம் பகுதியை விட்டு நகர வாய்ப்பில்லை என்றும், நகர்ந்தாலும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதால், இந்தப் புயல் குறித்து பெரிதாக கவலைப்பட வேண்டியதில்லை என்றும் வானியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

விஜயகாந்த் புயல்:

கோடம்பாக்கத்தில் வெகு நாட்களாக மையம் கொண்டிருந்த புயல், திடீரென்று அரசியல் அரங்குக்கு நகர்ந்து வந்தபோது, வானிலை ஆய்வாளர்களே அசந்து போனார்கள். இந்தப் புயலும், வந்த சில காலத்துக்கு, மற்ற புயல்களை வலுவிழக்கச் செய்யும் பணியை செய்து வந்தது. வானியல் ஆய்வர்களும் இந்தப் புயல்... அடுத்து எந்த திசையை நோக்கி நகரும் என்பதில் குழப்பத்தில்தான் இருந்தனர்.

அடுத்தடுத்து, இந்தப் புயல் தமிழ்நாட்டை தாக்கியபோதும், பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தததால், இப்போது இந்தப் புயல் எந்த திசையை நோக்கி நகரும் என்று ஓரளவுக்கு அனுமானிக்க முடிகிறது என்று வானியல் ஆய்வர்கள் தெரிவிக்கின்றனர். பொதுவாக திடீரென்று ஏற்படும் புயல் குழப்பத்தை ஏற்படுத்தும் என்றாலும், இந்தப் புயல் குழப்பத்தை ஏற்படுத்தாமல், தானே குழம்பி நிற்பது தான் விந்தையிலும் விந்தை என்கிறார்கள் வானிலை ஆய்வாளர்கள். இதை புயல் என்று சொல்வதை விட, ஒரு வறண்ட வயல் என்பது பொருத்தமாக இருக்கும் என்றுச் சொல்லியும் சிரிக்கிறார்கள் அவர்கள்.

ஜி.கே.வாசன் புயல்:

இதைப் புயல் என்பதை விட, ஒரு சிறிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். ஏனேன்றால், இந்தப் புயல் வானியல் மாற்றங்களால் உருவானதல்ல. இதற்கு முன்பு, டெல்லியில் ஏற்பட்ட வானியல் மாற்றங்களால், தமிழ்நாட்டில் இருந்த ஒரு புயலின் பின்னால் உருவான ஒரு குட்டிப் புயல் இது. அந்தப் பெரிய புயல் இல்லாவிட்டால், இந்த குட்டிப் புயல் உருவாகியிருக்க வாய்ப்பே இல்லை என்று இந்தப் புயல் பற்றிய பூர்வீகத்தை வாசிக்கிறார்கள் வானியல் ஆய்வாளர்கள்.

அந்தப் பெரிய புயலைப் போலவே, இந்தப் புயலும், எப்போது வருகிறது, எங்கே நகருகிறது என்று யாராலும் புரிந்து கொள்ள முடியாது. இந்தப் புயல் உண்மையில் புயலா, இல்லை வெறும் பயலா என்று புரியாமல் பல வானியல் ஆய்வாளர்கள் இன்றளவ்விலும் குழம்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், இந்த வகைப் புயல்கள், தமிழ்நாடு மட்டுமல்லாமல், தேசிய அளவிலும் நகர்வதால், இந்தப் புயல்களை தேசியப் புயல் என்று வானியல் ஆய்வாளர்கள் வகைப்படுத்துகின்றனர்.

இந்த தேசிய வகைப் புயல்கள், எப்போதுமே பெரிய பாதிப்பை ஏற்படுத்தாமல் சிறு சிறு புயல்களாக இருக்கும் தன்மை கொண்டவையாம். இந்த சிறு சிறு புயல்கள், ஒன்றோடு ஒன்று மோதி, எந்த வகையிலும் ஒரு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாமல் கடைசியில் வலுவிழந்து போகக்கூடிய தன்மை பெற்றவை.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் புயல்:

இந்தப் புயல், அவ்வப்போது, பெரும் காற்றை எழுப்பி சத்தமிடும். ஆனால், சத்தத்தை உண்டுபண்ணும் அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. ஏன், இது ஒருபோதும் கடலை கடந்ததில்லை என்பது இதன் வரலாறு. அதனாலேயே இதனால் பாதிப்பு இல்லை என்கிறார்கள் வானிலை ஆய்வாளர்கள்.

இந்தப் புயல் அவ்வப்போது, தமிழ்நாட்டில் பெரிய பாதிப்பை ஏற்படுத்திய ‘காமராஜ் புயலை’ நினைவுபடுத்தும். ஆனால் காமராஜ் புயலுக்கும் இதற்கும் கடுகளவு கூட சம்பந்தம் கிடையாது என்பதை தன்னுடைய நடவடிக்கைகளில் இருந்து அப்பட்டமாக வெளிப்படுத்திவிடும்.

அவ்வப்போது, சூறைக் காற்றுடன் பெரும் ஓசை எழுப்பவில்லை என்றால், தன்னை வானிலை ஆய்வாளர்களும் பொதுமக்களும் கண்டுகொள்ளவில்லை என்கிற நினைப்பிலேயே இது, அவ்வப்போது பெரும் சத்தத்தை கிளப்பும். 2009-ல் இந்த ’ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்’ என்ற புயலை, ’முத்துக்குமார்’ என்ற ஒரு பெரும் புயல் இருந்த இடம் தெரியாமல் செய்ததும் அப்படியே சந்தடியில்லாமல் அடங்கிக்கிடக்கிறது.

ராஜ்யசபா என்ற சக்தியைக் கொண்டு தன்னை டெல்லியில் மீண்டும் நிலை நிறுத்திக் கொள்ளலாமா என்று, இந்தப் புயல் மீண்டும் லேசாக தலைதூக்கி இருக்கிறது. இருந்தாலும், கூடவே இருக்கும் மற்றப் புயல்கள் இதன் தலையில் கருணாநிதி புயல் மூலமாக கல்லைத் தூக்கிப் போட, சத்தமில்லாமல் மீண்டும் அடங்கி விட்டதாம் இந்தப் புயல்.

தமிழக சி.பி.எம். புயல்:

தமிழ்நாட்டின் மிக மிக பழமையான புயல்களில் இதுவும் ஒன்று. இது ஒரு பலமான புயல் என்று தோற்றத்திற்கு தோன்றினாலும், இந்தப் புயல், மேற்கு வங்கம் மற்றும் கேரள கரையோரமே பெரும்பாலான நேரங்களில் மையம் கொண்டிருக்கும். அவ்வப்போது இடியுடன் கூடிய மழையை வர வைத்தாலும், இந்தப் புயல் பெரும்பாலான நேரங்களில் தமிழ்நாட்டில் வலுவிழந்தே இருந்திருக்கிறது.

இந்தப் புயலால் அவ்வப்போது லேசான சாரலை வரவைக்க முடிந்திருக்கிறதே தவிர, வேறு கடுமையான பாதிப்புகளளை ஏற்படுத்தியதே இல்லை. இந்தப் புயல் வலுவாக மையம் கொண்டிருந்த மேற்கு வங்கத்தில் கூட, ’மம்தா’ என்ற புதிய புயல் சமீபத்தில் தாக்குதல் நடத்த, பெட்டிப் பாம்பாக கடலுக்குள்ளேயே அடங்கியிருக்கிறதாம் இந்தப் புயல். இனி இந்தப் புயல், மேலெழும்பி வர வேண்டும் என்றால், புதிய சக்தி ஏதேனும் தேவைப்படும் என்கிறார்கள் வானியல் ஆய்வாளர்கள்.

தமிழக சி.பி.ஐ. புயல்:

இதுவும், தமிழகத்தின் பழமையான புயல்களுள் ஒன்றுதான். இந்தப் புயல், மிகப் பழமையான புயல்களுள் ஒன்றாய் இருந்தாலும், ’தமிழக சி.பி.எம்’ என்ற புயலுக்கு எப்போதும் துணைப் புயலாகவே இருந்து வந்திருக்கிறது.

இந்தப் புயல், ’தமிழக சி.பி.எம்’ என்ற புயலுக்கு, துணைப் புயல் அல்ல என்று காட்டிக் கொள்வதற்காக, பெரும் பிரயத்தனம் செய்தாலும், இது சி.பி.எம்-மின் வால்ப் புயலாகவே, வானியல் ஆய்வாளர்களால் கருதப்படுகிறது.

கருணாநிதி புயல்:

தமிழகத்தை மிக மிக மோசமான பாதிப்புக்குள்ளாக்கியதில், இந்தப் புயல் மிக மிக முக்கியமான புயல். தஞ்சை அருகே, திருக்குவளை என்ற இடத்தில் இந்தப் புயல் உருவானதாக வானியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். முதலில் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி, மெல்ல மெல்ல வலுவடைந்து, இன்று தமிழகம் முழுவதையும் இந்தப் புயல் ஆட்டிப் படைத்துக் கொண்டிருப்பதாக வானியல் ஆய்வாளர்கள் போயஸ் தோட்டம் பகுதியிலிருந்து கருத்து தெரிவிக்கிறார்கள்.

திருக்குவளையில் உருவாகி, மெல்ல, மெல்ல வடக்கு நோக்கி நகர்ந்து, இன்று வங்காள விரிகுடாவின் அருகே, மையம் கொண்டிருக்கிறது. இந்தப் புயல், தன்னுடைய அசாத்திய வலிமையால், தமிழ்நாட்டில், ஜனநாயக சக்திகள் என்று அழைக்கப்படும் அனைத்தையும், அனைத்து பத்திரிகைகளையும்கூட எளிதாக வளைத்து, தன்னுள் போட்டுக் கொண்டதாக இதுகுறித்து புகார் பட்டியல் வாசிக்கிறது இதன் உடன்பிறவா இன்னொரு புயலான வைகோ புயல்.

இந்த ’கருணாநிதிப் புயல்’ சென்னையில் மையம் கொண்டிருந்த போதே, தன்னுடன் பலப் பல குட்டிப் புயல்களை உருவாக்கியது. இந்தக் குட்டிப் புயல்கள், ’கருணாநிதிப் புயலை’ விட, தமிழகத்துக்கு அதிக சேதம் விளைவித்தன என்று போயஸ் தோட்டத்துப் புயல் அவ்வபோது அழுது அரற்றுவதை தடுக்க முடியவில்லையாம். பல்வேறு குட்டிப் புயல்களும் சேர்ந்து, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இடியையும், அதிக சேதத்தையும் விளைவித்துள்ளன என்று இடியோசையாக முழங்குகிறார்கள் வானிலை ஆய்வார்கள், தாயகத்தில் ஒதுங்கியபடியே.

இந்தப் புயல் எப்போது கரையைக் கடக்கும், எப்போது நமக்கெல்லாம் விமோசனம் பிறக்கும் என்று, தமிழக மக்கள் வேண்டாத நாளில்லை என்கிறது ஜெயலலிதா புயல். ஆனாலும், இந்தப் புயல் இப்போதைக்கு கரையை கடக்காது என்று வானியல் ஆய்வர்கள் அடித்து ஆரூடம் சொல்கிறார்கள்..


மற்ற புயல்களுக்கு இல்லாத ஒரு குணம் இந்தப் புயலுக்கு உண்டு. மற்ற புயல்கள் வந்து, மையம் கொண்டு, போதுமான சேதாரங்களை விளைவித்து விட்டு நகர்ந்து விடும். ஆனால், இந்தப் புயல், தமிழகத்தில் உள்ள பல்வேறு வானியல் ஆய்வறிஞர்களான, ஜெகதரட்சகன், கமலஹாசன், ரஜினிகாந்த், வாலி, வைரமுத்து, போன்றவர்கள் எப்போதும் இந்தப் புயலைப் பற்றிப் பேசிக் கொண்டே இருக்க வேண்டும் என்று விரும்பும் தன்மை கொண்டதாக இருப்பதால், இந்தப் புயலைச் சுற்றியே இந்த வானிலை ஆய்வாளர்கள் திரிந்து கொண்டிருப்பதை வாடிக்கையாக்கி இருக்கிறார்களாம்.


இப்படிப்பட்ட வானிலை ஆய்வாளர்களையெல்லாம் தொடர்ந்து தன்னகத்தே வைத்துக் கொள்வதற்காக மேலவை என்ற ஜால்ரா புயல் அரங்கத்தை விரைவில் அமைத்துக் கொள்ளவும், இந்த கருணாநிதி புயல் படாதபாடு படுவதாக தெரிவிக்கிறது போயஸ் தோட்டத்து வானிலை ஆய்வு மையம்.


இதனால் இந்தப் புயல், வாரத்தில் ஏழு நாட்களும் நேரு உள்விளையாட்டு அரங்கம், வள்ளுவர் கோட்டம், காமராஜர் அரங்கம், சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு கட்டிடம் போன்ற இடங்களில் மாலை நேரங்களிலும், காலையில், புதிய தலைமைச் செயலக கட்டிட வளாகத்திலும் மையம் கொண்டிருப்பதை வழக்கமாக்கி விட்டதாம்.

அடுத்த மாதம் இந்தப் புயல்... வடக்கு நோக்கி நகர்ந்து, கோவை கொடீசியா அரங்கில், ஒரு வார காலம் மையம் கொண்டிருக்கும் என்று வானியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுவரை இருந்தை விட, கடந்த 2006-ம் ஆண்டிலிருந்து இந்தப் புயலும், இதனுடன் இருக்கும் குட்டிப் புயல்களும் விளைவித்த சேதம் அதிகம் என்பதால், எப்போது இந்தப் புயல் கரையைக் கடக்கும் என்பதில் தமிழக மக்கள் மிகுந்த ஆர்வத்தோடு இருப்பதாக போயஸ் தோட்டம் பகுதியில் ஒதுங்கிய வானிலை ஆய்வாளர்கள் அங்கலாக்கின்றனர்.


ஜெயலலிதா புயல்:

இந்தப் புயல், 1991-ம் ஆண்டு, முதன் முதலில் தமிழகத்தை பலமாகத் தாக்கியது. இந்தத் தாக்குதலில் தமிழகம் அடைந்த சேதத்துக்கு அளவே இல்லை. 1991-ம் ஆண்டு, தமிகத்தில் மையம் கொண்டிருந்த இந்தப் புயல், ஐந்து ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டிற்கு பலத்த சேதத்தை உருவாக்கியது.


இந்தப் புயலின் சிறப்பம்சம், துணைப் புயல் இல்லாமல் கடலை விட்டு வெளியே வரவே வராது. 1991-ம் ஆண்டிலிருந்து, 1996-ம் ஆண்டு வரை, இந்தப் புயல் விளைவித்த சேதங்களை விட, இதன் உடன் இருக்கும் துணைப் புயலும், அந்தத் துணைப் புயலுக்கு, துணையான மற்ற புயல்களும் விளைவித்த சேதமே மிக அதிகம் என்று ஆய்வாளர்கள் அடித்துச் சொல்கிறார்கள்.


1996-ம் ஆண்டு, ’கருணாநிதிப் புயல்’ வந்து, இந்தப் புயலை வலுவிழக்கச் செய்தது. வலுவிழக்கச் செய்ததும், இந்தப் புயல், மீண்டும் தமிழகத்தை தாக்க வாய்ப்பே இல்லை என்று வானியல் ஆய்வர்கள் தெரிவித்த கருத்தை பொய்யாக்கும் விதமாக, மீண்டும் பலமாக தமிழகத்தை 2001-ம் ஆண்டு தாக்கியது. அந்தத் தாக்குதலில், ’கருணாநிதிப் புயல்’ நிலை குலைந்து போனது. 2001-ம் ஆண்டு மீண்டும் தமிழகத்தில் மையம் கொண்ட ஜெயலலிதா புயல், அரசு ஊழியர் குடியிருந்த பகுதிகளில் பலத்த சேதத்தை விளைவித்ததால், கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழக்க தொடங்கியது. 2006-ம் ஆண்டு, ’கருணாநிதிப் புயல்’ மீண்டும் இந்தப் புயலை வலுவிழக்கச் செய்து, தமிழகத்தில் இடியுடன் கூடிய பலத்த சேதத்தை ஏற்படுத்தத் தொடங்கி, இன்றுவரை இடியை கிளப்பிக் கொண்டே இருக்கிறது..


இந்த ’ஜெயலலிதா புயல்’ மீண்டும் தமிழகத்தில் மையம் கொள்ள வாய்ப்பு இருப்பதாக பெசண்ட் நகர் ஏரியாவிலிருந்து வானியல் ஆய்வாளர்கள் ஆசையை வெளிப்படுத்துகிறார்கள். 1996-ல், இந்தப் புயல் மீண்டும் தமிழகத்தை தாக்க வாய்ப்பே இல்லை என்ற அறிஞர்களின் கூற்றை பொய்யாக்கி, தமிழகத்தை 2001-ல் தாக்கியது போலவே மீண்டும் நடக்கக்கூடும் என்றும் நடராஜராக நர்த்தனமாடி தங்கள் கருத்தைத் தெரிவிக்கிறார்கள் வானிலை ஆய்வாளர்கள்.


இந்தப் புயல்,பெரும்பாலான நாட்களில், கொடநாடு போன்ற மலைப் பிரதேசங்களில் மையம் கொண்டிருப்பதோடு, அவ்வபோது சிறுதாவூரிலும் மையம் கொள்வதால், சட்டென வலுவிழந்து தமிழகத்தை தாக்கும் வாய்ப்பு இல்லாமல் போகிறது என்றும் புவியியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.


இந்தப் புயல், மீண்டும் பெரும் புயலாக வந்து, ’கருணாநிதிப் புயலை’ வலுவிழக்கச் செய்ய வேண்டும் என்றால், கூட இருக்கும் சக புயல்களை அனுசரிப்பதோடு, தாக்கவேண்டும் என்கிற ஒரே இலக்கோடு கடலிலிருந்து புறப்பட்டு வந்து கடலைக் கடக்க வேண்டும் என்கிறார்கள் வானிலை ஆய்வாளர்கள். அது நடந்தால், இந்தப் புயலுக்கு ‘லைலாவுக்கெல்லாம் லைலா...’ என்று பெயர் சூட்டுவோம் என்றும் சொல்கிறார்கள் வானிலை ஆய்வாளர்கள்.



சவுக்கு

Tuesday, May 18, 2010

வாருங்கள் ஞானதேசிகன்.


அன்புக்கும் மரியாதைக்கும் உரிய ஞானதேசிகன் அவர்களே,
முதலில் உங்களுக்கு உள்துறை செயலாளராக நியமிக்கப் பட்டிருக்கும் உங்களுக்கு அன்பு வாழ்த்துக்கள்.

உங்களுக்கு சவுக்கின் அன்பு வணக்கங்கள். நீங்கள் யாரென்று சவுக்குக்கு தெரியாது. ஆனால் நீங்கள் ஒரு ஐஏஎஸ் ஆபீசர் என்பது தெரியும். ஐஏஎஸ் ஆபீசர்கள் என்றால் சவுக்குக்கு பிடிக்காதே என்று தயவு செய்து நினைக்காதீர்கள். சவுக்குக்கு ஐஏஎஸ், ஐபிஎஸ் என்ற எந்த பாகுபாடும் கிடையாது.


சவுக்குக்கு தெரிந்ததெல்லாம் மனிதர்கள் தான். மனிதர்கள் என்றால், அத்தனை மனிதர்களும். இன்று தமிழக அரசில் இருக்கும் சில அதிகாரிகள், திராவிட முன்னேற்றக் கழக மக்களை மட்டும், மனிதர்கள் என்று கருதுகிறார்கள். மற்றவர்கள் எல்லாம், மாக்கள் என்று கருதுகிறார்கள். ஆனால் சவுக்குக்கு, அனைவரும் மனிதர்களே.

உங்களை குறிப்பாக வரவேற்க சவுக்குக்கு, பல்வேறு காரணங்கள் உண்டு. அதில் முக்கியமான காரணம், இது வரை உள் துறை செயலாளராக இருந்த மாலதி, ஐஏஎஸ் ஆபிசராக அல்ல, இது வரை ஒரு மனித ஜென்மமாக கூட செயல்பட்ட தில்லை என்பதே சவுக்கின் அனுபவம்.


மாலதி மட்டுமல்ல, தமிழகத்தில் பல்வேறு அதிகாரிகள், திராவிட முன்னேற்றக் கழகத்தின் வட்டச் செயலாளர்கள் போலத்தான் இது வரை செயல்பட்டு வந்ததார்கள், இதற்கெல்லாம் காரணம், கருணாநிதியின் அடங்காத பிடிவாதம் என்று வறட்டுக் காரணம் கூறுவார்கள். ஆனால், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், இந்திய மக்களுக்கும், அரசியல் சட்டத்திற்கும், கருணாநிதியை விட கடமைப் பட்டவர்கள் அல்லவா ? தமிழக மக்களும், இந்திய அரசியல் அமைப்புச் சட்டமும், கருணாநிதியை விட பெரியவை அல்லவா ?

ஜெயலலிதா ஆட்சியில் இருந்தால், அதிமுக தொண்டர் போல செயல்படுவதும், கருணாநிதி ஆட்சியில் இருந்தால், திமுக உடன் பிறப்பு போல செயல்படுவதும், அகில இந்தியப் பணி அதிகாளிகளுக்கு அழகல்ல. ஆனாலும், மாலதி உள்துறை செயலாளராக இருந்த காலம் வரையில், அவர் கழக உடன் பிறப்பாக மட்டும் அல்ல, கருணாநிதி குடும்பத்தின் ஒரு அங்கமாகவும், கருணாநிதியின் நம்பிக்கைக்கு பாத்திரமான, அடியாள் போலவுமே செயல்பட்டுக் கொண்டிருந்தார்.

இவ்வாறான செயல்பாடுகள், மாலதிக்கு, தலைமைச் செயலாளர் பதவியையும், கருணாநிதியின் நம்பிக்கையையும் பெற்றுத் தந்திருக்கக் கூடும். ஆனால், இந்திய அரசியல் அமைப்பின் பாலும், இந்திய மக்களின் பாலும், உளமார்ந்த அன்போடும், நேர்மையோடும், பணியாற்றுவேன் என்ற உறுதியில் இருந்து மாலதி தவறி விட்டார் என்பதே உண்மை.

மாலதி போன்ற ஐஏஎஸ் அதிகாரிகள், தாங்கள் ஐஏஎஸ் அதிகாரிகள் என்பதை மறந்து, அன்றைய ஆட்சியாளர்களின் ஏவல் பணியாளர்களாக மாறிப் போவது, இந்த ஜனநாயகத்தின் மிகப் பெரிய சாபக் கேடு.

ஆனால், இதையும் தாண்டி, ஏதாவது ஒரு வகையில் ஒரு நம்பிக்கை கீற்று, ஒரு நம்பிக்கை ஒளி, இருந்து கொண்டுதான் இருக்கிறது. இது வரலாறு நெடுக இருந்தே வந்திருக்கிறது.
கிறித்துவ மதத்தின் ஆதிக்கத்தில் உலகமே இருந்த போதும், உலகத்தை படைத்தது, ஏசு கிறிஸ்து என்ற பொய்யை உலகத்தை நம்ப வைக்க, தேவாலயங்களும், மிக பலம் வாய்ந்த பாதிரியார்களும் முயற்சி செய்து, அதில் வெற்றி பெற்ற போதும், உலகம் உருண்டை என்று ஒரு கலகக் குரல் ஒலிக்கத் தான் செய்தது. அந்தக் குரல் வரலாறு நெடுக ஒலித்துக் கொண்டேதான் இருக்கும். அதை யார் நினைத்தாலும், தடுக்க இயலாது. சர்வ வல்லமை பொருந்திய கருணாநிதி நினைத்தால் கூட.

அதைப் போல, மாலதி, உள் துறையின் செயலாளராக, கடந்த நான்கு ஆண்டுகளாக இருந்து, எவ்வளவோ, நல்ல காரியங்களைச் செய்திருக்க முடியும். எத்தனையோ குடும்பங்களில் ஒளியேற்றி வைத்திருக்க முடியும். ஆனால், மாலதி செய்ததெல்லாம், கருணாநிதி என்ற கயவனின் கையாளாக, அடியாளாக, ஏவலாளாக, மனசாட்சி இல்லாத பதராக, கருணாநிதியை விட மிகவும் மோசமான ஒரு அரசியல்வாதியாகவே இத்தனை ஆண்டு காலம் செயல்பட்டு வந்தார்.

இப்போது உங்களை உள்துறை செயலாளரா நியமித்திருப்பதும், ஏதோ, நீங்கள் ஒரு திறமையான ஐஏஎஸ் ஆபீசர் என்பதால் அல்ல. நீங்கள் மாலதியை விட, மிகுந்த விசுவாசமான ஒரு ஏவலாளாக கருணாநிதிக்கு வேலை செய்வீர்கள் என்று, யாரோ, உங்கள் சார்பாக கருணாநிதிக்கு சொல்லியிருப்பதால் தான். ஆனாலும், உள் துறை செயலாளர் என்ற இந்த பதவி மிகுந்த முக்கியமான பதவி.

இப்பதவியை நல்ல முறையில் பயன் படுத்தி, உண்மையில் உங்களுக்கு தங்கள் வரிப் பணத்தில் இருந்து ஊதியம் வழங்கம் அந்த மக்களுக்கு விசுவாசமாக செயல்படலாம். இல்லை, ஊரை அடித்து உலையில் போட்டு, தன் குடும்பத்தை மட்டுமே நேசிக்கும் கருணாநிதிக்கு விசுவாசமாகவும் செயல்படலாம்.

இதில் எப்படிப் பட்ட உள்துறை செயலாளராக நீங்கள் வரலாற்றில் பதிவு செய்யப் படுவீர்கள் என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும் ஞானதேசிகன். உங்கள் மீது சவுக்கு மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறது. வீணாக்கி விடாதீர்கள். குறிப்பாக, உளவுத் துறையில் இருக்கும் ஜாபர் சேட்டை நம்பாதீர்கள். அவர் உங்களை மிரட்டக் கூடும். உங்கள் தொலைபேசியை ஒட்டுக் கேட்கக் கூடும். உங்களுக்கு ஏதேனும் பலவீனம் இருந்தால், அதை பயன்படுத்தி, உங்களை EXPLOIT செய்யக் கூடும்.

அதற்கெல்லாம் இடம் கொடுக்காதீர்கள் ஞானதேசிகன். ஜாபர் சேட், ஒரு, நயவஞ்சக நரி என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்களை நம்ப வைத்துக் கழுத்தறுக்கக் கூடும்.

உங்கள் பணி சிறக்க சவுக்கின் மனமார்ந்த வாழ்த்துக்கள். ஏழை மக்களுக்கும், உழைப்பாளி மக்களுக்கும், குறிப்பாக, மக்களுக்காக பணியாற்றுங்கள். வாழ்த்துக்கள்.




சவுக்கு

Monday, May 17, 2010

நிறம் மாறும் ஜுனியர் விகடன்.



ஜுனியர் விகடன். ஒரு காலத்தில், தரமான பத்திரிக்கையாக, மக்களின் நம்பிக்கையை பெற்ற இதழாக வலம் வந்து கொண்டிருந்தது ஜுனியர் விகடன். இப்போது, சிறிது சிறிதாக நிறம் மாறி, தற்போது மஞ்சள் நிறமாகவே ஆகி விட்டது.

விகடன் குழுமத்தில் உள்ள மற்ற பத்திரிக்கைகள் அனைத்தையும் விட, அக்குழுமத்தில் பணியாற்றுபவர்களுக்கு, ஜுனியர் விகடன் என்றாலே ஒரு தனி மதிப்பு உண்டு. அரசு அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகள் என அனைவரிடத்திலும், ஜுனியர் விகடன் செய்திகள் என்றால் ஒரு மதிப்பும், தங்களைப் பற்றிய தவறான செய்திகள் வெளி வந்தால் அச்சமும் இருந்தது உண்டு. இதெல்லாம், பாலசுப்ரமணியன் என்ற விகடன் குழுமத்தின் மூத்த ஆசிரியர் இருந்த பொழுது.


இதற்குப் பிறகு, இரண்டாவது தலைமுறை தலையெடுத்த பிறகு, தொழிலை விரிவாக்க வேண்டும் என்றும், சினிமாவிலும், சின்னத் திரையிலும் கால் பதிக்க வேண்டும் என்றும், எடுக்கப் பட்ட முயற்சிகள், பாலசுப்ரமணியன் தனது விருப்பமின்மையை தெரிவித்த போதும், அவரது எதிர்ப்பு உதாசீனப் படுத்தப் பட்டது. இதையும் தாண்டி தீவிரமாக எதிர்த்தால், எக்ஸ்பிரஸ், இந்து, குமுதம் போன்ற பத்திரிக்கை குழுமங்களில் நடக்கும் குழாயடி சண்டை இங்கேயும் நடக்கும் என்ற புரிதலில், தனது மகனின் விருப்பப் படி, விட்டு விட்டார்.

ஆனால், தொடர்ந்து நடந்த சம்பவங்கள், பாரம்பரியம் மிக்க விகடன் குழுமம், பாலியல் உணர்வுகளை தூண்டும் வகையில், செக்சை மூலதனமாக வைத்து, செக்ஸ் பத்திரிக்கையாக மாறி வந்ததை கண்டு மனம் பொறுக்கவில்லை அந்த பெரியவருக்கு. சரி. செக்சை மூலதனமாக வைத்து பத்திரிக்கை நடத்துவதென்றால், அதில் ஆசிரியர் என்று என்னுடைய பெயரை போடாதே என்று முடிவெடுத்து, பொறுப்புக்களை ஒப்படைத்து, 2008ம் ஆண்டில் ஒதுங்கிக் கொண்டார் அந்த பண்பான பெரியவர்.


ஜுனியர் விகடன் எப்படிப் பட்ட இதழாக இருந்தது தெரியுமா ? 2003ம் ஆண்டில், தமிழகத்தில் கடும் வறுமை தாண்டவமாடிய போது, வெறும் பத்திரிக்கை பணியை மட்டும் செய்யக் கூடாது, அதையும் தாண்டி, சமுதாயத்தில் உருப்படியாக ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவெடுக்கப் பட்டு, விகடன் ட்ரஸ்ட் என்று ஒரு ட்ரஸ்ட் உருவாக்கப் பட்டு, பாலசுப்ரமணியனின் சொந்த கிராமமான நரிமணம், தத்தெடுக்கப் பட்டது.

ஒரு குடும்பத்துக்கு ஒரு நாளைக்கு ஒரு கிலோ அரிசி என்ற வகையில் வழங்கப் பட்டது. விகடனின் இந்த திட்டத்துக்கு கிடைத்த ஆதரவு, ஒன்றரை கோடி நிதியை பெற்றுத் தந்தது.
இதற்குப் பிறகு, பொறுப்பேற்ற, பா.சீனிவாசன் விகடன் குழுமம் பல்லாண்டுகளாக உழைத்து, எடுத்த நற்பெயரை, நாறப் பெயராக்கும் பணியில், தன்னை ஈடுபடுத்திக் கொள்ள தொடங்கினார். இதன் முதல் படி, விகடன் டாக்கீஸ் என்ற சின்னத் திரை. சின்னத் திரையில் சீரியல் தயாரிப்புத் தொடங்கியவுடனே, பிரபலமான, விஐபிக்களின் ஆதரவைப் பெற்ற சின்னத் திரை நடிகையோடு கிசுகிசுக்கப் பட்டார். விகடன் ஊழியர்கள் பலருக்கு இந்த விஷயங்கள் அரசல் புரசலாக தெரிய வந்தும், முதலாளிக்கு எதிராக என்ன பேச முடியும் என்று வாயை மூடிக் கொண்டு இருந்தார்கள். அந்தக் குற்றச் சாட்டுகளை சீனிவாசன் மறுக்கவும் இல்லை. ஆனால், நாளோரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இவரது சரச சல்லாபங்கள் வளர்ந்து கொண்டே இருந்தன.


சரி. சீனிவாசன் என்ற தனிப்பட்ட மனிதனின் அந்தரங்கம் இது. இதைப் பற்றி விமர்சிக்க யாருக்கு உரிமை உண்டு என்ற கேள்வி எழும். மிக மிக நியாயமான ஒரு கேள்வி. யாருக்கும் உரிமை இல்லைதான். சீனிவாசனின் ஜுனியர் விகடன் பத்திரிக்கை மற்றவரின் அந்தரங்கத்தில் தலையிடாத வரை, இந்த உரிமை யாருக்கும் இல்லை. கடந்த இதழ் ஜுனியர் விகடனில் ஒரு கவர் ஸ்டோரி. ஒரு ஆண், பல பெண்களோடு, உறவில் இருந்து, அந்த நெருக்கமான உறவை படம் பிடித்து வைத்துள்ளதையும், அந்தப் படங்களை, அவனது கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்கிலிருந்து அந்தப் பெண் எடுத்து விட்டாளாம்.





இதை கவர்ஸ்டோரியாக போட்டு, தன்னுடைய மிகப் பெரிய சமுதாய சேவையை செய்திருக்கிறது ஜுனியர் விகடன்
அதற்கு அடுத்த இதழில், வழக்கம் போல, நித்யானந்தா மற்றும் ரஞ்சிதா.



இது போன்ற சீரழிவிற்கு ஆளாகியுள்ள ஜுனியர் விகடன், தனது பாரம்பரியத்தையும், விழுமியங்களையும், சிறிது சிறிதாக இழந்து கொண்டு வருகிறது.


இதற்கு முன்பு, மிஸ்டர் மியாவ் என்ற ஒரு கண்றாவி தொடர். அந்தத் தொடரில், எந்த நடிகர் யார் கூட தற்பொழுது படுத்துக் கொண்டிருக்கிறார். இதற்கு முன்பு யார் கூட படுத்துக் கொண்டிருந்தார் என்ற ஆராய்ச்சி. இப்போது, அதே தொடரையே கொஞ்சம் பெயர் மாற்றி, சினி விசித்திரன் ஹியர் என்ற ஆராய்ச்சி தொடர்.


பேசாமல், ஜுனியர் விகடன், சரோஜா தேவி கதைகளை தொடராக வெளியிடலாம். அதில் வரும் படங்கள் அந்தத் தொடர்களுக்கு பொருத்தமாகவே இருக்கும். அடுத்த முயற்சியாக, சரோஜா தேவி கதைகளை விகடன் டாக்கீஸ் மூலமாக சின்னத் திரையிலோ, பெரிய திரையிலோ, தயாரித்து வெளியிடலாம். நல்ல லாபம் கிடைக்கும். அந்தப் பட ஷுட்டிங்குக்கு, தற்போது பா.சீனிவாசனுடன் நெருக்கமாக இருக்கும் காவல் துறை அதிகாரிகள், ஆதரவு தருவார்கள் என்பது உறுதி.

பேசாமல், பத்திரிக்கை நடத்துகிறேன் என்று போலியாக நடித்துக் கொண்டிருக்காமல், கன்னட பிரசாத் போல, நேரடியாக தொழிலுக்கு வாருங்கள். கன்னட பிரசாத் போல மாட்டிக் கொள்ளாமல், பத்திரமாக தொழில் நடத்த, உங்களுக்கு, ஆதரவு தர, பல போலீஸ் அதிகாரிகள் வருவார்கள்.



சவுக்கு

Thursday, May 13, 2010

சவுக்குக்கு கருணாநிதி ப்ரத்யேக பேட்டி





உண்மையான டெக்கான் க்ரானிக்கிள் பேட்டி


இன்றைய டெக்கான் க்ரானிக்கிள் நாளிதழில், கருணாநிதி பேட்டியளித்துள்ளார். இந்த இதழில் கருணாநிதியின் பேட்டி வந்த பின்புலம் குறித்து, சவுக்கில், தனிப் பதிவு எழுதப் படும். ஆனால், இந்தப் பதிவு, கருணாநிதி, பதில் சொல்லியிருந்தால் என்ன சொல்லியிருப்பார் என்பதும், மனதில் என்ன நினைத்திருப்பார் என்பதும் தொகுக்கப் பட்டு உள்ளது. உண்மையில் பேட்டியில் என்னதான் உள்ளது என்பதை, டெக்கான் க்ரானிக்கிள் படித்து தெரிந்து கொள்ளவும்.

(டெக்கான் இதழுக்கு கருணாநிதியின் பேட்டி, படமாக கீழே தரப்பட்டுள்ளது)
கேள்வி. தாங்கள் ஓய்வு பெறப்போவதாக தாங்கள் அளித்த முன்னோட்டங்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதே. தாங்கள் ஓய்வு பெறலாம் என திட்டமிட்டுள்ளீர்களா ?

கருணாநிதி பதில் இடையறாது மக்கள் பணி ஆற்ற வேண்டும் என்பதே, தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் எனக்கு கற்றுக் கொடுத்தது. மக்கள் பணிகள் ஏராளமாக காத்துக் கிடக்கையில் எனக்கு ஏது ஓய்வு ?

கருணாநிதி மனதில் நினைத்தது என்ன ம••••க்கு நான் ஓய்வு பெறனும் ? நான் ஓய்வு பெற்றுட்டா, யாரு எனக்கு பாராட்டு விழா நடத்துறது ? நான் என்ன லூசா, இப்பவே ஓய்வு பெற்றதுக்கு. சும்மா அப்படித்தான் அப்பப்போ ஜு குடுப்பேன். அதெல்லாம் போய் பெருசா எடுத்துக் கிட்டு… ..

கேள்வி உங்கள் ஆதரவாளர்கள், ஐந்து முறை முதலமைச்சராக இருந்த ஜோதி பாசுவின் சாதனையை முறியடிக்கும் வண்ணம், ஆறாவது முறையாக நீங்கள் தேர்தலில் போட்டியிடுவீர்கள் என்று கூறுகிறார்களே ?

கருணாநிதி கூறியிருக்கும் பதில் மக்களின் விருப்பம் அதுவானால், அதை மறுத்துப் பேச நான் யார் ? மக்களின் தீர்ப்பு, அந்த மகேசனின் தீர்ப்பு என்பதை அண்ணா எனக்கு கற்றுத் தந்திருக்கிறார்.

கருணாநிதி மனதில் நினைத்தது அப்போ, ஆறு வாட்டியோட முடிச்சுட்டு, ஏழாவது வாட்டி அந்த அம்மாவ சிஎம் ஆக்கலாம்னு பாக்கறீங்களா… ? நடக்காது. ஏழாவது வாட்டியும் நான்தான் சிஎம். எட்டாவது வாட்டியும் நான்தான் சிஎம்.





கேள்வி நீங்கள் ஸ்டாலினை துணை முதல்வராக அறிவித்த போது, அவர்தான் அடுத்த திமுக தலைவர் மற்றும், முதலமைச்சர் என்பது போல் இருந்தது. ஆனால், தற்போது, அழகிரியால் குழப்பமாக உள்ளது போல இருக்கிறதே ?

கருணாநிதி கூறியிருக்கும் பதில் இந்தக் குழப்பங்கள் எல்லாம், பூணூல் அணிந்தும், அணியாமலும் இருக்கும், சில பார்ப்பன ஏடுகள், அந்த அம்மையாரின் மனம் குளிரச் செய்வதற்காக கொடுத்திருக்கக் கூடிய செய்தி. அதைப் பற்றி நீங்கள் கேட்பதும், அந்த விஷமப் பிரச்சாரத்திற்கு நீங்களும் பலியாகி விட்டீர்கள் என்பதையே காட்டுகிறது.

கருணாநிதி மனதில் நினைத்தது என்ன பண்றது ? முட்டாப் பசங்கள புள்ளைங்களா பெத்தா இந்த மாதிரி முட்டாப் பய கேக்கிற கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியிருக்கு.

கேள்வி அழகிரி, மாநில அரசியலுக்கு வருவதாகவும், அவர் இடத்துக்கு கனிமொழி நியமிக்கப் படப் போவதாகவும் செய்திகள் வந்துள்ளனவே ?

கருணாநிதி கூறியிருக்கும் பதில் அழகிரி, எங்கு பணியாற்றுகிறாரோ, அங்கு பணியாற்ற அவருக்கு உரிமை உண்டு. அவ்வாறு, அவர் விருப்பத்திற்கு ஏற்ப பணியாற்றும் வகையில், கழக பொதுக் குழு முடிவு செய்யும்.

கருணாநிதி மனதில் நினைத்தது அழகிரி, திரும்பி வந்தா, இவனுங்க ரெண்டு பேருக்கும் யாரு பஞ்சாயத்து பண்ணிக்கிட்டு இருக்கறது ? ஒருத்தன ஒருத்தன் அடிச்சுக்கிட்டு, என் உயிர எடுப்பாணுங்களே ?

கேள்வி முதன் முறையாக, கட்சித் தலைவர்கள் யாரும், பத்திரிக்கைகளுக்கு பேட்டி தரக்கூடாது என்று கூறியுள்ளீர்கள். ஆனால், இது, அழகிரியைப் பார்த்து வெளியிட்ட தடையாணை என்று தோன்றுகிறதே ?

கருணாநிதி கூறியிருக்கும் பதில் திமுக ஒரு ஜனநாயக கட்சி. கழகத்தின் கொள்கைகளையும், அதற்கான விளக்கங்களையும், பத்திரிக்கை களிலே பேட்டியாக கொடுக்க கழக உறுப்பினர்கள் யாருக்கு வேண்டுமானாலும் உரிமை உண்டு என்றாலும், அவ்வாறு கொடுக்கப் படும் பேட்டிகளை சில ஏடுகள் திரித்து வெளியிட்டு, கட்சிக்கும், கழக ஆட்சிக்கும் அவப் பெயர் ஏற்படுத்துவதாலேயே இந்தக் கட்டுப்பாடு.

கருணாநிதி மனதில் நினைத்தது ஆமாம். பேட்டி கொடுக்கறதுக்கு, பேசறதுக்கு, எழுதறதுக்கு எல்லாம் நான் இருக்கேன். அத விட்டுட்டு, ஆளாளுக்கு, பெரிய ம…..ரு மாதிரி பேட்டி கொடுக்குறானுங்க. எல்லா பேட்டியிலயும், ஆற்காட்டையும், அன்பழகனையும் பக்கத்துலேயே வச்சுருந்தாலும், ரெண்டு பேரையும் என்னைக்காவது வாயை தொறக்க விட்டுருக்கேனா ?

கேள்வி ஆனால் எம்ஜிஆர் பிளவு, வைகோ பிளவு ஆகியவற்றைக் கூட சந்தித்த கட்சி, இன்று கட்டுப் பாடு இல்லாதது போல தோன்றுகிறதே ?

கருணாநிதி கூறியிருக்கும் பதில் எத்தனை பிளவுகள் வந்தாலும், இன்றும் அறிஞர் அண்ணா கற்றுக் கொடுத்த கடமை கண்ணியம் கட்டுப்பாடு தவறாமல் தான் நடந்து வருகிறது. நீங்கள் சொல்வது போன்ற தோற்றம், ஆரிய மாயையின் நீட்சி. பார்பன சூழ்ச்சியின் மீட்சி.

கருணாநிதி மனதில் நினைத்தது மந்திரி சபை மாற்றம்னு ஒரு அறிவிப்பு கொடுக்கறேன்.. அப்புறம் பாருங்க… எந்தப் பயலாவது பேசறானான்னு
கேள்வி. தற்போது, தமிழகத்தில் பல்வேறு அதிகார மையங்கள் இருப்பதாக செய்திகள் வருகின்றனவே ?

கருணாநிதி கூறியிருக்கும் பதில் பல்வேறு அதிகார மையங்கள் உள்ளது உண்மைதான். திராவிட முன்னேற்றக் கழகம் என்ற ஆலமரம் போன்ற அமைப்புக்கு, செயற்குழு, பொதுக் குழு, அரசியல் குழு, தலைமை ஆய்வுக் குழு, உயர்மட்டக் குழு என்ற பல்வேறு அதிகார மையங்கள் உள்ளது உண்மைதான்.

கருணாநிதி மனதில் நினைத்தது என்னை மீறி எந்த மையம் இருக்கு ? ஏதாவது அதிகார மையம் எல்லை மீறுதுன்னு தெரிஞ்சா, உடனே ராமச்சந்திரா ஹாஸ்பிட்டல் போய் அட்மிட் ஆயிட மாட்டேன்.

கேள்வி சட்டசபை தேர்தல் முன் கூட்டியே வருவதாக செய்திகள் வருகின்றனவே ?

கருணாநிதி கூறியிருக்கும் பதில் இவ்வாறு, வரக் கூடியவை செய்திகள் அல்ல. அந்த அம்மையாரின் விருப்பம். பார்பனக் கூட்டத்தின் கனவு. அது நிறைவேறாது.

கருணாநிதி மனதில் நினைத்தது இன்னும் 120 பாலம், 23 சிறப்பு பொருளாதார மண்டலங்கள்ளாம் கட்டி, ஒரு பெரிய அமவுன்ட அடிக்கலாம்னு ப்ளான் போட்ருக்கேன். அதுக்கு முன்னாடி, எலக்ஷன் நடத்த நான் என்ன லூசா ?

கேள்வி. காங்கிரஸ் பெரிய அண்ணன் மனப்பான்மையாடு நடந்து கொள்வதாகவும், அதனால் கட்சிக்குள்ளேயே பலருக்கு மன வருத்தம் என்றும், செய்திகள் வருகின்றனவே ?

கருணாநிதி கூறியிருக்கும் பதில் தியாகத் திருவிளக்காம் அன்னை சோனியாவும், நேர்மையின் சிகரம் பிரதமர் மன்மோகன் சிங்கும், எனக்கும், கழகத்துக்கும் அளித்து வரும் ஆதரவை உடைக்க நினைக்கும் சதிகாரக் கூட்டத்தின் பகல் கனவு இது. விபீடணக் கூட்டத்தின் விஷமப் பிரச்சாரம் இது.

கருணாநிதி மனதில் நினைத்தது வீல் சேர்ல, டெல்லிக்கு போயி, காங்கிரஸ் தலைவர்கள பாக்கலாம்னு போனா, என்னா திமிரா நடந்துக்கிறாங்க ? ஆளாளுக்கு, பெரிய லீடர்னு நெனப்பு. இங்க ஸ்டேட்ல இவனுங்க தயவு தேவைன்னுதானே, வாய மூடிக்கிட்டு இருக்கேன். இல்லன்னா, இவனுங்க, தமிழ்நாட்ல கால வெப்பாங்களா ? விஎஸ் பாபு கிட்ட சொல்லி, பின்னிட மாட்டேன் ?

கேள்வி ஜெயலலிதாவும், விஜயகாந்தும் கூட்டணி அமைக்கப் போவதாக செய்திகள் வருகின்றது. இதற்கு உங்கள் வியூகம் எப்படி இருக்கும் ?

கருணாநிதி கூறியிருக்கும் பதில் எத்தனை கூட்டணிகள் அமைத்தாலும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியுடன் தான் மக்கள் ஐக்கியமாவார்கள். கழக அரசின் மகத்தான சாதனைகளுக்கு முன்னால், எப்பேற்பட்ட கூட்டணியும் எடுபடாது என்பது வரலாறு.

கருணாநிதி மனதில் நினைத்தது அத நெனச்சாத்தான் பயமா இருக்கு. விஜயகாந்த் கிட்ட 12 பர்சென்ட் ஓட்டு இருக்கு. அதோட, ஏடிஎம்கே, வாக்கு வங்கியும் சேந்துச்சுன்னா மண்ணக் கவ்வ வேண்டியதுதான். எலேக்ஷன் வரும்போது, ஏதாவது ஏற்பாடு பண்ணணும். இந்த முறையும், கவர் ட்ரிக் பலன் கொடுக்குமான்னு தெரியல,

கேள்வி. நாட்டை இப்போது அச்சுறுத்திக் கொண்டு இருக்கும் நக்சலைட் பிரச்சினை பற்றி என்ன கூறுகிறீர்கள் ?

கருணாநிதி கூறியிருக்கும் பதில் தந்தை பெரியாரின் விரல் பிடித்தும், அறிஞர் அண்ணாவின் கரம் பிடித்தும், நான் அரசியலுக்கு வந்திருக்கா விட்டால், நானும் நக்சலைட்டாகி இருக்க வேண்டியவன் தான். அதனால், நக்சலைட்டுகளின் கோரிக்கைகளை மத்திய அரசு பரிவோடு பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் எனது அவா.

கருணாநிதி மனதில் நினைத்தது சும்மா இருக்கவனயெல்லாம் என்கவுன்டர்ல போட்டுத் தள்ளிட்டு இருக்கேன். நக்சலைட்டுன்னு எவனாவது வருவானா ?

கேள்வி. தமிழ்நாட்டில், வளர்ச்சி விகிதம், ஓரளவுக்கு பரவாயில்லை என்றாலும் கூட, கிராமப் புறங்களில் இன்னும் பல இடங்களில் வறுமை இருக்கிறதே…..

கருணாநிதி கூறியிருக்கும் பதில் கிராமப் புர வளர்ச்சிக்காக அறிஞர் அண்ணா பெயரில் ஏற்படுத்தப் பட்டுள்ள அண்ணா மறுமலர்ச்சித் திட்டமும், ஒரு ரூபாய் அரிசியும், இலவச வண்ணத் தொலைக் காட்சி திட்டமும், கிராமப் புற மக்களின் வாழ்விலே வண்ணங்களை அள்ளித் தெளித்துக் கொண்டிருக்கிறது என்பதை, நீங்கள் முரசொலியைப் படித்திருந்தால் அறிந்திருப்பீர்கள்.

கருணாநிதி மனதில் நினைத்தது கோபாலபுரம், சிஐடி காலனி போன்ற கிராமப் புறங்கள் போதுமான வளர்ச்சி அடைந்திருக்கிறதே. போதாதா ?
கேள்வி. இலங்கையில், இன்னும் தமிழ் மக்களுக்கு போதுமான உரிமைகள் வழங்கப் படவில்லையே ? அவர்கள் நிலை மேம்படவில்லையே ?

கருணாநிதி கூறியிருக்கும் பதில் அதற்காக இன்று இரவு கூட, மத்திய அரசுக்கு கடிதம் எழுத உள்ளேன். ஈழத் தமிழர்களின் வாழ்வு சிறப்பதற்காக கழக அரசும், இந்தக் கருணாநிதியும் குரல் கொடுக்க என்றுமே தயங்கியதில்லை என்பதை இந்த நேரத்திலே உங்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

கருணாநிதி மனதில் நினைத்தது இப்போதைக்கு தேர்தல் இல்லை. அதனால், அது பற்றி கவலை இல்லை.

கேள்வி. பாமகவுக்கு, ராஜ்ய சபை எம்.பி.சீட் வழங்கப் படுமா ? பாமக திமுக கூட்டணிக்கு வருமா ?

கருணாநிதி கூறியிருக்கும் பதில் பொருத்திருந்து பாருங்கள். காலம் பதில் சொல்லும்.

கருணாநிதி மனதில் நினைத்தது வரலன்னா அவனுங்களுக்கு வேற என்ன வழி… ? எம்பி சீட், தர்றேன் தர்றேன்னு, ஆசைக் காட்டி, இழுக்க வேண்டியதுதான். இல்லன்னா ஜெகதரட்சகன வச்சு, வன்னியர் ஓட்ட ஒடைக்க வேண்டியதுதான். எம்.பி எலெக்ஷன்ல, எல்லா சீட்லயும், தோக்க வெச்சேன்ல ?

கேள்வி. செல்வி ஜெயலலிதா, விசுவாசத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பார். நீங்கள், சீனியாரிட்டிக்கு முன்னுரிமை கொடுப்பீர்கள் என்று கூறப்படுகிறதே ?

கருணாநிதி கூறியிருக்கும் பதில்தேனோடு சேர்ந்த தெள்ளமுதைப் போல, விசுவாசத்தோடு கலந்த சீனியாரிட்டிக்கே நான் முன்னுரிமை கொடுப்பேன். பேராசிரியர் அன்பழகனை திமுக பொதுச்செயலாளர் ஆக்கியதைப் பார்த்தாலே நான் சீனியாரிட்டிக்கு முன்னுரிமை கொடுப்பவன் என்பது தெரியவில்லையா ? கட்சி மாறி வந்த அனிதா ராதாகிருஷ்ணனுக்கு மீண்டும் எம்எல்ஏ சீட் கொடுத்ததிலி ருந்தே நான் விசுவாசத்துக்கு முன்னுரிமை கொடுப்பவன் என்பது விளங்கவில்லையா ?

கருணாநிதி மனதில் நினைத்தது நான் எனக்கும் என் குடும்பத்துக்கும் தான் முன்னுரிமை கொடுப்பேன். வேற யாருக்கும் கிடையாது

கேள்வி. சினிமாவுக்கும், சினிமாக் காரர்களுக்கும் மிகுந்த முக்கியத்துவம் வழங்குகிறீர்கள் என்ற குற்றச் சாட்டு உள்ளதே ?

கருணாநிதி கூறியிருக்கும் பதில் அந்த அம்மையாரின் ஆட்சிக் காலத்தில் சினிமாக் காரர்களுக்கு செய்ததை விடவா நான் செய்து விட்டேன் ? நானும் ஏறி வந்த ஏணி, சினிமா என்பதை மறந்து விடாதீர்கள். நான் சினிமாவில் வசனம் எழுதி, பகுத்தறிவை வளர்த்தேன். அந்த அம்மையார் “வைரம்“ படத்தில் நடித்து, என்ன வளர்த்தார்கள் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்.

கருணாநிதி மனதில் நினைத்தது சினிமால ஆட்ற மாதிரி, டக்கரா யாருய்யா டான்ஸ் ஆடுறா ? ஒவ்வொரு, விருது வழங்கும் பங்ஷன்லயும், என்னா டான்ஸ் ஆடுறாங்க பாத்தியா ? போய் வேற வேலையப் பாருய்யா. வந்துட்டான் கேள்வி கேக்க.

கேள்வி. இந்த வயதிலும், உங்களுக்கு, தளராத ஆர்வத்தையும், உத்வேகத்தையும் தருவது எது ?

கருணாநிதி கூறியிருக்கும் பதில் மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்றாலே, எங்கிருந்தோ உடம்பில் உத்வேகம் வந்து சேர்கிறது. தமிழன்னையின் ஆசி எனக்கு இருக்கையில், எனக்கு களைப்பு எங்கிருந்து வரும் ?

கருணாநிதி மனதில் நினைத்தது துட்டுதான் வேற என்ன ? அரசியல்ல இருந்தா துட்டு இல்லன்னு தெரிஞ்சா, இன்னேரம் வேற வேலயப் பாக்க போயிருப்பேன்.

கேள்வி நீங்கள் ஒரு மிகச் சிறந்த கிரிக்கெட் ரசிகர் என்று தெரியும். 20க்கு 20 கிரிக்கெட்டைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?

கருணாநிதி கூறியிருக்கும் பதில் அரசியலை விட, விறு விறுப்பாக இருக்கிறது. மேலும் 20 ஓவர் கிரிக்கெட் மேட்சைப் போலவே நானும் சுறுசுறுப்பாக பணியாற்றுவதாக உங்களைப் போன்ற பத்திரிக்கையாளர்களே கருத்து தெரிவித்துள்ளதால் நான் வேறு என்ன சொல்ல ?

கருணாநிதி மனதில் நினைத்தது என்னா நெனச்சா என்ன ? சீனிவாசன் பேர்ல, சென்னை கிங்சும், உங்க பேப்பர் பேர்ல, ஐதராபாத் டீமும் பினாமியா வாங்கிப் போட்ருக்கேன். துட்டு வர்ற வரைக்கும், கிரிக்கெட் பேன்தான். அது 20 ஓவரா இருந்தா என்ன, 2 ஓவரா இருந்தா என்ன ?




சவுக்கு

Monday, May 10, 2010

நாட்டின் கல்வி வளர்ச்சியை தடுக்க சிபிஐ சதி ?


நாட்டின் கல்வி வளர்ச்சியை தடுப்பதற்கு மத்திய புலனாய்வு நிறுவனமான சிபிஐ முயற்சி செய்து வருவதாக திடுக்கிடும் தகவல்கள் எழுந்துள்ளன.


இந்தியா போன்ற, வளர்ந்து வரும் நாடுகளில், கல்வி மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளது. மேலும், அடிப்படை மருத்துவ வசதிகள் மிக மிக குறைவாக உள்ளன. பெரும்பாலான மக்களுக்கு, மருத்துவ வசதிகள் இல்லாமல் அல்லல் படுகின்றனர்.
சரிவர மருத்துவ வசதிகள் இல்லாத காரணத்தாலேயே, பலர் இறக்க நேரிடுவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.


இது போன்ற அவல நிலையை தடுப்பதற்காகவே, இந்தியாவின் மருத்துவ கவுன்சிலின் தலைவராக இருந்த, கேதன் தேசாய் என்பவர், இந்தியாவின் மருத்துவக் கல்வியை மேம்படுத்துவதற்காக அரும்பாடுபட்டு வந்திருக்கிறார்.


கேத்தன் தேசாய்



இந்தியாவில் பள்ளிப் படிப்பை முடித்து, பல பாடங்களில் பெயிலாகி, டாக்டராக முடியாமல் அவஸ்தைப் படுபவர்கள், தங்களின் பண பலத்தால், ரஷ்யா சென்று படித்து டாக்டராகி வருகின்றனர். இவ்வாறு பலர் ரஷ்யா செல்வதால், இந்தியாவின் பணம், ரஷ்ய நாட்டுக்கு செல்கிறது. இதையும் தடுக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில், அருமை மருத்துவர் கேத்தன் தேசாய், பல்வேறு திட்டங்களை வகுத்து, இந்தியாவில் மருத்துவக் கல்வி மிகச் சிறப்பாக வளர, இவர் மேற்கொண்ட திட்டங்களை, மத்திய புலனாய்வு நிறுவனமான சிபிஐ, தீய உள்நோக்கத்துடன் தடுத்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேத்தன் தேசாய் மேற்கொண்ட அற்புதமான திட்டங்களில் சில.
ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ படிப்பில், அறிவியல் பாடங்களையே படிக்காத, த்ரேசியா கோக்கட்டு என்பவரை, மருத்துவராக பதிவு செய்திருக்கிறார்.

வெறும் ஹோம் சைன்ஸ் பாடத்தை படித்த, மரீனா ஃப்ரான்சிஸ் என்பவரை மருத்துவராக பதிவு செய்திருக்கிறார். ஏப்ரல் 2003ல், உச்ச நீதிமன்றம், ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ படிக்கையில், அறிவியல் படிப்புகளான, உயிரியல் (தாவரவியல் மற்றும் விலங்கியல்) ஆகிய படிப்பை படிக்காதவர்கள், மருத்துவர்களாக ஆக இயலாது என்று வழங்கிய தீர்ப்புக்குப் பிறகும், இவ்வாறு, கேத்தன் தேசாய், அனைவரையும், மருத்துவர்களாக பதிவு செய்ய அனுமதி அளித்திருப்பதன் மூலம் எத்தனை பெரிய சேவையை ஆற்றியிருக்கிறார் தேசாய் ?

பொறுக்குமா இந்த சிபிஐக்கு ?

இது மட்டுமல்ல. ப்ளஸ் டூ படிக்கையில் தியரி பாடங்களில் பெயில் ஆனவர்களை கூட, டாக்டர்.தேசாய், மருத்துவர்களாக பதிவு செய்ய அனுமதித்திருக்கிறார்.


மருத்துவ பட்டப் படிப்புக்கான விதிமுறைகளின் படி, முதலாண்டு, படிக்கும் எம்பிபிஎஸ் மாணவர், நான்கு வாய்ப்புகளுக்குள், தன்னை தகுதிப் படுத்திக் கொள்ள வேண்டும். அதாவது, முதல் ஆண்டு எம்பிபிஎஸ் ல் பெயில் ஆனால், நான்கு முறைகளுக்குள், பாஸ் செய்யலாம் என்பது விதி.

அதற்காக, நான்கு முறை பெயில் ஆன ஒரு மாணவர் டாக்டராகவே ஆக முடியாது என்பது எப்படிப் பட்ட ஒரு சமூக அநீதி ? அதனால்தான், டாக்டர்.தேசாய், நாக்பூர் அரசு மருத்துவ கல்லூரி, என்கேபி.சால்வே மருத்துவக் கல்லூரி மற்றும் பல்வேறு கல்லூரிகளில் பயின்ற மாணவர்களை ஏழாவது, எட்டாவது முறை கூட, தேர்வு எழுத அனுமதித்து உள்ளார்.

இது என்ன இப்படிப்பட்ட ஒரு விதி அநியாயமாக உள்ளதே என்று உணர்ந்த டாக்டர் தேசாய், 2003ம் ஆண்டு, வெறும் நாலே நாலு அட்டெம்ப்டுகள்தான் என்று இருந்த இந்த விதியையே எடுத்து விட்டார்.


இவ்வாறு, இந்தியாவில் உள்ள அனைவரையுமே (பணம் உள்ளவர்கள்) மருத்துவர்களாக ஆக்க வேண்டும், இந்தியாவின் கல்வித் தரத்தை ரஷ்யாவுக்கு இணையாக உயர்த்த வேண்டும், இந்தியாவின் மருத்துவத்தை மேம்படுத்த வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் செயல்பட்ட டாக்டர் தேசாய் மீது அநியாயமாக வழக்கு பதிவு செய்து, கைது செய்துள்ளது இந்த சிபிஐ.

இந்த தேசாய் மீது அப்படி என்னதான் குற்றச் சாட்டு ? ஒன்றும் பெரிய குற்றச் சாட்டு இல்லை. பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா மாகாணத்தில், மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி கோரி, அகில இந்திய மருத்துவ கவுன்சிலிடம் விண்ணப்பிக்கப் பட்டுள்ளது. இந்த கல்லூரியை ஆய்வு செய்த, மருத்துவக் கவுன்சிலின் ஆய்வுக் குழு, ஆய்வுக்குப் பின் இந்தக் கல்லூரியில், அனுமதி அளிப்பதற்கு போதுமான வசதிகள் இல்லை. அதனால், அனுமதி வழங்க இயலாது என்று முடிவெடுக்கப் பட்டுள்ளது.

அந்த மருத்துவக் கல்லூரியின் துணைத் தலைவர், நம் கேத்தன் தேசாயிடம் உங்களுக்கு லஞ்சம் தருகிறேன், கல்லூரிக்கு அனுமதி கொடுங்கள் என்று கேட்டுள்ளார். தேசாயும், மிக மிக குறைந்த அளவு லஞ்சத் தொகையாக வெறும் இரண்டு கோடியை கேட்டுள்ளார். இந்த இரண்டு கோடி தொகையானது, டெல்லியைச் சேர்ந்த ஒரு இடைத் தரகரிடம், தேசாய்க்கு கொடுக்கும் படி, கொடுத்தனுப்பப் பட்டுள்ளது.

இது பொறுக்கவில்லை சார் சிபிஐக்கு… !
யாருமே புகார் கொடுக்காமல், இடைத் தரகர், மருத்துவக் கல்லூரியின் துணைத் தலைவர், கேத்தன் தேசாய் அப்புறம் அந்தக் கல்லூரியின் இன்னொரு அலுவலர் ஆகிய நால்வரையும், கைது செய்து விட்டது சார்…

என்ன அநியாயம் பாருங்கள் ?
ஒரு லட்சம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்தி விட்டு, மீண்டும், தொலைத் தொடர்புத் துறைக்கே அமைச்சராக வந்து உட்கார்ந்திருக்கிறார் நமது “தலித்“ ராஜா. வெறும் இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் என்று, இந்தியாவை மருத்துவக் கல்வியில் முன்னேற்ற வேண்டும் என்ற உயர்ந்த லட்சியத்திற்காகவே உழைத்த, ஒரு மகானைப் போய் கைது செய்திருக்கிறது

பாருங்கள் சிபிஐ ?


என்ன கொடுமை சரவணன் இது ?

சவுக்கு


Sunday, May 9, 2010

பேராசைக் காரனடா பார்ப்பான்






பேராசைக் காரனடா பார்ப்பான் - ஆனால்
பெரியதுரை என்னினுடல் வேர்ப்பான்
யாரானாலும் கொடுமை இழைப்பான் - துரை
இம்மென்றால் நாய்போல உழைப்பான்.

என்று பாரதி சொன்னது எத்தனை சத்தியமான வார்த்தைகள் ? இந்தப் பதிவு எந்த பார்ப்பானைப் பற்றித் தெரியுமா ? இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலராக உள்ள என்.சீனிவாசன் என்பவரைப் பற்றித் தான் ?

இந்திய சிமென்ட்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக இருக்கும் இந்த என்.சீனிவாசனின் பேராசைப் பற்றித் தான் இன்று இப்பதிவு விவாதிக்கப் போகிறது.
இந்த என்.சீனிவாசன், தொடக்கம் முதலே, கருணாநிதி குடும்பத்துக்கு நெருக்கமாக அறியப் பட்டவர். ஜெயந்திரர் கைதின் பொழுது, அவரைக் காப்பாற்ற, சீனிவாசன் எடுத்த முயற்சிகள், வெற்றி பெறாமல் போனது. ஆனால், கருணாநிதி குடும்பத்துடன், எப்போதும் நெருக்கமாக அறியப்படுபவர் தான் இந்த என்.சீனிவாசன்.

சமீபத்தில் ஒலிபரப்பப் பட்ட தொலைபேசி உரையாடலின் போது, கனிமொழி சொன்னது போல், வெளிப்படையாக பேசுவது ஒன்று, உண்மை நிலை வேறு என்று சொன்னது, கனிமொழியின் தந்தைக்குத் தான் பொருந்தும். ஊருக்கு, பார்ப்பன எதிர்ப்பு, பெரியார் அரசியல், உள்ளுக்குள், பார்ப்பனர்களோடு கள்ள உறவு. இதுதான் கருணாநிதி.

சமீபத்தில், ஐபிஎல், சர்ச்சை எழுந்ததும், முதலில், கொச்சி அணி ஏலம் எடுத்ததில் சிக்கல் என்று இந்த பிரச்சினை தொடங்கியது. பிறகு, லலித் மோடி, இதில் ஏதோ விளையாடி விட்டார், ஏகப்பட்ட கருப்புப் பணத்தை சேர்த்துள்ளார் என்ற செய்தி வெளி வந்தது. பிறகு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் ஷஷாங்க் மனோகரும், செயலர் என்.சீனிவாசனும், கூட்டணி அமைத்து, லலித் மோடிக்கு எதிராக களம் இறங்கினர். திடீரென, லலித் மோடி எப்படி பிசிசிஐன் பெரிய எதிரியாகிப் போனார் என்பது அதிசயம். மோடி மீது நடவடிக்கை எடுக்கப் படுமா, படாதா என்ற சர்ச்சைகள் எழுந்து, விவாதிக்கப் பட்டுக் கொண்டிருந்த போதே, மனோகர், சீனிவாசன் அணி, லலித் மோடிக்கு எதிராக பேட்டி கொடுக்க ஆரம்பித்தது.




லலித் மோடி, ஒன்றும் சத்தியச் சந்திரன் இல்லை. பெரிய யோக்கியன் ஒன்றும் இல்லை. ஆனால், இத்தனை ஆண்டுகள், ஐபிஎல், 1, 2 எல்லாம் நடக்கும் போது, அமைதியாக இருந்த மனோகர், சீனிவாசன் கூட்டணி, இப்போது, திடீரென சீறி எழுந்ததற்கான காரணம் என்ன ? இந்த திடீர் கோபத்தில் சாதிய உள்ளீடுகள், இருக்கலாம் என்பதை மறுப்பதற்கில்லை. (லலித் மாடி, கொஞ்சம் கருப்பா வேற இருக்கார்)
லலித் மோடி மீது எழுந்த முக்கிய குற்றச் சாட்டு, “முரண் விருப்பம்“ (Conflict of interest). அதாவது, கொச்சி அணியிலும், இதர அணிகளிலும், மோடிக்கும், அவர் உறவினர்களுக்கும் பங்குகள் உள்ளன என்பது.

இந்தக் குற்றச் சாட்டை முகத்தளவில் (face value) எடுத்துக் கொண்டால் கூட இதில் மோடியை விட, மோசமான குற்றத்தை புரிந்தவர் என்.சீனிவாசன். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலர், என் சீனிவாசன். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதலாளி, என்.சீனிவாசன். இந்திய செஸ் பெடரேஷனின் தலைவர் என்.சீனிவாசன்.
லலித் மோடி செய்வது முரண் விருப்பமென்றால், சீனிவாசனின் நடவடிக்கைகளுக்கு என்ன பதில் ?


இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) மிக மிக அயோக்கியத்தனமான ஒரு அமைப்பு. இதற்கு வசதியான போது, பொதுத்துறை நிறுவனம் என்று அழைத்துக் கொள்ளும். வசதி இல்லாத போது, தனியார் நிறுவனம் என்று அழைத்துக் கொள்ளும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி, பிசிசிஐ டம் கேள்வி கேட்டால், தனியார் நிறுவனம் என்று கூறிக் கொள்ளும். மத்திய அரசிடம் வரி விலக்கு கேட்க வேண்டும் என்றால் மட்டும், பொதுத் துறை நிறுவனம் என்று கூறிக் கொள்ளும்.

இப்படிப் பட்ட ஒரு அதி பயங்கரமான ஊழல் நடப்பதை, பல ஆண்டுகளாக இந்த ஊடகங்கள் கண்டு கொள்ளாமல் இருந்ததற்கு காரணமே, இந்த விளையாட்டினால், ஊடகங்கள் அடையும் கொள்ளை லாபம் தான். இந்த லாபங்களினால், ஊடகங்கள், இதில் நடைபெறும் ஊழலை கண்டு கொள்ள வில்லை.

இந்த ஊழலை வெளிக் கொண்டு வந்ததில், சசி தரூருக்கு, பெரிய பங்கு உண்டு. இவ்விவகாரத்தில், சசி தரூர் மட்டும் சிக்கவில்லை என்றால், இந்த விவகாரம், இத்தனை தூரத்திற்கு வெளியில் வந்திருக்காது.



தற்பொழுது, பல்கேரியா நாட்டில், சதுரங்க போட்டிக்கான, ஆனந்த் டோபலோவ், போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை தங்கள் நாட்டில் நடத்துவதற்கு பல்கேரியா நாடு செலவிட்ட தொகை 13 கோடி. விஸ்வநாதன் ஆனந்துக்கு, இந்தப் போட்டியை இந்தியாவில் நடத்த விருப்பம். ஆனால், “காசேதான் கடவுளடா“ இல்லையா ? ஸ்பான்சர்கள் கிடைக்காத காரணத்தால், இப்போட்டி, பல்கேரியா நாட்டுக்கு சென்றது.
என்.சீனிவாசன், சதுரங்க பெடரேஷனின் தலைவராக பொறுப்பேற்ற பிறகுதான், சதுரங்க பெடரேஷன், இப்படிப் பட்ட சரிவைச் சந்திருக்காது என்று கூறுகிறார்கள். 2009 அன்று உள்ளபடி, வரிக்கு பிந்தைய இந்தியா சிமென்ட்சின் வருமானம் எவ்வளவு தெரியுமா 511 கோடி. இந்த சதுரங்கப் போட்டிக்கான ஸ்பான்சராக இந்தியா சிமென்ட்சே பொறுப்பேற்றிருந்தால், 13 கோடி என்பது ஒரு பெரிய விஷயமல்ல. மேலும், இந்தப் போட்டி இந்தியாவில் நடைபெற்றிருப்பது, சதுரங்க விளையாட்டுக்கு ஒரு பெரிய ஊக்கமாக இருந்திருக்கும்.

ஆனால், என்.சீனிவாசன், சதுரங்க பெடரோஷனின் தலைவராக பொறுப்பேற்ற பிறகுதான், இந்த பெடரேஷன் இப்படிப் பட்ட ஒரு சரிவை சந்தித்தது என்று தெரிகிறது.



என்.ராமச்சந்திரன்


அடுத்து, இந்தியாவின் ஸ்குவாஷ் பெடரேஷனின் தலைவர் யார் தெரியுமா ? என்.சீனிவாசனின் சகோதரர், என்.ராமச்சந்திரன். இந்திய விளையாட்டு அமைச்சகத்தின் அங்ககாரம் பெற்ற அமைப்பாக இருப்பதால், இந்த பெடரேஷனுக்கு வரும் நிதி அத்தனையையும் நிர்வாகம் செய்யும் பொறுப்பு என் ராமச்சந்திரனுக்குத் தான்.




இப்போது ஒரு நம்பிக்கை கீற்றாக, உச்ச நீதிமன்றம், விளையாட்டை வைத்து, பணம் சம்பாதித்து, தற்போது சம்பாதிக்க இயலாமல், உள்ள இன்னொரு பண முதலை, ஏ.சி.முத்தையா தொடர்ந்த வழக்கில், என்.சீனிவாசனுக்கும், பிசிசிஐக்கும், நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

இப்போது சொல்லுங்கள்.
பேராசைக் காரனடா பார்ப்பான் - ஆனால்
பெரியதுரை என்னினுடல் வேர்ப்பான்
யாரானாலும் கொடுமை இழைப்பான் - துரை
இம்மென்றால் நாய்போல உழைப்பான்.

பாரதியின் இந்தப் பாட்டு சரிதானே ?



சவுக்கு

Saturday, May 8, 2010

மானங்கெட்ட ராசா ?





மீண்டும், ஸ்பெக்ட்ரம் என்னும் பூதம், ராசாவையும், திமுகவையும், பிடித்து ஆட்டத் தொடங்கியிருக்கிறது.



மத்திய புலனாய்வு நிறுவனம், சி.பி.ஐ, தொலைத்தொடர்பு அலுவலகத்தையும், இது தொடர்பாக மேலும் பல்வேறு அலுவலகங்களிலும் சோதனை நடத்தியிருக்கிறது. இச் சோதனைகள், ஆ.ராசா ஐக்கிய முற்போக்கு கூட்டணி அமைச்சராக இருக்கையிலேயே, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் சிபிஐ ஆல் நடத்தப் பட்டிருப்பது கூடுதல் சிறப்பு.




ராசா சமுதாயத்தின் அடித்தட்டு வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால், பத்திரிக்கைகளாலும், டெல்லி வட்டாரங்களாலும் அவர் குறி வைத்து தாக்கப் படுகிறார் என்று கருணாநிதி தன் “நா”நயத்தால் உரைக்கக் கூடும்.



ஸ்பெக்ட்ரம் இந்தியா சந்தித்த மிகப் பெரிய ஊழல்களில் ஒன்று என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. தோராயமான கணக்கின்படி கூட, 60,000 கோடிக்கு குறையாமல், அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று பத்திரிக்கைகள் கூறுகின்றன.

இந்த ஸ்பெக்ட்ரம் ஊழலில் என்னதான் நடந்தது ? ஜனவரி 2008ல் தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு, முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் லைசென்சுகள் வழங்கப் பட்டன. ஒரு லைசென்சின் விலை 1651 கோடி. இதில் என்ன தவறு ?



இந்தத் தொகை எப்படி நிர்ணயிக்கப் பட்டது தெரியுமா ? ஜனவரி 2001ல் ஏலம் விடப்படுகையில் என்ன தொகைக்கு போனதோ, அதே தொகைக்கு 7 ஆண்டுகள் கழித்து நிர்ணயிக்கப் பட்டது. 2001ல் இருந்ததை விட 2008ல் ஆறு மடங்கு விலை கூடியிருந்தும், பழைய விலைக்கே ராசா ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை வழங்கியுள்ளார்.


ஆறு மடங்கு விலை உயர்ந்து விட்டது என்று எப்படி கூறுகிறார்கள் ? எப்படியென்றால் ராசாவின் தாராள குணத்தால் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்ற ஸ்வான் டெலிகாம் மற்றும் யூனிடெக் ஆகிய இரு நிறுவனங்களும், தாங்கள் பெற்ற ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை ஒரு சில மாதங்களிலேயே ஆறு மடங்கு லாபம் வைத்து வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்றன.

இதில் அடுத்த முறைகேடு என்னவென்றால், இவ்வாறு ஒதுக்கீடு செய்யப் பட்டது திறந்த ஏலம் அடிப்படையில் நடக்கவில்லை. “முதலில் வருபவருக்கே முன்னுரிமை” என்ற முறையில் நடந்தது. இந்த முறையிலும் கூட, ராசா விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாளை, தனக்கு வேண்டிய நிறுவனங்களுக்கு சாதகமாக மாற்றினார் என்றும் குற்றச் சாட்டு உள்ளது.

இந்த ஊழல் முதலில் வெளிவருகையில், கருணாநிதி குடும்பம் பிளவு பட்டிருந்தது. இதனால், தொலைத்தொடர்பு அமைச்சர் பதவியை இழந்த தயாநிதி மாறன் சன் டிவி மூலம், இந்த ஊழலை மிகப் பெரிதாக பிரச்சாரம் செய்தார். உடனே, ராசா, எனக்கு முன் இருந்த மந்திரி (தயாநிதி மாறன்) எடுத்த கொள்கை முடிவின் அடிப்படையில்தான் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப் பட்டதாக தெரிவித்தார். உடனே, சன் டிவி, மாறன் இந்த கொள்கை முடிவை எடுக்கவேயில்லை, அவர் காலத்தில் ஸ்பெக்ட்ரம் ஏலத்துக்கு விடப்படவேயில்லை என்று மறுப்பு கூறியது.

உடனே ராசா, தொலைத் தொடர்பு ஒழுங்கு ஆணையம் (டிராய்) எடுத்த கொள்கை முடிவின் அடிப்படையில்தான் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப் பட்டதாக தெரிவித்தார். ஆனால் ட்ராய், உடனடியாக மறுப்பு தெரிவித்தது.

டிசம்பர் 2008ல் பிரிந்த குடும்பம் ஒன்று கூடியதும், கருணாநிதிக்கு “இதயம் இனித்தது, கண்கள் பனித்தது”. சன் டிவிக்கும், கருணாநிதிக்கும், ஸ்பெக்ட்ரம் ”ஊழல் முடிந்தது”.



பொதுத்தேர்தலில், காங்கிரஸ் வெற்றி பெற்றதும், முன்பை விட, அதிக இடங்கள் கிடைத்ததும், திமுகவின், பலம் சோனியா காந்தியிடம் குறைந்தது. 2004ல், தமிழ்நாடு இல்லத்திற்கு வந்து கருணாநிதியை சந்தித்து ஆதரவு கேட்ட சோனியா, 2009ல் தன்னை தள்ளு வண்டியில் வந்து பார்க்க வைத்தார். கேட்ட இலாக்காக்கள் ஒதுக்கப் படாததால், கோபித்துக் கொண்டு, கருணாநிதி, தள்ளுவண்டியிலேயே திரும்பி வந்தார்.

ஆனால், தனக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச செல்வாக்கால், ராசாவுக்கு, மீண்டும் தொலைத் தொடர்புத் துறையை பெற்றுத் தந்தார்.

ஆனால், இம்முறை மீண்டும், தொலைத்தொடர்புத் துறையை பெற்ற ராசா, ‘பல் பிடுங்கிய பாம்பாக’ ஆக்கப் பட்டார். எந்த விஷயத்திலும், தனித்து முடிவெடுக்க முடியாமல், கண்காணிக்கப் பட்டார். இதெல்லாம், கருணாநிதிக்கு எரிச்சலை ஏற்படுத்தினாலும், ஒன்றும் செய்ய முடியாமல், பல்லைக் கடித்துக் கொண்டிருக்கிறார்.



ராசா மீது, இந்தக் குற்றச் சாட்டு மட்டுமல்ல. மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆ. ராசா மீது 2ஜி மற்றும் 3ஜி வழங்கியது தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுக்கள் மக்கள் மனத்திலிருந்து இன்னும் நீங்காத நிலையில், தற்போது மேலும் ஒரு குற்றச்சாட்டினை ‘தி பயனீர்‘ நாளிதழ் சுமத்தியிருக்கிறது. இந்த தடவை, BSNL நிறுவனம் வைமாக்ஸ் சர்வீஸ் (WiMax services) தொடர்பாக, அமைச்சரின் தொகுதியான பெரம்பலுரைச் சேர்ந்த அமைச்சருக்கு மிகவும் நெருங்கிய நண்பருக்கு வழங்கப்பட்டிருப்பதாக அது குற்றம் சாட்டியிருக்கிறது.


இந்தியாவில் BSNL நிறுவனத்தின் கீழ் 16 சர்க்கிள்கள் இருக்கின்றன. இவற்றில் வருவாய் அதிகம் வரக்கூடிய ஏழு சர்க்கிள்களுக்கு வெல்காம் கம்யூனீகேஷான்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடேட் (Wellcom Communication India Private Ltd) என்னும் நிறுவனம் உரிமங்கள் கோரி விண்ணப்பித்திருக்கிறது. இந்த நிறுவனம் உரிமங்களைப் பெற்றபின், முன் 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அதிக லாபத்திற்கு விற்றது போல், தற்போது விற்றிடலாம் என்று நிறுவனத்தின் முக்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



BSNL நிறுவனமே நேரடியாக வைமாக்ஸ்சை அளித்திடக்கூடிய அளவிற்கு வல்லமை பெற்றிருக்கூடிய சூழ்நிலையில் இதனை ஒரு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டியதன் அவசியம் என்ன என்று அவர்கள் கோருகின்றனர். வைமாக்ஸ் தொழில்நுட்பம் மூலமாக வருங்காலத்தில் மடிக்கணினிகள் மற்றும் மொபைல் போன்களுக்குக்கான ஒயர்லஸ் இண்டர்நெட் வசதி, வாயிஸ் மெயில் வசதிகளைப் பெற்றிடமுடியும். முதலாம் ஆண்டில் சுமார் 50 ஆயிரம் வைமேக்ஸ் இணைப்புகளுக்கான சந்தாதாரர்கள் கிடைத்து விடுவார்கள் என்றும், அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் 10 லட்சம் சந்தாதாரர்களாக உயர்ந்துவிடும் என்றும் கூறுகிறார்கள்.

2008 நவம்பரில் வெல்காம் கம்யூனீகேஷன்ஸ் உரிமங்களுக்கு விண்ணப்பித்தது. சென்னையை மையமாகக் கொண்டுள்ள இந்த நிறுவனம் ஆரம்பத்தில் சிறிய அளவிலான இன்ஜினியரிங் மற்றும் கட்டுமானப்பணிகளில் ஈடுபட்டிருந்தன. இந்த நிறுவனம் 2006 டிசம்பரில் வெறும் 10 லட்சம் மூலதனத்தோடு ஆரம்பிக்கப்பட்டது. இது 2008 நவம்பரில் 10 கோடி ரூபாயாக உயந்துவிட்டது. வைமாக்ஸ்க்கான போட்டியில் ஈடுகொட்டுப்பத்தற்காகவே இவ்வாறு இன்நிருவனம் மூலதனம் உயர்த்தப்பட்டிருக்கிறது.



வெல்காம் கம்யூனீகேஷன்ஸ் கம்பெனியில் டி. சில்வா ராஜூ என்பவரால் பிரதிநிதித்துவப் படுத்தப்படுகிறது. இவருக்கு இக்கம்பெனியில் 15 சதவிதப் பங்குகள் இருக்கின்றன. இக்கம்பெனியின் மற்ற இரு இயக்குநர்கள் டாட்டொ விஜயகுமார் ரத்னவேலு மற்றும் டி.குணசேகரன் தியாகராஜன் என்பவர்களாவார்கள். இருவரும் மலேசியப் பிரஜா உரிமை கொண்டுள்ள தமிழர்கள். டாட்டொ விஜயகுமார் ரத்னவேலு இதே பெயரில் மலேசியாவிலும் ஒரு கம்பெனியை நடத்தி வருகிறார்.


டி சில்வா ராஜூ அமைச்சர் ராசாவின் பெரம்பலுர் தொகுதியைச் சேர்ந்தவர். அமைச்சருக்கு மிகவும் நெருக்கமானவர் இவர் டாக்டர் சி. கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு மிகவும் நெருக்கமானவர். அமைச்சர் ராசா, அமைச்சராவதற்கு முன்பு இந்த சி.கிருஷ்ணமூர்த்தியின் கட்டத்தில்தான் தன் வழக்கறிஞ்ர் தொழிலை ஆரம்பித்தார். சில்வராஜூ தற்சமயம் மத்திய பொதுப் பணித்துறையின் (CPWD) கீழ் சப்-கான்ட்ராக்டராக இருந்து வருகிறார். இவர் மேற்படி கிருஷ்ணமூர்த்திக்கு, தற்சமயம் என்எச்45 -சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்தின்கீழ் நடந்துவரும் சாலை விரிவாக்கப் பணிகளுக்கான ஒரு குவாரியிலிருந்து ஜல்லி வழங்கிவருகிறார்.


இந்த கிருஷ்ணமூர்த்தி, ராசாவின் அண்ணன் மற்றும் அக்கா மகன்கள் மற்றும் மகள்களுடன் இணைந்து கோவை செல்டர்ஸ் என்ற பெயரில் ஒரு ரியல் எஸ்டெட் கம்பெனியை நடத்திவறுவதாக ‘தி பயனீர்‘ ஏற்கனவே கூறியிருந்தது. மேலும் கிரீன் ஹவுஸ் பிரமோட்டர்ஸ் (பிரைவேட்) லிமிடெட், மற்றும் ஈக்வாஸ் எஸ்டேட்ஸ் (பிரைவேட்) லிமிடெட்
ஆகிய கம்பெனிகளும் ஆ. ராசா அமைச்சரான பின் உருவாயின. இந்த இரு நிறுவனங்களிலும் அமைச்சர் ராஜாவின் மனைவி பரமேசுவரி ஓர் இயக்குநராக உள்ளார் என்பது கொசுறு செய்தி.

BSNL இது தொடர்பாக ஓராண்டுக்கு முன்பே உரிமதாரர்களைக் கோரியிருந்த போதிலும், அதன்மீது இறுதிப்படுத்தும் முறையை, அமைச்சரின் வற்புருத்தலின் காரணமாக BSNL நிறுவனம் தள்ளிப்போட்டுக் கொண்டேவந்தது. அமைச்சர் ராஜாவின் நிர்ப்பந்ததின் காரணமாக நிறுவனத்தின் தலைவரும் மேலான் இயக்குநருமான குல்தீப் கொயல் உரிமங்கள் வழங்கும் பணியினை ஜனவரி மத்தியவாக்கில் தொடங்கினார்.



இந்த ஏலத்தில் 20 கம்பெனிகள் பங்கெடுத்திருந்தன. இவற்றில் பிஎஸ்என்எல், 5 நிறுவனங்களை தேர்ந்தெடுத்தது. விசாரணையில், இவற்றில் 5 நிறுவனங்களின் முதலாளியும் ஒரே நபர் என்றும், அரசை ஏமாற்றும் நோக்கத்துடன் இவ்வாறு WiExpert Communications, SV Telecom Systems, Digitelco Communications, Spectrus Communications and Technotial Infoways என்ற ஐந்து கம்பெனிகள் பெயரில் டெண்டரில் பங்கேற்றார் என்ற விபரமும் வெளியானது.

இந்த ஐந்து நிறுவனங்களின் முதலாளி சஞ்சய் கபூர் என்பவராவார். இந்த சஞ்சய் கபூர், ராசாவுடன் மிகவும் நெருக்கமானவர் என்பது குறிப்பிடத் தக்கது.

இறுதியாக, புதிய அரசாங்கம் பதவியேற்றவுடன், ராசா அமைச்சரான பிறகு, பிரதமர் மன்மோகன் சிங், WiMaxக்கான இந்த டெண்டரையே ரத்து செய்து, புதிய டெண்டர் வெளியிட ஆணையிட்டார்.

இது போகவும், ராசா சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ரகுபதியை மிரட்டினார் என்ற குற்றச் சாட்டும் சமீபத்தில் எழுந்து அடங்கியது.

நீதிபதி ரகுபதி

இதில், ராசாவுக்காக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் வக்காலத்து வாங்கியதால், ராசா தலை தப்பியது.

இது போல், பல்வேறு ‘சிறப்பு’ களுக்கு சொந்தக் காரரான ராசாவின் அலுவலகத்தில் சிபிஐ சோதனை நடத்தியிருப்பது, ராசாவின் மகுடத்தில் சூட்டப்பட்ட, மேலும் ஒரு மாணிக்கம்.
தற்போது, “ஹெட்லைன்ஸ் டுடே“ தொலைக்காட்சி ஊடகம், ராசாவுக்கும், பவர் ப்ரோக்கர் நீரா ராடியாவுக்கும் இடையே நடைபெற்ற உரையாடல் விபரங்களை வெளியிட்டது. இது குறித்து ஆ.ராசாவிடம் கருத்து கேட்கப் பட்ட போது, “இது என்னுடைய குரல் இல்லையே… “ என்று, ஆணவமாக பதில் அளித்தார்.
மறுநாள் ஹெட்லைன்ஸ் டுடே, ஊடகம், ராசாவுக்கும், நீரா ராடியாவுக்குமான உரையாடல்களையும், ராடியாவுக்கும், கனிமொழிக்கும் இடையிலான உரையாடலையும், வெளியிட்டது. இதில் ராசா மற்றும் கனிமொழியின் குரல், மறுக்க முடியாத அளவுக்கு தெளிவாக உள்ளது.

இது குறித்து, நேற்று இரவு, சென்னை விமான நிலையத்தில் கருத்துக் கேட்க சென்ற, ஹெட்லைன்ஸ் டுடே செய்தியாளர் பிரியம்வதா மற்றும், என்டிடிவி ஹின்டு செய்தியாளர் இருவரையும், ராசா, கையைப் பிடித்துத் தள்ளுகிறார். ராசாவுடன் வந்த அல்லக்கைகள், ராசாவுக்கு மேல், இரண்டு பங்கு, மிரட்டுகின்றனர்
இதையெல்லாம் மீறியும், ராசாவுக்கு, கருணாநிதி பாதுகாப்பு கொடுப்பதற்கு காரணம், ராசா ஒரு “தலித்தாம்“. எப்படி இருக்கிறது நியாயம் ?

செல்வி ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், “தன்னுடைய முந்தைய அமைச்சரவை சகாவான திமுக தலித் தலைவர் ஓ.பி.ராமனின் மைத்துனியை அழகிரி திருமணம் செய்தபோது, கருணாநிதி நிலைகுலைந்து போனதையும், அழகிரியை மதுரைக்கு சென்றுவிடுமாறு கட்டளையிட்டதையும் மூடி மறைத்துவிட்டார்.

இதன் காரணமாகத்தான், திமுகவில் இரண்டாம் இடத்திற்கான போட்டியில் அழகிரி பின்னுக்குத் தள்ளப்பட்டு, தன்னுடைய இனத்திலேயே பெண் எடுத்த இளைய மகன் ஸ்டாலினை அந்த இடத்திற்கு கொண்டு வந்திருக்கிறார் கருணாநிதி.

இது போன்ற தவறான எண்ணத்தையும், அறுவெறுப்பையும் தலித் இனத்தவர் மீது கொண்டுள்ள அதே கருணாநிதி தான், ஊழல் கறை படிந்துள்ள ராசாவை எதிர்த்து குரல் எழுப்பும் எதிர்க்கட்சிகள் மீது, அவர் தலித் என்பதாலேயே அவருக்கு எதிராக குரல் எழுப்புவதாக குற்றம் சுமத்துகிறார். “ என்ற குற்றச் சாட்டுகளில் உண்மை இல்லாமல் இல்லையே ?


இவ்வளவு நடந்த பிறகும், ராசாவை காப்பாற்றும் கருணாநிதியைப் பெற இந்நாடு என்ன தவம் செய்திருக்க வேண்டும். இதை எதிர்த்துப் போராட்டம் நடத்தாமல், அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருக்கும் எதிர்க்கட்சிகளை பெற நாம் என்ன தவம் செய்திருக்க வேண்டும்.

வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு சிபிஐ, தன்னுடைய அமைச்சரவையின் கட்டுப்பாட்டில் உள்ள அலுவலகங்களில் சோதனை நடத்தியும், தனக்கு கீழ் பணியாற்றும், பணியாற்றிய அதிகாரிகள் மேல் வழக்கு பதிவு செய்தும், பதவி விலக மாட்டேன் என்று அடம் பிடிக்கும் ராசாவை, இன்று முதல் “மானங்கெட்ட ராசா” என்று அழைத்தால் என்ன ?

(இது அக்டோபர் மாதம் எழுதப்பட்டது. சிறிது, மாற்றம் செய்து மீள் பதிவு செய்யப் படுகிறது. ஆறு மாதங்களாக இந்த விஷயத்தில் எந்த மாற்றமும் இல்லை என்பதை விட, வருத்தமான விஷயம் என்ன இருக்க முடியும் ?




சவுக்கு