Thursday, July 31, 2014

The Fiction Of Rationalism And Humanity / Mohammad Jalaluddin




Both Gaza and ISIS could be said to bring out the worst in us in different ways. It is not just men, women and children alone who are dying. But humanity itself. And not just there.

To begin with Muslims are terrorists for a large swathe of humanity outside of Islam, and for them it was almost of no importance as long as victims were Muslims only. 

There was a very macabre labyrinth of opiniona - from a ‘let Islam f****** itself into non existence’ to ‘good that they are not butchering from outside their faith.’ Islam is their favourite whipping boy anyway.

They’ll beat their breast out for the atrocities in Nigeria. They will just ‘enjoy’ an ISIS. And then they will gleefully endorse the ‘humanitarian’ Israel’s gender neutral devouring of civilians and children in Palestine. Palestinians are a double whammy after all – they have been standing up to “our natural allies,” plus they are Muslims.  

Naturally this freshly minted splinter opinionates, so to say, could be seen cheering the killings of women and children in Gaza from the hilltop of Sderot (Sderot, meaning boulevard :) is a western Negev city in the Southern District of Israel), drinking, snacking and posing for the camera.

And there will be wonderfully endowed young women who will strip to cheer the brave Israeli soldiers.

On their part, the Kurds kept playing fire flutes of their nationalism like obedient accompaniment on the sidelines. People in the amphitheatre loved that too. 

Meantime the media is frenetically switching from one horror to another, milking the conflicts no end. The ISIS ransacking of the Sunni mosques in the northern province of Ninevah, the ‘bride for jihad’ story that nobody bothered to repudiate or substantiate, everything was grist for the mill. They all helped boost  the TRP ratings. 

Whether the ISIS men demanded jihad brides or not, surely they didn’t mind violating women as pleased. And with that the hate index too shot up everywhere. Why not but if this is what happening over there?

The macabre ISIS stories, what with their Sunni angle, nurture the Shia scars and further demonize the idea of the caliphate. They also portray it all as a case of Islam vs the rest of civilization. Thus Islamophobia thrives, with not inconsiderable help from the media.

But then these are predictable. They are all behaving true to their character. But what beats me completely is the sand-dune fickleness, so often amounting to somersaulting, of the ummah people themselves. 

Iraqis in UK went into a denial mode, taking out a protest rally, insisting that it was not sectarian strife but a Muslims versus extremist imbroglio. 

The same folks had gone into mute mode when Boko Haram was committing everything ‘haram.’  

Closer home, the reaction of the Urdu press is even more appalling. Akhbar-e-Mashriq from Kolkata headlines ‘ Islami Shiddat Pasand Hamare Haqeequee Mohafiz ‘("Islamic extremists our real protectors")!! 

These are the same idiots who gathered to cry foul on the eve of war crime tribunal in Dhaka conferring sainthood on war criminals like Delwar Saidee. 
Delwar Hossain Sayeedi , also known as allamah, the Bangladeshi Muslim politician, convicted for war crimes during the 1971 Bangladesh liberation war. The International Crimes Tribunal found Sayeedi guilty in 8 of the 20 charges, including mass killing, rape, arson, looting and forcing minority Hindus to convert to Islam during 1971. On 28 February 2013, the tribunal sentenced him to death by hanging.

Our Islamists will also cry their hearts out over the victims in Muzaffarnagar and Kokhrajhar, but Iraqi victims are divine collateral, affordable damage for their divine ummah!

The butchered Iraqis for them are not human beings, but just non-Muslims. Yes, Shias, Ahmadies and so on. They even decorated these killers with sainthood for their out-of-turn show of semblance of human empathy in the case of our girls. And these very same imbeciles of the Islamist variety come out with drenched handkerchiefs for Gaza. 

In general Indian Urdu media is a bundle of confusion, with a pronounced tilt towards the ISIS. There is an interesting point of diversion between Pakistani and Indian Islamic views vis a vis the ISIS. While both agree that ISIS is a by-product of Maliki’s misrule and USA’s suffocating hegemony, their agreement ends there. 

Pakistanis seem to think that the ISIS and Islamic caliphate are just another handiwork of Uncle Sam and Israel to eliminate Islam. And they sound alarm in no uncertain terms about the calamity ISIS might bring to Islamic world. 

But no, India’s Jamaat e Islami Hind (JIH) thinks ISIS represents resurgence of Islam – they wouldn’t pause to consider whether it could not also be a product of a devious plot  by Uncle Sam to exterminate Islam itself, root and branch.

They shamelessly try to cover up the ISIS’s barbaric crimes of killing maiming
and raping,  citing the safe return of our girls. About the newly minted caliphate, Secretary of Jamiat-ul- Ulema Hind, Mufti Arshad Faruqi writes in their mouthpiece Dawat, “The fatwa issued by Yousuf al Qaradhawi is worth consideration. He has invalidated the method of establishment of Caliphate but not their Islamism.” 

The second sentence is just dyslexic if not simply contradictory. The psychology of such pathological contradiction draws its sustenance from a medieval sense of Ummah.  Some sane voices, like that of Hasan Suroor and New Age Islam, have of course been sharply critical of such views and have sounded alarm in strongest possible terms, on the fallout of  nurturing such a mindset among Indian Muslims particularly. But they are drowned out amid fanatical chest-thumping.

Ukraine is just background music to this endless tournament of bloodletting. Well, some even tried smelling a rat of jihad there too,  before retiring into blissful somnolence.

Less said about our own government the better. Their business is just taking credit for ‘safe’ evacuation of Indians from Iraq. Rightly. And stonewalling any dissenting voice against Israel. 

Why should they even say a word of empathy for Gazans when they have shown it doenst matter one bit – after all they have won a handsome victory despite having to face charges of butchery in Gujarat and elsewhere.

Orgasmic mirth of their foot-soldiers and quack intellectual troops in social media makes one cringe in the pit of the stomach.

Huntington must have been grinning in his grave, much to the chagrin of ‘economist of the conscience,’ Amartya Sen. The component of identity that Dr.Sen never agreed to be ‘the most dominant’ is de facto ‘the’ most dominant component of identity crisis in the current theatre of farce, in and out of the amphitheatres of dehumanization under process across geography, and that is the component that Huntington based his ‘the clash of civilization’ on. And there is a perceptible continuity of the clash with a reverse vectorial tide since the aftermath of WW1.

So there is Muslim rationalism, there is Christian rationalism. Where is rationalism by the way? 

There is Muslim humanity and there is Christian humanity too. And all others shades are background music for the ‘might is right’ theme. 
Humanity whither?  


Wednesday, July 30, 2014

தகத்தகாய தலித்

சமீபத்தில் தமிழகஅரசு ஒருஉத்தரவை வெளியிட்டுள்ளது.   அந்த உத்தரவின்படி, தலைமை நீதிபதிக்குஉள்ள மரபின்அடிப்படையிலான மரியாதைகள்அனைத்தும், இரண்டாவதுமூத்த நீதிபதிக்கும் வழங்கப்பட வேண்டும்ஒரு உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிஎன்பவர் மட்டுமே, அரசின் தலையாயமரியாதைகளுக்கு தகுதியானவர்என்று இதுநாள் வரைஇருந்து வந்ததுஅந்த வழமையைமாற்றி, இரண்டாவதுமூத்த நீதிபதிக்கும் அந்த சலுகைகளைவழங்கி உத்தரவிட்டுள்ளார் ஜெயலலிதா.

இந்த உத்தரவைஅறிந்த நீதிபதிகர்ணன் கடும்கோபமடைந்தார்இந்தியாவிலேயே தலைச்சிறந்தநீதிபதியாக இருக்கும்தனக்கு வழங்காதஉரிமைகளும், சலுகைகளும்இரண்டாவது நீதிபதிக்குமட்டும் வழங்குவதுஒரு தலித்விரோத நடவடிக்கைஎன்றே பார்க்கிறார்இதனால், தமிழகமுதல்வர் ஜெயலலிதாவுக்கு நேரடியாக கடிதம்எழுதுகிறார் நீதிபதிகர்ணன்.

அன்புள்ள புரட்சித்தலைவி அம்மாஅவர்களுக்கு,

நீதிபதி கர்ணன்எழுதிக் கொள்வதுநான் ஏன்உங்களை மாண்புமிகுஎன்று அழைக்கவில்லைதெரியுமாஏனென்றால் நானேஒரு மாண்புமிகுஒரு மாண்புமிகு, இன்னொரு மாண்புமிகுவைஅப்படி விளிப்பது, நீதித்துறையின் மாண்பைசீர்குலைக்கும் செயலாகவேஇருக்கும்.

சமீபத்தில், புதியதலைமை நீதிபதிநியமிக்கப்பட்டு விட்டார், அவர் பொறுப்பேற்கஉள்ளார் என்றசெய்தி வெளியானதும், அவசர அவசரமாக, இரண்டாவது மூத்தநீதிபதிக்கு தலைமைநீதிபதிக்கு உண்டானசலுகைகளை அளித்துஉத்தரவிட்டுள்ளீர்கள்.   இது வரவேற்கத்தகுந்த நடவடிக்கை என்றாலும், நீதிபதிகளின் பட்டியலில்23வது இடத்தில்இருக்கும் எனக்கும்அந்த சலுகைகளைவழங்க வேண்டும்என்பதுதான் நியாயமானநடவடிக்கையாக இருக்கும்.

எனது பெருமைகளைநானே சொல்லிக்கொள்ளக் கூடாதுதான்இருந்தாலும் ஒருபயலும் சொல்லமாட்டேன்கிறான் என்பதால், வேறு வழியின்றிநானே சொல்கிறேன்.

எந்த ஒருநீதிபதியும் தன்சக நீதிபதியைப்பற்றிக் குறைசொல்வது கிடையாது.   என்ன நடந்தாலும், சக நீதிபதியாயிற்றே என்று அமைதியாகஇருந்து விடுவார்கள்ஆனால், நான்வெளிப்படையாக குற்றம்சொன்னேன். சிலதலித் விரோதிகள், அப்போது தலைமைநீதிபதியாக இருந்தஇக்பாலிடம் எனதுஊழல் குறித்துஆதாரங்கள் கிடைத்ததாகவும், அவர் என்னைவிடுமுறையில் செல்லஉத்தரவிட்டதாகவும், அதிலிருந்துதப்பிக்கத்தான் நான்புகார் அளித்தேன்என்றும் கூறுவார்கள்அதை நம்பாதீர்கள்.

ஒரு தலித்என்ற காரணத்துக்காக, என்னை அவமானப்படுத்தும் விதமாக, ஒருவிழாவில் என்அருகே அமர்ந்திருந்த ஒரு நீதிபதிகாலை மடக்கிஉட்காருகையில் லேசாக, தெரியாமல் இடிப்பதுபோல என்னைகாலால் இடித்தார்.   அப்படி லேசாகஇடித்தது, தெரியாமல்இயல்பாக நடந்ததோஎன்று நான்நினைத்துக் கொண்டிருந்தபோதே, அந்த நாற்காலியில்என் பெயர்எழுதியிருந்த ஸ்டிக்கரைலேசாக தெரியாததுபோல கிழித்தார்.   இது நிச்சயமாகதலித்தை வன்கொடுமைக்கு ஆளாக்குவது என்பதைநான் உணர்ந்தேன்.   இந்தக் கொடுமைகளையெல்லாம் பார்த்து பொறுத்துக்கொண்டிருக்க நான்என்ன சாதாரணதலித்தாஉயர்நீதிமன்ற நீதிபதியாகஉள்ள தலித்அல்லவா ?  

உடனடியாக தேசியதாழ்த்தப்பட்டோர் ஆணையத்துக்குகடிதம் அனுப்பினேன்உடனடியாக பத்திரிக்கையாளர்களை சந்தித்தேன்.  பத்திரிக்கையாளர்கள் கேட்டார்கள்யார் உங்களைகாலால் உதைத்தநீதிபதி என்று.   பெருந்தன்மையாகசொல்ல மறுத்துவிட்டேன்.   அதற்கு பிறகுதாழ்த்தப்பட்டோர் ஆணையத்துக்குநான் அனுப்பியபுகாரின் மீதுஎன்ன நடவடிக்கைஎன்று நீங்கள்கேட்கலாம். ஒருஐம்பது தலித்வழக்கறிஞர்களை தூண்டிவிட்டேன்.   அவர்கள் நேரடியாகதலைமை நீதிபதிஇக்பால் அறைக்குசென்று கலாட்டாசெய்தனர்பயந்து போனஇக்பால், மீண்டும்எனக்கு பணிவழங்கினார்.    அப்படி பணிவழங்கப்பட்ட உடனேயேஎன் புகாரைவாபஸ் பெற்றுக்கொண்டேன் என்றால், நான் எந்தஅளவுக்கு பெருந்தன்மையானவன் என்பதை நீங்களேபுரிந்து கொள்ளுங்கள்.

என்னுடைய தீர்ப்புநியு யார்க்டைம்ஸ் பத்திரிக்கைவரையில் பரபரப்பாகபேசப்பட்டுள்ளது என்பதுஉங்களுக்கு வியப்பாகஇருக்கும்.   ஒரே ஒருமுறை உடலுறவுகொண்டாலே அவர்கள்கணவன் மனைவிஎன்று ஒருவரலாற்றுச் சிறப்புமிக்க அற்புதமானதீர்ப்பை நான்வழங்கியதற்காக நியுயார்க் டைம்ஸ்பத்திரிக்கை என்னைபாராட்டியதுநியுயார்க் டைம்ஸ்   ஹஃப்பிங்டன்போஸ்ட்.   தற்போது தலைமைநீதிபதிக்கான சலுகைகளைவழங்கியுள்ளீர்களே.... நீதிபதிசதீஷ் அக்னிஹோத்ரிஅவரைப் பற்றிநியு யார்க்டைம்ஸ் பத்திரிக்கையிலோ, வாஷிங்டன் போஸ்டிலோஎழுதியிருக்கிறார்களா ?   

இரவு 9 மணிஆனதும், ஃபுல்லாகசரக்கை போட்டுவிட்டு, உயர்நீதிமன்றப் பணியாளர்கள் யாரையாவதுஅழைத்து, அவர்களைகேவலமாக போனிலேயேதிட்டி, போனிலேயேடிஸ்மிஸ் செய்தஒரே ஒருநீதிபதியை உங்களால்காட்ட முடியுமாமறுநாள் என்னால்போனிலேயே டிஸ்மிஸ்செய்யப்பட்ட அந்தஊழியர் என்னைபார்க்க முயற்சிப்பார்பார்ப்பேனா நான்பார்க்காமல் டபாய்த்துவிடுவேன்.   இப்படி என்னால்பாதிக்கப்பட்டவர்கள் ஏராளமானோர்இருக்கிறார்கள்.  அவர்களையெல்லாம் கேட்டீர்களேயென்றால், என் சிறப்புகளை, சிறப்பாக எடுத்துரைப்பார்கள்.

சுரானா என்றுஒரு மார்வாடியிடமிருந்து400 கிலோ தங்கத்தைசிபிஐ அதிகாரிகள்பறிமுதல் செய்தார்கள்.   ஒரு வட இந்தியன் வந்தாரை வாழ வைக்கும் தமிழகத்தில் வந்து நிம்மதியாக தொழில் செய்ய விடாமல், மத்திய புலனாய்வுத் துறையான சிபிஐ அந்த 400 கிலோவையும் பறிமுதல் செய்தது.   நம் நாட்டை நம்பி வந்தவர்களை இப்படி தொழில் செய்ய விடாமல் தடுத்தால் தமிழகத்தின் மானம் என்ன ஆவது ?  அதனால் அந்த 400 கிலோ தங்கத்தையும் அந்த சுரானாவிடமே மீண்டும் அளிப்பது என்று நான் முயற்சி எடுத்தபோதுதான் சவுக்கு என்ற ஒரு தமிழின தலித் விரோதி, நான் என்னமோ லஞ்சம் வாங்கிக் கொண்டு, அந்த 400 கிலோவை விடுவிப்பது போல எழுதினான்.    என் மீது ஒரு குற்றம் சொன்னால், அதை தாங்கிக் கொள்ளும் சக்தி எனக்கு இல்லை.  மயிர் நீக்கின் உயிர்வாழா கவரிமான் போன்ற மனம் படைத்தவனான எனக்கு, அதை தாங்கிக் கொள்ள முடியாத காரணத்தாலேயே நான் அந்த மனுவை தள்ளுபடி செய்ய நேர்ந்தது. அந்த வழக்கை நான் எப்படியாவது விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்று ஆவலாக காத்திருந்த அன்று அந்த வழக்கை பட்டியலில் போடாமல் விட்டு விட்டார் லட்சுமணன் என்ற நீதிமன்ற அலுவலர்.  வந்ததே கோபம் எனக்கு.

அழைத்தேன் அவரை நீதிமன்றத்துக்கு.  காலை பத்தரை மணி.  அனைவரும் குழுமியிருந்தார்கள்.   கேட்டேன் பாருங்கள் ஒரு கேள்வி.   "என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்.... என்னைப் பற்றி அவதூறாகப் பேசினாயாமே... -?" என்று கேட்டேன்.  அந்த ஆளு நடுநடுங்கி கிடையவே கிடையாது லார்ட்ஷிப் என்று நடுங்கிய குரலில் பதில் சொன்னான்.  என்னை ஜாதிப் பெயரை சொல்லி திட்டினாய் என்று எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவா ?  என்று கேட்டதும் கண்ணீர் விட்டு அழுதார் அந்த நபர்.   400 கிலோ தங்கத்தின் மதிப்பு அந்த ஆளுக்கு எப்படி தெரியும். 

அது மட்டுமா......   மு.க.அழகிரி என்ற திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர். அவரது மகன் துரை தயாநிதியின் மீது க்ரானைட் கடத்தல் என்று வழக்கு போட்டு, தமிழக காவல்துறை அவரை ஓட ஓட விரட்டியது.   ஓடினார் ஓடினார் 120 நாட்கள் ஓடினார்.  அவர் ஓடுவதை சகிக்க முடியாத திமுக உடன்பிறப்பு சி.டி.செல்வம், அவருக்கு முன் ஜாமீன் வழங்கினார்.   வெறும் ஜாமீன் வழங்கியிருந்தால் பரவாயில்லை.  தினந்தோறும் காவல்நிலையத்திலே கையொப்பம் போட வேண்டும் என்று உத்தரவிட்டார்.  அதன் பிறகு கோடை விடுமுறை கால நீதிபதியாக நான் அமர நேர்ந்தது.  

தமிழகத்தின் மூத்த திராவிட இயக்கத் தலைவரின் வாரிசு தினந்தோறும் காவல்நிலையத்தில் கையொப்பம் இடுவதா..... ?  வரலாறு தாங்குமா ?    கோடை விடுமுறையில் அவசர வழக்குகளை மட்டுமே விசாரிப்பது என்ற வழமையை மாற்றி, அவர் இனி கையெழுத்து போடவேண்டியதில்லை என்று உத்தரவிட்டேன்.   இப்படி பரோபகாரமா அனைவருக்கும் நீதி பரிபாலனம் வழங்குவதில் எனக்கு நிகர் யாருமே கிடையாது.

கோடை விடுமுறையில் மட்டுமே எனக்கு ஜாமீன் வழங்கும் பொறுப்புகளை வழங்கினார்கள்.   குறிப்பாக முன்னாள் தலைமை நீதிபதி அகர்வால் இருக்கையில், எனக்கு கோடை விடுமுறை நீதிமன்ற பணி கூட வழங்கப்படவில்லை.  நேரடியா அவர் அறைக்குச் சென்றேன்.   நான் தலித் என்பதால் எனக்கு நல்ல பொறுப்பு வழங்காமல் தடுக்கிறீர்களா ? நீங்கள் ஒரு தலித் விரோதி என்று நேரடியாக குற்றம் சாட்டினேன். வழக்கமாக எல்லா தலைமை நீதிபதிகளும் இப்படி குற்றம் சாட்டினால் உடனடியாக பயந்து கொள்வார்கள், ஆனால் அகர்வாலோ கடைசி வரை அசைந்து கொடுக்கவில்லை.  

நேரடியாக அனைத்து நீதிபதிகளுக்கும் கடிதமே எழுதினேன்.  நான் ஒரு தலித் என்பதால் எனக்கு நல்ல பொறுப்புகள் ஒதுக்கப்படுவதில்லை.  குறிப்பாக வருமானம் வரும் பொறுப்புகள்.   தலித் அல்லாத நீதிபதிகள் சம்பாதிக்கையில் நான் மட்டும் இளிச்சவாயனா ?  பத்திரிக்கையாளர்களை அழைத்தேன்.  அவர்களிடம் என் புகார் மனுவின் நகலை அளித்தேன்.  ஆனால் அகர்வால் அப்போதும் அசைந்து கொடுக்கவில்லை. அவர் கிளம்பும் வரை பொறுமையாக காத்திருந்தேன்.

தனது பிரிவு உபச்சார விழாவில், எனது இத்தனை ஆண்டுகால பணியில், என்னை நீதிபதி கர்ணன் போல அவமானப்படுத்தியது ஒருவர் கூட கிடையாது என்று மனம் நொந்து பேசினார் அகர்வால் என்றால் என் பெருமை என்னவென்பதை புரிந்து கொள்ளுங்கள்.  அகர்வாலின் பிரிவுரை

அதற்குப் பிறகுதான் சதீஷ் அக்னிஹோத்ரி, பொறுப்பு தலைமை நீதிபதியாக வந்தார். நேரடியாக அவரை சென்று சந்தித்தேன்.   எனது தலித் பின்புலத்தையும், நான் தனி ஆள் அல்ல.... என் பின்னாடி ஒரு பெரிய கூட்டமே இருக்கிறது என்பதையும் சொன்னேன்.   பயந்து போனார் அக்னிஹோத்ரி.  கோடை விடுமுறை நீதிபதியாக என்னையே நியமித்தார்.   ஜாமீன்களை வாரி வாரி வழங்கினேன்.    கார் இறக்குமதி செய்த வழக்கில், ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தின் வேந்தர் வெங்கடாச்சலத்தை கைது செய்தார்கள்.   பதறினேன்.... துடித்தேன்....  சிபிஐ வழக்கறிஞரைப் பார்த்து நான் கேட்ட கேள்வியில் அவர் ஆடிப்போய் விட்டார்.   "ஒரு கப்பலில் கார் இறக்குமதி செய்யப்பட்டால், அதற்காக கப்பல் கேப்டனையா கைது செய்வீர்கள் ?" என்று கேட்டேன்.   அவரால் பதிலே சொல்ல முடியவில்லை. திணறிப் போனார்.   நான் பதில் மனு தாக்கல் செய்கிறேன் என்று சொன்னார்.   நீ என்ன பதில் மனு தாக்கல் செய்வது.  நான் இப்போதே ஜாமீனில் விடுகிறேன் என்று, விடுதலை செய்தேன்.  

பல வருடங்களாக தேடப்பட்டுக் கொண்டிருந்த கார் கடத்தல் மன்னன் அலெக்ஸ் ஜோஸப்பை சிபிஐ மிகுந்த சிரமப்பட்டு கண்டுபிடித்தது.  வெளிநாட்டுக் கார் வாங்குவதில் உள்ள சிரமங்களை புரிந்த அலெக்ஸ், சுலபமாக வெளிநாட்டுக் கார்களை கள்ளத்தனமாக இறக்குமதி செய்து, நம் நாட்டில் உள்ள செல்வந்தர்களுக்கு பெரும் சேவையாற்றிக் கொண்டிருந்தார்.  அவரைப் போய் சிபிஐ கைது செய்து வைத்திருந்தது எத்தனை வேதனைக்குரிய விஷயம்.   உடனடியாக அலெக்ஸ் ஜோசப்பை விடுதலை செய்தேன். 

அதற்குப் பிறகு, பொறுப்பு நீதிபதி சதீஷ் அக்னிஹோத்ரியை மிரட்டி, இருப்பதிலேயே வளமான துறையான கனிம வளம் தொடர்பான வழக்குகளை பார்ககும் பொறுப்பு வழங்குமாறு செய்தேன்.  மூன்று மாதங்கள் அம்மா.   வளமையாக இருந்தது.   இத்தனை நாள் கிடைக்காத அத்தனை வளங்களும், வளங்கள் என்றால் புதிய வழக்குகள்  கிடைத்தன.  அனைத்தையும் விசாரித்து நல்ல முறையில் நீதி பரிபாலனம் செய்தேன்.  எனது பொறுப்பு முடியும் நேரத்தில்தான், வைகுண்டராஜன் வழக்கு வந்தது.   இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் கோடி கோடியாக அந்நியச் செலாவனியை பெற்றுத் தரும் ஒரு நபரை கார்னெட் அள்ள விடாமல் தடை செய்வது எப்படி நியாயமாகும் ?    அந்த வழக்கில் நியாயம் வழங்கலாம் என்று பார்த்தால் அந்த நேரம் பார்த்து, எனது பொறுப்பு முடிந்து, மற்றொரு நீதிபதியிடம் வழக்கு செல்ல நேர்ந்தது.   விடுவேனா நான் ?  பொறுப்பு மாறினாலும், இந்த வழக்கை நான்தான் விசாரிப்பேன் என்று நானே எடுத்துக் கொண்டேன்.   சவுக்கு தளத்தில், என்னைப் பற்றி மிக மிக கேவலமாக எழுதியிருந்தான் ஒரு அயோக்கியன்.  இதற்கெல்லாம் கவலைப்படுபவனா நான் ?

நானே விசாரித்தேன்.   வழக்கில் இடை மனுதாரராக சேர வேண்டும் என்று ஒரு மனித உரிமை க்ரூப் நுழைந்தது.  மானாங்கானியாக திட்டினேன் அவர்களை.     வைகுண்டராஜன் போன்ற மேட்டுக்குடி மக்களுக்கு எதிராக, மண்டை காய்ந்த பராரிகள் வழக்கு தொடுப்பதா ?   அடுக்குமா ?  

வைகுண்டராஜனுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கினேன்.  ஆனால் தீர்ப்பு நகல் இன்னும் தயாராகவில்லை.  எனக்கு வழக்கமாக தீர்ப்பு எழுதித்தரும் அந்த ஓய்வு  பெற்ற மாவட்ட நீதிபதிக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் தீர்ப்பு தாமதமாகிறது.

சில மாதங்களுக்கு முன்னால், நீதிபதிகள் நியமனம் தொடர்பாக ஒரு வழக்கு நடந்து கொண்டிருந்தது.    என்னைப் போல ஒரு புரட்சியாளன் அதில் கலந்து கொள்ளாமல் இருக்க முடியுமா ?  வழக்கு நடந்து கொண்டிருக்கும்போதே நேரடியாக அந்த நீதிமன்றத்தினுள் சென்றேன்.  என்னை இந்த வழக்கில் இணைத்துக கொள்கிறேன்.  நான் ஒரு வாக்குமூலம் தாக்கல் செய்யப்போகிறேன் என்று சொன்னேன். நீதிமன்றமே அதிர்ந்து போனது.   நீதித்துறை வரலாற்றில் இப்படி ஒரு நீதிபதி வழக்கு நடந்து கொண்டிருக்கையில் திடீரென்று உள்ளே நுழைந்து, என்னையும் வழக்கில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று   கேட்டதுண்டா ? அதுதான் நான்.  அதுதான் இந்த கர்ணன்.  கர்ணணின் மறுபெயர் வரலாறு.   
கடந்த வாரம் கூட, புதிய தலைமை நீதிபதி வருவதற்கு முன்னால், தலைமை நீதிபதியின் செயலாளர் ஹரியை அழைத்தேன்.  மரியாதையாக எனக்கு வேண்டிய துறையை ஒதுக்க வேண்டும் என்று உங்கள் தலைமை நீதிபதியிடம் சொல் என்று திறந்த வெளி நீதிமன்றத்திலேயே சொன்னேன்.   இப்படி உலகத்தில் எந்த ஒரு நீதிபதியாவது பேசிக் கேட்டிருக்கிறீர்களா... அதுதான் கர்ணன்.  அதே நாளன்று, நிர்வாகப் பதிவாளரை அழைத்தேன்.   அவர் நீதிபதியிடம் கிட்டே சென்று பேசலாம் என்று மேடையில் ஏறினார்.  வந்ததே கோபம் எனக்கு.!!!! "எறங்குடா கீழ" என்றேன்.  ஆடிப்போய் விட்டார்.  கீழ எறங்குடா.   நான் உன்னை மேல ஏறச் சொன்னேனா ? நீ பாட்டுக்கு ஏர்ற ?  அறிவு இல்ல உனக்கு.  நீதிபதி மேல மரியாதை இல்ல" என்று அனைவர் முன்னிலையிலும் மிரட்டினேன்.    இவையெல்லாம் என் திறமைக்கு ஒரு சாம்பிள். 

வைகுண்டராஜனுக்கு ஆதரவாக நான் தீர்ப்பளித்ததை எதிர்த்து, மனித உரிமை பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்தவர்கள், என்னைப் பற்றி இப்படி கேவலமாக சுவரொட்டி ஒட்டியிருந்தார்கள்.


இது நீதிமன்றமா?

நீதிபதி கர்ணனின் காட்டுத் தர்பாரா?

பொதுமக்களே, வழக்குரைஞர்களே!

தாதுமணல் கொள்ளையன் வைகுண்டராஜனுக்கு
நீதியை வளைக்கிறார் கர்ணன்.

இதை எதிர்த்து வழக்காடினால் எகிறி குதிக்கிறார்.

எகிறுவதும் குதிப்பதும் எதற்கு தெரியுமா?
வைகுண்டராஜன் முக்கி முக்கி எடுத்த தாதுமணலை
சிந்தாமல் சிதறாமல் நாடு கடத்துவதற்கு
அனுமதி வழங்கவே!

இப்பொழுது புரிகிறதா?

எலி ஏன் அம்மணமாய் ஓடுகிறதென்று?
கடலோர மக்களின் உயிரை மயிராய் மதிக்கும்
தேசத்தின் வளத்தை சூறையாடும்
மக்கள் விரோத, தேசத்துரோக வைகுண்டராஜனுக்கு
துணை போகும் நீதிபதி கர்ணனின் நாட்டாமைத்தனத்தை முறியடிப்போம்!


இதற்கெல்லாம் அஞ்சுபவனா நான் ?   இந்த வழக்கில் ஆஜரான சங்கரசுப்பு அன்று என் நீதிமன்றத்துக்கு வந்தார்.  கேட்டேனே அவரைப் பார்த்து ஒரு கேள்வி.   "என்ன நினைச்சுக்கிட்டு இருக்க உன் மனசுல.  எலி அம்மணமா ஓடுதா.  உன்னை ஜெயிலுக்கு அனுப்பி களி திங்க வைக்கிறேன்" பாரு என்று வெளிப்படையாக மிரட்டினேன்.

இது போல என்னுடைய புகழை நாள் முழுக்க சொல்லிக் கொண்டே போகலாம்.   சவுக்கு போன்ற சில தலித் விரோதிகள் என்னைப் பற்றி இல்லாததும் பொல்லாததுமாக எழுதுவார்கள், பேசுவார்கள்.   ஆனால் அவற்றையெல்லாம் புறந்தள்ளி விட்டு, 23வது இடத்தில் இருக்கும் எனக்கும், தலைமை நீதிபதிக்கு உண்டான சலுகைகளை வழங்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

மாண்புமிகு
நீதிநாயகன்
சி.எஸ்.கர்ணன்.



சவுக்கு