

தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் இறந்து விட்டார் என்ற செய்தி பரப்பப் பட்டதும், தமிழகமே துயரத்தில் ஆழ்ந்து, ஏதாவதொரு மூலையில் இருந்து அவர் இறக்கவில்லை என்ற நல்ல செய்தி வராதா என்ற ஏக்கத்தோடு, அலைந்து கொண்டிருந்தனர்.
இந்த ஏக்கத்தை பயன்படுத்தி, தமிழகத்தில் சில பத்திரிக்கைகள் இதிலும் லாபம் சம்பாதிப்பது எப்படி என்று அட்டைப் படத்தில், பிரபாகரன் பல ஆண்டுகளுக்கு முன்பு பாலசிங்கத்துடன் எடுத்திருந்த புகைப்படத்தை இப்போது எடுத்தது போல் அட்டைப் படத்தில் போட்டு கொள்ளை லாபம் பார்த்துள்ளன. இது வன்மையாக கண்டிக்கத் தக்கது. இத்தகைய மலிவான உத்திகளை கையாளும் பத்திரிக்கைகளை புறக்கணிப்பது உணர்வுள்ள ஒவ்வொரு தமிழரின் கடமை.
இலங்கை அரசு கையாண்ட உத்திகளை நாமும் கையாள முடியும் என்பதற்கான உதாரணம் இதோ

No comments:
Post a Comment