
எம்.கே.நாராயணன்
எம்.கே.நாராயணன் (75) என்றழைக்கப் படும் மாயன்கோட்டே கேளத் நாராயணன் தற்போது பாரதப் பிரதமரின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக இருந்து வருகிறார். இவரைப் பற்றிய விக்கீப்பீடியாவின் பக்கங்களில், இலங்கை விவகாரங்களில் இவர் கைதேர்ந்தவர் என்று கூறப் பட்டிருக்கிறது.

எம்.கே.நாராயணன் சிவ சங்கர மேனன் மற்றும்
ராஜபக்ஷே சகோதரர்கள்
ராஜபக்ஷே சகோதரர்கள்
இலங்கை விவகாரங்களில் இவர் எப்படி கைதேர்ந்தவராக இருந்தார் என்பது இவர் ஆயிரக்கணக்கான தமிழர்கள் மடியக் காரணமாக இருந்தவர் என்பதிலிருந்து புலப்படும். நாராயணனுக்கு விடுதலைப் புலிகளை ஒழிக்க வேண்டும் என்பதற்கு சோனியா குடும்பத்திற்கு நெருக்கமானவர் என்பதை தவிர வேறு காரணங்களும் உண்டு.
தமிழ்நாடு கேடரை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான எம்.கே.நாராயணன் ஆரம்பம் முதலே இந்தியாவின் உள்நாட்டு உளவுப் பிரிவில் (Intelligence Bureau) வில் பணியாற்றினார். IBல் ஆரம்பம் முதல் பணியாற்றியதால் இந்திரா காந்தி குடும்பத்தோடு நெருக்கமானார். இந்திரா காந்தி குடும்பத்தோடு நெருக்கமான அதிகாரிகள் யாரும் அவ்வளவு எளிதில் அந்தத் தொடர்பை எளிதில் விடமாட்டார்கள்.
இந்திரா காந்தி குடும்பத்தைச் சேர்ந்த யாரோ ஒருவர் எப்படியும் பதவியிலோ, அல்லது அதிகார மையத்திலோ இருப்பார்கள் என்பது குழந்தைக்குக் கூட தெரியும். அதனால் அந்த தொடர்பை உயர் அதிகாரிகள் பலரும், போஷாக்காக பாதுகாத்து வளர்த்து வருவது வழக்கம். அப்படித்தான், நாராயணனும் காந்தி குடும்பத்துடனான தொடர்பை பாதுகாத்து வந்தார்.

1989 முதல் 1990 வரை, IBன் தலைவராக இருந்தார் நாராயணன். பிறகு சில காலம் உளவுத் துறைக்கான கூட்டுக் குழுவின் தலைவராக இருந்தார். பிறகு 1991 தொடக்கத்தில், மீண்டும் IBன் தலைவராக ஆனார். 1992ல் ஓய்வு பெற்றார். இவர் IBன் தலைவராக இருந்த காலத்தில்தான் ராஜீவ் படுகொலை செய்யப் பட்டார்.
ராஜீவ் கொலை தொடர்பாக அமைக்கப் பட்ட ஜெயின் கமிஷன் முன் ஆஜராகி சாட்சியமளித்த இந்திய உளவுப் பிரிவின் (IB) இணை இயக்குநர் வத்சன் என்பவர் தான் சென்னையில் பணியாற்றி வந்ததாகவும், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே நடைபெற்ற அனைத்து வயர்லெஸ் செய்திகளையும், அவற்றை பகுப்பாய்ந்து பார்க்க (decode) தங்களிடம் வசதி இல்லாததால் தலைமையகமான டெல்லிக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும், தான் பதவியில் இருந்தது வரை அந்த செய்திகள் பகுப்பாய்வு செய்யப் படவேயில்லை என்று தெரிவித்துள்ளார்.
இதுதான், எம்.கே.நாராயணனின் லட்சணம். ஜே.என்.தீட்சித், மரணமடைந்தவுடன் ஜனவரி 2005ல் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமனம் செய்யப் பட்டார் நாராயணன். எப்பேற்பட்ட திறமையான “தேசிய பாதுகாப்பு ஆலோசகர்” பார்த்தீர்களா நமக்கு ?
சிங்களக் காடையர்களால், புலம் கடந்த உதவி இல்லையெனில், இன்னும் ஏழேழு ஜென்மத்திற்கு, புலிகளை வெல்ல முடியாது என்பது அனைவரும் அறிந்ததே. ஈழத்தில் புலிகளுக்கெதிரான போரில், சிங்களனுக்கு, ஆயுதமும், பயிற்சியும், நிதியும் இந்தியா கொடுத்து உதவியதில், எம்.கே.நாராயணனுக்கு பெரும் பங்கு உண்டு.
நாராயணன் இத்தகைய பங்கு வகிக்கக் காரணம், தான் உளவுத் துறையின் தலைவராக இருக்கையில், தன் கண்ணில் மண்ணைத் தூவி, ராஜீவ் படுகொலை செய்யப் பட்டு விட்டாரே.. தனது பணிக்காலத்தில் தீராத கறையாக இப்படுகொலை (a blot in his career) என்ற பழிவாங்கும் உணர்ச்சியும், இலங்கை இனப்படுகொலையில், நாராயணனின் அதி தீவிர ஈடுபாட்டுக்கு ஒரு காரணம்.

இந்த நாராயணன், 1990ல் விடுதலைப் புலிகளுடன் தொடர்பு, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது என்று கருணாநிதியின் ஆட்சி கலைக்கப் பட்டதற்கு அப்போது உளவுத் துறையின் தலைவராக இருந்த இதே எம்.கே.நாராயணன் தான் காரணம்.
இப்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றி வரும் எம்.கே.நாராயணின் ஆளுகையின் கீழ்தான், இந்தியாவின் உள் நாட்டு உளவுத் துறை,(IB) அயல் நாட்டு உளவுத் துறை (RAW) ஆகிய இரண்டும் வருகின்றன. நெடுங்காலமாக IBல் பணியாற்றியதால் IBயில் உள்ள செல்வாக்கு நாராயணனுக்கு RAWல் இல்லை.
RAW என்பதன் விரிவு Research and Analysis Wing அதாவது ஆய்வு மற்றும் பகுப்பாய்வு பிரிவு என்பதாகும். 1962 மற்றும் 1965ல் ஏற்பட்ட இரு போர்களுக்குப் பிறகு, அயல்நாட்டு உளவுக்கான தேவை அதிகரிக்கவும், செப்டம்பர் 1968ல் ரா உருவாக்கப் பட்டது.
இந்த “ரா“ அமைப்பின் வேலை, இந்தியாவுக்கு வெளியே, இந்தியாவின் நலன்களை பாதுகாக்கும் வகையில், உளவுத் தகவல்களை சேகரிப்பதுதான்.
அமெரிக்காவில், எஃப்.பி.ஐ மற்றும் சிஐஏ ஆகிய இரு பிரிவுகள், எப்படி, ஒருவரோடு ஒருவர் முரண்பாடாக இருப்பார்களோ, அதே போல்தான் இந்தியாவிலும், ஐபி, ரா ஆகிய இரண்டு பிரிவுகளின் அதிகாரிகளும், ஒருங்கிணைந்து பணியாற்றுவது மிகவும் குறைவு.
இந்நிலையில், இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு, ரா நிறுவனத்தைப் பற்றியும், எம்.கே.நாராயணன் ரா துறையை தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக எடுத்து வரும் பகீரத முயற்சிகளை பற்றி விரிவான தகவல்களை வெளியிட்டுள்ளது.

17.11.2009 இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டு செய்தி

18.11.2009 இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டு செய்தி
வரும் ஜனவரி 2010ல், தற்போதைய ரா வின் இயக்குநர் ஓய்வு பெற்றவுடன் எம்.கே.நாராயணின் கையாளாக கருதப்படும் அவ்தேஷ் பிகாரி மாத்தூர் என்பவர் பதவி ஏற்க உள்ளதாகவும், இந்த மாத்தூர் ரா வுக்கு தலைவராக பதவி ஏற்பதற்காகவே, நிதித் துறையின் முன் அனுமதி இல்லாமலே, ஒரே இரவில், “சிறப்புச் செயலாளராக” நாராயணனின் தூண்டுதலின் பேரில் பதவி உயர்த்தப் பட்டதாகவும், இது ரா வில் பணியாற்றும் பல உயர் அதிகாரிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
மேலும், மாத்தூரை விட, பணியில் மூத்த நான்கு அதிகாரிகள் அதிருப்தி அடைந்த 6 அதிகாரிகள் பி.எம்.ஹெப்லிக்கர், பிதன் ரவால், சி.கே.சின்ஹா, ஆனந்த் ஆர்னி, மற்றும் அஷோக் கபூர் ஆகியோர் விடுப்பில் சென்று விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இவர்களில் அஷோக் கபூர் இந்த பதவி உயர்வை எதிர்த்து மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தை அணுகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், நெடு நாட்களாகவே, ரா விலிருக்கும் அதிகாரிகளை விட்டு விட்டு வெளி ஆட்களை (பிற துறைகளில் இருந்து) நாராயணன் தொடர்ந்து நியமித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகாரிகளை விடுப்பில் செல்ல வேண்டாம் என்று தான் நடத்திய கூட்டத்தில் தெரிவித்த தற்போதைய ரா வின் தலைவர் கே.சி.வர்மா, “தனது கைகள் கட்டப் பட்டுள்ளது“ என்று தெரிவித்துள்ளதாகவும் தெரிகிறது.
விடுப்பில் சென்றுள்ள அதிகாரிகளுக்கு, 25 ஆண்டு காலமாக ரா நிறுவனத்தில் உழைத்து, பதவி உயர்வில் தாங்கள் விடுபட்டது மட்டும் வருத்தமல்ல, தற்போது ரா இயக்குநராக பதவி ஏற்க உள்ள மாத்தூரின் பணிக் காலம் முழுவதும், அதிகார மையத்திற்கு நெருக்கமாக இருந்ததும், பண முதலைகளின் பிடியில் இருந்ததும், பணிக்காலம் முழுவதும் ஒழுங்காக பணியாற்றாமல் இருந்ததும் தான் இந்த அதிகாரிகளுக்கு கடுமையான மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மாத்தூர் தனது பணிக்காலத்தில் எப்படி பணியாற்றினார் என்பதை இப்போது பார்ப்போம்.
இந்த மாத்தூர் பெல்ஜியம் நாட்டில் பணியாற்றி விட்டு, பாகிஸ்தானில் பணியாற்றிய போது, பெல்ஜியம் தலைநகர் ப்ரஸ்செல்ஸில் இவரது வங்கிக் கணக்கில் 1,25,000 அமெரிக்க டாலர்கள் இருந்தது கண்டு பிடிக்கப் பட்டது. இந்தத் தொகை, இவர் பணிக்காலம் முழுவதும் சம்பாதிக்கும் ஊதியத்தை விட அதிகம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தொகை பற்றி நடைபெற்ற விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இது தவிர, மாத்தூர் பாகிஸ்தானில் இருந்த போது ஏற்பட்ட சம்பவங்கள் தான் மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
ரா பிரிவில் பணியாற்றும் ஒரு அதிகாரிக்கு, பாகிஸ்தான் போஸ்டிங் தான் இருப்பதிலேயே மிகக் கடினமான ஒரு பதவி. ஏனெனில் நெடு நாள் பாகிஸ்தானோடு நமக்கு இருந்து வரும் பகைதான் காரணம். ஆனால் மாத்தூர் பாகிஸ்தானில் இருந்த போது, பாகிஸ்தான் உளவுத் துறையான ஐஎஸ்ஐ மாத்தூரைப் பற்றி எவ்வித கவலையும் படாமல் இருந்துது மிகவும் அசாதாரணமான ஒன்று என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
வழக்கமாக பாகிஸ்தானில் உள்ள இந்திய அதிகாரிகள் கடுமையாக கண்காணிக்கப் படுவர். ஆனால், மாத்தூர் மற்றும் அவரது மனைவி ஷாப்பிங் சென்ற போது கூட, பாகிஸ்தான் உளவுத் துறை அதிகாரிகள் ஒருவரும் அவரை கண்டு கொள்ள வில்லை என்பது மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
பாகிஸ்தான் பணி என்பது எந்த ரா அதிகாரிக்கும், தூங்குவதற்குக் கூட நேரம் இல்லாத அளவுக்கு கடும் நெருக்கடியை கொடுக்கும் பணியாகும். ஆனால் மாத்தூர் பல முறை அரபு நாடுகளுக்கு சென்று வந்திருக்கிறார் என்பது மேலும் இவரைப் பற்றிய சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.
இப்படிப் பட்ட மாத்தூர் “ரா” வின் தலைவராக வந்தால் இந்தியா எங்கே செல்லும் என்று சற்றே எண்ணிப் பாருங்கள்.
எம்.கே.நாராயணன் பற்றிய மேலும் தகவல்களுக்கு சவுக்கை தொடர்ந்து படியுங்கள்.
சவுக்கு
இந்த எம் கே நாராயணன் ஒரு சல்லி பயல்....இந்த கேரளா காரங்களினால் தான் ஈழம் இவ்வளவு சிதைந்து போனது...இப்பொழுது இந்தியாவை சிதைக்கப் போகிறான்கள்....சிதைக்கட்டும்....இந்திய சிதைந்தால் தான் நம் தனி தமிழகம் காண முடியும்...தனி தமிழகம் கண்டால் தனி ஈழம் காணும் முயற்சி வலுப் பெரும்.
ReplyDelete