Thursday, August 12, 2010

தர்மபுரம் ஆதீனம் மீது பரபரப்பு பாலியல் புகார்.


நாகப்பட்டினம் மயிலாடுதுறையில் உள்ள தர்மபுரம் ஆதினம் மடத்தின் மீது பரபரப்பு பாலியல் குற்றச் சாட்டு எழுந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறை உரிய விசாரணை நடத்தினால் பல திடுக்கிடும் உண்மைகள் அம்பலமாகும் என்று தெரிகிறது.
சென்னை கே.கே.நகரில் அஷோக் குமார் என்பவரின் குடும்பம் வசித்து வந்த்து.

இந்த அஷோக் குமார், தனது மனைவி லதா மற்றும் ஆனந்தகிருஷ்ணன் மற்றும் மகள் ஐஸ்வர்யா ஆகியோரோடு வசித்து வந்தார். 2009 ஜனவரியில், அஷோக் குமார், ஒரு விபத்தில் மரணமடைந்தார். கணவர் இறந்த்தும், அவரது மனைவி லதா தனது பிள்ளைகளோடு மயிலாடுதுறையில் தனது பெற்றோரோடு வசிப்பதற்காக சென்று விடுகிறார். மயிலாடுதுறையில் தங்கியிருந்த லதா, சிவனின் மேல் ஈடுபாடு கொண்டு, தர்மபுரம் ஆதீனத்தின் தேவார பாடல் வகுப்புகளில் தனது பிள்ளைகளோடு கலந்து கொள்கிறார்.



சிறுவன் அனந்தகிருஷ்ணன்


சிறிது காலம் கழித்து, ஆதீன வளாகத்திலேயே தனது பிள்ளைகளோடு குடி போகிறார். ஆதீன வளாகத்திற்குள் சென்றவுடன், ஒரு மாதம் கழித்து 15 வயதான இவரது மகன் அனந்தகிருஷ்ணனை பெரிய ஆதீனமும், அவருக்கு அடுத்து இரண்டாம் நிலையில் உள்ள இரண்டு தம்பிரான் சுவாமிகளும் வேலை வாங்கத் தொடங்கினர். ஆரம்பத்தில் எடுபிடியாக இருந்த வேலை, சிறிது காலம் கழித்து, தம்பிரான்களுக்கு கால் பிடித்து விடுவது, தம்பிரான்கள் குளிக்கும் போது அவர்களின் நீண்ட சடை முடி நனையாமல் பிடித்துக் கொள்வது என்று தொடர்ந்துள்ளது.

அவர்கள் குளித்து முடித்தவுடன், அவர்கள் உள்ளாடை உள்ளிட்ட ஆடைகளை துவைத்து உலர்த்துவது என பதினைந்து வயது சிறுவனிடம் கடினமான வேலைகள் வாங்கப் படுவது தொடர்ந்த்து. இது தவிரவும், நள்ளிரவு நேரத்தில் பாம்புகள் நடமாடும் தோட்டத்தில் மலர் பறித்து வரவும் இச்சிறுவன் கட்டாயப் படுத்தப் பட்டுள்ளான். இந்த கொடுமைகள் தாங்க முடியாத சிறுவன் அனந்தகிருஷ்ணன், சென்னையில் உள்ள தனது அத்தை ரேவதி மற்றும் ஆனந்தி ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான் படும் கொடுமைகளை கூறியிருக்கிறான்.



பெரிய தம்பிரான்

உடனடியாக மயிலாடுதுறைக்கு கிளம்பிய ரேவதி மற்றும் ஆனந்தி சிறுவன் அனந்தகிருஷ்ணனை உடனடியாக சென்னைக்கு அழைத்து வந்துள்ளனர். சென்னைக்கு வந்த சிறுவனை உடனடியாக திருப்பி அனுப்பும் படி ஆதீனம் மடத்திலிருந்தும், அரசியல் பிரமுகர்களிடமிருந்தும் தொடர்ந்து மிரட்டல் வந்த வண்ணம் இருந்த்தால், வழக்கறிஞர்கள் உதவியை நாடினர்.


சின்ன தம்பிரான்


இந்நிலையில், சிறுவன் அனந்தகிருஷ்ணனை அவனது விருப்பத்திற்கு மாறாக, அவனது அத்தைகள் கடத்தி வைத்திருப்பதாகவும், உடனடியாக அவனை மீட்டுத் தருமாறும் சிறுவனின் தாய் லதா மயிலாடுதுறை காவல்நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். இந்த புகார் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், சென்னை கே.கே.காவல் நிலையத்தில் ரேவதியின் கணவர் சோமலிங்கத்தையும், ஆனந்தியின் கணவர் ரமேஷ் குமாரையும் நேற்று இரவு கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றுள்ளனர்.

கைது செய்யப் பட்ட இருவரும் இது வரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப் படாத்தால், அவர்களது வழக்கறிஞர்கள் சுந்தர்ராஜன் மற்றும் புகழேந்தி உள்துறை செயலாளருக்கும், காவல் துறை தலைவருக்கும் இது தொடர்பாக இன்று தந்தி ஒன்றை அனுப்பியுள்ளனர்.


இந்நிலையில் கடத்தப் பட்டதாக கூறப்படும் சிறுவன் அனந்தகிருஷ்ணனை சந்தித்து பேசிய போது, அந்தச் சிறுவன் கூறிய தகவல்கள் அதிர்ச்சியூட்டும் விதமாக இருந்த்து.

மடத்தின் இரண்டாம் நிலையில் உள்ள பெரிய தம்பிரானும் சின்ன தம்பிரானும் இந்தச் சிறுவனை கை கால்கள் அழுத்தி விடுமாறு பணித்துள்ளனர். இவ்வாறு பணிவிடைகள் செய்து கொண்டிருக்கையில், இச் சிறுவனின் அந்தரங்க பாகங்களை பெரிய தம்பிரான் தொடுவதும், ஆபாசமாக பேசுவதும் பல நாட்கள் தொடர்ந்துள்ளது.

சின்னத் தம்பிரான், எப்போதும் நித்யானந்தரின் படத்தை தன்னோடு வைத்திருப்பார் என்றும், இந்தச் சிறுவனை நல்ல சத்துள்ள உணவுகளை சாப்பிடுமாறும், அப்போதுதான் அந்தரங்க பாகங்கள் ஆரோக்கியமாக வளரும் என்றும் ஆபாசமாக பேசுவது வழக்கம் என்று இந்தச் சிறுவன் தெரிவித்தான்.

இந்நிலையில், இந்த மடத்தில் நடக்கும் ஊழல்களை அம்பலப்படுத்தவும், இது தொடர்பாக ஒரு விரிவான விசாரணையை மேற்கொள்ளவும், சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை ஒரு வழக்கு ஒன்றை தாக்கல் செய்ய உத்தேசித்துள்ளதாக தெரிகிறது.

சிறுவர்கள் மீது இது போன்ற பாலியல் கொடுமைகளை புரியும் நபர்களை தண்டிக்க கடும் சட்டங்கள் உள்ளது. இந்நிலையில் இச்சிறுவன் கடத்தப் பட்டுள்ளான் என்றும், காவல்துறை கடத்தப் பட்ட சிறுவனை தேடி வருகின்றனர் என்ற செய்திகள் வந்துள்ள நிலையில் இச்சிறுவன் தெரிவிக்கும் செய்திகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இந்தச் சிறுவனை உடனடியாக ஒப்படைக்குமாறு, தர்மபுரம் ஆதினம் தரப்பில் இருந்து கடும் நெருக்கடி தனக்கு வந்திருப்பதாக இச்சிறுவனின் வழக்கறிஞர் புகழேந்தி தெரிவிக்கிறார். இந்த மிரட்டலுக்கு அஞ்சாமல், இச்சிறுவனின் நலனை பாதுகாக்க நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெறப்போவதாகவும் புகழேந்தி தெரிவித்தார்.

நன்றி: நம்தினமதி நாளேடு

சவுக்கு

8 comments:

  1. IDHU PONDRA CONTRAVERCY-YANA PADHIVUGALAI VELIYIDUM NAM DINAMATHIKKUM ORU J.........J

    ReplyDelete
  2. Samihalin kaaalma pollakalam .... eayrkaiku ethiraaaha thurawarm oondal nadkkaum vibareethm than ithu...

    ReplyDelete
  3. காவி கட்டிய கடவுள்-னு சொல்பவர்களை.. முச்சந்தியில விட்டு.. கல்லுல அடிக்கனும் பாஸ்...

    ReplyDelete
  4. well need more more.what happened to kamarajar story?

    ReplyDelete
  5. Yesterday evening SUN TV told some orders passed by the High Court in this issue. After some hours that news was dropped.

    Today no media is carried out this news. What is happening?

    ReplyDelete
  6. DEAR SAVUKKU TEAM,

    YOU ARE DOING A WONDERFUL SERVICE TO SOCIETY.
    PLEASE CONTINUE YOUR SERVICE. IN THE DARK TUNNEL, THERE IS A RAY OF HOPE, BECAUSE OF YOU PEOPLE. CONGRATS.
    WHY VEERAPPAN/KAMARAJ INCIDENTS DISCONTINUED??

    GOPALA SAMY. ALKHOBAR. SAUDI ARABIA.

    ReplyDelete
  7. சாமியார்களும் காமுகர்களும் பெண்களையும் சிறுவர் சிறுமிகளையும் பாலியல் வல்லுறவுக்குற்படுத்தும் போது கடவுள் என்ன முட்டையில் மயிர் பிடுங்கிக்கொண்டா இருந்தார்...?

    ReplyDelete
  8. enna kodumai sir ithu?...intha samiyarunga kunja arukkanum sir...mannikkavum intha varthaikku...vera vazhi theriyala...

    ReplyDelete