Monday, September 15, 2014

சி.டி.செல்வம் என்ற மொள்ளமாறி.

சவுக்கு இணையதளம், தொடங்கிய நாள் முதலாகவே, அதிகார வர்க்கத்துக்கு, மிகப்பெரிய சவாலாகவே இருந்து வந்துள்ளது.   ஐஏஎஸ் அதிகாரிகள், ஐபிஎஸ் அதிகாரிகள், அமைச்சர்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள், என்று அதிகாரம் பொருந்திய எந்த அமைப்பையும் சவுக்கு விட்டு வைத்ததே கிடையாது. 



இப்படி கடுமையான விமர்சனங்களை செய்வதில், சவுக்குக்கு, சாதி பாகுபாடோ, மத பாகுபாடோ, கட்சி பாகுபாடோ, நிற பாகுபாடோ அறவே கிடையாது என்பது, 2009 முதல், சவுக்கு தளத்தை தொடர்ந்து பின்தொடர்ந்து வருபவர்களுக்கு நன்றாகவே தெரியும். இத்தளத்தை எப்படியாவது முடக்க வேண்டுமென்று, ஒட்டுமொத்த அதிகார வர்க்கமும் முயன்றாலும், முடக்குவதற்கான நடவடிக்கைகளில் இறங்கியது, நீதிபதி சி.டி.செல்வம் மட்டுமே.

சவுக்கு தளம் மற்றும், அதை நடத்துவதாக சந்தேகப்படும் நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது மகாலட்சுமி என்ற வழக்கறிஞரைப் பற்றி அவதூறான கட்டுரை எழுதியதற்காகவே.    அந்த கட்டுரை அவதூறான கட்டுரை என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை.   பல்வேறு ஊழல்களை அம்பலப்படுத்திய சவுக்கு, ஒரு தனி நபர் விவகாரத்தில் நுழைந்து, ஒரு பெண்ணைப் பற்றி அவதூறாக எழுதியது, குற்றமா என்றால் குற்றமே.   

ஆனால், தன்னுடைய கள்ளக்காதல் நிறைவேற வேண்டும் என்பதற்காக, நீதிமன்ற ஆவணங்களை திருத்தி, ஒரு அப்பாவி பெண்ணின் மீது அபாண்டமான குற்றச்சாட்டுகளை சுமத்தி, அந்தப் பெண்ணை தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு தூண்டி, அவளை வாழ்வை விட்டே ஓட ஓட விரட்டினால், அது பற்றி தகவல் வருகையில், சவுக்கு தனி நபர் விவகாரங்களில் தலையிட்டே தீரும்.  இந்த நிலை, என் தங்கைக்கும், உங்கள் தங்கைக்கும் வரலாம்.  அப்படி ஒரு நிலை வந்தால், பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் நிலையில் இருந்துதான் சவுக்கு சிந்திக்கும்.   அப்படி சிந்தித்து உருவாகியதே இந்த கட்டுரை.


இந்தக் கட்டுரை எழுதியதற்காக, அவதூறு வழக்கு தொடரலாம்.   அந்த கட்டுரையை நீக்க சொல்லலாம்.    அல்லது, அந்தக் கட்டுரையை எழுதியவரை கைது செய்யலாம். 

ஆனால், நீதிபதி சி.டி.செல்வம், கட்டுரையை எழுதியவரை கைது செய்ய உத்தரவிட்டதோடு, அந்த இணைய தளத்தை வடிவமைத்தவரை கைது செய்ய உத்தரவிட்டார்.   சட்டவிரோதமான உத்தரவுகளை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் காவல்துறைக்கு என்றுமே கிடையாது.  ஆனால், சேட்டன் ஜார்ஜ் குட்டி, குட்டிகளோடு நேரத்தை செலவிடுவதை விட்டு விட்டு, சவுக்கு தளத்தை தடை செய்ய முனைந்தார்.

சவுக்கு தளத்தை வடிவமைத்ததாக கருதப்படும், முருகைய்யன் என்பவர், கைது செய்யப்பட்டார்.  அந்தக் கைது மகாலட்சுமி என்ற பெண் வழக்கறிஞருக்காக அல்ல.  மாறாக, திமுகவை குழி தோண்டி புதைக்க வகை செய்யும் ஒரு அதிர வைக்கும் ஒலி நாடாவை வெளியிடக் கூடாது என்பதற்காகவே அந்தக் கைது இணைப்பு

சரி.  அந்த கட்டுரை நீக்கப்பட்டதல்லவா..... வழக்கு தொடர்ந்தவரின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதல்லவா ?  அந்த வழக்கு அத்தோடு முடிக்கப்பட்டிருக்க வேண்டுமா இல்லையா ?  முடிக்கப்படவில்லை.  மாறாக, அந்தக் கட்டுரை நீக்கப்பட்ட பிறகும், வழக்கை ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து நடத்தினார் சி.டி.செல்வம்.  இன்றும் நடத்திக் கொண்டிருக்கிறார்.

நக்சலைட்டுகளுக்காகவும், தமிழ் தேசிய போராளிகளுக்காகவும் போராடுவதாக சொல்லிக் கொள்ளும், கடைந்தெடுத்த அயோக்கியனான சங்கரசுப்பு, ஒவ்வொரு வாய்தாவின் போதும், சவுக்கு தளம் எந்த புதிய முகவரியில் இயங்குகிறது என்பதை சி.டி.செல்வத்திடம் கூறுகிறார்.  உடனே வெகுண்டெழும் சி.டி.செல்வம், புதிய முகவரியை தடை செய்ய காவல்துறைக்கு உத்தரவிடுகிறார்.      

சவுக்கு தளம் குறித்தும், சவுக்கு தளத்தை நடத்துபவர் குறித்தும், நன்கு அறிந்த வழக்கறிஞர் பாண்டியன் புகழேந்தி, சங்கரசுப்பு போன்ற சோரம் போன நபரை ஆதரிக்கிறார்.  அவரது கட்சி நடத்தும் மாநாட்டுக்கு, சங்கரசுப்புவை சிறப்பு அழைப்பாளராக அழைக்கிறார். 


தமிழகத்தில், சென்னையில், ஒரு தலித் இளைஞனை பட்டப்பகலில் சுட்டுக் கொன்று விட்டு, இலங்கைக்கு தப்பியோடி, அங்கே அமைச்சராக இருக்கும் கொலைகாரன் டக்ளஸ் தேவானந்தாவை, கைது செய்து, இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என்று வழக்கு தொடுத்தவர் வழக்கறிஞர் புகழேந்தி.  அந்த கொலைகாரன், இலங்கையில் இருந்தபடியே, வீடியோ கான்ஃபெரன்ஸ் மூலம், வழக்கை எதிர் கொள்ளலாம் என்று அவனுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தவர் சி.டி.செல்வம்.    

சி.டி.செல்வம் இப்படிப்பட்ட தீயசக்தி என்பதற்காகவே சி.டி.செல்வம் மற்றும் கர்ணன்களை சவுக்கு தொடர்ந்து எதிர்த்து வருகிறது. ஆனால், இந்த தீயசக்தியை ஆதரிக்கும் சங்கரசுப்பு போன்ற அயோக்கியனை, சவுக்கு சந்தித்தலேயே மிக மிக நேர்மையான மனிதரான புகழேந்தி ஆதரிக்கிறார்.  நேர்மை என்பது, பணத்துக்கு ஆசைப்படாதது மட்டுமல்ல. தனிப்பட்ட முறையில் நேர்மையாக இருப்பது மட்டுமல்ல. இணைப்பு

ரிப்பனை வெட்டும் சங்கரசுப்பு
அநியாயத்துக்கு எதிராக குரல் கொடுப்பதும், குரல் கொடுப்பவர்களை ஆதரிப்பதும் நேர்மையே.   அப்படி குரல் கொடுக்காமல் இருப்பதையும் மீறி, குரல் கொடுப்பவர்களுக்கு எதிராக செயல்படுவது, நேர்மையற்ற செயல் மட்டுமல்ல.  பச்சை அயோக்கியத்தனம்.

மன்மோகன் சிங்குக்கும், பாண்டியன் புகழேந்திக்கும் பெரிய வேறுபாடு இல்லை.

இணையமும், அரசு அலுவலகங்களும் எப்படி இயங்குகிறது என்பது குறித்து அடிப்படை அறிவு கூட இல்லாத, சி.டி.செல்வம், ஒவ்வொரு வாரமும், இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து, (அவரது நீதிமன்ற ஆளுகையின் கீழ் வரவில்லையென்றாலும் கூட) புது புது உத்தரவுகளை பிறப்பிக்கிறார்.   சவுக்கு பெயரே இணையத்தில் இருக்கக் கூடாது என்கிறார்.    சவுக்கின் முகநூல் பக்கத்தை முடக்க உத்தரவிடுகிறார்.    

ட்விட்டர் கணக்கை முடக்க உத்தரவிடுகிறார்.  சவுக்கு நடத்துவதாக சந்தேகப்படும் நபரை ஏன் கைது செய்யவில்லை என்று, காவல்துறை அதிகாரிகளை, அனைவர் முன்னிலையிலும் கேவலமாக பேசுகிறார்.

இதையெல்லாம் இன்னும் உச்சநீதிமன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

சி.டி. செல்வம் செய்ததிலேயே உச்சபட்ச அயோக்கியத்தனம், ஒரு தனியார் அமைப்பை சவுக்கு முடக்க அதிகாரம் அளித்தது.   சி.டி.செல்வம், உத்தரவிட்டபோது, சவுக்கு உட்பட, அனைவரும் நினைத்தது, NATIONAL CYBER SAFETY STANDARDS AND SECURITY என்ற அமைப்பு, ஒரு அரசு அமைப்பு என்றே. 

ஆனால், இந்த அமைப்பை உருவாக்கிய, அமர் பிரசாத் ரெட்டி ஒரு அயோக்கியன் என்பது, ரொம்ப தாமதமாகத்தான் தெரிய வந்தது.    ஒரு அயோக்கியனுக்கு அரசு அதிகாரிகளின் அதிகாரத்தை வழங்கிய ஒரே குற்றத்துக்காகவே, சி.டி.செல்வம் சிறையில் தள்ளப்பட வேண்டும்.  ஆனால், நாம் என்ன செய்ய முடியும் புலம்புவதைத் தவிர (வாசகத்துக்கு நன்றி மூத்த பத்திரிக்கையாளர் டி.என்.கோபாலன்) 

கோபாலன் அய்யா...... சவுக்குக்கு புலம்பும் வழக்கம் கிடையாது.  புலம்ப வைக்கும் பழக்கம் மட்டுமே.  இப்போது அமர் பிரசாத் ரெட்டி எப்படி புலம்புகிறார் என்பதை பாருங்கள்.      ஏற்கனவே,  NATIONAL CYBER SAFETY STANDARDS AND SECURITY என்ற அமைப்பு மற்றும், அதன் உரிமையாளர் அமர் பிரசாத் ரெட்டி மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க, மத்திய புலனாய்வுத் துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.  

அமர் பிரசாத் ரெட்டி மற்றும்,  NATIONAL CYBER SAFETY STANDARDS AND SECURITY எப்படிப்பட்ட மோசடியானவர்கள் என்பதற்கான ஒலிநாடா ஆதாரம் இதோ.  ஒலிநாடாவைப் பற்றி சவுக்கு எதுவும் சொல்ல விரும்பவில்லை.   நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.



2 comments:

  1. திருடர்களின் முகம் வெளுக்கிறது

    ReplyDelete
  2. Shankarji, Excellent Joint Director (IT)... Extracted all information... Wow

    ReplyDelete