Monday, April 27, 2009

தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டாம் என்ற குறுந்தகடு வெளியீடு



/>
இனி என்ன செய்யப் போகிறோம் என்ற தலைப்பில் ஈழத்தில் நடைபெறும் படுகொலைகளை விவரித்தும் இந்திய அரசு மற்றும் தமிழக அரசின் பங்கு என்ன என்று விளக்கும் சில குறுந்தகடுகள் பரவலாக விநியோகிக்கப் பட்டு வந்தன. இக்குறுந்தகடுகளை தடை செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் தங்கபாலு விடுத்த வேண்டுகோளை தேர்தல் ஆணையம் நிராகரித்தது. இதன்பின் தங்கபாலு தமிழக அரசிடம் புகார் அளித்ததை அடுத்து தமிழக காவல்துறை தனிப்படைகளை அமைத்து தேடுதல் வேட்டை நடத்தி வந்தது. இதன் தொடர்ச்சியாக காவல் துறை கபிலன், கண்ணதாசன், திவாகரன் சுரேஷ்பாபு, குமார், பாலசுந்தரம் ஆகிய நான்கு பேரை சென்னை காவல்துறையினர் கைது செய்தனர்.
இன்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் கலைஞர் தமிழின கொலைஞர், இனி என்ன செய்யப் போகிறோம், 19/2 உயர்நீதிமன்ற தாக்குதல், புதிய பராசக்தி ஆகிய தொகுப்புகள் அடங்கிய குறுந்தகடுகள் வெளியிடப் பட்டன. முதல் குறுந்தகடை மூத்த வழக்கறிஞர் கருப்பன் வெளியிட வழக்கறிஞர் ரஜினிகாந்த் மற்றும் கோ.வி.ராமலிங்கம் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். விழாவில் விடுதலை ராசேந்திரன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

2 comments:

  1. மரியாதைக்குரிய திரு.கருப்பன் ஐயா அவர்களே,
    நல்ல நிகழ்வு. ஆனால் தி.மு.க.வுக்கும் காங்கிரசுக்கும் எதிராக(யாரையோ திருப்திப்படுத்தி குளிர்விக்க ஒரு முயற்சியாக) குறுந்தகடுகள் வெளியிட்டார்கள் என்ற ஒரே காரணத்திற்காக இந்த போலி சாமியாரை ஆதரிப்பது, நாம் எதை(ஆதிக்க சக்தி) எதிர்த்து போராடுகிறோமா அதன் பிரதிநிதிக்கே நாம் பாதுகாப்பு கொடுப்பது போல் ஆகிவிடும். இது போன்ற தருணங்களில் தான் நாம் நன்மை தீமைகளை சரியாக பகுத்தறிய வேண்டும். Enemy's Enemy need not be a Friend.

    ReplyDelete
  2. http://poonai.wordpress.com/2009/05/02/saranam/

    ReplyDelete