Friday, July 9, 2010

திமுகவின் அடுத்தடுத்த போராட்டங்கள்.




இலங்கை கடற்படையினரால், இந்திய மீனவர் ஒருவர் கொல்லப் பட்டது குறித்து செய்தி வெளியானதும், உடனடியாக சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் முன்பாக திமுக ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பைக் கேட்டு எப்படி சிரிப்பது என்று தெரியவில்லை. 1983ம் ஆண்டு முதல் ஏறக்குறைய 300க்கும் மேற்பட்ட மீனவர்கள் சிங்களக் காடையர்களால் சுட்டுக் கொல்லப் பட்டார்கள். அவ்வாறு சுட்டுக் கொல்லப் பட்ட அனைத்து நேர்வுகளிலும், எஃப்.ஐ.ஆர் போடப் பட்டுள்ளது.

அந்த எப்ஐஆர்கள் அனைத்திலும் எதிரி என்ற இடத்தில், இலங்கை நேவி என்று உள்ளது. ஒரு வீட்டில் அண்டா திருடியவனை இரவோடு இரவாக வீட்டில் சென்று, அவன் இல்லாவிட்டாலும், அவன் குடும்பத்தில் உள்ளவர்களை கைது செய்து ஸ்டேஷனில் வைக்கும் கருணநிதியின் காவல்துறை, என்ன செய்து கொண்டிருக்கிறது ?




ஜெயலலிதா கருணாநிதியை விமர்சித்து ஏதாவது அறிக்கை வெளியிட்டால், இந்த அம்மையார், கி.மு 1200ல் இப்படிப் பேசியுள்ளார், கிபி 1800லே இப்படிப் பேசியுள்ளார், என்று வாய் கிழிய அறிக்கை விடும் கருணாநிதி மீனவர் பிரச்சினையைப் பற்றி என்ன பேசியுள்ளார் ?

தமிழக மீனவர்கள் பேராசைக் காரர்கள். அவர்கள் சர்வதேச எல்லைக்குச் செல்வால்தான் தாக்கப் படுகிறார்கள் என்று பேசியவர்கதானே இந்தக் கருணாநிதி ?




குடிசையில் வாழ்ந்து கொண்டு, தன் குடும்பத்தையும், தன்னையும் வாழ்விக்க வேறு வழியின்றி சர்வதேச எல்லையில் மீன் பிடிக்கும் மீனவன் பேராசைக்காரனா, 2ஜி அலைக்கற்றை ஏலத்தில் 60,000 கோடியை ஆட்டையைப் போட்டது பத்தாது என்று, 2009 அமைச்சரவையிலும், ஆ.ராசாவுக்கு, அதே தொலைத் தொடர்புத் துறைதான் வேண்டும் என்று, டெல்லியில் சோனியாவிடம் மன்றாடிய கருணாநிதிக்கு பேராசையா ?

“ஒரு நாள் போவார், ஒரு நாள் வருவார்,
ஒவ்வொரு நாளும் துயரம்
ஒரு ஜான் வயிற்றை வளர்ப்பவர் உயிரை
ஊரார் நினைப்பது சுலபம்”

என்று பாடினாரே எம்ஜிஆர், அப்படி சுலபமாகத்தானே மீனவர்களை பேராசைக் காரர்கள் என்று கூறுகிறார் ?

சிங்களர்கள் பெரும்பான்மையினர், ஆகையால் அவர்கள் மனம் கோணாமல் நடந்து கொள்ள வேண்டும் என்று முத்து உதிர்த்தவர் இதே கருணாநிதிதானே ?

இப்படியெல்லாம் பேசி விட்டு, இன்று கூசாமல், மீனவர் படுகொலையைக் கண்டித்து இலங்கை துணைத் தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் என்று சொன்னால், இந்தக் கருணாநிதியின் நயவஞ்சகத்தை என்னவென்று சொல்வது ?

இதே போக்கில் போனால், திமுக அடுத்து என்னென்ன போராட்டங்கள் நடத்த உள்ளது என்று சவுக்கு யோசித்த போது….

1) மின்வெட்டைக் கண்டித்து ஆற்காடு வீராச்சாமி வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம். (இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மட்டும், தடையின்றி வீராச்சாமி மின்சாரம் வழங்க வேண்டும்)

2) எம்.எம் 4ல், அதாங்க “மானாட மயிலாட பாகம் 4“ நிகழ்ச்சியில், சரியான தீர்ப்பு வழங்க மறுத்த நமீதா வீட்டின் முன்பாக ஆர்ப்பாட்டம். (நமீதா, உடனடியாக முதல்வரை சந்தித்து, “குனிந்து“, அவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் பட்சத்தில், போராட்டம் ரத்து செய்யப் படும்.



3) முதல்வருக்கு வைத்த அயிரை மீன் குழம்பில், உப்பு சரியாக போடாத, ராசாத்தி அம்மாளைக் கண்டித்து, சிஐடி காலனி முன்பு ஆர்ப்பாட்டம். (ராசாத்தி அம்மாள், “காகிதப் பூ“ நாடகத்திலிருந்து ஒரு காட்சியை நடித்துக் காட்டுவாரேயானால், இந்தப் போராட்டம் கை விடப் படும்)



4) பொதுக் கழிப்பிட உள் சுவர்களிலும், கதவுகளிலும், “ஆங்கிலத்தில்“ கெட்ட வார்த்தை எழுதுபவர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம். (மாநகர மேயர், ஒரு வாரத்தில், அனைத்து சுவர் மற்றும் கதவுகளில், ஆங்கில கெட்ட வார்த்தைகள் தமிழில் மொழி மாற்றம் செய்யப் படும் என்று அறிவிப்பு வெளியிட்டால், இந்தப் போராட்டம் ரத்து செய்யப் படும்)

5) பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது வெற்றிலைப் பாக்குப் போட்டு, மேசையில் எச்சிலை வழிய விட்டதற்காக பேராசிரியர் அன்பழகனின் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் (அன்பழகன், இது தமிழ் எச்சில், இது எச்சில் அல்ல, கருணாநிதியின் தமிழைப் பார்த்து விட்ட ஜொள்ளு என்று அறிக்கை கொடுப்பாரேயானால், போராட்டம் வாபஸ் பெறப் படும்)

6) சென்னை சங்கமம் நிகழ்ச்சியில், மானாட மயிலாட போன்ற நடனங்களை அரங்கேற்றாமல் விட்டதற்காக கனிமொழி வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம். (அடுத்த மாதமே, சென்னை சங்கமம் நிகழ்ச்சி ஏற்பாடு செய்து, மானாட மயிலாட நடனக் குழுவினரை ஆட விட்டால் போராட்டம் ரத்து)




7) நக்கீரனின் இந்த இதழில், செக்ஸ் கவர் ஸ்டோரி வைக்காமல், அரசியல் கவர் ஸ்டோரி வைத்ததற்காக, நக்கீரன் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் (வரும் இதழ் முதல், ஜல்பாய்க்குரி ஜலசா எழுதும், கிளு கிளு தொடர் என்று அறிவிப்பு வெளியிட்டால் போராட்டம் கேன்சல்)

8) தமிழ்நாட்டில் உள்ள 4 கோடி செல்போன் இணைப்புகளில், 73 இணைப்புகளை ஒட்டுக் கேட்காமல் விட்டதற்காக உளவுத் துறை ஐஜி ஜாபர் சேட்டின் வீட்டு முன்பு ஆர்ப்பாட்டம் (73 இணைப்புகளில், கருணாநிதி குடும்பத்தினரின் 70 இணைப்புகள் போக, தாம்பரத்தில் தலப்பாக் கட்டு பிரியாணி மாஸ்டர், புரசைவாக்கத்தில் கொய்யாப் பழம் விற்பனை செய்பவர், பேசின் பாலம் அருகே கருவாட்டுக் கடை வைத்திருப்பவர் ஆகிய மூன்று பேரின் செல்போன்களும், நாளை முதல் ஒட்டுக் கேட்கப் படும் என்று உத்தரவாதம் கொடுத்தால், போராட்டம் ரத்து செய்யப் படும்)



9) கருணாநிதியின் தள்ளு வண்டியை தள்ளுகையில், ஸ்பீட் ப்ரேக்கரைப் பார்க்காமல் வேகமாகத் தள்ளிச் சென்றதற்காக, முதல்வரின் பாதுகாப்பு அதிகாரி பாண்டியன் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் (இதற்கு பிராயசித்தமாக கருணாநிதியை தள்ளு வண்டியில் 10 ரவுண்டுகள் அடித்தால், போராட்டம் வாபஸ்)

10) சினிமா தயாரிப்பில் இறங்கியுள்ள கருணாநிதியின் பேரன்கள், துரை தயாநிதி, உதயநிதி, மகன் மு.க.தமிழரசு ஆகியோர் கருணாநிதியை வைத்து கதை வசனம் எழுதாமல், வேறு யாரையோ வைத்து கதை வசனம் எழுதுவதை கண்டித்து, இவர்கள் அனைவர் வீட்டின் முன்பாகவும் ஆர்ப்பாட்டம். (இனி “பெரிய சிவப்பு“ அதாங்க ரெட் ஜெயன்ட் பிக்சர்ஸ் இனி எடுக்கும் படங்கள் அனைத்துக்கும், கருணாநிதிதான் கதை வசனம் என்று அறிவித்தால், இந்தப் போராட்டமும் வாபஸ்)



இந்த ஆர்ப்பாட்டங்களுக்காக யோசனை தெரிவித்த சவுக்குக்கு கட்டணம் ஏதும் தர வேண்டியதில்லை.

சவுக்கு

11 comments:

  1. welldone savukku.

    ReplyDelete
  2. அநியாயத்துக்கு குசும்பு பண்ணி இருக்கீர் அய்யா.அதுலயும் இது கிளாஸ்.

    //பொதுக் கழிப்பிட உள் சுவர்களிலும், கதவுகளிலும், “ஆங்கிலத்தில்“ கெட்ட வார்த்தை எழுதுபவர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம். (மாநகர மேயர், ஒரு வாரத்தில், அனைத்து சுவர் மற்றும் கதவுகளில், ஆங்கில கெட்ட வார்த்தைகள் தமிழில் மொழி மாற்றம் செய்யப் படும் என்று அறிவிப்பு வெளியிட்டால், இந்தப் போராட்டம் ரத்து செய்யப் படும்)//

    ReplyDelete
  3. அட்றா... அட்றா... அட்றா... அட்றா சக்கை...

    ReplyDelete
  4. கலைஞர் அல்ல சோனியா காந்தியே நினைத்தாலும் எதுவும் செய்ய முடியும் என்று தோன்றவில்லை. சிங்கள அரசு ஐ.நா.வையும் அதன் தீர்மானங்களையுமே மதிப்பதில்லை.

    ReplyDelete
  5. Well done article by Savukku.Keep it up and make an awareness to all people.By Ram Saudi Arabia

    ReplyDelete
  6. SAVUKKU SIR, AVASARATHIL VAALI EZUDHIYA PADALAI KANNADHASAN ENDRU EZUDHI VITEERGAL...ENDRU NINAIKKIREN. AM I CORRECT......THOTTA.

    ReplyDelete
  7. தவறு திருத்தப் பட்டது, தோழர் தோட்டா அவர்களே. தவறைச் சுட்டிக் காட்டியதற்கு அன்பு நன்றிகள்.

    ReplyDelete
  8. Good one, keep up the good work.

    ReplyDelete
  9. சும்மா நச்சுன்னு கலாய்ச்சிட்டீங்க...சூப்பரப்பு

    ReplyDelete