Wednesday, June 10, 2009

உல்லாச கருணாநிதியும் உறங்கும் உள்துறையும்... ...





தமிழகத்தில் முதலமைச்சராக உள் துறையையும் தன் வசத்தில் வைத்துக் கொண்டுள்ள கருணாநிதியின் ஆட்சிக்கு மேலும் ஒரு மணிமகுடம் ஏற்றப் பட்டுள்ளது.

புழல் சிறைக்குள்ளேயே வெல்டிங் குமார் என்ற ஆயுள் தண்டனைக் கைதி சக கைதிகளால் குத்திக் கொலை செய்யப் பட்டுள்ளார்.

என்னால் நடக்க முடியவில்லை, உயிருக்கே ஆபத்து, மறு பிறவி எடுத்து வந்துள்ளேன், உடல் ஒத்துழைக்கவில்லை என்று கழிவிறக்கம் கொண்டு, சுய பச்சாதாபத்தில், புலம்பும் கருணாநிதி, சட்டம் ஒழுங்கு மற்றும் உள்துறை போன்ற முக்கியமான துறைகளை தன் தவப்புதல்வனிடமோ, அல்லது சுயநினைவோடு பணியாற்றக் கூடிய வேறு ஒரு அமைச்சரிடமோ கொடுத்தால் தான் என்ன ?

நடக்க முடியாமல், அடுத்தவர் உதவியோடு தள்ளு வண்டியில் பயணித்து ஆட்சி பரிபாலனம் செய்யும் லட்சணம் மிக நன்றாக விளங்குகிறது. இவருடைய நிலை கண்டு, எள்ளளவும் பயமோ மரியாதையோ இல்லாத அதிகாரிகள் தான்தோன்றித்தனமாக பொறுப்பற்று வேலை செய்து கொண்டு இருப்பதை தமிழகம் தொடர்ந்து கண்டு வருகிறது.

முதலில், சட்டக் கல்லூரியில் மாணவர்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு இருந்ததை, முன் கூட்டியே தகவல் தெரிந்தும், கருணாநிதியின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை, கைகட்டி வேடிக்கை பார்த்தது. கலவரம் ஊடகங்களில் ஒளிபரப்பு செய்யப் பட்டதை பார்த்து பொது மக்கள் கொதித்து எழுந்தவுடன் விழித்துக் கொண்ட கருணாநிதி, உடனடியாக காவல் துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்து விட்டு, விசாரணை கமிஷனை அமைத்து பிரச்சினையை ஆறப் போட்டார்.

அடுத்து, மார்ச் 2009ல், நீதிமன்ற வளாகத்தில், 300க்கும் ஏற்பட்ட வழக்கறிஞர்கள், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்துக்குள்ளேயே அடித்து நொறுக்கப் பட்டு, வாகனங்கள் சேதப்படுத்தப் பட்டு, பெரும் தாக்குதலை நிகழ்த்தினர்.

இந்த தாக்குதலை கண்டித்து வழக்கறிஞர்கள் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த நேரத்தில் மருத்துவமனையில் இருந்த கருணாநிதி, என் உடல் நிலையை கருத்தில் கொண்டு, வழக்கறிஞர்கள் போராட்டத்தை வைவிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். ஆனால், அந்த நேரத்தில் மருத்துவமனையிலிருந்தே, வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததை பொருட்படுத்தாமல், தமிழக நடிகர் நடிகைகளுக்கு கலைமாமணி விருதுகள் அறிவித்தார்.




ஈழப்பிரச்சினைக்காக ஒத்துழைக்காத உடல்நிலை, குடும்பத்துக்கு மந்திரி பதவி வேண்டும் என்றதும், ஒத்துழைக்க ஆரம்பித்து, டெல்லி சென்று பேரம் நடத்தினார். மூத்த மகனுக்கு மகுடம் சூட்டியவுடன், இளைய மகன் கோபிப்பானே என்று அவனுக்கு துணை முதல்வர் பதவி வழங்கி அழகு பார்த்தார்.

துணை முதல்வர் பதவி வழங்கினாலும், சட்டம் ஒழுங்கு, உள் துறை, அதிகாரிகள் நியமனம், ஆகிய முக்கிய துறைகளை, தன்னுடன் சக்கர வண்டியிலேயே பயணிக்க வைத்திருக்கிறார்.

தேர்தல் நாளன்று, மனிதநேய மக்கள் கட்சியினர் தாக்கப் பட்டனர். மத்திய சென்னை வேட்பாளரின் வண்டி அடித்து நொறுக்கப் பட்டது.

தேர்தல் முடிந்தவுடன் இயக்குநர் பாரதிராஜாவின் அலுவலகம் அடித்து நொறுக்கப் பட்டு, ஏறத்தாழ ஒரு கோடி மதிப்பிலான சொத்துக்கள் சேதப்படுத்தப் பட்டன.

இவற்றையெல்லாம் மவுனமாக சக்கர நாற்காலியில் ஊர்ந்தபடி, வேடிக்கை பார்க்கிறார், உள்துறையை கையில் வைத்திருக்கும் கருணாநிதி.

சக்கர வண்டியிலே பயனிக்கும் உள்துறையின் செயல்பாடு இன்று சிறைக்குள்ளேயே ஒரு கொலை நடப்பதில் சென்று முடிந்திருக்கிறது.

1985ம் ஆண்டு, ராதாகிருஷ்ணன் என்பவரை திருவெற்றியூரில் கொலை செய்ததற்காக ஆயுள் தண்டனை பெற்று வரும் வெல்டிங் குமார் என்ற ஆயுள் தண்டனைக் கைதி, இன்று புழல் சிறைக்குள்ளேயே கொலை செய்யப் பட்டுள்ளார். இந்த வெல்டிங் குமார் தி.மு.க வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தாக்கப்பட்ட வழக்கிலும் தண்டனை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


வெல்டிங் குமார் கைது செய்யப் பட்டபோது

சிறைக்குள்ளேயே ஒரு ஆயுள் தண்டனைக் கைதி கொலை செய்யப் பட்டுள்ளது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர்களுக்கு பாதுகாப்பில்லை.

வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பில்லை.

நீதிபதிகளுக்கு பாதுகாப்பில்லை.

இன்று சிறைக்குள்ளே உள்ள கைதிகளுக்கும் பாதுகாப்பில்லை.


அப்பொழுது, கருணாநிதியும், அவர் குடும்பத்தாரும் மட்டும் தான் தமிழ்நாட்டில் பாதுகாப்பாக இருக்க முடியுமா ?

இந்த அரசு கருணாநிதிக்கும் அவர் குடும்பத்துக்கும் மட்டும் தானா ?

சிறைக்குள்ளேயே கைதி கொல்லப் படுகிறார் என்றால், அதற்கு பொறுப்பான உள் துறை அமைச்சர் தார்மீக பொறுப்பேற்று, பதவி விலக வேண்டும் அல்லவா ?

பதவி விலகுவதெல்லாம், சுயமரியாதை உள்ளவர்களுக்குத் தான்.

"ஒரு அடிமை என்ன செய்ய முடியும்" என்று ஒப்பாரி வைப்பவருக்கு எப்படி இந்த விதி பொருந்தும் ?

ஒப்பாரி

5 comments:

  1. நல்லவேளை ஸ்ரேயா விருதை குனிந்து வாங்கவில்லை..இல்லையென்றால் தமிழகத்தில் ஒரு இடை தேர்தல் வந்திருக்கும்.

    .....மாயாவி..

    ReplyDelete
  2. திரைப்படத்தில்தான் இப்படி நடிக்கிறார்கள். விருது வாங்கும்போதாவது சற்று அடக்கமாக உடையணிந்து வர வேண்டாமா.

    நிற்க, தாங்கள் சொல்லியுள்ள பிரச்சினை எல்லா ஆட்சியிலும் ஏதாவது ஒரு ரூபத்தில் இருந்துக் கொண்டுதான் இருக்கிறது. இதற்கு என்ன செய்தால் தீர்வாக இருக்கும் என்பதைச் சொல்லுங்கள்.

    ReplyDelete
  3. தோழரே, அரசியல்வாதிகளுக்கு இருக்கும் பொறுப்பை விட, அதிகாரிகளுக்கு நமது ஜனநாயகத்தில், அதிக பொறுப்பு உள்ளது. நடவடிக்கைகள் சற்று கடுமையாக தோன்றினாலும், இது போன்ற அசம்பாவிதங்கள் நடந்தவுடன், உடனடியாக சம்பந்தப்பட்ட துறையின் உயர் பதவியில் இருக்கும் அதிகாரியை இடை நீக்கம் செய்ய வேண்டும். பணியிட மாறுதல், எவ்வித பயனையும் தராது. மாறுதலுக்கு உள்ளாகும் அதிகாரிக்கு எந்த பதவிக்குச் சென்றாலும், இரண்டு வண்டிகள், ஏ.சி அறை, போன், பி.ஏ போன்ற வசதிகளுக்கு எவ்வித குறையும் இருக்காது. அப்படி இருக்கையில், வெறும் பணியிட மாறுதல், எப்படி பொறுப்புணர்ச்சியை ஏற்படுத்தும். இது போன்ற சம்பவங்கள் நடந்தால், தலைமைப் பொறுப்பில் இருக்கும் அதிகாரி அதற்காக தண்டிக்கப் படுவார் என்ற தெளிவான செய்தி அனைத்து அதிகாரிகளுக்கும் சென்றடைந்தால்தான், இது போன்ற மெத்தனப் போக்கு குறையும். இந்த அதிகாரிகள், நமது வரிப்பணத்தில் ஊதியம் பெறுகிறார்கள்.

    ReplyDelete
  4. \\என்னால் நடக்க முடியவில்லை, உயிருக்கே ஆபத்து, மறு பிறவி எடுத்து வந்துள்ளேன், உடல் ஒத்துழைக்கவில்லை என்று கழிவிறக்கம் கொண்டு, சுய பச்சாதாபத்தில், புலம்பும் கருணாநிதி, சட்டம் ஒழுங்கு மற்றும் உள்துறை போன்ற முக்கியமான துறைகளை தன் தவப்புதல்வனிடமோ, அல்லது சுயநினைவோடு பணியாற்றக் கூடிய வேறு ஒரு அமைச்சரிடமோ கொடுத்தால் தான் என்ன ?\\

    எப்படி கொடுப்பார் கிராமத்து பக்கம் கிழவி இழுத்துக்கிட்டு சாக கிடந்தா காசாசை இருக்குமோ என்று காசையும், மண்ணாசை இருக்குமொ என்று மண்ணையும் கரைத்து வாயில் ஊற்றுவார்கள் கிழவி பொட்டுடென்று போய் சேர்ந்துவிடும். அது போலத்தான் பதவியை கொடுத்தாள் அவர் போய் சேர்ந்துவிடுவார்.

    ReplyDelete
  5. என்ன புடுங்கினார்கள் என்று இந்த விருது .ரஜினி யாருக்கு என்னய்யா செய்தான்.அவனுக்கு ஏனையா இவ்வளவு மரியாதை.
    ஸ்ரையவின் மார்பையும்
    சூ..பார்க்க நேரம் ஒதுக்கிய நீ எங்கள் தமிழ் இனத்திற்காக.ஒரு
    மணித்துளி ஓதுக்கிருந்தால் ஒரு லட்சம் உயிர் பிளைத்திருக்குமடா

    இலங்கையில் தமிழினம் அழிந்துவிட்டதட இனத்ரோகி.லட்சம் உயிர் போய்விட்டதட உன் பதவி வெறிக்காக.ஏங்கள் தமிழ் இனத்திற்க்காக உண் பதவியை இழந்திருந்தால் உன்னை நிரந்தர முதல்வராக்கிருப்போமட.

    ஏதும் செய்ய முடியாத தன்மானத்தையும் உயிரையும் மட்டும் வைத்துள்ள தமிழன் .

    ReplyDelete