ஈழத்தில் படுகொலையை நிறுத்த தன்னையே மாய்த்துக் கொண்ட முத்துக்குமார் மரணத்துக்குப் பிறகு சமூகத்தில் அனைத்துப் பிரிவினரின் போராட்டத்தை கருணாநிதி தன் கூலிப்படையாக செயல்படும் காவல்துறையை ஏவி விட்டு ஒடுக்கிய நிலையில், ஈழத்தில் போர் நிறுத்தம் கோரி வழக்கறிஞர்கள் மட்டும் தொய்வடையாமல், காவல்துறையின் அடக்குமுறைக்கு அஞ்சாமல் தொடர்ந்து போராட்டங்களை எடுத்துச் சென்றனர். பிப்ரவரி 4ம் தேதி ஈழத்தமிழர் பாதுகாப்புப் பேரவை அழைப்பு விடுத்திருந்த பொது வேலைநிறுத்தத்தின் அன்று சாலைமறியலில் ஈடுபட்டு நு£ற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள் கைதானார்கள். கைதான வழக்கறிஞர்களில் ஒரு பிரிவினரை மட்டும் சிறையில் அடைக்க காவல்துறை முடிவெடுத்து இரவு 10 மணிக்கு சைதாப்பேட்டை நீதிபதி இல்லத்தில் ஆஜர் படுத்த 200க்கும் மேற்பட்ட காவலர்களோடும், கமாண்டோ வீரர்களோடும், அதிரடிப்படை காவலர்களோடும் கைதான வழக்கறிஞர்களை அழைத்து வந்தது. கைதுசெய்யப்பட்ட சக வழக்கறிஞர்களுக்கு பிணை வேண்டி மூத்த வழக்கறிஞர் துரைசாமி மற்றும் அவருக்கு உதவியாக வழக்கறிஞர் புகழேந்தி ஆகியோர் நீதிபதி இல்லத்திற்கு சென்று நீதிபதி இல்லத்திற்குள் நுழைய முற்பட்டபோது அவரை உள்ளே நுழையவிடாமல் அவரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டு அப்போது அங்கே பணியில் இருந்த இணை ஆணையர் ராமசுப்ரமணியன் உத்தரவின்படி புகழேந்தி மீது தாக்குதல் நடத்தப் பட்டு மண்டை உடைக்கப் பட்டு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார். காவல்துறை அதிகாரிகள் ராமசுப்ரமணியம், பிரேம் ஆனந்த் சின்கா, மற்றும் ஸ்ரீதர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நீதிபதி முன்பு அளிக்கப் பட்ட புகாரின் மீது இன்று வரை நடவடிக்கை எடுக்கப் படவில்லை. இதன் தொடர்ச்சியாக, பிப்ரவரி 17ந் தேதி நீதிமன்றத்துக்கு வந்த சுப்ரமணியன் சுவாமி மீது சிலர் முட்டை வீசி தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்கள் என சில வழக்கறிஞர்கள் மீது கொலைமுயற்சி (!) வழக்கு பதிவு செய்து 20 வழக்கறிஞர்களை கைது செய்ய முயற்சி எடுத்தது. இதைத் தொடர்ந்து பிப்ரவரி 19ந்தேதி உயர்நீதிமன்ற வளாகத்துக்குள் புகுந்து காவல்துறை நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நாம் அனைவரும் அறிந்ததே.
அந்த தாக்குதலைத் தொடர்ந்து எத்தனை போராட்டங்கள் ? எத்தனை வழக்குகள் ? ஒரு மாதம் தொடர்ந்த போராட்டங்களுக்கு பின் நீதிமன்றத்தில் மார்ச் 17ம் தேதி ஒரு தீர்ப்பு கிடைத்தது.
சென்னை உயர்நீதிமன்றம், கலவரத்திற்கான சூழ்நிலைகளை ஆராய்கையில், வழக்கறிஞர் மீதான இந்த தாக்குதலுக்கு கூடுதல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் மற்றும் இணை ஆணையர் இராமசுப்ரமணியம் ஆகியோர் காரணமானவர்கள் என்ற பூர்வாங்க முடிவுக்கு இந்நீதிமன்றம் வருகிறது. அவர்கள் மீது துறை நடவடிக்கை எடுக்க ஏதுவாக அவர்கள் இருவரையும் பணி இடைநீக்கம் செய்யவேண்டும் எனவும் இந்நீதிமன்றம் கருதுகிறது எனத் தீர்ப்பளிக்கப் பட்டிருந்தது.
மார்ச் 19 அன்று இத்தீர்ப்பை கொண்டாடி வெற்றிப் பேரணி நடத்தினோம். தீர்ப்பு வந்த மறுநாள் கருணாநிதி நீதிமன்றத் தீர்ப்பை மதிக்கிறேன் ஆனால் பாதிக்கப் பட்ட காவல்துறை அதிகாரிகள் நீதிமன்றத்தை அணுகத் தடையேதும் இல்லை என்று ஆலோசனையும் வழங்கனார். இரண்டு மாதங்கள் முழுமையாக கடந்து விட்டபின்னரும் இன்று வரை இந்த இரு காவல்துறை அதிகாரிகளும் இடைக்கால பணிநீக்கம் செய்யப் படவில்லை.
சென்னை உயர்நீதின்றத்துக்கு ஏப்ரல் 30 முதல் கோடைக்கால விடுமுறை விடப்பட்டிருந்தது. பெரும்பாலான வழக்கறிஞர்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று விட்டனர்.
கடந்த 10ம் தேதி தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகம் வருகை தந்த சோனியா காந்திக்கு கருப்புக் கொடி காட்டுவதென முடிவுசெய்து, முறையாக அனுமதி வாங்கி பழ.நெடுமாறன் தலைமையில் சைதாப்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர்கள் புகழேந்தி மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரும் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தால் மாலை விடுதலை செய்வதுதான் வழக்கம். ஆனால் வழக்கத்துக்கு மாறாக இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 120க்கும் மேற்பட்டவர்கள் திருமண மண்டபத்தில் வைக்கப் பட்டிருந்து இரவு 10 மணி ஆன பின்னரும் கூட விடுதலை செய்யப் வில்லை.
திடீரென இரவு 11மணிக்கு நீதிபதி திருமண மண்டபத்துக்கே போல¦சாரால் அழைத்து வரப்பட்டார். நீதிபதி கைது செய்யப்பட்டவர்கள் இருக்கும் இடத்துக்கு வரக்கூடாது, கைது செய்யப்பட்டவர்கள்தான் நீதிபதியிடம் கொண்டு செல்லப்படவேண்டும்,
மேலும், அனுமதி வாங்கி ஆர்ப்பாட்டம் நடத்துபவர்கள் மீது வழக்கு பதிவு செய்வதானால் அனுமதி அளித்த காவல்துறை ஆணையர் எழுத்துபூர்வமான புகார் அளிக்கவேண்டும், இந்நேர்வில் காவல்துறை ஆணையரின் புகார் இல்லை, மேலும் கைது செய்யப்பட்டவர்கள் உறவினர் அல்லது நண்பருக்கு கைது பற்றி தகவல் தெரிவிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி வாதிட்ட பின்னரும், நீதிபதி அனைவரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
11.05.2009 அன்றே கைது செய்யப்பட்ட அனைவருக்கும் பிணை வழங்கி 9வது பெருநகர நீதிபதி ஆணையிட்டார். கைது செய்யப்பட்ட அனைவரும் 12.05.2009 அன்று விடுவிக்கப்பட்டனர். ஆனால் மேலும் வழக்கறிஞர்கள் இருவரும், புழல் சிறைக்குச் சென்றபின் சிறையிலிருந்து விடுவிக்கப் படுவார்கள் என்றும் உத்தரவிட்டார். இதற்கு நடுவே சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டிருந்த ஆட்கொணர்வு மனுவில் சென்னை உயர்நீதிமன்றம், அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்படவேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. அன்றே விடுவிக்கப் பட்டனர். ஆனால் வழக்கறிஞர்கள் புகழேந்தி மற்றும் ரஜினிகாந்த் மட்டும் விடுவிக்கப் படாமல் 2004 முதல் காவல்துறை இவர்கள் இருவர் மீதும் புனைந்து வைத்திருந்த பொய் வழக்குகளில் கைது செய்ய பி.டி வாரண்ட் தயார் செய்து 7வது பெருநகர நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்த காலை 11 மணிக்கு அழைத்து வந்தனர். எந்த வழக்கில் கைது செய்யப்பட்டனரோ அந்த வழக்கில் ஏற்கனவே பிணை வழங்கப் பட்டுள்ளதால், இவர்கள் இருவரும் தற்பொழுது கைதிகள் அல்ல, ஆகையால் இவர்களை பி.டி வாரண்ட்டில் ரிமாண்ட் செய்ய முடியாது என்ற வாதத்தை ஏற்ற நீதிபதி காவல்துறையினரின் வேண்டுகோளை ஏற்று வழக்கறிஞர்கள் இருவரையும், ரிமாண்ட் செய்ய மறுத்தார். மேலும் வழக்கறிஞர்கள் இருவரும், புழல் சிறைக்குச் சென்றபின் சிறையிலிருந்து விடுவிக்கப் படுவார்கள் என்றும் உத்தரவிட்டார். இதற்கு
நடுவே சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டிருந்த ஆட்கொணர்வு மனுவில் சென்னை உயர்நீதிமன்றம், அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்படவேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
சிறையிலிருந்து வழக்கறிஞர்கள் இருவரும் பிற்பகல் 2.50 மணிக்கு சிறையிலிருந்து விடுவிக்கப் பட்டனர். உதவி ஆணையர் காதர் மொய்தீன் மற்றும் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் அடங்கிய காவல்துறையினர் சிறை வாசலிலேயே புகழேந்தி மற்றும் ரஜினிகாந்தை கைது செய்தது. இருவரையும் சென்னை துறைமுக காவல் நிலையத்தில் 5 மணிநேரம், யாருக்கும் தகவல் சொல்லாமல் அடைத்து வைத்திருந்தனர். சிறையிலிருந்து விடுதலை ஆகி வருவார்கள் என்று காத்திருந்த இவர்களின் நண்பர்கள் இவர்களை காணாமால் யாரைக் கேட்பது என்று தெரியாமல் அலைந்து கொண்டிருந்தனர். இரவு 8 மணிக்கு 2008ல் பதியப்பட்ட ஒரு வழக்கிலும், 2009ல் ஈழத்தமிழருக்கான போராட்டம் நடத்தியது தொடர்பான ஒரு வழக்கிலும் இவர்கள் இருவரையும் கைது செய்திருப்பதாக சொல்லி 7வது பெருநகர நீதிபதி முன் ஆஜர் படுத்தினர்.
எங்கள் வழக்கறிஞர்களுக்கு தகவல் தெரிவிக்கப் படவில்லை என்றும் உடனடியாக தகவல் தெரிவிக்கப் படவேண்டும் என்றும் நீதிபதி முன்பாகவே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பின் நீதிபதி உடனடியாக காவல்துறையினருக்கு கைது குறித்து புகழேந்தி மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரின் வழக்கறிஞர்களுக்கு தகவல் தெரிவிக்க ஆணையிட்டார். அதற்குப் பின் வழக்கறிஞர்கள் முன்னிலையில், இருவரும் 15 நாள் நீதிமன்ற காவலுக்கு ஆட்படுத்தப் பட்டனர். ஈழப்போராட்டத்துக்கு ஆதரவாகவும், போல¦ஸ் அராஜகத்துக்கு எதிராகவும் முழக்கமிட்டபடி காவல்துறையின் வண்டியில் ஏறிச் சென்றனர்.
இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதி, இவர்கள் இருவரும் கைது செய்யப் பட்ட விதத்தை ஆராய்கையில், காவல்துறை இவர்கள் இருவரையும் நீண்ட நாட்கள் சிறையில் வைக்கவேண்டும் என்ற நோக்கத்திலேயே கைது செய்திருப்பதாகவும், இவர்கள் இருவரும் தொடர்ந்து தொழிலில் ஈடுபட்டு வரும் வழக்கறிஞர்கள் என்பதாலும், வழக்கு பதிவுசெய்து 4 மாதங்களுக்கு மேலாகிவிட்ட நிலையில் இப்போது கைது செய்திருப்பது உள்நோக்கம் கொண்டதாகத் தெரிகிறது என்றும் கருத்து தெரிவித்து, இருவரையும் பிணையில் விடுவித்து ஆணையிட்டார். அன்று இரவு 7.30 மணிக்கு புழல் சிறையில் பிணை ஆணை வழங்கப்பட்டது. இருவரும் விடுதலை செய்யப் படுவார்கள் என்று எதிர்பார்த்து சிறைக்கு வெளியே காத்திருந்த இவர்களது நண்பர்கள் பெருத்த ஏமாற்றத்துக்கு உள்ளாகி மறுநாள் காலையில் விடுதலை செய்யப்படுவார்கள் என்று மறுநாள் சிறைக்கு வெளியே காத்திருந்தனர்.
மறுநாள் காவல்துறை இன்னொரு அயோக்கியத்தனத்தை அரங்கேற்றியது. ஏற்கனவே 7வது பெருநகர நீதிபதி ரிமாண்ட் செய்ய மறுத்து ஆணையிட்ட அதே பிடி வாரண்ட்டுகளில் ஆஜர் செய்யப்போகிறோம் என்று கூறி மீண்டும் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தது. ஏறக்குறைய 120க்கும் மேற்பட்ட காவல்துறையினரோடு, கூடுதல் உதவி ஆணையர் ஜி.ராமர் தலைமையில், உதவி ஆணையர் காதர்மொய்தீன் உட்பட, பல காவல்துறை அதிகாரிகள் தேசவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் தீவிரவாதிகளை கொண்டு வருவது போல், மக்களுக்காக போராடும் இந்த இரு வழக்கறிஞர்களையும், நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தனர். மூத்த வழக்கறிஞர் சங்கரசுப்பு கைதுசெய்யப்பட்டவர்களுக்காக ஆஜராகி, இவர்களை ரிமாண்ட் செய்வது தவறு என்று மீண்டும் வாதிட்டார். இந்த வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இவர்களை ரிமாண்ட் செய்ய இயலாது என்று ஆணையிட்டு, ஆணையை நீதிமன்றத்தில் படிக்க எத்தனித்தபோது, காவல்துறை மீண்டும், கடைசி முயற்சியாக ஒரு தந்திரத்தை கையாண்டது. புழல் சிறையில் இருந்து இவர்கள் இருவரும் அழைத்து வரப்பட்டதால், இவர்கள் சிறையிலிருந்துதான் விடுதலை செய்யப் படவேண்டும் என்றும், நீதிமன்றத்தில் இருந்து விடுதலை செய்யப் படக் கூடாது என்றும் நீதிபதியிடம் தகவல் தெரிவித்தனர். கைதிகளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துகையில், சிறை அதிகாரிகள் காவல்துறையிடம் எழுதிக் கொடுக்கும் நோட்டுப் புத்தகத்தில், இந்த இருவர் மீதும், வேறு எந்த வழக்குகளும் நிலுவையில் இல்லை என்று சிறைத்துறை அதிகாரிகள் அளித்த சான்று நீதிபதியிடம் சுட்டிக் காட்டப் பட்டது. மீண்டும், காவல்துறையினர், இருவரையும், சிறையிலிருந்துதான் விடுதலை செய்யவேண்டும் என்பதுதான் நடைமுறை என்று தெரிவித்த கருத்துக்கு வழக்கறிஞர் சங்கரசுப்பு கடும் ஆட்சேபம் தெரிவித்ததையடுத்து, இரு வழக்கறிஞர்களும் நீதிமன்றத்திலேயே விடுவிக்கப் பட்டனர். கூடியிருந்த வழக்கறிஞர் குழுவினர், மகிழ்ச்சியோடு முழக்கமிட்டபடி இரு வழக்கறிஞர்களையும் வரவேற்று அழைத்துச் சென்றனர். அங்கு கூடியிருந்த காவல்துறை அதிகாரிகள் முகத்தில், இருவரையும் மீண்டு சிறையில் அடைக்க முடியவில்லையே, உயர் அதிகாரிகளுக்கு என்ன பதில் சொல்வது என்ற பதைபதைப்பு கண்கூடாகத் தெரிந்ததுநடந்த சம்பவங்களை கூர்ந்து காண்கையில், காவல்துறையினருக்கு வழக்கறிஞர்கள் மீது உள்ள பகைமை இன்னும் துளி கூட குறையவில்லை, இன்னமும் பழிவாங்கும் நோக்கத்துடனே இருக்கின்றனர் என்பது தெளிவாகப் புலப்படுகிறது. நியாயப்படி, கடும் தாக்குதலுக்கு உள்ளாகி, இன்னும் நியாயம் கிடைக்காமல் அலைகழிக்கப் பட்டுள்ள வழக்கறிஞர்கள்தான் காவல்துறை மீது கடும் கோபத்தில் இருக்கவேண்டும். ஆனால் காவல்துறை பகைமை உணர்வோடு, இவ்வாறு நடந்து கொள்வது, தலைமையில் உள்ள ஒரு சில அதிகாரிகளின் து£ண்டுதலால்தான் என்பது தெளிவாகிறது.
கைது செய்யப் பட்ட இரு வழக்கறிஞர்களும் யார் ? அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் என்ன ? வழக்கறிஞர் புகழேந்தி மற்றும், ரஜினிகாந்த், ஆகிய இருவரும் சமூக உணர்வுடனும், ஏழை உழைப்பாளி மக்களுக்காகவும், ஈழத் தமிழருக்காகவும், தொடர்ந்து போராடியும் வாதாடியும் வருபவர்கள். மிக நேர்மையுடன் தொடர்ந்து, தொய்வில்லாமல், அடக்குமுறைக்கு அஞ்சாமல், தங்கள் வழக்கறிஞர் தொழில் பாதிப்பதைக் கூட பொருட்படுத்தாமல், போராட்டக் களத்தில் உள்ள இவர்களை மிகச் சாதாரண கிரிமினல்களை நடத்துவது போல, சிறைவாசலில் கைது செய்வதும் தனி அறையில் அடைத்து வைப்பதும், மீண்டும் மீண்டும் கைது செய்வதும், காவல் துறையின் அதிகார துஷ்பிரயோகத்தையே காட்டுகிறது. இந்த வழக்கறிஞர்கள் செய்த குற்றம் என்ன ? இன்றைய மாநகர காவல்துறை ஆணையர் ராதாகிருஷ்ணன் போல, லஞ்ச ஒழிப்புத் துறையில் இருந்து கொண்டே லஞ்சமாக உரிய மதிப்பெண் பெறாத தன் மகன் சந்தீப்புக்கு அண்ணா பல்கலைகழகத்தில் இடம் பெற்றார்களா ?, பத்திரிக்கையில் பெயர் வரவேண்டும் என்பதற்காகவே இன்னொருவர் செய்த ப்ராஜெக்டை தன்னுடையதாக சொந்தம் கொண்டாடி ராணி விருது பெற்றனரா ? லஞ்ச ஒழிப்புத் துறையில் இருந்து கொண்டே ஊழல் செய்த அதிகாரிகளை காப்பாற்ற முயற்சி எடுத்தனரா ? அ.தி.மு.க ஆட்சியில் ஜெயலலிதாவுக்கு சாதகமாக செயல்பட்டு விட்டு, தி.மு.க ஆட்சி மாறியதும், சாதியைப் பயன்படுத்தி, சொந்த சாதி அமைச்சரிடம் அடைக்கலம் புகுந்து மாநகர ஆணையர் பதவி பெறுவதற்காக கூழைக் கும்பிடு போட்டுக் கொண்டு இருக்கின்றனரா ? வீட்டில் வேலை செய்ய 10 காவலர்கள் அலுவலகத்துக்கு 20 காவலர்கள் என்று அதிகார துஷ்பிரயோகம் செய்கிறார்களா ?முன்னாள் முதல்வர் செல்வி.ஜெயலலிதாவுக்கு பிடித்த நிறம் என்று அலுவலக கண்ணாடி, கோப்புகள் அனைத்தையும் பச்சை நிறத்துக்கு மாற்றிவிட்டு, அ.தி.மு.க 2006 தேர்தலில் தோற்றவுடன், இரவோடு இரவாக, அனைத்தையும் மஞ்சள் நிறத்துக்கு மாற்றினரா ?
இந்த வழக்கறிஞர்கள் நேர்மையான போராளிகள். அரசாங்கப் பணத்தை கொள்ளையடிப்பவர்கள் அல்ல ! சட்டம் தந்திருக்கும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து போராளிகளை சிறையில் அடைப்பதனால் போராட்டத்தை அடக்கிவிட முடியும் என்று பகல் கனவு காணும் காவல்துறை அதிகாரிகளே ! உங்களைப்போல, மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெற்று மக்களுக்கே எதிராக, ஆளும் வர்க்கத்திற்கு ஏவல் நாய்களாக இருப்பவர்கள் நாங்கள் அல்ல ! மக்களுக்காக உண்மையிலேயே உழைப்பவர்கள்.
கருணாநிதிக்கு இன்று இவ்வளவு விசுவாசமாக இருக்கும் இதே காவல்துறை அதிகாரிகள் அ.தி.மு.க ஆட்சி வந்தால் என்ன செய்வார்கள் தெரியுமா ? மீண்டும் கருணாநிதியையும், அவரது குடும்பத்தினரையும் நள்ளரவில் கைது செய்யத் தயங்கமாட்டார்கள். இவர்களே ஆட்சியாளர்களுக்கு என்ன வழக்குகள் போடலாம், எப்பொழுது கைது செய்யலாம் என்று யோசனையும் சொல்வார்கள்.ஜனநாயகத்தின் உண்மையான எதிரி இந்த அதிகாரிகளும் அதிகார வர்க்கமும்தான். அரசியல்வாதிகளாவது, தேர்தல் என்று வந்துவிட்டால், மக்களிடம் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது கெஞ்சுகிறார்கள், ஏற்றிய பஸ்கட்டணத்தைக் குறைக்கிறார்கள், இலங்கைத் தமிழர் மீது அக்கறை காட்டுகிறார்கள்¢, இன்னும் எத்தனையோ நாடகங்களை அரங்கேற்றுகிறார்கள். ஆனால் இந்த அதிகார வர்க்கம், நிறத்தை மாற்றும் பச்சோந்திக் கூட்டம். கடைசி வரை அதிகாரத்தை கையில் வைத்திருக்க எந்த எல்லைக்கும் போவார்கள். நல்ல பதவிக்காக கொலையும் செய்யத் தயங்க மாட்டார்கள்.
நம் போராட்டம் ஓயவில்லை. இந்த பச்சோந்தி காவல்துறைக்கு எதிராக நாம் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுக்க வேண்டியுள்ளது. 19/2 தாக்குதலுக்கு நீதி கிடைக்கும் வரை நாம் தொடர்ந்து போராடவேண்டும்.இல்லையென்றால் புகழேந்தி மற்றும் ரஜினிகாந்த் போல நாளை எந்த வழக்கறிஞரும் கைது செய்யப் படலாம். காணாமலும் போகலாம். காணவில்லை என்றால் காவல்துறையிடம்தானே மீண்டும் புகார் செய்யவேண்டும்.???!!!!!
வழக்கறிஞர்களாகிய நாம் பொதுமக்களின் உரிமைகளை நிலைநாட்டுவதற்காக தொடர்ச்சியாக நீதிமன்றத்தின் கதவுளைத் தட்டிப் போராடிக் கொண்டிருப்பவர்கள். நம்மையே இந்த காவல்துறை இக்கதிக்கு ஆளாக்கத் துணிந்தால் நம் கட்சிக் காரர்களை நாம் எப்படிக் காப்பாற்றுவது ? மனிதஉரிமைகளை எப்படி நிலை நாட்டுவது ?
தமிழ்நாட்டில் கருணாநிதியின் மோசமான நிர்வாகத்தால் இன்று ஒரு அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்ற நிலை உருவாகி இருக்கிறது. இந்த நிலையை மாற்றும் மகத்தான பணி வழக்கறிஞர்களாகிய நமது கைகளில்தான் இருக்கிறது. இப்பணியை முழுமனதோடு ஏற்று அடக்குமுறைக்கு எதிரான ஒரு நெடிய போராட்டத்துக்கு நாம் நம்மை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். முதலில் நமது உரிமைகளை மீட்டு எடுத்தால்தான் பாமர மக்களின் உரிமைகளுக்காக நாம் போராட முடியம். காவல்துறைக்கு கருணாநிதி ஏன் இத்தனை ஆதரவு அளித்து வந்தார் என்பதை, நாடாளுமன்ற தேர்தலில் திமுக அராஜகங்களை காவல்துறையினர் கை கட்டி வேடிக்கை பார்த்ததிலிருந்து தெளிவாக அறிந்திருப்பீர்கள். காவல்துறையை கைக்குள் வைத்துக்கொண்டு, ஒரு காவல் சாம்ராஜ்யத்தை ஏற்படுத்தி, தன் குடும்ப ஆட்சியை தமிழகம் மற்றும் டெல்லியில் நிலைநிறுத்த திட்டமிட்டுள்ளார் கருணாநிதி. கருணாநிதியின் இத்திட்டத்தை கானல் நீராக்குவது நமது பொறுப்பு. இந்த கருஞ்சட்டைப் படையை கருணாநிதி குறைத்து மதிப்பிட்டுள்ளார். வழக்கறிஞர்களை தாக்கிவிட்டு நடவடிக்கையின்றி தப்பிவிட்டோம் என்று காவல்துறையினரும் எக்காளமிட்டு வருகின்றனர். இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பது நமது கடமை. கடமையை ஏற்று பகை முடிப்போம். இறுதி வெற்றி நமதே !

நெஞ்சு பொறுக்குதில்லையே.... ......
இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்து விட்டால்... ....
/ஒப்பாரி/
No comments:
Post a Comment