Monday, May 4, 2009
சிபுசோரேன், பர்னாலா கருணாநிதி சந்திப்பு
சென்னை அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ள சிபுசோரேன், ஆளுநர் பர்னாலா மற்றும் முதல்வர் கருணாநிதி ஆகியோர் சந்தித்து உரையாடினால் .. .. .. ... ..
(என்று ஒரு கற்பனை)
கருணாநிதி : வாங்க சோரேன். எப்படி இருக்கீங்க ?
சோரேன் : அத ஏன் சார் கேக்கறீங்க... ஒரே நாறப் பொழப்பு சார். எலெக்சன்ல ஜெயிக்கறதுக்கு கண்டவன் கேக்கிற கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியதா இருக்கு... இந்த ஆதிவாசிப் பசங்க தொந்தரவு தாங்க முடியல சார். என்னா கேள்வி கேக்குறாங்க.. ..
கருணாநிதி : இங்க மட்டும் என்ன வாழுதாம். உடம்பு சரியில்ல, கடைசி வாய்ப்பு குடுங்க, உங்களுக்காக உயிரக் குடுக்கறேன்னு.. .. என்ன சொன்னாலும் கண்டுக்கவே மாட்றாங்க சார்.
சோரேன் : அட நீங்க வேற... நீங்களாவது பவர்ல இருக்கீங்க.. அங்க நான் எந்த பவர்லயும் இல்லயா. ஒரு பயலும் மதிக்க மாட்றான்.
கருணாநிதி : வாங்க பர்னாலா. நீங்க இருக்கறதாலதான் என் வண்டி ஓடுது.
பர்னாலா: அட ரொம்ப புகழாதீங்க. நீங்க என்னை கவர்னரா கூப்பிடலன்னா என்ன பஞ்சாப்ல யாரு மதிப்பா. என் பசங்கதான் இவ்வளவு செழிப்பா இருக்க முடியுமா என்ன ?
கருணாநிதி : நீங்க இல்லன்னா என் பசங்களும் செழிப்பா இருக்க முடியாதே.
சோரேன் : பேசாம நானும் பர்னாலா மாதிரி கவர்னரா போயிடலாம்னு இருக்கேன். இந்த எலெக்சன், ஓட்டு கேக்கறது, எந்த தொல்லையும் இல்லை. ஆமா கருணாநிதி சார்.. நீங்க ஏன் ஆஸ்பத்திரிக்கு வந்தீங்க ?
கருணாநிதி : பிரச்சாரம்னு கூட்டத்துக்கு போனா என்ன பேசுறதுன்னே தெரியல... அம்மா தாயே... சோனியா தாயே காப்பாத்தும்மா அப்பிடின்னும் கெஞ்சிப் பாத்துட்டேன். ஒன்னும் நடக்க மாட்டேங்குது. ஒரு பயலும் நம்ப மாட்டேங்குறான்.
பர்னாலா : கருணாநிதிஜி நீங்க கவர்மென்ட் ஆஸ்பித்திரில்ல படுத்திருந்தா இன்னும் நல்லா சிம்பதி கிடைச்சுருக்கும் இல்ல ?
கருணாநிதி : அதெல்லாம் அரசு ஊழியருக்கும் பொதுமக்களுக்கும் சார். நான் போய் அங்க எப்படி படுக்கறது. இவ்ளோ பேசுரீங்களே ஏன் நீங்க அங்க போகாம ஏன் அப்போல்லோவுக்கு வந்தீங்களாம். அதே காரணத்துக்குத்தான் நானும் இங்க வந்தேன். அது சரி உங்க ரெண்டு பசங்களும் எப்படி இருக்காங்க ? பிசினஸ் எல்லாம் நல்லா போகுதா ?
பர்னாலா : நீங்க இருக்கும்போது எனக்கு என்ன குறை. பேருக்குதான் நான் பல்கலைக்கழக வேந்தர். ஆனா பசங்கதான் எல்லா யுனிவர்சிட்டி யையும் பாத்துக்கறாங்க. உங்க பசங்க எப்படி இருக்காங்க ?
கருணாநிதி : ம்ம். நீங்க பசங்களுக்கு யுனிவர்சிட்டிகளை கொடுத்த மாதிரி நான் தமிழ்நாட்டையே பிரிச்சு கொடுத்துட்டேன். ஒரு பொண்ணுக்கு டெல்லியும் ஒரு பொண்ணுக்கு பெங்களுரும் கொடுத்துட்டேன். இப்போ மதுரையை பாத்துக்கற பையன் நானும் டெல்லி போகனும்னு அடம் பிடிக்கிறான். சரி போடான்னு எலெக்சன்ல நிக்க வச்சுட்டேன்.
சோரேன் : கருணாநிதி சார்... நீங்க எப்படி சார் இந்த சர்க்காரியா கமிஷன்ல இருந்தெல்லாம் வெளியே வந்தீங்க. என் மேல கேஸ் மேல கேஸ் போட்டு உயிர எடுத்துட்டாங்க சார்.
கருணாநிதி : இதெல்லாம் ஒரு விஷயமா... ... நீங்க ஆதிவாசி மக்கள நாகரிகப் படுத்துறதுக்காக அரசியலுக்கு வந்தீங்க. நான் நல்லா இருக்கற மக்கள ஆதிவாசி மக்களா மாத்துறதுக்காக அரசியலுக்கு வந்தேன். அப்போ எனக்கு எவ்ளோ மேட்டர் தெரிஞ்சுருக்கும்னு நீங்களே யோசிங்க..
சோரேன் : அது கரெக்ட்தான் சார். உங்கள மாதிரி வருமா.
கருணாநிதி : ஆமா உங்க ஊர்ல ஆஸ்பத்திரியே இல்லையா... எதுக்கு இவ்ளோ தூரம் வந்தீங்க.
சோரேன் : சார் அங்க ப்ரைவேட் ஆஸ்பத்ரில படுத்தா.. இந்தாளு என்ன ஏழைகளுக்கு பாடுபட்றேன்னுட்டு ப்ரைவேட் ஆஸ்பத்திரில அட்மிட் ஆயிருக்கான்னு ஆளுக்கு ஆள் பேச ஆரம்பிச்சுடுவாங்க சார். ட்ரீட்மென்ட் முடிஞ்சதும் சென்னையில இருக்கற அரசு மருத்துவமனையிலதான் ட்ரீட்மென்ட் எடுத்தேன்னு சொன்னா நம்பிடுவாங்க அதான்.
கருணாநிதி : உங்க ஊர் பரவாயில்ல சார். ஈசியா ஏமாத்த முடியுது... ஆனா. இங்க தமிழ்நாட்டுல தலைகீழா நின்னு டக்கர் அடிச்சு பாக்கறேன். ஒண்ணும் கதை நடக்க மாட்டேங்குது.
பர்னாலா : கருணாநிதிஜி. ஆஸ்பத்திரிலேயே படுத்திருந்து பிரச்சாரத்த கோட்டை விட்றாதீங்க.. கவர்மெண்ட் மாறிடுச்சுன்னா என்னை ஜார்கண்ட் கவர்னரா மாத்திடுவாங்க.. அப்புறம் நான் இந்த ஆள் கூடத்தான் மாறடிக்கனும்.
கருணாநிதி : ஒன்னும் கவலை படாதீங்க பர்னாலாஜி. 12ந் தேதி வரட்டும். எப்படி ஒரு ஸ்டண்ட் அடிக்கறேன் பாருங்க. சூப்பர் சுப்பராயனே நீங்கதான் பெஸ்ட் ஸ்டண்ட் மாஸ்ட்டர்னு சொல்றாரா இல்லையா பாருங்க..
(டாக்டர்கள் வரும் ஓசை கேட்பதால் மூவரும் கலைந்து செல்கிறார்கள்)
Subscribe to:
Post Comments (Atom)
very nice. i laughed a lot even in the saddest mood of election results
ReplyDelete