Friday, August 20, 2010

சட்டமும் ஒழுங்கீனமும். பாகம் 2



கடைசியாக எந்த இடத்தில் விட்டோம் ? ராதாகிருஷ்ணன் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு மாறுதல் செய்த இடத்தில் விட்டோம் அல்லவா ?

ராதாகிருஷ்ணன் லஞ்ச ஒழிப்புத் துறையின் சிறப்பு புலனாய்வுக் குழு 1ன் தலைவராக நியமிக்கப் படுகிறார். சிறப்பு புலனாய்வுக் குழு 1 என்பது, முன்னாள் முதல்வர் மற்றும் அவரது குடும்பத்தினர் பற்றிய வழக்குகளை விசாரிப்பதற்காக ஏற்படுத்தப் பட்டது. இந்த பொறுப்பு வந்ததனால் அடிக்கடி இயக்குநரை சந்திக்கவும், தலைமைச் செயலகம் செல்லவும் ராதாகிருஷ்ணனுக்கு வாய்ப்பு ஏற்பட்டது. பெயருக்கு கருணாநிதிக்கு எதிரான வழக்குகளை பார்ப்பது என்றாலும், கருணாநிதிக்கு எதிரான வழக்குகள் ஒன்று அல்லது இரண்டு மட்டும் தான். மற்றவை மு.க.ஸ்டாலின் மேயராக இருந்த போது நடந்த ஊழல்கள் தொடர்பானவை.

மேம்பாலம் கட்டியதில் ஏற்பட்ட ஊழல் தொடர்பாக கருணாநிதி மீது இருந்த வழக்கு, அவர் நள்ளிரவு கைதுக்குப் பிறகு சிபி.சிஐடிக்கு மாற்றப் பட்டது. கருணாநிதி ராஜ்குமார் கடத்தலில் பணம் வாங்கி விட்டார் என்பது தொடர்பாக ஏற்பட்ட வழக்கு எந்த முன்னேற்றமும் இல்லாமல் கிடப்பில் நெடுநாட்கள் கிடந்தது.

பெரிய அளவில் வேலைகள் இல்லாததால், ராதாகிருஷ்ணன் தனக்கு கிடைத்த இந்த நேரத்தை தன்னுடைய பெருமையை மேம்படுத்துவதற்கு பயன்படுத்திக் கொண்டார்.

இவர் முதலில் செய்த வேலை இரண்டு காவல்துறையின் உயர் அதிகாரிகள் செய்த ப்ராஜெக்டை தனது ப்ராஜெக்ட் என்று திருடி அதற்காக இங்கிலாந்து அரசு வழங்கும் ராணி விருதை பெற்றது. முதல் ப்ராஜெக்டை உருவாக்கியவர். முதல் ப்ராஜெக்ட் ப்ரதீப்.வி.பிலிப் என்ற ஐபிஎஸ் அதிகாரி உருவாக்கிய திட்டம்.


இந்தத் திட்டத்தை தான் உருவாக்கியதாக சொல்லி அவர் கோபித்துக் கொள்ளக் கூடாது என்ற அவரும் ஒரு ப்ராஜெக்டை உருவாக்கியதாக சொல்லி இங்கிலாந்து அரசாங்கம் வழங்கும் ராணி விருதை பெற்றார்.

அடுத்த திட்டம் தற்போது சிறைத் துறை தலைவராக இருக்கும் ஜலத குமார் திரிபாதி என்ற ஐபிஎஸ் அதிகாரி உருவாக்கியது. இதையும் பெரும் பங்கு இவர்தான் செய்தது போல சொல்லி, சர்வதேச காவல்துறை தலைவர்கள் சங்கம் வழங்கும் இரண்டாவது விருதையும் பெற்றார்.


முதல் ப்ராஜெக்ட் என்பது என்னவென்றால், மகளிர் காவல் நிலையங்களில் பெண்களின் குறை தீர்ப்பது தொடர்பாக இணைய வழியிலான ஒரு பயிற்சி மென்பொருள். அதாவது என்னவென்றால், பெண்கள் தொடர்பான ஒரு பிரச்சினை மகளிர் காவல்நிலையம் வருகிறது என்றால், அந்த விபரங்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்தால் அது அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று சொல்லும். மகளிர் காவல்நிலையங்களுக்கு சென்றவர்களுக்கு, இன்று இந்த மென்பொருள் எந்த நிலையில் இருக்கிறது, முதலில் இப்படி ஒரு மென்பொருள் இருக்கிறதா என்பது தெரியும்.

இந்த மென்பொருளை தயாரித்தவர், ராஜேஷ் சங்கரன் என்ற ஒரு மென்பொறியாளர். இவர் அப்போது தன்னுடைய நண்பரோடு சேர்ந்து சொந்தமாக ஒரு மென்பொருள் தயாரிப்பு நிறுவனம் வைத்திருந்தார். ராணி விருதில் கிடைத்த தொகையை இவருக்கு தராமல், ஒரு சொற்ப தொகையை கொடுத்து விட்டு ராதாகிருஷ்ணன் மொத்தமாக ஆட்டையை போட்டு விட்டார்.


இதில் ராஜேஷ் சங்கரனுக்கு வருத்தம். எனக்கு பேமென்ட் குறைவாக இருக்கிறது என்று. தனது வருத்தத்தை ராதாகிருஷ்ணனிடம் சொல்லுகிறார். ராதாகிருஷ்ணன் உடனே, ராஜேஷிடம் கவலைப் படாதீர்கள், உங்களுக்கு இன்னொரு ஆர்டர் தருகிறேன் என்று நம்பிக்கை அளிக்கிறார். ராஜேஷுக்கு ஆர்டர் தர வேண்டும் என்பதற்காகவே, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு, புதிதாக ஒரு சாப்ட்வேர் தயாரிக்க வேண்டும், அப்போதுதான் வேகமாக வேலை நடக்கும் என்று இயக்குநர் நாஞ்சில் குமரனிடம் சொல்லுகிறார். நாஞ்சில் குமரன், பூம்பூம் மாடு போல தலையை ஆட்டுகிறார். அரசுக்கு மென்பொருள் தயாரிப்பதற்காக ஐந்து லட்சம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கடிதம் அனுப்பப் பட்டு நிதியும் ஒதுக்கீடு செய்யப் படுகிறது.

ஒரு அரசுத் திட்டம் ஐந்து லட்சத்துக்கு குறைவாக இருந்தால், லிமிட்டெட் டெண்டர். அதிகமாக இருந்தால் ஓபன் டெண்டர். லிமிடெட் டெண்டர் என்றால் ஒரு ஐந்து அல்லது பத்து நிறுவனங்களுக்கு கடிதம் அனுப்ப வேண்டும். அதில் யார் டெண்டர் தருகிறார்களோ அவர்களில் குறைவான தொகையை கோட் செய்திருப்பவர்களுக்கு ஆர்டர் கிடைக்கும்.

லிமிடெட் டெண்டர் தொடர்பான வேலைகள் தொடங்கும் முன்பே, ராஜேஷ் சங்கரனை அழைத்து, மென்பொருள் தொடர்பான வேலைகளை தொடங்கும் படி கூறுகிறார் ராதாகிருஷ்ணன். ஏனென்றால், அவருக்குத் தான் டெண்டர் வழங்கப் படப் போகிறது என்பது ராதாகிருஷ்ணனுக்கு தெரியாதா ?



ராஜேஷ் அப்போது தன்னுடைய சொந்த நிறுவனத்தை மூடி விட்டு மாஃபாய் எனப்படும் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். ராதாகிருஷ்ணன் விருப்பப் படியே அந்த நிறுவனத்திற்கே மென்பொருள் ஆர்டர் கொடுக்கப் படுகிறது.



லஞ்ச ஒழிப்புத் துறையில் பல ஆண்டுகள் பணியாற்றி அனுபவம் பெற்றவர்களோடு, இந்த மென்பொருள் எப்படி தயாரிக்க வேண்டும் என்று விவாதம் நடக்கிறது. அவர்கள் சொன்ன அத்தனை யோசனைகளையும் நிராகரித்த ராதாகிருஷ்ணன், அவர் இஷ்டப் படி நடைமுறைக்கு சற்றும் ஒத்து வராத வகையில் மென்பொருளை தயாரிக்க சொல்லுகிறார்.

ஐஜி சொல்லை யார் மீற முடியும் ? அவர் உத்தரவுப் படியே மென்பொருள் தயாரிக்கப் படுகிறது. மென்பொருளை பயன் படுத்திய ஊழியர்கள், இது வேலைப் பளுவை கூட்டுகிறது, இதை பயன்படுத்த முடியாது என்று தங்கள் இயலாமையை தெரிவிக்கின்றனர். ஆனால், இவர் ஆலோசனை சொல்லி தயாரித்த மென்பொருள் அல்லவா ? கட்டாயம் பயன் படுத்தியே ஆக வேண்டும் என்று உத்தரவு போடுகிறார். ஒரு இரண்டு நாட்களுக்கு பயன்படுத்திய ஊழியர்கள், மென்பொருளை பயன்படுத்துவதை தவிர்க்கின்றனர்.

பிறகு மீண்டும் ஒரு முறை மற்ற ஊழியர்களோடு ஆலோசனை செய்கிறார் ராதாகிருஷ்ணன். அவர்கள் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள். அந்த மாற்றங்களை செய்ய, மேலும் ஒரு லட்ச ரூபாய் ஆகும் என்று கூறுகிறார்கள் மாஃபா மென்பொருள் நிறுவனத்தார். அரசிடம் நிதி பெற முடியாது என்பதால் ரகசிய நிதியிலிருந்து ஒரு லட்ச ரூபாய் வழங்க ஏற்பாடு செய்கிறார் ராதாகிருஷ்ணன்.

அப்படி மாற்றங்கள் செய்தும் ஊழியர்கள் பயன்படுத்த சிரமப்படும் அந்த மென்பொருள், ராதாகிருஷ்ணன் என்ற ஆணவக்கார அதிகாரியின் பிடிவாதத்தால் ஆறு லட்ச ரூபாய் அரசுப் பணத்தை முழுங்கி விட்டு, இன்று லஞ்ச ஒழிப்புத் துறையில் ஒருவரும் பயன்படுத்தாமல் உறங்குகிறது.

அடுத்ததாக ஐந்து லட்ச ரூபாய்க்கு உயர் ரக ஸ்கேனர் ஒன்று வாங்க வேண்டும் என்று கூறுகிறார் ராதாகிருஷ்ணன். அதன் படியே அரசிடம் உத்தரவு பெற்று வாங்கப் படுகிறது. அவ்வாறு வாங்கிய ஸ்கேனர் கருவியை தன்னுடைய அலுவலக அறையில் வைத்துக் கொண்டு, தான் செய்யும் பிஎச்டி ஆராய்ச்சி படிப்புக்காகவும், லண்டன் ராணி விருது தொடர்பான வேலைகளுக்காகவும் அதை பயன் படுத்திக் கொண்டார்.

லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அப்படிப் பட்ட உயர் ரக ஸ்கேனர் அவசியமே இல்லை. ஆனால் ராதாகிருஷ்ணன் தன் அரிப்பை சொரிந்து கொள்வதற்காக அரசுப் பணத்தில் வாங்கிய ஐந்து லட்ச ரூபாய் ஸ்கேனர், இன்று லஞ்ச ஒழிப்புத் துறையில் தூசி படிந்து கிடக்கிறது.

ராணி விருது தொகையானது ராதாகிருஷ்ணனுக்கு வழங்கப் பட்டதன்று. ராதாகிருஷ்ணன் செய்யும் மகளிர் காவல்நிலைய மென்பொருளுக்காக வழங்கப் பட்டது. 50 லட்ச ரூபாய்க்கும் மேற்பட்ட தொகை அது. இந்த தொகையில் ஆட்டையைப் போட வேண்டுமே … அதற்கும் வழி கண்டு பிடித்தார் ராதாகிருஷ்ணன்.

மாதந்தோறும், லஞ்ச ஒழிப்புத் துறையின் ரகசிய நிதியில் இருந்து கம்ப்யூட்டர் ஸ்டேஷனரி 40 முதல் 50 ஆயிரம் வரை வாங்கப் படும். அந்த பில்களை வைத்து, ராணி விருது தொகையில் செலவு வைத்து அந்தப் பணத்தை மொத்தமாக ஆட்டையைப் போட்டார் ராதாகிருஷ்ணன்.

இன்று ராணி விருதுக்கான கணக்கு வழக்குகளை ஆராய்ந்து பார்த்தால், முக்கால் வாசித் தொகை ஸ்டேஷனரி வாங்கியே செலவாகியது தெரிய வரும்.

ராதாகிருஷ்ணன் இப்படிப்பட்ட “டுபுக்கு“ என்பது தெரிந்திருந்தால், ராதாகிருஷ்ணனுக்கு இங்கிலாந்து அரசாங்கம் ராணி விருதுக்கு பதில் சாணி விருது வழங்கியிருக்கும். நியாயமாக அந்த விருது பெறத்தான் தகுதி படைத்தவர் இவர்.

இப்படியெல்லாம் சேர்த்துதான் மணப்பாக்கத்தில் எட்டு க்ரவுண்டுகள் நிலமும், பூந்தமல்லியில் ஆறு க்ரவுண்டுகள் நிலமும் வாங்கி வைத்திருக்கிறார் ராதாகிருஷ்ணன். இதைப் பற்றி பிறகு பார்ப்போம்.

அடுத்து ராதாகிருஷ்ணன் மேற்பார்வை செய்த வழக்குகளில் ஒன்று, கழிவுநீர் மற்றும் குடிநீர் குழாய்களை புதுப்பித்ததில் நடந்த ஊழல் என்பது. அந்த வழக்கில், 300 கோடிக்கு மேல் ஊழல் நடந்ததாகவும், உடனடியாக எஃப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின், சாந்தாஷீலா நாயர், ஜே.ராதாகிருஷ்ணன், கோலப்பன், சி.பி.சிங், ஜோதி.ஜகராஜன், மாலதி, ராஜேஷ் லக்கானி உள்ளிட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் மீது எப்ஐஆர் பதிவு செய்ய அனுமதி வேண்டும் என்று அரசுக்கு அறிக்கை அனுப்புகிறார் ராதாகிருஷ்ணன்.

பதினைந்து ஐஏஎஸ் அதிகாரிகள் மீது எப்ஐஆர் போட வேண்டும் என்று அனுமதி கேட்டு அரசுக்கு அனுப்பினால் அனுமதி கிடைக்குமா ? கிடைக்க வில்லை. ஒரு டெக்னிக்கல் கமிட்டி அமைத்து நன்றாக விசாரித்து மீண்டும் ஒரு அறிக்கை அனுப்புமாறு அரசிடமிருந்து பதில் வந்தது.

இதற்கிடையில் மு.க.ஸ்டாலின் மீது எப்ஐஆர் போட அறிக்கை அனுப்பியது நான்தான் என்று ஜெயலலிதாவிடம் கூறி, மார்க் வாங்காத தனது மகனுக்கு முதல்வர் கோட்டாவில் அண்ணா பல்கலைகழகத்தில் சீட் பெற்றார் ராதாகிருஷ்ணன்.

அரசு உத்தரவுப் படி அமைக்கப் பட்ட டெக்னிக்கல் கமிட்டி மீண்டும் மு.க.ஸ்டாலின் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள், பொறியாளர்கள் மீது எப்ஐஆர் போட வேண்டும் என்று அறிக்கை அனுப்பியது. அந்த அறிக்கையின் மீது அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மாலதி மீது எப்ஐஆர் போட வேண்டும் என்று அறிக்கை அனுப்பி விட்டு, இன்று மாலதியின் நம்பிக்கைக்குரிய அதிகாரியாக இருக்கும் ராதாகிருஷ்ணனின் திறமை எப்படி ?

மாலதி ராதாகிருஷ்ணனை கலக்காமல் எந்த முடிவுகளும் எடுப்பதில்லை என்பதுதான் இன்று நிலைமை.

அடுத்து லஞ்ச ஒழிப்புத் துறையில் இருந்த போது ராதாகிருஷ்ணன் டெல்லி செல்கிறார். அவரிடம், உள்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள், சர்வதேச காவல்துறை பணியாக கொசோவோ நாட்டில் அமைதிப் படையில் பணியாற்ற விருப்பம் தெரிவிக்கும் விண்ணப்பத்தை அளித்து, லஞ்ச ஒழிப்புத் துறையில் அவரோடு பணியாற்றும் அஷோக்குமார் என்ற ஐஜியிடம் கொடுத்து விடுமாறு கூறுகிறார்கள். உதாரணத்திற்கு அதற்கான கடைசி தேதி 25 என்று வைத்துக் கொள்வோம்.



22ந் தேதி சென்னை திரும்பிய ராதாகிருஷ்ணன் தனக்கு மட்டும் கொசோவா போஸ்டிங்குக்கு விண்ணப்பம் அனுப்பி விட்டு அஷோக் குமாரிடம் 26ம் தேதி மறந்து விட்டேன் என்று கூறி, அந்த விண்ணப்பத்தை அளிக்கிறார். அஷோக் குமார் இவரை விட சீனியர் என்பதால், அவருக்கு கொசோவா போஸ்டிங் கிடைத்து விடக் கூடாதாம். அவ்வளவு அல்பம்.



மார்க் வாங்காத இவரது மகனுக்கு முதல்வர் கோட்டாவில் அண்ணா பல்கலைகழகத்தில் சீட் வாங்கியது போலவே, அசோக் குமார் மகளுக்கும் முதல்வரிடம் சொல்லி, அண்ணா பல்கலைகழகத்தில் சீட் வாங்கித் தருகிறேன் என்று கூறுகிறார் ராதாகிருஷ்ணன். நேர்மையான அதிகாரியான அஷோக் குமார் மறுத்து விடுகிறார். இவரது மகள், மேனேஜ்மென்ட் கோட்டாவில் வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியில் படித்து பொறியியல் முடித்தார்.

லஞ்ச ஒழிப்புத் துறையில் ஒரு ஆய்வாளர் பணியாற்றிக் கொண்டிருந்தார். அந்த ஆய்வாளர் சொந்த வேலையாக விடுப்பு எடுத்து விட்டு அமேரிக்கா செல்கிறார். அமெரிக்கா சென்ற அவர், அங்கிருக்கும் காவல்துறையினர் எப்படி வேலை செய்கிறார்கள், என்னென்ன மாற்றங்களை தமிழக காவல்துறையில் கொண்டு வர முடியும் என்று, அமெரிக்க காவல்துறை அதிகாரிகளிடம் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டு உரையாடுகிறார். அந்த அமெரிக்க காவல்துறை அதிகாரிகள், அந்த ஆய்வாளரின் திறமையைக் கண்டு வியக்கின்றனர். அந்த ஆய்வாளர் இந்தியா திரும்பிய பிறகும் தொடர்ந்து அவரோடு ஈமெயிலில் தொடர்பில் இருக்கின்றனர்.

ஒரு நாள் அந்த அமெரிக்க அதிகாரிகள் தமிழகம் வருகை தந்த போது, லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகம் வந்து, அந்த ஆய்வாளரை சந்திக்க முயற்சிக்கின்றனர். இவர்கள் அமெரிக்காவிலிருந்து வந்து அந்த ஆய்வாளரை சந்திக்க வந்திருக்கின்றனர் என்ற செய்தி ராதாகிருஷ்ணனை எட்டுகிறது. உடனே, அந்த அமெரிக்க காவல்துறை அதிகாரிகளை தன்னுடைய அறைக்கு வரவழைக்கும் ராதாகிருஷ்ணன், அந்த ஆய்வாளர் மாறுதலில் சென்று விட்டதாக கூறி, தான் பெற்ற ராணி விருது தான் செய்யும் ஆராய்ச்சி போன்றவைகளையும், தமிழக காவல்துறையை தனி ஆளாக சீரமைக்க தான் எடுக்கும் முயற்சிகளையும் எடுத்துக் கூறுகிறார்.

அந்த அமெரிக்க அதிகாரிகள் மீண்டும் தொலைபேசியில் அந்த ஆய்வாளரை தொடர்பு கொண்டு விபரங்களை கேட்டறிந்து, ராதாகிருஷ்ணனை இங்கிலீஷில் காறித் துப்பி விட்டு சென்று விட்டனர்.

லஞ்ச ஒழிப்புத் துறையில் இருக்கையில், ராதாகிருஷ்ணன், ரகசிய நிதியில், லேண்ட்மார்க் புத்தக கடையில் லேட்டஸ்டாக வந்திருக்கும் புத்தகங்களை வாங்கி தனது இருக்கைக்கு பின்னாலும், மேசையின் மீதும் அடுக்கி வைத்துக் கொள்வார். யாராவது அவரை பார்க்க வந்தால் வருபவர்கள், ராதாகிருஷ்ணன் ஒரு பயங்கரமான படிப்பாளி, பெரிய அறிவாளி என நினைக்க வேண்டும் என்பதால்தான். வரும் விசிட்டர்கள், ராதாகிருஷ்ணனிடம் எப்படி சார் இவ்ளோ பைல் பாத்துக்கிட்டு படிக்க டைம் கிடைக்குது என்று கேட்டால், ஒரு நாளைக்கு 4 மணி நேரம் மட்டுமே தூங்குவதாகவும், மற்ற நேரங்களில் ஆராய்ச்சி என்றும் கூறுவார்.

அடுத்து பூந்தமல்லியில் ராதாகிருஷ்ணன் ஆறு க்ரவுண்டுகள் நிலம் வைத்திருக்கிறார். அங்கே, அரசு ஒரு திட்டத்திற்காக நில ஆக்ரமிப்பு செய்யும் அறிவிப்பு வெளியிடுகிறது. இவர் இடத்தை அரசு எடுத்துக் கொள்ளும் என்பதற்காக இவர் தலையிட்டு அந்த திட்டத்தையே ரத்து செய்ய வைக்கிறார்.

அடுத்து போரூரை அடுத்த மணப்பாக்கத்தில் ராதாகிருஷ்ணன் பெயரில் இருக்கும் இடங்கள் மட்டும் எட்டு க்ரவுண்டுகள். எட்டு க்ரவுண்டுகளையும் திங்கவா போகிறார் ? பேராசைக்கு ஒரு அளவு வேண்டாம் ?

இது போக, லஞ்ச ஒழிப்புத் துறையில் உள்ள ஊழியர்களுக்காக செங்கல்பட்டுக்கு அருகே போடப்பட்டுள்ள வீட்டு வசதி கூட்டுறவு சங்கத்தின் மூலம் ராதாகிருஷ்ணன் வாங்கியுள்ள இடங்கள் இரண்டு க்ரவுண்டுகள்.

லஞ்ச ஒழிப்புத் துறையில் ராதாகிருஷ்ணன் இருக்கும் போது, இவரது கேம்ப் அலுவலகத்தில் மட்டும பணி புரிய 10 கான்ஸ்டபிள்கள். இவர்கள் பத்து பேருக்கும் வேலை, தினத்தந்தி மற்றும் தினகரன் படிப்பது மட்டும் தான். எப்போதாவது கோப்புகள் வந்தால், அதை எடுத்து அறைக்குள் வைப்பது. அறை கதவை திறந்து விடுவது.

இதற்காக இந்த பத்து பேருக்கும் மாதந்தோறும், சிறப்பாக பணி புரிந்தார்கள் என்று ரொக்கப் பணம் பரிசளிப்பார் ராதாகிருஷ்ணன். இரவு பகலாக வழக்கு புலனாய்வு வேலைகளில் உள்ள காவலர்களுக்கு ஒன்றும் கிடையாது. ராதாகிருஷ்ணனுக்கு கைத்தடிகளாக இருப்பதற்காக இந்த பத்து பேருக்கும் ரொக்கப் பணம் பரிசு மாதந்தோறும்.

இந்த பத்து பேரும் என்ன செய்வார்கள். அய்யா தெய்வம். அய்யாவப் போல வராது அய்யாதான் ஒலகத்துலேயே சிறந்த அதிகாரி என்று ஊர் முழுக்க சொல்லிக் கொண்டு திரிவார்கள்.

இதை ராதாகிருஷ்ணன் மிகவும் விரும்புவார். ஆனால் புகழ்ச்சி பிடிக்காதது போல சீன் போடுவார்.

ஒரு மிகப் பெரிய தமாஷ் நடந்தது. சாணி விருது. மன்னிக்கவும், ராணி விருது வழங்கப் பட்டதையொட்டி, விஜய் டிவி ராதாகிருஷ்ணனை பேட்டி கண்டது. அப்போது உங்களுக்கு ரோல் மாடல் யார் என்று கேட்டார்கள். மஹாத்மா காந்தி என்றாரே பார்க்கலாம் ராதாகிருஷ்ணன். இப்படி சொல்லியதற்கு காந்தியை செருப்பாலே அடித்திருக்கலாம்.

ராதாகிருஷ்ணனின் இரண்டு தம்பிகள் என்ற தங்கக் கம்பிகள் பற்றி சொல்லியிருந்தேன் அல்லவா ? இந்த இரண்டு தங்கக் கம்பிகளும் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் தெரியுமா ?

ராதாகிருஷ்ணன் சென்னை மாநகர கமிஷனராக பொறுப்பேற்ற பின், இவர்கள் இருவரும் தான் சென்னை நகரில் கட்டப் பஞ்சாயத்து. அனைத்தும் இவர்கள் இருவரும் தான். எந்தப் பிரச்சியையை வேண்டுமானாலும் இவர்கள் இருவரும் முடித்துக் கொடுப்பார்கள் என்ற இமேஜை ஏற்படுத்தி ஏகப்பட்ட பணத்தை சம்பாதித்து வருகிறார்கள், ராதாகிருஷ்ணனின் ஆசியுடன்.

ராதாகிருஷ்ணன் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி ஆனவுடன், இப்போது வசூல் எதற்கு தெரியுமா ? இன்ஸ்பெக்டர்கள் மற்றும் டிஎஸ்பிக்களின் மீதான குற்றக் குறிப்பாணையை ரத்து செய்வதற்கு. சமீபத்தில் ஒரு ஆய்வாளர், இரண்டு லட்சம் கொடுத்து தனது தண்டணையை ரத்து செய்தார்.

இன்னொரு டிஎஸ்பி, கோவிந்தராஜிடம் 6 லட்சம் கொடுத்து போஸ்டிங் வாங்கினார். இவரை அந்த இடத்திலிருந்து மாற்றாமல் இருக்க, கோவிந்தராஜ் மாதந்தோறும் இவரிடம் நாற்பதாயிரம் மாத மாமூல் கேட்க, அதையும் வேறு வழியின்றி அந்த டிஎஸ்பி கொடுத்து வருவதாகவும் தெரிகிறது.

சமீபத்தில், மதுரை அருகே ஒரு நிலத்தகராறு. இந்த நிலத்தகராறை சரி செய்கிறேன் என்று இந்த தங்கக் கம்பிகள் செல்கிறார்கள். காவல்நிலையத்திற்கு பஞ்சாயத்து செல்கிறது. அந்த மாவட்ட எஸ்பிக்கு, ராதாகிருஷ்ணனிடம் இருந்து போன். உளவுத்துறை ஐஜி ஜாபர்சேட் தொடர்பான விவகாரம் இது. உடனடியாக செய்து முடிக்க வேண்டும் என்று சொல்லுகிறார். அந்த வேலை மின்னல் வேகத்தில் முடிகிறது.

அந்த வேலையை முடித்துக் கொடுத்த ஆய்வாளர், சென்னைக்கு வேறு வேலையாக வரும் போது, ஜாபர் சேட்டை சந்திக்கிறார். “அய்யா, நீங்க சொன்ன வேலையை முடிச்சுக் கொடுத்துட்டேன் அய்யா“ என்று ஜால்ரா தட்டுகிறார். ஜாபருக்கு பொறி தட்டுகிறது. எந்த வேலை என்றவுடன், அய்யா நீங்க எஸ்பிக்கு போன் பண்ணி சொன்னீங்களாமே… ? அந்த லேண்ட் மேட்டர். அய்யா சொன்ன படியே முடிச்சுக் கொடுத்துட்டேன் அய்யா என்று கூறுகிறார்.

ஜாபர் தன்னுடைய பெயரை பயன்படுத்தி ராதாகிருஷ்ணன் செய்திருக்கும் அயோக்கியத்தனத்தை பார்த்து அதிர்ந்து போகிறார். இது போலவே, இந்த தங்கக் கம்பிகள், தமிழகம் முழுக்க ஒரு நெட்வொர்க்கை ஏற்படுத்தி விட்டதாகவும் தெரிகிறது. எந்த இடத்தில் நிலம் தொடர்பாகவோ, வேறு பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாகவோ, ஏதாவது தகராறு இருந்தால், இந்த தங்கக் கம்பிகள் உள்ளோ புகுந்து காரியத்தை முடித்துக் கொடுத்து ஒரு கணிசமாக தொகையை பெறுகிறார்கள்.

ராதாகிருஷ்ணன் கடைபிடிக்கும் தந்திரம். ஒன்று ஜாபர் சேட் சொன்னார் என்றோ, அல்லது சிஎம் விவகாரம் என்றோ சம்பந்தப் பட்ட காவல்துறை எஸ்பி அல்லது டிஐஜியிடம் கூறுவார். சிஎம் விவகாரமா இல்லையா என்றோ, ஜாபர் விவகாரமா இல்லையா என்றோ, யார் சரிபார்க்க முடியும் ? இப்படித்தான் இந்த நெட்வொர்க் இயங்குகிறது.

இப்போது கூறுங்கள். ராதாகிருஷ்ணன் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியா ? சட்டம் மற்றும் ஒழுங்கீனத்தின் கூடுதல் டிஜிபியா ?
சவுக்கு

19 comments:

  1. ராதாகிருஷ்ணனின் மூக்கைப்பார்த்தால் கன்னடக்காரன், அல்லது தெலுங்கர் போலல்லாவா தோன்றுகிறது என்னைப்பொறுத்தவரை அவர் தமிழ்நாட்டுத்தமிழன் போலத்தெரியவில்லையே ,

    ReplyDelete
  2. very good,expect more from you not only IPS , IAS , DRO

    You are INDIAN Thatha

    ReplyDelete
  3. //இவரிடம் நாற்பதாயிரம் மாத மாமூல் கேட்க, அதையும் வேறு வழியின்றி அந்த டிஎஸ்பி கொடுத்து வருவதாகவும் தெரிகிறது//

    சம்பளத்திலிருந்தா ??????

    ReplyDelete
  4. பின்னூட்டம் போடுபவர்களூக்கும் ஆட்டோ “வசதி” உண்டா என தெளிவாக தெரிந்தால் தைரியமாக பின்னூட்டம் போட வசதியாக இருக்கும்

    ReplyDelete
  5. //ராதாகிருஷ்ணன் கடைபிடிக்கும் தந்திரம். ஒன்று ஜாபர் சேட் சொன்னார் என்றோ, அல்லது சிஎம் விவகாரம் என்றோ சம்பந்தப் பட்ட காவல்துறை எஸ்பி அல்லது டிஐஜியிடம் கூறுவார்//

    ஹூம்...இதெல்லாம் ஒரு பொழப்பு.!!!

    ReplyDelete
  6. I have a question, how come Jaffer sate came at the end? is he purposely pulled in?? i didnt suspect you but still this question arise in me. if you dont want to post this comment its ok but i want to convey my thoughts.

    but your work is grate, i know how tough it is...

    ReplyDelete
  7. ஒழுங்கீனத்தின் கூடுதல் டிஜிபி!!!

    ReplyDelete
  8. உங்களுக்கு ரோல் மாடல் யார் என்று கேட்டார்கள். மஹாத்மா காந்தி என்றாரே பார்க்கலாம் ராதாகிருஷ்ணன். இப்படி சொல்லியதற்கு காந்தியை செருப்பாலே அடித்திருக்கலாம்./////தயவுசெய்து காந்தியை விட்டுவிடுங்கள்.. கொள்கை ரீதியாக பல விமர்சனங்களை நாம் காந்தியின் மீது வைக்கலாம்... இந்த பன்னாடைகள் போன்று அவர் பொதுமக்கள் மற்றும் அரசு பணத்தினை கையாடல் செய்ததில்லை.. தயவு செய்து காந்தியை விட்டுவிடுங்கள் சங்கர்.

    ReplyDelete
  9. ராஜா அவர்களே, ராதாகிருஷ்ணன் தன்னுடைய ரோல் மாடல் காந்தி என்ற சொன்னதால், காந்தியை செருப்பால் அடிப்பது போல அவமானப் படுத்தி விட்டார் என்ற பொருளில் தான் எழுதப் பட்டுள்ளது. காந்தியின் மீதான மரியாதை உங்களைப் போலவே, சவுக்குக்கும் நிரம்ப உண்டு

    ReplyDelete
  10. Dear Mr.Mohanbabu, Jaffer was not purposefully pulled in. We are just presenting the facts, as it is. Even Radhakrishnan acknowledges the power Jaffer wields all over Tamil Nadu and thats why he misused his name

    ReplyDelete
  11. முதலில் நட்சத்திர பதிவரானதற்கு வாழ்த்துக்கள்.உங்கள் துணிச்சலுக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  12. Savukku,
    Yet another landmark. You have 50000 hits in 10 days and this will increase. But no political party is following your lead. Why?
    What is the reason the Eelam issue is confined to Tamilnadu and no pressure is being exerted on central Government - my reason becasue Tamilnadu press is neglecting the major national opposition party.
    Let there be a change in strategy- Give space to BJP national leaders and also state team. You will automatically see every issue debated in parlament wheteher it is corruption.
    One national Party congress is acting as Rajapakshe spokesmen and deliberately Tamilnadu is neglecting other national party for vote bank politics.
    The voice should be heard in Delhi.Savukku team must do something in this context.Vaiko has good relationship with BJP national leaders.

    Why does a Thamizhaga Makkal Urimai Kazhagam team take an apppointment with Leader of oppostion Sushma swaraj?Arrange through TN BJP leaders.At least they have pro eelam views
    We are sitting inside a well and fighting other frogs.

    Time to think different has come.What are Savukku's views?

    ReplyDelete
  13. சவுக்கு மஞ்சள் பத்திரிக்கை நடையைத் தவிர்க்க வேண்டும். கிசுகிசுச் செய்திகளுக்கு நம்பகத்தன்மை இல்லை. ஒரு தனி மனிதத் தூற்றல் போலத்தான் இந்தக் கட்டுரை இருக்கிறது. மூக்கைப் பார்த்துத் தமிழனா என்று எடை போடும் பின்னூட்டங்களும் நம்பகத் தன்மையை வெகுவாகக் குறைக்கின்றன. ஆள்வோர் கொடுங்கோலர் என்றால் அவர்களைக் குற்றம் சாற்றுவோர் நேர்மையாக வாதங்களை முன் வைக்க வேண்டும். இந்தக் கட்டுரைத்தொடருக்கு நம்பகத் தன்மை வெகு குறைவு.

    மணிவண்ணன்

    ReplyDelete
  14. அன்பார்ந்த திரு மணிவண்ணன், நீங்கள் குறிப்பிட்ட அந்த பின்னூட்டம், நகைச்சுவை உணர்வு கருதியே பதிப்பிக்கப் பட்டது. இந்த கட்டுரைக்கு நம்பகத் தன்மை குறைவு என்பதை மறுக்கிறேன். வந்த தகவல்கள் முழுமையாக விசாரிக்கப் பட்ட பின்னரே கட்டுரையில் சேர்க்கப் பட்டன. இது தவிரவும் வந்த பல்வேறு தகவல்களை விசாரித்து சரிபார்க்க இயலாததால், சேர்க்கப் படவில்லை. ஆலோசனைகள் கவனத்தில் கொள்ளப் பட்டன.

    ReplyDelete
  15. Anon Said
    "One national Party congress is acting as Rajapakshe spokesmen and deliberately Tamilnadu is neglecting other national party for vote bank politics.
    The voice should be heard in Delhi.Savukku team must do something in this context.Vaiko has good relationship with BJP national leaders.

    Why does a Thamizhaga Makkal Urimai Kazhagam team take an apppointment with Leader of oppostion Sushma swaraj?Arrange through TN BJP leaders.At least they have pro eelam views
    We are sitting inside a well and fighting other frogs.

    Time to think different has come.What are Savukku's views? "



    You must also consider that in nuclear issue Govt resolved the issue by accepting all BJP proposal. Why can't same happen for Eelam issue?
    We are paying the price for neglecting major national Party and leveraging their influence in Delhi

    May be Savukku won't comment as it is politically incorrect in Tamilnadu
    -Robin

    ReplyDelete
  16. ஒரு நாளைக்கு 4000 பேருக்கு மேல் படிக்கிறீங்களே, ஒரு 10% ஆவது பின்னூட்டம் போட்டா நல்லா இருக்கும்.

    ஆனா அனானி பின்னூட்டம் கூட 15 வரமாட்டேங்குது.
    ஏன்னா எல்லாம் பயம் தான். இது ஜனநாயக நாடில்லையா அதான்.

    அனானி அம்புஜம்

    ReplyDelete
  17. another diamond on your crown.

    ReplyDelete
  18. Dear Savukku

    We Expecting that You have to Punish such people using help with Some Good lawyer Comittee.....

    Then Only People Will have fear to do such Corruption.....

    IF they are not Get punished then No Use to Write Such Articles , Becasue 99% people cheating each Other in any one Format.....

    Any way we Will support You always am waiting to Your Reply....

    ReplyDelete