தமிழக முதல்வர் கருணாநிதிக்கு எப்போதுமே ஒரு பழக்கம் உண்டு. தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர்கள் யாராவது எதையாவது ஒன்றைச் சுட்டிக்காட்டி அறிக்கை ஏதாவது வெளியிட்டால், உடனடியாக மேற்குவங்கத்தைப் பாருங்கள், பீகாரைப் பாருங்கள், ஆந்திராவைப் பாருங்கள் என்று பதில் அறிக்கை விடுவதில், கருணாநிதிக்கு நிகர் அவர்தான்.
தமிழகத்தில் சேரிகளில் மக்கள் துன்பப்படுகிறார்கள் என்று மார்க்சிஸ்டுகள் அறிக்கை வெளியிட்டால், மேற்கு வங்கத்தின் சேரிகளை விட தமிழகத்தில் சேரிகள் குறைவு என்பார். ஆட்டோ தொழிலாளர்கள் துன்பப் படுகிறார்கள் என்றால், மேற்கு வங்கத்தில் இன்னும் கை ரிக்ஷா இழுக்கிறார்கள், கழக ஆட்சியில் கை ரிக்ஷா அன்றே ஒழிக்கப் பட்டது என்பார்.
பன்றிக் காய்ச்சலில் ஒரிருவர் இறந்தால், ஆந்திராவில் பன்றிக் காய்ச்சலுக்கு இறந்தோர் எண்ணிக்கை 48, கம்யூனிஸ்டுகள் ஆளும் கேரளாவில் இறந்தோர் எண்ணிக்கை 28, பிஜேபி ஆளும் கர்நாடகாவில் இறந்தவர் எண்ணிக்கை 25, பீகாரில் இறந்தவர் எண்ணிக்கை என்று, இவர் வெளியிடும் பட்டியல் ஓயவே ஓயாது.
ஒரு வேளை ஜெயலலிதா, தமிழகத்தில் நல்லாட்சி நடக்கிறது என்று ஒரு அறிக்கை வெளியிட்டார் என்று வைத்துக் கொள்ளுங்கள், அந்த அம்மையாரின் ஆட்சியை விட இது ஒன்றும் நல்லாட்சி இல்லை. மேற்கு வங்கத்தில் 27 வருடங்களாக நடைபெறும் மார்க்சிஸ்டுகளின் ஆட்சியை விடவா இது நல்லாட்சி ? அறிஞர் அண்ணா என்னை நல்லாட்சி தரும் அளவிற்கு வளர்க்கவில்லை.
நான் அந்த வழியில் வந்தவனும் அல்ல. ஒரு பிற்பட்ட சமுதாயத்திலே பிறந்து இன்று தமிழகத்திற்கே முதலச்சராக ஆகும் அளவுக்கு வளர்ந்திருக்கிறேன் என்பதை பொறுக்காத சில விபீடணர்களின் பொய் வாக்கு இது என்று அறிக்கை வெளியிட்டாலும் ஆச்சர்யப் படுவதற்கல்ல.
இந்தச் அளவுகோலில்தான் ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கரைப் பற்றி ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கைக்கு தமிழக அரசு வெளியிட்டிருக்கும் மறுப்பு அறிக்கையைப் பார்க்க வேண்டும்.
“1995ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்ற போதே இதே அதிகாரி மீது - அவரது காரில் குளிர் பதன வசதி செய்து கொடுத்த கம்பெனிக்கு சலுகை செய்தார் என்றும் - அரசின் அனுமதியின்றி, வேலை வாய்ப்பு அலுவலகம் மூலமாக இல்லாமல் தனி ஒருவரை பணியிலே அமர்த்தினார் என்றும் - 20 கோடி ரூபாய் அரசு நிதியை தன்னுடைய சகோதரர் பணி புரிந்த வங்கிக் கிளையிலே டெபாசிட் செய்தார் என்றும் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு – நடவடிக்கை எடுக்கப் பட்டிருந்த நிலையில் - தி.மு.கழக ஆட்சியிலே தான் அந்தக் குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட்டு அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்பட்டது.”
அதுபோலவே மீண்டும் 2005ஆம் ஆண்டு - அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கர்நாடக அரசின் கொள்கை முடிவுகள் குறித்து இந்த அதிகாரி விமர்சனம் செய்தது, அதுபற்றி கர்நாடக அரசே தமிழக அரசுக்கு புகார் செய்து ஒழுங்கு நடவடிக்கை இவர் மீது மேற்கொள்ளப்பட்டு - அந்தக் குற்றச்சாட்டிலிருந்தும் தி.மு.கழக ஆட்சியிலே தான் விடுவிக்கப்பட்டார். எனவே இந்த அரசைப் பொறுத்தவரையில் இவர் மீது எந்த பழி வாங்கும் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.”
ஆக, வேண்டாத அதிகாரிகளைப் பழிவாங்குவதில் ஜெயலலிதாவுக்கு கருணாநிதி எந்த வகையிலும் சளைத்தவர் இல்லை என்பதைத் தானே நிரூபிக்கிறது இந்த அறிக்கை ?
அந்தக் குற்றச் சாட்டிலிருந்தும் திமுக ஆட்சியில்தான் விடுவிக்கப் பட்டார் என்றால், ஒன்று அந்த அதிகாரி மீதான குற்றம் நிரூபிக்கப் படாமல் இருந்திருக்க வேண்டும். அல்லது குற்றம் நிரூபிக்கப் பட்டும் அவருக்கு சலுகை காண்பித்திருக்க வேண்டும். கருணாநிதி உமாசங்கருக்கு சலுகை ஏதும் காண்பித்திருப்பார் என்று சவுக்கு நம்பவில்லை. திமுக ஆட்சியில்தான் குற்றச் சாட்டிலிருந்து விடுவிக்கப் பட்டார் என்று கூறுகிறார்களே… ஒரு நபர் மீது குற்றச் சாட்டு நிரூபிக்கப் படாவிட்டால், அது திமுக ஆட்சியாக இருந்தால் என்ன அதிமுக ஆட்சியாக இருந்தால் என்ன ? விடுவித்துத் தானே ஆக வேண்டும். ஏதோ உமாசங்கருக்கு சலுகை காண்பித்தது போல மார்தட்டிக் கொள்வது அயோக்கியத்தனம் இல்லையா ?
போலிச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தார் என்றால், 1996 முதல் கருணாநிதிக்கு இவர் போலி சான்றிதழ் கொடுத்துப் பணியில் சேர்ந்தார் என்று தெரியவில்லையா ? ஏப்ரல் 2008ல் உமாசங்கருக்கு அப்பழுக்கற்ற அரசு ஊழியர் என்ற பிரிவில் திருவான்மியூரில் 6ம் எண் வீட்டு மனையை ஒதுக்கும் போது தெரியவில்லையா ?
அந்த வீட்டு மனைக்கான பணத்தைக் கட்ட உமாசங்கர் தவணை கேட்ட போது, அரசாகவே தவணை தர மறுத்து ஒதுக்கீட்டை ரத்து செய்தது. (என்ன ஐஏஎஸ் ஆபீசர் சார் நீங்க ? சாதாரண இன்ஸ்பெக்டரெல்லாம் ஒரே நாள்ல 75 லட்ச ரூபாய தூக்கி வீசறாங்க. நீங்க 25 லட்ச ரூபாய் கட்றதுக்கு தவணை கேக்கிறீங்களே. இப்போ பாருங்க. வீட்டு மனையும் போச்சு)
ஆனால் இவர் தலித் என்பதற்காக இவர் மீது நடவடிக்கை எடுக்கப் படவில்லை என்பதை மட்டும் சவுக்கு ஒத்துக் கொள்கிறது. ஏனெனில், உமாசங்கர் தன்னை தலித் என்று என்றுமே அடையாளப் படுத்திக் கொண்டதில்லை.
கிரிஸ்துதாஸ் காந்தி போலவோ, சிவகாமி போலவோ, இன்று மத்திய அரசுப் பணியில் இருக்கும் அம்பேத்கார் ராஜ்குமார் போலவோ, தன்னை தலித் என்று இவர் அடையாளப் படுத்திக் கொண்டதே கிடையாது. இட ஒதுக்கீட்டைப் பெற்று அரசுப் பணிக்கு வந்த உடன், “புதுப் பார்பானாக“ மாறும் பல்வேறு தலித்துகளைப் போலவேதான் இருந்தார். முதன் முதலாக இவர் மீது திமுக அரசு ஒழுங்கு நடடிக்கை எடுக்கத் தொடங்கிய உடன் தான் இவர் தன்னை தலித் என அடையாளப் படுத்திக் கொண்டார்.
உமாசங்கருக்கு சிக்கல் தொடங்குவது வரைக்கும் கருணாநிதியின் ஆசி பெற்ற செல்லப் பிள்ளையாகத் தானே இருந்தார் உமாசங்கர் ? எத்தனையோ ஐஏஎஸ் அதிகாரிகள் இருக்க, தனக்கு மிகவும் பிடித்த, மானாட மயிலாட நிகழ்ச்சியை மக்களைப் பார்க்க வைக்கும் இலவச கலர் டிவி திட்டத்திற்கு உமாசங்கரைத் தானே தேர்ந்தெடுத்தார் கருணாநிதி ?
பேரன்களின் கொட்டத்தை அடக்க அரசு கேபிள் கார்ப்பரேஷன் தொடங்குவது என்று முடிவெடுத்ததும், வேகமாக வேலை செய்து, பேரன்களை ஒழித்துக் கட்டுவார் என்று கருணாநிதி தேர்ந்தெடுத்ததும் இந்த உமாசங்கரைத் தானே ?
கருணாநிதியோடு உமாசங்கர்
இந்த நெருக்கத்தில் தானே உமாசங்கர் நான் ஒரு அப்பழுக்கற்ற அரசு ஊழியர், எனக்கு ஒரு வீட்டு மனை தாருங்கள் என்று கருணாநிதிக்கு விண்ணப்பம் எழுதுகிறார் ? ஐஏஎஸ் அதிகாரியான உங்களுக்கு, நிலமில்லாமல், இருக்க வீடு இல்லாமல் எத்தனை தலித்துகள் இன்னமும் இருக்கிறார்கள் என்பது தெரியாததல்ல.
இப்படிப் பட்ட சூழலில், இன்று உங்களை தலித் என்று அழைத்துக் கொள்ளும் நீங்கள், வீட்டு மனை தாருங்கள் என்று கருணாநிதியிடம் விண்ணப்பம் அளித்தது, தலித்துகளை அவமானப் படுத்தும் செயலாகவே சவுக்கு பார்க்கிறது.
உங்களைப் போன்ற அதிகாரிகள், அவர்களுக்கோ, அவரது குடும்பத்திற்கோ ஏதாவது தேவை என்று எப்படியும் கையேந்துவார்கள் என்ற திமிர்தான் கருணாநிதியை படித்த அதிகாரிகளை மரியாதை குறைவாக பேச வைக்கிறது. இவர்களும், நல்ல பதவிக்காக கருணாநிதியின் வசவுகளை கவிதை போல கேட்டு மகிழ்கிறார்கள்.
ஜெயலலிதா மீது ஆயிரம் குற்றச் சாட்டுகளைச் சொன்னாலும், படித்த அதிகாரிகளை மரியாதைக் குறைவாகப் பேசினார் என்று ஒருவராலும் சொல்ல முடியாது.
சென்னையில் சொந்த வீடு இல்லாத ஒரு ஐபிஎஸ் அதிகாரிக்கு, 6 லட்ச ரூபாயில் ஒரு வீட்டு மனை விலைக்கு வந்திருக்கிறது என்று சொன்ன போது, ஜிபிஎஃபில் வெறும் 4 லட்சம் தான் இருக்கிறது, பிள்ளைகளின் படிப்புச் செலவுக்கு வேண்டும் என்று அந்த வீட்டு மனையை கூட வாங்க மறுத்த ஐபிஎஸ் அதிகாரிகளை சவுக்குக்கு தெரியும். அலுவலக தொலைபேசியை வீட்டில் வைத்தால், மனைவியோ குழந்தைகளோ பயன்படுத்துவார்கள், அது அரசு தொலைபேசி அதை அரசுப் பணிக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று இல்லத் தொலைபேசி வேண்டாம் என்று எழுதிக் கொடுத்த ஐபிஎஸ் அதிகாரிகளை சவுக்குக்கு தெரியும். மார்க் வாங்காத தன்னுடைய மகனுக்கு அண்ணா பல்கலைகழகத்தில் குறுக்கு வழியில் சீட் பெற்றாரே ராதாகிருஷ்ணன்…. அப்போது அவருடன் மற்றொரு ஐஜி பணியாற்றிக் கொண்டிருந்தார். அவரின் மகளும் அந்த ஆண்டு ப்ளஸ் டூ முடித்திருந்தார். அவரின் மகளுக்கு, டெல்லியில் உள்ள பிரசித்தி பெற்ற செயின்ட்.ஸ்டீபன்ஸ் ஸ்கூலில் இடம் கிடைத்தது. மகள் தன்னுடன் இருந்து படிக்க வேண்டும் என்று விரும்பிய அதிகாரியிடம் ராதாகிருஷ்ணன் சொன்னது என்ன தெரியுமா ? சார். என் பையனுக்கு வாங்கின சீட்டோட வொர்த் 20 லட்சம் ரூபாய். உங்க பொண்ணுக்கும் மேடம் கிட்ட சொல்லி வாங்கித் தர்றேன் என்பதுதான். அந்த அதிகாரி மறுத்து விட்டு, மற்றொரு அதிகாரியிடம் இன்று என் மகளுக்காக அரசியல் வாதியிடம் சீட் பெற்றால் காலம் முழுமைக்கும் என் வாழ்வில் அது ஒரு கறையாகவே இருக்கும் என்பதுதான்.
நேர்மையான ஐஏஎஸ் அதிகாரியான நீங்கள், கருணாநிதியிடம் வீட்டு மனை கேட்டதை, உங்கள் பொது வாழ்வில் ஏற்பட்ட மிகப் பெரிய சறுக்கலாகவே சவுக்குப் பார்க்கிறது.
ஆனால், அதே நேரத்தில் இன்று எலும்புத் துண்டுகளுக்காக கோபாலபுரத்தையும், சிஐடி காலனியையும், அறிவாலயத்தையும் சுற்றி வரும், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை ஒப்பிடுகையில், நீங்கள் உயர்ந்தவர் என்ற அடிப்படையிலேயே சவுக்குக்கு உங்கள் மீது மரியாதை.
“அரசின் சார்பில் அவர் மீது இறுதியான நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட்டுவிடவில்லை. தற்காலிகப் பணி நீக்கம் தான் செய்யப்பட்டுள்ளது. இதன் முடிவில் தான் அந்தக் குற்றச்சாட்டின் மீதான இறுதி முடிவு மேற்கொள்ளப்படும். தற்காலிகப் பணி நீக்கம் என்பது தண்டனை ஆகாது. அதற்குள் ஒருசில அரசியல்வாதிகள் இதற்கொரு காரணத்தைக் கற்பித்து அறிக்கை விடுக்கின்றார்கள். அரசில் பணியாற்றும் ஒரு சில அதிகாரிகள் மீது இப்படிப்பட்ட புகார்கள் கூறப் படுமானால், அதுபற்றி இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்வது என்பது இந்த ஆட்சிக் காலத்திலே மட்டும் நிகழக் கூடியதல்ல. “ என்று அறிக்கை விட்டிருக்கிறது தமிழக அரசு .. ..
ஜாபர் சேட் என்ற ஐபிஎஸ் அதிகாரி மீது, கடந்த ஆறு மாதங்களுக்குள் மூன்று புகார்களை ஆதாரத்தோடு அனுப்பியிருக்கிறதே தமிழக மக்கள் உரிமைக் கழகம். ஜாபர் சேட்டை ஏன் இடைநீக்கம் செய்ய வில்லை ?
லஞ்ச ஒழிப்புத் துறை எஸ்பியாக இருந்த லட்சுமி என்பவர் மீது, திருவண்ணாமலையில் கட்டப் பஞ்சாயத்து செய்து லஞ்சம் வாங்கினார் என்று புகார் வந்ததே, ஏன் அவரை இடைநீக்கம் செய்யவில்லை ?
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை மூடி விட்டு, அவரிடம் இருந்து முதல்வர் ஒதுக்கீட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தில் சீட் வாங்கினாரே ராதாகிருஷ்ணன், அவரைப் பற்றி பேராசிரியர் கல்யாணி புகார் அனுப்பி, உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தாரே … …. ராதாகிருஷ்ணனை ஏன் செய்யவில்லை இடை நீக்கம்.
ஒரிஸ்ஸாவில் பல லாரிகளை வாங்கியுள்ளார், தமிழகத்திலேயே பல்வேறு சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளார் என்று புகார் முன்னாள் தலைமைச் செயலாளர் மீது புகார் வந்ததே… ஏன் செய்யவில்லை அவரை இடை நீக்கம் ?
இடைநீக்கம் தண்டனை அல்ல, விசாரணைக்காக தற்காலிகமாக எடுக்கப் படும் நடவடிக்கைதான் என்று கூறும் திமுக, இதே போல, ஜாபர்சேட்டை தற்காலிகமாக பணி இடைநீக்கம் செய்து விட்டு, விசாரணை முடிந்தவுடன் பணி வழங்க வேண்டியதுதானே ?
“கடந்த கால அ.தி.மு.க. ஆட்சியிலே கூட காவல் துறை தலைவராக இருந்த திரு. ரவீந்தரநாத், ஐ.பி.எஸ்., சென்னை மாநகர காவல் துறை கமிஷனராக இருந்த திரு. முத்துக்கருப்பன், ஐ.பி.எஸ்., திரு. உஜாகர் சிங், ஐ.ஏ.எஸ்., திரு. கே.எம். சுப்பிரமணியன், ஐ.ஏ.எஸ்., போன்ற பல அதிகாரிகள் மீது தற்காலிக பணி நீக்க நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டு, பின்னர் சிலர் அதிலிருந்து விடுபட்டும் வந்திருக்கிறார்கள்; சிலர் நடவடிக்கைக்கும் ஆளாகியிருக்கிறார்கள்.“
இதுதான், உமாசங்கர் பணி இடைநீக்கம் தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின் சாரம். கருணாநிதி அரசு குறிப்பிடும், அதிமுக ஆட்சியில் பணி இடைநீக்கம் செய்யப் பட்ட அதிகாரிகள் ஒவ்வொருவராக பார்ப்போம்.
ரவீந்திரநாத். இவர் ஜெயலலிதா ஆட்சிக் பொறுப்பேற்றதும் நியமிக்கப் பட்ட டிஜிபி. தனது நள்ளிரவுக் கைது குறித்து அறிக்கை வெளியிட்ட கருணாநிதி, தனது போன பிறந்த நாளில் கூட இந்த ரவீந்திரநாத், தன்னை டிஜிபி ஆக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், வரிசையில் நின்று வாழ்த்து தெரிவித்தார் என்ற குண்டை போட்டார். உடனடியாக ரவீந்திரநாத் கருணாநிதி எனக்கு அங்கிள் மாதிரி என்று பதில் விடுத்தார். ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் இவர் பணி இடைநீக்கம் செய்யப் பட்டது உண்மை. எதற்காக ?
இவர் மீது, பெண் காவலர்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டார் என்பது முதல் குற்றச் சாட்டு. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும், திமுக அரசில் நல்ல பதவிகளில் இருந்த காவல்துறை அதிகாரிகளெல்லாம் பல்வேறு இடங்களுக்கு தூக்கி அடிக்கப் பட்டனர். இது ஜெயலலிதா சம்மதத்துடனேயே நடந்தது.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ரவீந்திரநாத், தூத்துக்குடிக்கு போடுவதற்கு ஒரு தொகை, தூத்துக்குடிக்கு போடாமல் இருப்பதற்கு ஒரு தொகை என்று ஆய்வாளர் போஸ்டிங்குக்கு இரண்டு லட்சமும், டிஎஸ்பி போஸ்டிங்குக்கு மூன்று லட்சமும் ஒரே வாரத்தில் வசூல் செய்து குவித்தார்.
அடுத்து, ரவீந்திரநாத்தின் நண்பர் எல்ஐசி ஏஜென்டாக இருக்கிறார். இவரும் ரவீந்திரநாத்தும் ஒரு ஒப்பந்தம் போடுகிறார்கள். காவல்துறையில் இருக்கும் அனைத்து காவலர்களையும் கட்டாயம் எல்ஐசி பாலிசியில் சேரச் சொல்வது. சேர்ந்ததனால் வரும் கமிஷனை ரவீந்திரநாத்தும் அவரது நண்பரும் பகிர்ந்து கொள்வது. இதுதான் அந்த ஒப்பந்தம். இதன்படி, ஏழைக் காவலர்களிடம் வசூல் தூள் பறந்தது.
அடுத்து டெல்லியில் டிஜிபிக்கள் மாநாடு நடக்கிறது. அந்த மாநாட்டில் கலந்து கொள்கிறேன் என்று சென்ற ரவீந்திரநாத், முதல் நாள் மாநாட்டுக்குப் பிறகு, காணவில்லை. இரண்டு நாட்கள் கழித்து தான் வருகிறார். இதையெல்லாம் சேர்த்து வைத்து, லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு உத்தரவிட்டு ரவீந்திரநாத்தை பணி இடை நீக்கம் செய்து உத்தரவிட்டார் ஜெயலலிதா. இது தவறென்கிறார் கருணாநிதி.
அடுத்தது யாரு… முத்துக் கருப்பன். இந்த முத்துக் கருப்பன் மீது ஜெயலலிதா மரியாதை வைத்து, பதவிக்கு வந்த முதல் காரியமாக இவரை சென்னை மாநகர காவல் ஆணையாளராக ஆக்கியதன் பின்னணி தெரியுமா ? ஜெயலலிதாவும், சசிகலாவும் சேர்ந்து தனி அறையில் ஒரு ஆடிட்டரை செருப்பால் அடித்ததாக 1991-96 காலத்தில் புகார் வந்தது தெரியுமா ? அந்த ஆடிட்டர் தந்த புகாரின் பேரில் காவல்துறை விசாரணை நடந்தது. அந்த விசாரணையை நடத்துகையில் ஜெயலலிதாவை விசாரித்தது இந்த அதிகாரிதான். இவர் எப்படி விசாரணை நடத்தியிருந்தால், ஜெயலலிதா பதவிக்கு வந்ததும் இவரை மாநகர காவல் ஆணையாளராக ஆக்கியிருப்பார் பாருங்கள்.
இந்த முத்துக் கருப்பனிடம், கருணாநிதியை கைது செய்யும் பொறுப்பு ஒப்படைக்கப் பட்டது. அதை திறம்பட செய்ததற்காக முத்துக் கருப்பன் மீது ஜெயலலிதா நல்ல அபிப்ராயம் வைத்திருந்தார். இதைப் பயன்படுத்தி முத்துக் கருப்பன், அண்ணா நகரில் பிரதான இடத்தில் இருந்த ஒரு நிலத்தை, ஜெயலலிதா பேரைச் சொல்லி, தனக்கே தனக்கு என்று அபகரிக்கப் பார்த்தார். சம்பவம் நடந்த அன்று, மூப்பனார் இறந்து அவரின் உடல் காமராஜர் அரங்கத்தில் மக்கள் பார்வைக்காக வைக்கப் பட்டு இருந்தது.
சென்னை நகரின் மொத்த காவல்துறையும் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக காமராஜர் அரங்கத்தில் குவிக்கப் பட்டிருந்தது. அப்போது, இவரும் காங்கிரசில் இருந்த வெற்றிவேலும் சேர்ந்து, ஒரு காவல்துறை டீமை வைத்து, ஏற்கனவே அந்த இடத்தில் இருந்த குடிசைகளை பிரித்துப் போட்டு, இந்த இடம் தனியாருக்குச் சொந்தமான இடம் என்று போர்டு வைத்தனர்.
ப்யூரிட்டா மினரல் வாட்டர் என்று ஒரு நிறுவனம் நடத்தி வந்தார். ஒரு பால்பண்ணை நடத்தி வந்தார். அந்தப் பால்பண்ணையில் பணியாற்றிது அனைத்தும் 25க்கும் மேற்பட்ட காவலர்கள். சம்பளத்தை அரசிடம் பெற்றுக் கொண்டு, முத்துக் கருப்பனின் பால்பண்ணையிலும், மினரல் வாட்டர் நிறுவனத்திலும் அந்தக் காவலர்கள் வேலை பார்த்து வந்தார்கள்.
ஜெயலலிதா பெயரைச் சொல்லி நிலத்தை அபகரிக்க முயன்றவரை பணி இடை நீக்கம் செய்யாமல், விருதா கொடுக்க முடியும் ? இவர் மீது இரண்டு வழக்குகள் லஞ்ச ஒழிப்புத் துறையால் பதிவு செய்யப் பட்டு விசாரணைக்கு உத்தரவிடப் படுகிறது. ( RC 63/2003/POL/HQ. DE 102/2002/POL/HQ) இதையும் தவறு என்கிறார் கருணாநிதி.
உஜகார் சிங், ஐஏஎஸ். தமிழக அரசு, எண்ணை வித்துக் கழகம் என்று ஒரு நிறுவனத்தை நடத்துகிறது. இந்த எண்ணை வித்துக் கழகம், அனைவராலும் பயன் படுத்தப் படுகிறதே… சூரியகாந்தி எண்ணை. அந்த எண்ணையை தயாரித்து சந்தையில் விற்க உத்தேசிக்கிறது. இந்த எண்ணை வித்துக் கழகத்தின் மேலாண் இயக்குநராக உஜகார் சிங் நியமிக்கப் படுகிறார்.
இவ்வாறு நியமிக்கப் பட்ட உஜகார் சிங், 6 கோடி மதிப்புள்ள எண்ணையை, டெல்லியைச் சேர்ந்த தனது உறவுக்காரர் நடத்தும் நிறுவனத்திற்கு விற்று விடுகிறார். விற்பது தப்பில்லை. விற்றதற்கான பணத்தை கடைசி வரை வாங்கவேயில்லை. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையில் விசாரணை நடை பெறுகிறது. (PE 81/2001/MISC/HQ) ஆறுமுகசாமி என்ற ஆய்வாளர் இவ்விசாரணையை நடத்துகிறார்.
எஃப்ஐஆர் பதிவு செய்யலாம் என்று அறிக்கை அளிக்கிறார். இந்த விசாரணையை ஒட்டியே உஜகார் சிங் பணி இடை நீக்கம் செய்கிறார். இதையும் தவறு என்கிறார் கருணாநிதி.
கே.எம்.சுப்ரமணியன் ஐஏஎஸ். 2002ம் ஆண்டில் சமூக நலத் துறை மற்றும் சத்துணவுத் திட்ட இயக்குநர். இந்த சுப்ரமணியன், கள ஆய்வு நடத்தப் போகிறேன் என்று, மதுரை சென்று சர்க்யூட் ஹவுசில் தங்கிக் கொண்டு, அவரது கட்டுப் பாட்டின் கீழ் வரும் தொழில் கூட்டுறவு அலுவலர்கள் ஒவ்வொருவரும் தீபாவளிச் செலவுக்காக தலா 5000 ரூபாய் கொண்டு வந்து கொடுக்க வேண்டும் என்று கூறுகிறார்.
2002ம் ஆண்டு செப்டம்பர் 24ம் தேதி, இதே போல ஒவ்வொரு அலுவலரும் தலா 5000 ரூபாயை ஒரு கவரில் போட்டு சர்க்யூட் ஹவுசில் சென்று கொடுக்கின்றனர். மறைவாக காத்திருந்த திருஞானம் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத் துறை டீம் ஏறக்குறைய 20க்கும் மேற்பட்டவர்கள் பணத்தை கொடுத்தவுடன், சுப்ரமணியன் அறைக்குள்ளே நுழைகிறது. உள்ளே நுழைந்தவர்கள், நாங்கள் சிபி.சிஐடி காவல்துறை.
உங்களிடம் யாரோ கள்ள நோட்டு கொடுத்திருப்பதாக தகவல் வந்திருக்கிறது என்று கூறுகின்றனர். அந்த மங்குணி சுப்ரமணியம், என்னிடம் கள்ள நோட்டு கொடுக்க சான்சே இல்லை என்று தான் வைத்திருந்த அத்தனை பணத்தையும் எடுத்து காண்பிக்கிறார். அத்தனை பணத்தையும் காண்பித்த பிறகு எண்ணிப் பார்த்தால், ஒரு லட்சத்தி ஐந்தாயிரம் ரொக்கமும், ஒரு தங்க நாணயமும் இருக்கிறது. இதன் பிறகு, இவர் மீது வழக்கு பதிவு செய்து பணி இடைநீக்கம் செய்யப் படுகிறார். இவரை இடைநீக்கம் செய்ததும், உமாசங்கரை இடைநீக்கம் செய்ததும் ஒன்றாம்.
இப்போது புரிகிறதா ? உமாசங்கருக்கும் மேற்கு வங்கத்துக்கும் என்ன தொடர்பு என்று ? எப்படி இருக்கிறது கருணாநிதியின் நியாயம் ? வித்தாரக்கள்ளி விறகொடிக்கப் போனாளாம்... கத்தாள முள்ளு கொத்தோட வந்துச்சாம்.
சவுக்கு
well.but need more.
ReplyDeleteநல்லாவே புரியுது - என்ன செய்யமுடியும் - தமிழா
ReplyDeleteஇப்போதான் எல்லா IAS IPS அதிகாரிகளின் வண்டவாளமும் தண்டவாளத்தில் ஏறுகிறது வித்தாரக்கள்ளி விறகொடிக்கப் போனாளாம்... கத்தாள முள்ளு கொத்தோட வந்துச்சாம்.
ReplyDeleteநல்ல பழமொழி
ITHU POLAVE HINDU TEMPLES LA NADAKKUM AKKIRAMANGALAI PATHHI ELUTHANUM SIR.. PLEAS...
ReplyDeleteDear Savukku,
ReplyDeleteU R 100% True.
A Little ink makes people think!
Well done!
Keep it up.
Gemini Raman
Great was waiting was this one
ReplyDelete"ஜெயலலிதா மீது ஆயிரம் குற்றச் சாட்டுகளைச் சொன்னாலும், படித்த அதிகாரிகளை மரியாதைக் குறைவாகப் பேசினார் என்று ஒருவராலும் சொல்ல முடியாது." - நல்ல காமெடி.. இன்னும் காதுல இரட்டை இலை வைக்கிறது மட்டும் தான் பாக்கி.. :)
ReplyDeleteennatha solla!rendume sakkadayil oorina mattaikal.Eppa Nama enna seiyanum sollunga savukku
ReplyDeleteDear Bro.
ReplyDelete"ஏழைக் காவலர்களிடம் வசூல் தூள் பறந்தது. "
only 1% of them are poor remaining all of them are very rich.so no need to worry for them.
Savukku,
ReplyDeletewhere were u these many days.. Pls contest in elections i am sure many would vote for you
Ram
நாடு நாசமாப் போச்சு...
ReplyDeleteஇந்த லட்சணத்துல வல்லரசு, வல்லரசுன்னு விஜயகாந்து படம் வேற.
தகவல்களுக்கு நன்றி
ReplyDeletehi savukku...u have done realllllllllllly a very good job...its tribute to umasankar sir...he will smash and scatter all the allegations levelled against him...his honesty will rescue him from all those stupid,insane and planned plots...
ReplyDeleteSAVUKU KU YEN MANAMARNTHA VAZTHUKAL...ORU KARUTHU SOLLA AASAI PADUKIREAN.AAZHUM KATHCHAI MATTUM ADHIGAMAGA VIMARSIPADAHI VIDA NAMADHU NAATIL YEATHANAIYO AVALINAGALAI NADAKIRADHU ATHAIYUM VELIKONDU VAARUNGAL AYYA..
ReplyDeleteDear Savukku,
ReplyDeleteI have heard your interview in BBC tamil radio on yesterday(monday).
your view is really nice about the new law. but i am not sure that law will going to handle properly like other laws :-)
Thanks for your good work...keep it up boss.
>>நேர்மையான ஐஏஎஸ் அதிகாரியான நீங்கள், >>கருணாநிதியிடம் வீட்டு மனை கேட்டதை, உங்கள் >>பொது வாழ்வில் ஏற்பட்ட மிகப் பெரிய >>சறுக்கலாகவே சவுக்குப் பார்க்கிறது.
ReplyDeleteI dont subscribe to this view. If there is a quota officially for govt servants of high stature , then its a right for every govt servant who thinks he has merit to ask for it.
If he is really not able to mobilize 25 lakhs for getting it , then this news is really adds a feather in his crown.
//I dont subscribe to this view. If there is a quota officially for govt servants of high stature , then its a right for every govt servant who thinks he has merit to ask for it.
ReplyDeleteIf he is really not able to mobilize 25 lakhs for getting it , then this news is really adds a feather in his crown.//
me too!
Dear Mr.Premkumar, there is a quota called Governmenr Discretionary Quota. Please note the word 'discretionary'. It is the discretion of the government to allot or not allot a plot or flat to any one. The State uses this discretion to allot housing sites only to people who toe their line and do whatever illegal things government wants them to do. If you go through the list of allottees, you could see, only the cronies of Karunanidhi are allotted with housing site. The son's of Chief Minister's two secretaries, Jaffer Sait, Kamaraj, and corrupt police officers only find a place in the list.
ReplyDeleteIn these circumstances, Savukku finds it even to make an application to Karunanidhi for a house site. Because, once you get an allotment, you become indebted to Karunanidhi to toe his line and sing Hosanna for him
//If you go through the list of allottees, you could see,//
ReplyDeleteIs it available online?
// If there is a quota officially for govt servants of high stature , then its a right for every govt servant who thinks he has merit to ask for it.//
ReplyDelete"That" allotment is not exclusive for public servants. It is open to everyone, in my understanding.
We are proud of inviting you to the the internet's best Social community. www.jeejix.com .
ReplyDeleteMr.Savukku.I am sorry to call you by this name.However I feel your mother will feel proud of this name as its suits your action.The matter is the INDEBTEDNESS.This is the only way left to Muthuvel Karunandhi to remain in power or to catch the power.the people are bibed ,the officials are bribed,the political partners are bribed and so on,Their main policy itself Kattavediyathai kattiyum,kodukkavendiyathai koduthum pera vendiyathai peruvathuthane
ReplyDeleteu've missed a point. u should have said umasankar is another Gandhi. that wud've completed the story.
ReplyDeleteWhat yar. u tink every one else are fools. first u need some savukkadi.
These Corrupted peoples are real kalavani's
ReplyDelete///ஜாபர் சேட் அவர்களுக்கும் கர்மவீரர் காமராஜர் அவர்களுக்கும், சவுக்கு தனது தனிப்பட்ட நன்றியை///
ReplyDeleteஎங்களது “அனானி கமெண்ட் போடும் கர்ம வீரர்கள் சங்கம்” சார்பாகவும் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
முகவிற்கு சரியான சவுக்கடி ! மான ரோஷம் உள்ளவரானால் இதற்க்கு நேரடி பதில் தரலாம் ...ஆனால் அவர் உங்களிடம் மறு கேள்வி கேட்பார் ! கேள்விக்கு கேள்வியே பதில் ! அச்சமின்றி நீங்கள் மட்டுமே இது போன்ற கட்டுரைகளை இடுகின்றீர்கள் ! கொஞ்சம் கூட பத்திரிக்கை தர்மம் பார்க்காமல் ...குமுதம்,ரிபோர்ட்டர் ,நக்கீரன் போன்ற பலரும் பெரிய திமுக ஜால்ராவாகி விட்டார்கள் !
ReplyDeleteவிஜயகாந்த் திருப்புமுனை ஏற்படுத்துவார் என்று பார்த்தால் அவர் குடும்ப அரசியல் செய்து பெயரை கெடுத்து கொண்டார் ...சீமானுக்கு தோள் கொடுக்கலாம் என்றால்...அசின்.,சூர்யாவுக்கு எதிராக எதுவும் பேசவில்லை அவர் இது வரைக்கும் (சிறையில் அவர் இருந்தாலும் கூட ).
இறுதியாக ...மதத்தை தேர்ந்தெடுக்கும் உரிமை தலித்துகளுக்கு மறுக்கப்படுவதும் ...அதை திமுக போன்ற கட்சிகள் மறிமுகமாய் ஆதரிப்பதும் மிக கேவலமாக இருக்கின்றது ! சவுக்கு ,தொடரட்டும் உம் நல் சமுதாய பணி! திமுக என்ன செய்தாலும் தட்டி கேட்க்க துப்பில்லாமல் கொடி பிடிக்கும் 'அதிர்ஷ்ட' அனாமத்துக்கள் அடங்கட்டும் !
-Vazhuthi
nandri thozhar.
ReplyDeleteCCCL Engira construction company yeei (poonul company) Block list serka sonnavar purachiyalar UMASANKAR 2007 - 2008 coimbatur TIDAL Tender issue.Andha CCCL Niruvanamum MrStalinum Purindhunarvu oppandham kadandha maadham JULY '10 pottargal 1800 kodikku THOOTTHUKKUDIYIL Edai savukku theriyappadutha virumbugiren.ENAVEY Diravidam pesum thalaivar Periyarin peyarai kalangapadutthakoodadhu.
CCCL COMPANY IPPODHU AIR PORT PROJECT SEIDHU KONNDU IRUKKIRADHU.
ReplyDeleteரமணி
ReplyDeleteசவுக்கின் சவாலுக்கு (அரசோடு) வாழ்த்துக்கள்
சவுக்கின் சாட்டையில அரசும் நிர்வாகமெனும் சட்டையும் தார்பாராக்கிக்கொண்டிருக்கும் சமூக பணிக்கு மக்கள் ஆதரவு என்றும் உண்டு.
ஆனால் சவுக்கே
அரசு அதிகாரிகளை அரியணையில் ஏற்றிவிட்டு கடைசியாக பெண்களை இழிவுபடுத்திடும் மிக பிற்போக்கான பழமொழியைதவறான ஒன்றை உதாரணமாக காட்டியிருக்கிறீர்கள். தயவு செய்து இதனை நீக்க வேண்டும். இன்று பெண்களை மையப்படுத்தியே தனது மூலதனத்தை பெருக்கிடும் முதலாளித்துவ, நிலவுடமை பிற்போக்கு பண்பாட்டு கலாச்சாரங்களை எதிர்த்திடும் சமூகச் சூழலில் ஒவ்வொரு சமூக ஆர்வலர்களும் பெண்ணை இழிவுபடுததும் மதிப்பீடுகள், கருத்தியல்களுக்கெதிரான மாற்று முற்போக்கான சமத்துவ பண்புகளை வளர்த்திடும் கருத்துகளை ஊக்குவிக்க வேண்டும் என நினைக்கிறேன்.
ஏனென்றால்
இந்த சமூகத்தில் பெண்ணை குறிப்பிடும் விபச்சாரி என்பதை ஆணுக்கு விபச்சாரன் என்றோ தாசி என்பதை தாசன் என்றோ விதவை என்பதை விதவையன் என்றோ சமூக அடையாளங்கள் படைக்கப்படவில்லை. (பெண்ணுக்குரிய சொற்களாக காத்து வருகிறது). ஆதலால் பெண்களை இழிவுபடுத்தும் ஆணாதிக்க தத்துவங்களை உடைத்தெறிய இத்தளங்கள் பயன்பட வேண்டும் என நினைக்கிறேன்.
ஆகையால் இந்த ஊழல்வாதிகளை அம்பலப்படுத்திட புதுமொழிகளை சவுக்கே உருவாக்கினால் என்ன?
>>In these circumstances, Savukku finds it even >>to make an application to Karunanidhi for a >>house site. Because, once you get an allotment, >>you become indebted to Karunanidhi to toe his >>line and sing Hosanna for him
ReplyDeleteI can understand your point. Thanks .
But still i have developed a high regard for UmaShankar (offcourse in comparison to others)
as you haven't mentioned any other claims.(might be you are saving it for a right time)
On separate not a PIL should be filed to remove this quota itself.
Dear Mr.Savukku,
ReplyDeleteGook Luck and Best wishes
from
Raama Veerasamy
.........ஆனால் இவர் தலித் என்பதற்காக இவர் மீது நடவடிக்கை எடுக்கப் படவில்லை என்பதை மட்டும் சவுக்கு ஒத்துக் கொள்கிறது. ஏனெனில், உமாசங்கர் தன்னை தலித் என்று என்றுமே அடையாளப் படுத்திக் கொண்டதில்லை.
ReplyDeleteகிரிஸ்துதாஸ் காந்தி போலவோ, சிவகாமி போலவோ, இன்று மத்திய அரசுப் பணியில் இருக்கும் அம்பேத்கார் ராஜ்குமார் போலவோ, தன்னை தலித் என்று இவர் அடையாளப் படுத்திக் கொண்டதே கிடையாது. இட ஒதுக்கீட்டைப் பெற்று அரசுப் பணிக்கு வந்த உடன், “புதுப் பார்பானாக“ மாறும் பல்வேறு தலித்துகளைப் போலவேதான் இருந்தார். முதன் முதலாக இவர் மீது திமுக அரசு ஒழுங்கு நடடிக்கை எடுக்கத் தொடங்கிய உடன் தான் இவர் தன்னை தலித் என அடையாளப் படுத்திக் கொண்டார்...........
"கிருஸ்துதாஸ் காந்தி எப்போது தலித் என கூறினார்? தேவேந்திரர் தலித் அல்ல, அரசு பணியில் இருந்ததால் தான் சமுதாயத்தை வெளியே சொல்லவில்லை. அரசு ஊழியர் சமுதாயத்தை வெளியில் சொல்வதும், அவற்றில் பங்கு கொள்வதும் தவறு என்பது சட்டம். அதனை பின்பற்றுவதில் தேவேந்திரர் சமூகம் உறுதியாக உள்ளது என்பத்ற்கு உமாசங்கரே சாட்சி".
"நாங்கள் தலித் அல்ல"
- தேவேந்திரர்கள்
தேவேந்திரர்கள் என்றால் என்ன ? நீங்கள் தலித் தான் . உங்களுக்குள் ஒற்றுமை இல்லாமல் தான் இன்று பந்தாடபடுகின்றீர்கள் ! திருமா தன கொள்கையை சிறிது மாற்றி அருந்ததியரின் உள் ஒதுக்கீட்டிற்கு ஆதரவளித்தார் !அர்த்தம் என்னவெனில் ...நீங்கள் மட்டும் மனதுக்குள் 'ஐய்யர்' என்று நினைத்துக்கொண்டு உங்கள் சமுதாய முன்னேற்றத்தை தடுக்கின்றீர்கள் ! எனக்கு தெரிந்து நெல்லை ,ஸ்ரீவைகுண்டம் ,குமரி மற்றும் சங்கரன்கோவில் பகுதிகளில் பத்தாம் வகுப்பு கூட தாண்டாத 'கிராமங்கள் ' இருக்கின்றன ! அவை எல்லாம் இந்த 'நவீன பார்பனர்களான 'தேவேந்திரர்கள் ' மட்டுமே வாழும் கிராமங்கள் தான் ! எல்லோரும் உமசங்கருக்கு ஆதரவு அளிக்கலாம் என்று ஆசைப்படும் பொது நீங்கள் இந்த சொத்தை சாதி கவுரவம் பார்க்க கூடாது என்பது ஏன் தாழ்மையான வேண்டுகோள் !
ReplyDeleteNB: தேவேந்திரர் என்பது '***ர்'... தலித் அல்லாமல் யார்?
-Vazhuthi
தேவேந்தர குல வேளாளர்கள் என்பவர்கள் 'தேவர்களுக்கு'ஆடை நெய்து கொடுத்தவர்கலம்(ஒரு பேட்டியில் கிருஷ்ணசாமி கூறியது ) எனவே அவர்களை தலித் என்று கூறக்கூடதாம் .அப்புறம் எதுக்குய்யா உனக்கு இட ஒதுக்கீடு .வேண்டாம்னு சொல்ல வேண்டியதுதானே?
ReplyDeleteMr.Savukku, did u know the life history of Umashankar?did u know how he misuse government amounts while he worked in Thiruvarur collectrate?did u know the name of IT concern has run by his wife?did u know that company and umashankar misue all the rights or this company growth?and finally did u know this bloody cheateing karunanithi how call umashankar?
ReplyDeletePlz deliver all this information to poor and foolish peoples of Tamil nadu.
I dont want give comments on comments.Today I have seen the copy of Shri Umashankars letter to the SC/STs authority at New Delhi.Our friends supporting Muthuvel Karunanidhi may go through it.Also I want to express my anguish about the present state of affairs in the country/Tamilnadu.All are restricted press reports. we dont know the other side.First Shri Govindasamy,Central Minister's election upheld.Mr,Jaffer Sait gets stay for Shri.Pugazhendhi's speech on him for four weeks(at least for a specific period}DMK functionary kills six,Arjun Singh got donations for his trust from Union Carbide,Gujarat encounter case accused wants to become app rover.Jayalalitha announce agitation against land acquisition for airport,where as she issued a GO in 2005 evacuating 5000 families for chennai Airport expansion.Shri Nallakannu speaks about the democracy and its pillars,where as,he supported this Govt and its leader as pillar of the democracy.This is apart from so may thefts,burglary accident deaths,police inefficiency etc etc for a day.So as one of the comments told ,we are the fools.
ReplyDeleteanonymous அவர்களே,
ReplyDeleteதமிழகத்தின் வரலாறு தெரியாமல் மள்ளர்(தேவேந்திரர்) பற்றி தவறாக எதையும் கூறவேண்டாம். அய்யர் என்பது தூய தமிழ்ச் சொல் .
சங்ககாலத்தில் மன்னர்கள் மற்றும் பெரியோர்கள் ஐயன் என்று அழைக்கப்பட்டனர். ஆரியர்களுக்கு எவன் எப்பொழுது அய்யர் என்ற பட்டத்தினை வழங்கினான் என்று உங்களால் கூற முடியுமா? இது எப்படி இருக்கிறது என்றால் , கள்ளர்கள் " தேவர் " என்கிற மள்ளர்களின் பட்டத்தை எடுத்துக்கொண்டு
நாங்கள் தான் மன்னர் பரம்பரை என்று கூறிக்கொள்வது போல் உள்ளது. சங்க இலக்கியத்திலோ அல்லது கல்வெட்டுகளிலோ எங்குமே கள்ளர்கள் தேவர் என்று பட்டம் கொண்டதாக வரலாறே கிடையாது. எந்தவொரு சேர சோழ பாண்டிய மன்னனோ கள்ளர் என்று ஒரு இடத்திலும் கூறப்பட்டது கிடையாது.
சேர சோழ பாண்டிய மரபினரான மள்ளர்கள் எவ்வாறு தலித் ஆக முடியும்?. தேவதாசி பரம்பரையில் வந்த அண்ணாவும் , கருணாநிதியும் தலித் அல்ல. ஆனால் அரச குடிகளான மள்ளர்களை வாய்கூசாமல் தலித் என்கிறீர்கள். திருட்டையே தொழிலாகக்கொண்டவன் தலித் இல்லை ஆனால் உழவையே தொழிலாக கொண்ட மள்ளர்களை குடும்பர்களை தலித் என்கிறீர்கள். என்னே உங்களின் யோக்கியதை!!
ரகு அவர்களே,
3000 ஆண்டுகளுக்கு முன்னமே அணுவைக்கண்டுபிடித்தவனுக்கு இன்று உள்ள முட்டாள் கல்வியை பயில அறிவு இருக்காது என்ற நினைக்கிறீர்கள்?
எம்மக்களின் கல்வியானது 400 ஆண்டுகளுக்கும் மேலாக அதாவது சேர சோழ பண்டியரான மள்ளர்கள் முற்றாக வீழ்ந்தத 16 , 17 - ஆம் நூட்ட்ராண்டுகளில் இருந்தே கல்வி மறுக்கப்பட்டவர்களாக உள்ளனர். மள்ளர்களின் பெரும்பாலானோர் SC பட்டியலில் இருந்து வெளியேறவே நினைக்கின்றனர். ஆனால் மீதிப்பேர் அதை எதிர்க்கின்றனர். இதற்க்கு மேற்கூறிய 400 ஆண்டுகால இடைவெளியே காரணம். மேலும் கிருஸ்ணசாமி ஒரு தேவேந்திரன் அல்ல . அவருக்கு மள்ளர் பற்றியோ அல்லது தமிழனின் வரலாறு பற்றியோ எதுவும் தெரியாது. தெலுங்கு கருணாநிதி தமிழன் என்று எமாற்றிக்கொண்டிருப்பதைப்போல் அவரும் மள்ளர்களை எமாற்றிக்கொண்டிருக்கிறார்.
Anonymous said...
ReplyDeleteதேவேந்திரர்கள் என்றால் என்ன ? நீங்கள் தலித் தான் . உங்களுக்குள் ஒற்றுமை இல்லாமல் தான் இன்று பந்தாடபடுகின்றீர்கள் ! திருமா தன கொள்கையை சிறிது மாற்றி அருந்ததியரின் உள் ஒதுக்கீட்டிற்கு ஆதரவளித்தார் !அர்த்தம் என்னவெனில் ...நீங்கள் மட்டும் மனதுக்குள் 'ஐய்யர்' என்று நினைத்துக்கொண்டு உங்கள் சமுதாய முன்னேற்றத்தை தடுக்கின்றீர்கள் ! எனக்கு தெரிந்து நெல்லை ,ஸ்ரீவைகுண்டம் ,குமரி மற்றும் சங்கரன்கோவில் பகுதிகளில் பத்தாம் வகுப்பு கூட தாண்டாத 'கிராமங்கள் ' இருக்கின்றன ! அவை எல்லாம் இந்த 'நவீன பார்பனர்களான 'தேவேந்திரர்கள் ' மட்டுமே வாழும் கிராமங்கள் தான் ! எல்லோரும் உமசங்கருக்கு ஆதரவு அளிக்கலாம் என்று ஆசைப்படும் பொது நீங்கள் இந்த சொத்தை சாதி கவுரவம் பார்க்க கூடாது என்பது ஏன் தாழ்மையான வேண்டுகோள் !
NB: தேவேந்திரர் என்பது '***ர்'... தலித் அல்லாமல் யார்?
-Vazhuthi
August 13, 2010 4:32 PM
ragu said...
தேவேந்தர குல வேளாளர்கள் என்பவர்கள் 'தேவர்களுக்கு'ஆடை நெய்து கொடுத்தவர்கலம்(ஒரு பேட்டியில் கிருஷ்ணசாமி கூறியது ) எனவே அவர்களை தலித் என்று கூறக்கூடதாம் .அப்புறம் எதுக்குய்யா உனக்கு இட ஒதுக்கீடு .வேண்டாம்னு சொல்ல வேண்டியதுதானே?
August 13, 2010 10:52 PM
Anonymous name-ல் பேசும் போதே உங்களுக்கு எங்கள் வரலாறு தெரியும், ஆனால் மறைக்க நினைக்கிறீர்கள். எங்கள் ஒற்றுமையை பற்றி உங்களுக்கு தெரியுமா? இடஒதுக்கீட்டால் நாங்கள் பாதிக்கப்பட்டது உங்களுக்கு தெரியுமா? பத்தாம் வகுப்பு தாண்டாத கிராமங்கள் என்கிறீர்கள், அதற்கு உங்களுடைய அரசு தான் காரணம் என்று உங்களுக்கு தெரியுமா? திருமா ஆதரவு அளித்தார் தான், அதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையே?
நாங்கள் ஐய்யர் என நினைக்கவில்லை, அவர்களை முதலில் எதிர்த்தது யார் என உங்களுக்கு தெரியுமா? திராவிட வரலாறு தெரியுமா? கோவில் சொத்து எங்களது மூதாதயையருடையது என்பது தெரியுமா? உழவுத் தொழில் தான் அடிப்படை என்றால் அவர்களிடம் தானே நிலம் இருந்திருக்க வேண்டும்?
எல்லோரும் உமாசங்கருக்கு ஆதரவு அளிக்கலாம், அது அவரது நேர்மைக்கு கிடைத்த பரிசு, அதற்கு நன்றி. எங்களது சாதிக்கு என்று கவுரவம் உண்டு, அதற்காக மற்றவர்களை இழிவுபடுத்தியது கிடையாது.
மீண்டும் சொல்கிறேன் நாங்கள் தலித் கிடையாது. நாங்களே தலித் என்றால் மன்னிக்கவும் மற்ற இனம்.....? தலித் என்பதற்கு அர்த்தம் தெரியாமல் பேசாதீர்கள்.
தேவர் இன வரலாறு தெரியாமல் அவர்களுக்கு நாங்கள் ஆடை நெய்து குடுத்தோம் என்று கூறாதீர்கள். இடஒதுக்கீடு நாங்கள் கேட்டோமா? இடஒதுக்கீட்டால் நாங்கள் தான் பாதிக்கப்பட்டோம். இடஒதுக்கீடும் வேண்டாம் SC list-ம் வேண்டாம்.
நண்பர் செல்லபாண்டி அவர்களே,நீங்கள் தலித் என்று சொல்வதையே கேவலமாக நினைகிறீர்கள் என்று எண்ணுகிறேன் .கடந்த நானுறு ஆண்டுகளாக உரிமைகள் மறுக்கப்பட்டதன் காரணமாகத்தான் இந்த சமூக உயர்வு பெற தலித் அந்தஸ்து அளித்துள்ளது அரசு (மற்ற சமுதாயம் ஏக போகமாக அனுபவித்த உயமைகளை நீங்களும் அனுபவிக்க வேன்டும் கல்வி வேலை வாய்ப்பு மூலம் பெறவேண்டும் என அம்பேத்கர் போன்ற பெரிய தலைவர்கள் எண்ணம தான் இந்த அளவு உயர்த்தியுள்ளது .அவர்கள் உங்களை போல் இவன் நம்முடைய பிரிவு இல்லை என்றெல்லாம் எண்ணவில்லை.இவ்வளவு வீரம் பேசுகிற நீங்கள் ஒருமித்த முடிவுடன் scபட்டியலில் இருந்து வெளியேறிவிட வேண்டியதுதானே?
ReplyDeleteஅதெல்லாம் சரி, ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கர் இடைக்கால பணிநீக்கபட்டதன் உண்மையான பின்னணி தான் என்ன ? போலி சாதிச்சான்றிதழ் குளறுபடி தவிர...அப்படியே அவர் போலி சாதிச்சான்றிதழ் அளித்திருந்தாலும் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டியது மத்திய அரசா ? மாநில அரசா ? இரண்டும் ஒன்றுதான் என்கிறீர்களா ?
ReplyDeleteரகு அவர்களே,
ReplyDelete"உரிமைகள் மறுக்கப்பட்டதன் காரணமாகத்தான் இந்த சமூக உயர்வு பெற தலித் அந்தஸ்து அளித்துள்ளது அரசு" என்கிறீர்கள், எங்களுக்கு உங்கள் அரசு உரிமைகளை வழங்கியுள்ளதாக கற்பனை பண்ணி கொள்ளாதீர்கள், எங்களின் சுய முன்னேற்றத்தால் தான் இந்த நிலையை அடைந்தோம், உங்கள் அரசின் இடஒதுக்கீட்டால் அல்ல, இடஒதுக்கீட்டால் ஒரு சமூகம் முன்னேற்றம் அடையும், சலுகைகளை அனுபவிக்கலாம் என்று யார் உங்களுக்கு கூறியது, வேண்டுமானால் நீங்கள் SC, தலித் லிஸ்டில் வாருங்கள், அதனை அனுபவித்துக் கொள்ளுங்கள், அதன் வலி உங்களுக்கு தெரியும்.
"இவ்வளவு வீரம் பேசுகிற நீங்கள் ஒருமித்த முடிவுடன் sc பட்டியலில் இருந்து வெளியேறிவிட வேண்டியதுதானே?" என்கிறீர்கள், உங்கள் அரசு எங்களை SC லிஸ்டில் சேர்க்க எங்களிடம் கருத்து கணிப்பு நடத்தியதா சொல்லுங்கள்? உங்கள் அரசின் விருப்பத்திற்க்காக தன்னிச்சையாக சேர்த்து விட்டது, எம் குல பெருமையை அழிக்க அனைவரும் சேர்ந்து செய்த சதியே நாங்கள் SC லிஸ்டில் இருப்பது, உங்கள் அரசிடம் நீங்களாவது எடுத்து கூறி எங்களை SC லிஸ்டில் இருந்து நீக்கச்சொல்லுங்கள் பார்க்கலாம்.
ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கர் இடைக்கால பணிநீக்கபட்டதன் உண்மையான பின்னணி போலி சாதிச்சான்றிதழ் குளறுபடி அல்ல, அனைவரும் அறிந்த ஒன்று தான், இதில் வேறு பின்ன்ணி கிடையாது. அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டியது மத்திய அரசும் அல்ல, மாநில அரசும் அல்ல, நீதிமன்றம் தான்!, வேண்டுமானால் அவர் பணி நீக்கம் செய்யப்படலாம், ஆனால் மத்திய அரசும், மாநில அரசும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே!!
சுந்தரலிங்க குடும்பனார் அவர்களே ,போராட வேண்டியது நீங்கள்தான் ,அரசிடம் உங்கள் பிரதிநிதிகளுடன் சென்று எங்களை ஏன் கேட்காமல் எஸ் .சி பட்டியலில் சேர்த்தீர்கள் என்று கேளுங்கள் பணியவில்லை என்றால் நீதிமன்றம் சென்று உங்களின் பழைய வரலாறுகளை சொல்லி எஸ்.சி பட்டியலில் இருந்து நீக்கசொல்லுங்கள்.( அதெப்படி அரச பரம்பரையை தலித் பட்டியலில் சேர்க்கலாம் )
ReplyDeleteஉண்மையான பஞ்சை பராரிகளை விட்டு விட்டு உயர் வகுப்பினரை எஸ்.சி பட்டியலில் சேர்த்தார்கள்?
Contradiction in the same Article:
ReplyDelete"ஜெயலலிதா மீது ஆயிரம் குற்றச் சாட்டுகளைச் சொன்னாலும், படித்த அதிகாரிகளை மரியாதைக் குறைவாகப் பேசினார் என்று ஒருவராலும் சொல்ல முடியாது."
"ஜெயலலிதாவும், சசிகலாவும் சேர்ந்து தனி அறையில் ஒரு ஆடிட்டரை செருப்பால் அடித்ததாக 1991-96 காலத்தில் புகார் வந்தது தெரியுமா ?"
Savukkukku Adi Sarukkiduchchu.