தமிழ்நாடு அரசின் மற்ற துறைகள் எங்கும் இல்லாத வண்ணம், தமிழக சட்டப் பேரவைத் துறையில் மட்டும் அலுவலக உதவியாளர்கள் எனப்படும் ஓ.ஏ பணியிடங்களுக்கான நியமனம் எந்த விதிமுறைக்கும் உட்படாமல் அதிகார மையங்களில் உள்ளவர்களின் மன விருப்பத்திற்கு ஏற்ப நடைபெறுவதாக திடுக்கிடும் தகவல் எழுந்துள்ளது.
அரசுப் பணிக்கு ஊழியர்களை தேர்ந்தெடுப்பதற்க இரண்டு முறைகள் உள்ளன. ஒன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்வு நடத்த ஆட்களைத் தேர்வு செய்வது, மற்றொன்று வேலைவாய்ப்பகம் மூலமாக பட்டியல் பெற்று, அப்பட்டியலில் உள்ளவர்களுக்கு நேர்காணல் நடத்தி தேர்வு செய்வது.
தமிழக சட்டமன்ற அலுவலகத்துக்கு, இந்த இரண்டு முறைகளும் இல்லாமல் யாரை வேண்டுமானாலும் நியமித்துக் கொள்ளலாம் என்ற புதிய விதிமுறை கடைபிடிக்கப் பட்டு, இதன் மூலம் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக திடுக்கிடும் தகவல் எழுந்துள்ளது.
1991ல் ஜெயலலிதா அரசாங்கத்தில், அவைத்தலைவராக இருந்தவர் சேடப்பட்டி முத்தையா. இந்த ஆட்சிக் காலம் முடிவடையும் தருவாயில், அவரிடம் நீண்ட நாட்கள் பணியாற்றிய ஒரு நான்கு பேருக்கு, சட்டசபையில் அலுவலக உதவியாளர் நியமனம் செய்வதற்காக விதிகளை தளர்த்தி நான்கு பேரை நியமிக்கிறார். அடுத்து வந்த திமுக ஆட்சி காலத்தில் பிடிஆர்.பழனிவேல்ராஜன் அவைத் தலைவராக இருந்த போது 20 நபர்கள் அலுவலக உதவியாளர்களாக நியமிக்கப் படுகின்றனர்.
மீண்டும் அதிமுக ஆட்சி வந்ததும், காளிமுத்து அவைத் தலைவராகிறார். இவர் அவைத்தலைவர் ஆனதும், பிடிஆர்.பழனிவேல் ராஜனால் நியமிக்கப் பட்ட 20 அலுவலக உதவியாளர்களை பணி நீக்கம் செய்துவிட்டு, புதிதாக 12 நபர்களை நியமிக்கிறார்.
2006ல் மீண்டும் திமுக ஆட்சி வந்ததும், பணி நீக்கம் செய்யப் பட்ட 20 நபர்கள் மீண்டும் பணி வழங்கப் பட வேண்டும் என்று நீதிமன்ற உத்தரவு பெறுகின்றனர். அவர்களுக்கு மீண்டும் நியமனம் வழங்கப் படுகிறது.
இப்போது சட்டமன்ற பேரவைச் செயலராக உள்ள செல்வராஜ் காளிமுத்துவால் பணி நியமனம் செய்யப் பட்ட 12 நபர்களை பணி நீக்கம் செய்கிறார். செய்து விட்டு 2006 முதல் இது வரை 40 நபர்களுக்கும் மேல் அலுவலக உதவியாளராக நியமனம் செய்திருக்கிறார் என்று தகவல்கள் கூறுகின்றன.
அலுவலக உதவியாளருக்கான கல்வித் தகுதி 8வது பாஸ் செய்திருக்க வேண்டும், 10வது பெயில் ஆகியிருக்க வேண்டும். ஆனால், 2006 முதல் அலுவலக உதவியாளராக நியமனம் செய்யப் பட்டிருக்கும் அனைவரும் பட்டதாரிகள் அல்லது முதுநிலை பட்டதாரிகள் என்று தகவல்கள் கூறுகின்றன. இவர்களில் ஒருவர் கூட வேலை வாய்ப்பகத்தில் பதிவு செய்தவர்கள் அல்ல என்றும், அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வும் எழுதியவர்கள் அல்ல என்றும் தகவல்கள் கூறுகின்றன.
இவ்வாறு நியமிக்கப் பட்டவர்கள் அனைவரும் அதிகார மையங்களுக்கு நெருக்கமானவர்கள் என தெரிகிறது. சமீபத்தில் வீட்டு வசதி வாரிய ஒதுக்கீடு சர்ச்சையில் சிக்கிய முதலமைச்சரின் செயலர் ஒருவரின் மூன்று உறவினர்கள் இது போல அலுவலக உதவியாளர்களாக நியமிக்கப் பட்டுள்ளனர். இது தவிர ஒரு பெண் அமைச்சரின் தம்பி ஒருவரும் இப்படி அரசுப் பணியாளராக நியமிக்கப் பட்டுள்ளார். அதிகார மையங்களுக்கு நெருக்கமானவர்கள் தவிர, இவ்வாறு நியமனம் செய்யப் பட்டவர்கள் அனைவரும் சராசரியாக இப்பதவிக்கு இரண்டு முதல் நான்கு லட்சம் லஞ்சமாக கொடுத்து பணியில் சேர்ந்திருக்கின்றனர்.
இதோடு இந்தக் கதை முடியவில்லை. அலுவலக உதவியாளர்களாக பணியில் சேர்ந்தவர்கள் ஒரிரு ஆண்டுகளில், உதவியாளர்களாகவோ, தட்டச்சர்களாகவோ பதவி உயர்வு பெறுகின்றனர். இவ்வாறு பதவி உயர்வு அளிப்பது, தேர்வாணையம் மூலம் நேரடி நியமனம் செய்யப் படும் இளைஞர்களின் உரிமையை பாதிக்கிறது என்று கூறப்படுகிறது. மேலும் இது போன்ற நியமனங்களில் இட ஒதுக்கீடு முறையும் பின்பற்றப் படுவதில்லை என்றும் கூறப் படுகிறது.
தட்டச்சர்களாகவோ, உதவியாளர்களாகவோ பதவி உயர்வு பெற்றவர்கள், ப்ரோபேஷன் எனப்படும் தகுதிகாண் பருவம் முடிவதற்க முன்பாகவே, அசிஸ்டன்ட் செக்ஷன் ஆபீசர் எனப்படும் உதவி பிரிவு அலுவலர்களாக பதவி உயர்வு பெறுகின்றனர். சில நேர்வுகளில், தட்டச்சராகி ஒரே வாரத்தில் பதவி உயர்வு வழங்கப் பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
பல ஆண்டுகளாக பதவி உயர்வு கிடைக்காமல் காத்திருப்போர் பட்டியலில் உள்ள பலருக்கு, இது போன்ற புறவழி மூலம் பதவி உயர்வு பெறும் செல்வாக்கு படைத்த நபர்களின் பதவி உயர்வுகள் கடும் மனவருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இது மட்டுமல்லாமல், 2006 முதல் நியமனம் செய்யப் பட்ட பல்வேறு அலுவலக உதவியாளர்கள் வருகைப் பதிவேட்டில் கூட கையொப்பம் இடுவதில்லை என்றும், அதர் ட்யூட்டி எனப்படும் ஓடி என இவர்கள் பெயருக்கு நேராக வருகைப் பதிவேட்டில் குறிப்படப் படுகிறது என்றும், இவ்வாறு காணாமல் இருப்பவர்கள், அமைச்சர்கள் வீட்டில் பணி புரிவதாக கூறிக் கொள்கிறார்கள் என்றும், உண்மையிலேயே அமைச்சர்கள் வீட்டில் பணி புரிகிறார்களா, அல்லது எங்கும் பணி புரியாமலேயே ஊதியம் பெறுகிறார்களா என்பது யாருக்கும் தெரியாது என்று கூறப் படுகிறது.
அரசு வேலை வாய்ப்பு அலுவலகங்களிள் பதிவு செய்து விட்டு காத்திருக்கும் லட்சக் கணக்கான இளைஞர்கள் இருக்கையில் அவர்களின் வாய்ப்பை பறிக்கும் வகையில் நடக்கும் இது போன்ற நியமனங்கள் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களிடையே படும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் பதவி உயர்வு கிடைக்காமல் காத்திருக்கும் தலைமைச் செயலக பணியாளர்கள் மத்தியிலும் இந்த மோசடி நியமனங்களும் பதவி உயர்வுகளும் பெரும் மனக்குமைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முதல்வரின் நேரடி மேற்பார்வையில் வரும் சட்டமன்ற துறையிலேயே நடக்கும் இந்த பெரும் மோசடி முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
நன்றி: நம்தினமதி நாளிதழ்
சவுக்கு
From the experiences of the past how you expect that the existing Mudalvar will take action against his own men.
ReplyDeleteஇது என்ன கூத்து - கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு போன அங்க ரெண்டு கொடுமை .........
ReplyDeleteஊழல் புற்று நோயைப் பரவிவிட்டது...
ReplyDeleteமன்னிக்கவும் ..
ReplyDeleteஊழல் புற்று நோயாய்ப் பரவிவிட்டது...
உங்கள் பதிவுகள் படிக்கும்போது சராசரி மனிதனாக நான் வரி கட்டிக்கொண்டு நாணயமாக இருக்கும் போது அரசாங்கம் ஊழலில் திளைத்திருப்பது கண்டு வேதனை அடைகிறேன்.
ReplyDeletewhy Stalin has gone to London..plz write an eloborate article on this...
ReplyDeleteநெங்சு பொறுக்குதில்லையே முதலரின் நிலைகெட்ட மன்தரின் வேலை கண்டு நெஞ்ஞ்சு பொறுக்குதில்லையே?
ReplyDelete//அரசு வேலை வாய்ப்பு அலுவலகங்களிள் பதிவு செய்து விட்டு காத்திருக்கும் லட்சக் கணக்கான இளைஞர்கள் இருக்கையில்//
ReplyDeleteஅந்த லட்சக் கணக்கானவர்களில் இவர்களும் சேர்த்தியாக இருக்கும். லட்சகணக்கில் எல்லாருக்கும் வேலை கொடுக்க முடியாது. இப்படி ஒரு சிலருக்கு கொடுக்கிறார்களோ என்னவோ.
நிற்க, சில சமயம் என் மனதில் தோன்றுவது அப்படியே நடந்ததுண்டு. இப்போது என் மனதில் தோன்றுவது மற்றும் வேறு சில development எல்லாவற்றையும் பார்த்தால் மேலே உள்ள countdownஐ 2011 என்பதற்கு பதிலாக 2016 என்று போட வேண்டி வரும் போலிருக்கிறது.
IAS aganuma? 35 lakhs selavaagum.Nambikai illaya?Nambungappa.innum konja naal la T.Nagar renganathan street la kadai virichu IAS,IPS post la irunthu clerk,pune velai aelam nadathuvaanga .panam ullavargal vaangi kollalam.Thuttu illatha annakaavadinga vedikai paarklam,enna maathiri.MP,MLA,PM,CM,President post ellam vaarisu arasiyal vaathigalukku mattume.solli puttaen.
ReplyDeleteஇந்திய அரசியல்வாதிகளுக்கு ஒரு திறமையுண்டு...புத்திசாலி வாரிசுகளை வியாபாரத்திலும்...மக்கு வாரிசுகளை அரசியலுக்கும் கொண்டு வருவார்கள்..!! அரசியலில் இருப்பவர்கள் வியாபாரிகளுக்கு உதவுவார்கள்..!! 6ஆவது அறிவை பயன்படுத்தாத வரை தமிழனால் முன்னேற முடியாது..!!
ReplyDeleteஇந்திய அரசியல்வாதிகளுக்கு ஒரு திறமையுண்டு...புத்திசாலி வாரிசுகளை வியாபாரத்திலும்...மக்கு வாரிசுகளை அரசியலுக்கும் கொண்டு வருவார்கள்..!! அரசியலில் இருப்பவர்கள் வியாபாரிகளுக்கு உதவுவார்கள்..!! 6ஆவது அறிவை பயன்படுத்தாத வரை தமிழனால் முன்னேற முடியாது..!!
ReplyDeletesuper ..............
iyya atchi nirungukirathu mudinthavarai suruttivittu otapokirar appuram amma atchi thodankiyathum mannarkudi kumpal attam thodankividum appuram savukkuilakku maththi payum
ReplyDelete