தமிழ்நாடு தலைமைத் தகவல் ஆணையராக தற்போதைய தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதியை நியமிக்கப் படப் போவதாக எழுந்த செய்திகளும், அதையொட்டி எழுந்த சர்ச்சைகளும், எதிர்க்கட்சித் தலைவர் செல்வி ஜெயலலிதா இக்கூட்டம் தொடர்பான விபரங்கள் வழங்கப் படவில்லை என்பதால் அதில் பங்கேற்க மறுத்ததும் அறிந்திருப்பீர்கள்.
இந்த விவகாரங்களுக்குள் செல்லும் முன்பாக, இந்த சட்டம் குறித்து சற்று பார்ப்போம்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தின் மிக மோசமான வீழ்ச்சி அணு சக்தி ஒப்பந்தம் என்றால், வரலாற்றுப் பக்கங்களில் இடம் பிடிக்கக் கூடிய அளவுக்கு மிகப் பெரிய சாதனை இந்த தகவல் அறியும் உரிமைச் சட்டம்.
குடியரசு, மக்களுக்கான மக்களின் அரசாங்கம் என்பதெல்லாம் வெறும் காகிதங்களில் மட்டுமே இருந்து வந்தது. ஒரு சாதாரண ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்த ஒரு குடி மகனுக்கு, அவனது விண்ணப்பம் என்ன ஆனது என்பதை தெரிந்து கொள்ளக் கூட உரிமை இல்லாதிருந்தால் அது என்ன மக்கள் ஆட்சி ?
மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் அரசு ஊழியர்கள், இந்த மக்களை நடத்தும் விதம் என்ன என்பது பரவலாக அனைவருக்குமே தெரியும்.
அந்த மக்களுக்கு தங்களுக்கு உண்மையிலேயே அதிகாரம் இருக்கிறது, இந்த அரசு ஊழியர்களை கேள்வி கேட்கலாம். இவர்களை accountable ஆக்கலாம் என்ற அதிகாரத்தை வழங்கியது இந்த தகவல் அறியும் உரிமைச் சட்டம்.
இந்தியாவின் ஒரு பெரும் மாற்றத்தை இந்தச் சட்டம் வழங்கியுள்ளது என்றால் மிகையாகாது.
இந்தச் சட்டத்தின் பலனையும், இந்தச் சட்டம் என்ன செய்யும் என்பதையும், 2007ல் நடந்த ஒரு சம்பவத்தின் மூலமாக விளக்கினால் சுவையாக இருக்கும்.
அண்ணா பல்கலைகழகத்தில் அரசு கோட்டா என்று ஒரு கோட்டாவை வைத்துக் கொண்டு, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் பிள்ளைகளுக்கு, பொறியியல் இடங்கள் வழங்கப் பட்டு வந்தன. செல்வி ஜெயலலிதாவின் மீதான வழக்குகளை கவனித்து, அந்த வழக்குகளை மூடிய ராதாகிருஷ்ணன் மற்றும் நரேந்திர பால் சிங் என்ற இருவரின் பிள்ளைகள் இது போல சீட் வாங்கிய விவகாரம் தொடர்பான விவரங்களை கேட்டு, மாதவரம் பால் பண்ணையைச் சேர்ந்த சேகர் என்பவர் அண்ணா பல்கலைகழகத்துக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக விண்ணப்பிக்கிறார்.
இரண்டு நாட்கள் கழித்து, அவர் வீட்டுக்கு தேடி வந்த ஒருவர் தன்னை அண்ணா பல்கலைகழகத்தின் ஊழியர் என்று அறிமுகப் படுத்திக் கொண்டு, அவருக்கோ, அவர் கூறும் நபர்களுக்கோ, அண்ணா பல்கலைகழகத்தில் இடம் வழங்கப் படும் என்றும், அந்த விண்ணப்பத்தை வாபஸ் வாங்க வேண்டும் என்று கோருகிறார். அந்த விண்ணப்பத்தை அனுப்பியவர் சவுக்கு நண்பர் அல்லவா. முடியாது என்கிறார்.
தகவல்கள் எதுவும் வழங்கப் படவில்லை. ஆனால், சேகருக்கு, காவல்துறையினர் மூலமாக மிரட்டல் தொடர்கிறது. தினமும் ஒரு காவலர் சேகர் வீட்டுக்கோ, அவர் கடைக்கோ வந்து, எதற்காக இவ்வாறு விண்ணப்பிக்கிறீர்கள் என்றும், உங்களுக்கு வேண்டியதை செய்து தருகிறோம் என்றும் வந்து கொண்டே இருந்தார்கள்.
காவல்துறையினரால் மிரட்டப் படும் ஆர்டிஐ விண்ணப்பதாரார் என்று டெக்கான் க்ரானிக்கிள் நாளிதழில் முதல் பக்கத்தில் பெரிய செய்தி வந்தது.
ஆனால் இதற்குப் பிறகும், இந்த மிரட்டல் நிற்கவில்லை. ராதாகிருஷ்ணனின் அல்லக்கையாக அன்றும், இன்றும் இருக்கும் கஜபதி என்ற ஆய்வாளர், இந்த சேகரை மிரட்டுவதற்காகவே மாதவரம் காவல்நிலையத்தில் நியமிக்கப் படுகிறார்.
அண்ணா பல்கலைகழகமும் தகவல்கள் தருவதாக இல்லை. கடிதப் போக்குவரத்து தொடர்கிறது. இந்நிலையில் மிரட்டல் தொடர்ந்ததும், சேகர், சவுக்கிடம், இனி தன்னால் விண்ணப்பங்கள் அனுப்ப இயலாது என்று தெரிவிக்கிறார்.
இப்போதுதான், யாஹுவின் க்ரூப்புகளிள் ஒன்றாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்காகவே இருக்கும், ஹம் ஜானேங்கே என்று க்ரூப் உதவிக்கு வந்தது. இது போல சேகர் மிரட்டப் படும் விபரங்களை அந்த க்ரூப்பில் பதிவு செய்தவுடன், இந்தியா முழுவதும் இருந்து ஆதரவுக் குரல் வந்தது.
அந்த விண்ணப்பத்தை எங்களுக்கு அனுப்பி வையுங்கள். நாங்கள் அனுப்புகிறோம். எங்களை யார் மிரட்டுகிறார்கள் என்று பார்ப்போம் என்று இந்தியா முழுவதும் இருந்து ஆதரவு குரல் வந்தது. இதையடுத்து, ஒரே வாரத்தில் அண்ணா பல்கலைகழகத்துக்கு, ராதாகிருஷ்ணன், நரேந்திர பால் சிங் பிள்ளைகள் தொடர்பான தகவல்கள் கேட்டு, 150 விண்ணப்பங்கள் வந்தவுடன், ராதாகிருஷ்ணன் பின் வாங்கினார்.
இப்படி, அதிகாரத்தின் உயர் பீடங்களில் உள்ளவர்களை ஆட்டிப் படைக்க வல்லது இது போல பல வெற்றிக் கதைகள் இந்தியா முழுவதும் உண்டு.
ஆனால் தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது ? ஓய்வு பெற்றவர்களின் மடமாக தகவல் ஆணையம் இருந்து வருகிறது. தமிழக தகவல் ஆணையம், ஓய்வு பெற்றவர்களின் மடமாக, கருணாநிதியின் கைப்பாவைகளாக இருந்து அரசிலிருந்து ஓய்வு பெற்றவர்களின் புகலிடமாக இந்த ஆணையத்தை மாற்றி வைத்திருக்கிறார் கருணாநிதி.
தமிழக தகவல் ஆணையம் உருவான போது, மூன்று தகவல் ஆணையர்களும், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் தான். எஸ்.ராமகிருஷ்ணன், ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் ஆர்.ரத்தினசாமி ஆகியோர்.
இதில் தலைமை தகவல் ஆணையராக உள்ள எஸ்.ராமகிருஷ்ணன் இந்தச் சட்டத்தை அமல்படுத்துவதில் மிகுந்த முனைப்பாக இருக்கிறார் என்றும், பரவலாக சிறந்த ஆணைகளை வழங்கியிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
குறிப்பாக அண்ணா பல்கலைகழகத்தில் கேட்கப் பட்ட கேள்விகளுக்கு, பதில் அளிக்க மறுத்த நிலையில் நடந்த விசாரணையின் போது, எஸ்.ராமகிருஷ்ணன் பல்கலைகழகத்தில் இருந்து வந்த அதிகாரிகளிடம் கேட்ட கேள்வி. “நீங்கள் பிசிக்ஸ் ப்ராபசர் தானே ? தண்ணீரின் உறை நிலை என்ன ? “ அந்த அதிகாரி 0 டிகிரி என்றார். ராமகிருஷ்ணன், இதற்கு வேறு பதில் இருக்க முடியுமா ? என்று கேட்டார். அந்த அதிகாரி இல்லை என்று மறுத்ததும், அதே போல மனுதாரர் கேட்ட கேள்விக்கு வேறு பதில்கள் இருக்க முடியாது. ஆகையால், உடனடியாக தகவல்களை வழங்குங்கள் என்று கூறினார்.
2008ல், மூன்று தகவல் ஆணையர்களைத் தவிரவும், மேலும் மூன்று தகவல் ஆணையர்களை நியமிக்க வேண்டி அரசுக்கு கருத்துரு அனுப்பப் பட்டு அதற்கு ஒப்புதல் அளிக்கப் படுகிறது.
இந்த காலகட்டத்தில் தகவல் ஆணையர்கள் ஓய்வு பெற்றால், தங்களை அந்த பதவிக்கு பரிசீலிக்கும் படி, 8 நபர்கள் அரசிடம் விண்ணப்பம் அளித்து, அந்த விண்ணப்பங்களும் நிலுவையில் உள்ளன.
31 மார்ச் 2008ல் நான்கு ஆணையர்களை நியமிக்கும் பணி தொடர்பாக கோப்பு தொடங்கப் படுகிறது. இந்தக் கோப்பு முதல்வரின் செயலாளராக இருந்த டி.ஆர் ராமசாமிக்கு வருகிறது. டி.ஆர்.ராமசாமி, 30.04.2008ல் ஓய்வு பெற உள்ளார்.
நான்கு பேர் இந்தப் பதவிக்காக விண்ணப்பங்களை அனுப்புகின்றனர். ஒருவர் சாரதா நம்பி ஆரூரான். இவர் கல்லூரியில் தமிழ் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். தமிழறிஞராக இருந்ததைத் தவிர, இவருக்கு சட்டத்தைப் பற்றியோ, மக்களின் கஷ்டத்தைப் பற்றியோ எந்த அறிவும் இல்லை.
அடுத்தவர் ட்டி.சீனிவாசன். இவர் புள்ளியியல் துறையில் இணை இயக்குநர். ஆனால் இவர் விண்ணப்பித்ததற்கான முதல் காரணம், பேராசிரியர் அன்பழகனின் உதவியாளராக இவர் இருந்ததுதான்.
அடுத்த நபர் ஆர்.பெருமாள்சாமி. இவர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் உறுப்பினராக இருந்து ஓய்வு பெற்றவர். இந்த பெருமாள்சாமியைப் போன்ற, சட்ட அறிவு துளியும் இல்லாத நபரை சவுக்கு பார்த்ததே இல்லை. ஒரு வழக்குக்காக இவரிடம் வாதாட சென்ற போது, சட்டம் குறித்த இவரது அறிவீனம் வெளிப்படையாக தெரிந்தது.
அடுத்து இப்பதவிக்கு விண்ணப்பித்த நபர்தான் நமது அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறார். அவர்தான் டி.ஆர்.ராமசாமி. அரசுப் பணியில் இருந்து கொண்டே, ஓய்வு பெற்றவுடன், தன்னை தகவல் ஆணையராக நியமிக்க வேண்டும் என்று கருணாநிதியிடம் விண்ணப்பபிக்கிறார். இதை கருணாநிதியும் ஏற்று, இவரை தகவல் ஆணையராக நியமிக்கிறார். 30.04.2008ல் பணியில் இருந்து ஓய்வு பெறும், டி.ஆர்.ராமசாமி, 01.05.2008அன்று தகவல் ஆணையராக நியமிக்கப் படுகிறார்.
எப்படி இருக்கிறது ? இது போல தகவல் ஆணையாளர்களாக நியமிக்கப் படுபவர்கள், கருணாநிதியின் கைப்பாவைகளாக இருப்பார்களா, அல்லது தகவல் வழங்குவார்களா ?
இந்த டி.ஆர்.ராமசாமி, 26-2001ல் கருணாநிதியின் செயலாளராக இருந்த போது, ஜெயலலிதா மீது லண்டன் ஓட்டல் வழக்கில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யச் சொல்லி, கருணாநிதி சார்பாக, ஒரு நாளைக்கு ஐந்து முறை, விசாரணை அதிகாரியை போனில் மிரட்டியவர்தான் இந்த ராமசாமி.
இப்போது, இந்த ராமசாமி, தலைமை தகவல் ஆணையராக வேண்டுமென்று முயற்சி செய்து வருவதுதான் கொடுமையிலும் கொடுமை.
சமீபத்தில் இந்த ராமசாமியின் உடல்நிலை சரியில்லாமல் போகவும், இந்த ஆளின் சிகிச்சைக்கு அரசு மக்கள் வரிப்பணத்தில் இருந்து 12.54 லட்சம் வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது.
பிச்சைக்காரனா இந்த ராமசாமி ? சம்பளம் வாங்கவில்லை ? அரசுப் பொது மருத்துவமனைக்கு சென்றிருக்கிறானா இந்த ஆள் ? அங்கே நடைபாதையில் சிகிச்சைக்காக காத்திருக்கும் மக்களின் முகங்களை பார்த்திருக்கிறானா இந்த ராமசாமி ?
மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடிப்பதையே தொழிலாக கொண்ட இது போன்ற பன்றிகளை தகவல் ஆணையராக வைத்திருந்தால், மக்களுக்கு தகவல் எப்படி வரும் ? ஊருக்கெல்லாம் கலைஞர் காப்பீட்டுத் திட்டம், ராமசாமிக்கு மட்டும் 13 லட்சத்திற்கு சிறப்புத் திட்டமா ? (மரியாதைக் குறைவான வார்த்தைகளை பயன்படுத்துவதற்கு மூத்த பத்திரிக்கையாளர்கள் மன்னிக்க வேண்டும். ஆத்திரத்தை அடக்க முடியவில்லை )
தற்போது இந்த தகவல் ஆணையம் எப்படி செயல்பட்டு வருகிறது. தகவல் ஆணையத்தை இரண்டாக உடைத்து விட்டார் இந்த ராமசாமி. இப்போது ராமசாமி தலைமையிலான நான்கு பேர் ஒரு குழு. எஸ்.ராமகிருஷ்ணன் தலைமையிலான மூன்று பேர் இன்னொரு குழு.
இப்போது தகவல் ஆணையத்தின் முன்பு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் நிலுவையில் இருக்கின்றன. இன்று அனுப்பும் அப்பீல், விசாரணைக்கு வருவதற்கு, 8 மாதம் முதல் ஒரு வருடம் ஆகிறது.
அண்ணாமலை பல்கலைகழகத்திடம் ஒரு தகவல் கேட்கப் படுகிறது. அந்தத் தகவல பல்கலைகழகம் வழங்கவில்லை. தகவல் ஆணையம் 4 வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என்று உத்தரவிடுகிறது. 12 வாரங்கள் ஆகின்றன. அப்போதும் தகவல் வழங்கப் படவில்லை. மீண்டும் தகவல் ஆணையத்திற்கு அப்பீல் வருகிறது. அப்போது, இந்த டி.ஆர்.ராமசாமி என்ன உத்தரவிட்டார் தெரியுமா ? “சீக்கிரம் தகவலை கொடுங்கள்“ என்பதுதான் அது.
டி.ஆர்.ராமசாமி தலைமையிலான குழு, தொடர்ந்து அரசுக்கு ஆதரவான உத்தரவுகளை மட்டுமே பிறப்பிப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
சட்டநாதன் என்ற ஊரகவளர்ச்சித் துறையில் பணியாற்றும் நேர்மையான அதிகாரியை தகவல் ஆணைய பதிவாளராக நியமிக்க வேண்டும் என்று தற்போதைய தலைமை ஆணையர் பரிந்துரைக்கிறார். இதற்கான கருத்துரு, ஊரக வளர்ச்சித் துறை, தலைமைச் செயலகம் ஆகிய இடங்களில் ஒப்புதல் பெறப்படுகிறது. தலைமைச் செயலகத்தில் உள்ள ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் அசோக் வரதன் செட்டியிடம் இந்தக் கோப்பு செல்லும் போது, இதை ராமசாமியிடம் சொல்லி விடுகிறார் செட்டி. கோப்பு, துறை அமைச்சர் ஆற்காடு வீராச்சாமியிடம் செல்லும் போது, ராமாசாமி, ஆற்காட்டை சந்தித்து, இதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறார். அதன் படியே, ஆற்காடு ஒப்புதல் அளிக்க மறுத்து விடுகிறார்.
ஒரு லட்சம் விண்ணப்பங்களை நிலுவையில் வைத்திருக்கும் தகவல் ஆணையத்தின் பணியாளர்களின் எண்ணிக்கை தெரியுமா ? ஆணையத்தின் செயலாளர் முதல், பெருக்குபவர் சேர்த்து மொத்தம் ஐம்பதுக்கும் குறைவு. இதற்கான பணியிடங்களை கூடுதலாக கேட்டுப் பெற வேண்டிய தகவல் ஆணையர் ராமசாமி அரசிடம் அனுப்பிய கருத்துரு என்ன தெரியுமா ?
ஆணைய கட்டிடத்தை முழுமையாக குளிர்பதன வசதி செய்வது. அனைத்து ஆணையர்களுக்கும் புதிய கார் வேண்டுமென கேட்டுள்ளார் ராமசாமி. இந்த ராமசாமியை செருப்பால் அடிக்க வேண்டாம் ?
இது போன்ற மக்கள் விரோதிகளைத் தான் கருணாநிதி தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுகிறார்.
அடுத்த தலைமை தகவல் ஆணையாளராக நியமிக்கப் படுவதாக பரவலாக பேசப்படும் ஸ்ரீபதி எப்படிப் பட்ட நபர் ?
லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் உபாத்யாயிடம் காவல்துறை அதிகாரிகள் ராதாகிருஷ்ணன் மற்றும் நரேந்திர பால் சிங்கிடம் புகார் ஒன்று வந்து, அது குறித்து விசாரித்துக் கொண்டு இருக்கிறார். அப்போது, உபாத்யாயிடம் தொலைபேசியில் பேசிய ஸ்ரீபதி, இது குறித்து விசாரிக்காதீர்கள். ஐபிஎஸ் அதிகாரிகள் மீது இது போல விசாரணை நடத்தக் கூடாது என்று மிரட்டுகிறார். நீங்கள் என்னை வந்து சந்தித்து விட்டு அதற்குப் பிறகு விசாரணை நடத்துங்கள் என்று உபாத்யாய்க்கு உத்தரவிடுகிறார்.
இந்த கேடுகெட்டவனுக்கு, தலைமை தகவல் ஆணையர் பதவி ஒரு கேடா ? 60 வயது வரை அரசுப் பதவி சுகங்களை அனுபவித்தது போதாதா ?
தகவல் அறியும் உரிமைச் சட்டம் மற்றும் பரவலான சமூக விஷயங்களில் தலையிடும் மாதவிடம் சவுக்கு பேசியபோது, முதலில் இந்த நியமனங்கள் வெளிப்படைத் தன்மையாக செய்யப் பட வேண்டும் என்றார். எந்த அடிப்படையில் தகவல் ஆணையர்கள் நியமிக்கப் படுகிறார்கள் என்று ரகசியமாக வைத்திருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது என்றார். அரசுத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களை இவ்வாறு நியமிப்பதால், முக்கிய வழக்குகளில் எளிதாக அரசு செல்வாக்கு செலுத்தி தகவல் அளிக்காமல் செய்து விடுவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறினார்.
மற்றோரு சமூக ஆர்வலரான நித்யானந் ஜெயராமன் சவுக்கிடம் பேசும் போது, மகாத்மா காந்தியை தகவல் ஆணையராக நியமித்தால் கூட, வெளிப்படையான தன்மையோடு இருக்க வேண்டும் என்றார். இப்போது அரசால் நாமினேட் செய்யப் பட்டிருக்கும் நபர்கள் தான் சரியான நபர்கள் என்பதற்கான எவ்வித ஆதாரங்களையும் அரசு வெளியிடாத நிலையில், இதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் என்று கேள்வி எழுப்புகிறார் நித்யானந்.
தலைமை தகவல் ஆணையர் பதவி என்பது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பாதுகாக்கும் ஒரு பதவி அந்தப் பதவிக்கு ஒரு நபரை நியமனம் செய்கையில் மிகுந்த கவனத்தோடு செய்ய வேண்டும். ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகளை தகவல் ஆணையர்களாக நியமனம் செய்வதால் அவர்களுக்கு பொதுமக்களின் கஷ்டத்தை விட, அரசு ஊழியர்களின் கஷ்டத்தின் மேல்தான் அதிக அக்கறை இருக்கிறது. அதனால் அவர்கள், அரசு ஊழியர்களுக்கு சாதகமாகவே பல நேர்வுகளில் முடிவெடுக்கிறார்கள் என்று கூறுகிறார்.
மேலும் அரசு அதிகாரிகளுக்குத் தான் நிர்வாகத்தைப் பற்றி நன்கு தெரியும் என்ற மாயை ஒன்று இருக்கிறது. இது தவறு. அரசு அதிகாரிகளுக்கு நிர்வாகம் நன்கு தெரியும் என்பது உண்மையானால், இந்தியா எங்கேயோ சென்றிருக்கும். அது ஒரு மாயை. அந்த மாயையை உடைக்க, அரசு அதிகாரிகள் அல்லாத ஒருவரை தலைமை தகவல் ஆணையராக நியமிக்க வேண்டும் என்று கூறினார் நித்யானந்த்.
எத்தனை சட்டங்கள் போட்டாலும், இந்த அரசு அதிகாரிகள் நினைத்தால், அந்த சட்டத்தை வலுவிழக்கச் செய்து விட முடியும் என்பதற்கு தமிழகம் ஒரு நல்ல உதாரணம்.
டெல்லியில் இருப்பது போன்று, தமிழகத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான ஒரு நெட்வொர்க் இல்லாதது ஒரு மிகப் பெரும் குறை.
நித்யானந்த் மற்றும் மாதவ் போன்ற சமூக ஆர்வலர்கள், இதற்கான முன் முயற்சி எடுப்பார்களேயானால், சவுக்கு அவர்களுக்கு துணை நிற்கும்.
(ஜாபர் சேட் சார். உங்களுக்கு சவுக்கு இன்னைக்கு லீவ் விட்ருச்சு. நாளைக்கு உங்களைப் பத்தி எழுதும் என்ன… கோவிச்சுக்காதீங்க. சரி மணி ஆர்டர் வந்துச்சா ? பணம் இது வரைக்கும் எவ்ளோ கலெக்ட் ஆயிருக்கு ? அந்த பணத்துக்காவது ஒழுங்கா கணக்கு வையுங்க. ரகசிய நிதி மாதிரி இஷ்டத்துக்கு இருக்காதீங்க. இது சவுக்கு வாசகர்களோட பணம். ஒவ்வொரு பைசாவும் உழைப்பால வந்தது. ரத்த அழுத்தம் ரொம்ப அதிகமாயிடுச்சாமே ? சவுக்க படிக்காதீங்கன்னு சொன்னா கேக்குறீங்களா ? உடம்ப பாத்துக்குங்க. அடுத்த வாரமும் நெறய்ய மணி ஆர்டர் வரும் என்ன ?)
சவுக்கு
மிக்க நன்றி அய்யா.. தங்கள் பதிவிற்கு . இது போலவே ஹிந்து அரநிலயதுரை பற்றியும் ஒரு ஆய்வு செய்ய வேண்டுக்கிரோம் .குறிப்பாக கோவை இணை ஆணையர் அசோக் அவர்களின் திருவிளைய்டல்கள் பற்றி ஒரு மடலும் வார்த்தைக்கு வார்த்தை அவர் காந்தி மா.. துர்கா மா .. என்று குலைவதும் பெரியகருப்பன் மனைவி கறக்கிறார் என்று கூறி வெள்ளி தங்கம் வங்கி குவிப்பதும் தனியே பேசும்போது இவள் சாராயம் விற்றவள் என்று கூறுவதும் பிரச்சினை ஆனால் நான் அழகிரி ஆல் என்பதும் கோவை இன் எல்லா கோயிலும் திருப்பணி ஈதும் இன்றி இவரின் வீடு முழுதும் ஜொலிப்பதும் மிக அழகு... நமது சவுக்கு ன் விளம்பரம் இவருக்கு உபயோகம் ஆகும்... ப்ளீஸ் ...
ReplyDeletenice article.
ReplyDeleteதோழரே
ReplyDeleteமீண்டும் உங்கள் பதிப்பை பார்த்ததில் மகிழ்ச்சி
கடந்த 3 நாட்களாக ஒரு பதிப்பும் வெளி வர வில்லையே, ஏன்? என்ன ஆனது?
கவுன்ட் டவுன் எங்கே போனது?
//எத்தனை சட்டங்கள் போட்டாலும், இந்த அரசு அதிகாரிகள் நினைத்தால், அந்த சட்டத்தை வலுவிழக்கச் செய்து விட முடியும் என்பதற்கு தமிழகம் ஒரு நல்ல உதாரணம்.//
ReplyDeleteஉண்மை...உண்மை...உண்மை...
When the RTI act was promulgated everybody was greeting it as if it is the only way to protect democratic rights.But as far I know the RTI act only enabled to know the irregularities but I dont know how much it has helped to eradicate irregularities.Particularly in Tamilnadu the officials are exploring new ideas to defeay the act
ReplyDeleteசூப்பர் ...
ReplyDeleteExcellent Savukku!
ReplyDeleteForm a Big Network. We ready to Support You.
Tell as How the Savukku readers can Help You.
Please Reply!!
நமக்கு முன்னோடியான தலைவர் என்று சொல்லிக்கொள்ள தமிழ்நாட்டில் ஒருவரும் இல்லை..(குறைந்தபட்சம் அச்சுனாந்தன்,எடியூரப்பா அளவுக்குக்கூட) ஜெ,கருணா இருவரும பெரும் களவாணிகளாகத்தான் தமிழ்நாட்டுமக்களின் எண்ணத்தில் இருக்கிறார்கள்..அதனால் இம்மாதிரியான அயோக்கிய அதிகாரிகள் தமிழகம் முழுக்க நிரம்பியிருக்கிறார்கள்.. தலை சரி இருந்தால்தானே வால் நேராக இருக்கும்.
ReplyDeleteசவுக்கு, தம்பி! நீங்க எத்தனை சவுக்கு, சாட்டை, வந்தாலும் இவனுகளை திருத்திடலாமென்னு நெனைக்கிறீங்களா. ஒரு நாட்டுபிரஜைகள் நல்வழியில் நடப்பதற்கும், சட்டம் ஒழுங்கை மதிப்பதற்கும் முன்னுதாரணமாக இருப்பதே அந்த நாட்டின் ஆட்சியாளர்கள்தான்,அது எங்கே தமிழ்நாட்டில் அல்லது இந்தியவில், இருக்கிறது, அடிப்படையே தமிழ் நாட்டின் தலைமை பிழை, அரச உத்தியோகத்தர்களுக்கு 65 வயதில் ஓய்வு என்று சட்டமிருந்தால், அரசியல்வாதிகளுக்கு மட்டும் அவை சேர்த்தியில்லையா, மன்னிக்கவும், தாயோழி குறுட்டு வேசைமோன் கருணாமூழி எத்தனைவருசத்திற்கு ஆட்சிசெய்வான், நீங்களும் பார்த்துக்கொண்டு விமர்சனம் செய்துகொண்டிருப்பீர்கள், கடமை கண்ணியம் கட்டுப்பாடு திமுக கொள்கை எங்கிறான் ,தாயோழி கடைப்பிடிக்கிறானா, நீ எத்தனை பொண்டாட்டியை வேணுமானாலும் வைச்சு படு, எனக்கு பிரச்சினை கிடையாது ,நீ ஒருதமிழர் தலைவன் என்று சொல்லிக்கொண்டு ,மனைவி, துணைவி, கணவி, இப்படி எத்தனையைச்சொல்லி வேலையெடுப்பாய், நாட்டுக்கு இதுவா முன்னுதாரணம், கலாச்சாரம் பண்பாடு ,என்கிறீர்களே தமிழ்நாட்டில் அது இருக்கா, அமெரிக்கர்கள் திறந்த கலாச்சாரத்தை கொண்டவர்கள் மனது பிடிக்கவில்லையென்றால் விவாகரத்து மறுமணம் எல்லாம் அவர்களுக்கு சகசம், அப்படியிருக்கும் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் , மோனிக்கா என்கிற உதவியாளருடன் தொடர்பு இருப்பதாக அறிந்தபோது ,அமெரிக்க மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை மன்னிப்பு கேட்டார் கிளிண்டன், கருணாநிதி செய்வானா, உலகத்தில் எங்கேயிருக்கிறது உங்க ஊர் அரசியல் போல ஒரு சாக்கடை, அடிச்சு விரட்டுங்கள், செம்மொழி மநாடு என்று சொல்லி ஒருவிழா 400 கோடி ரூபா செலவழிச்சு நடத்தி அங்கு தமிழைப்பற்றி ஏதாவது பேசினானா கருணாநிதி, நான் முன்பும் ஒருமுறை சுட்டிக்காட்டியது போல விஜய் ரி வி யில் இடம்பெறும் கதையல்ல நிஜம் நிகட்சியிலும் விசுவின் அரட்டை அரங்கத்திலும் சுட்டிக்காட்டப்படும் சமூக அவலங்களை கிஞ்சித்தேனும் கருத்தில் கொண்டதா கருணாவின் அரசு, அடுத்தநேர கஞ்சிக்கு விழியத்த ஏழை பாழைகளை விட்டு விட்டு, நாட்டில் உள்ளதிலேயே வசதியான தொழில் செய்யும் திரைப்படத்துறையினரிக்கு வீட்டு குடியிருப்பு வசதி முக்கியத்துவம் தேவைதானா, தகவல் அறியும் துறை என்கிற பெயரில் ,தங்கள் நாற்றங்களை மறைப்பதற்கான கூட்டம்தானது, எழுதுவதற்கு இன்னும் அதிகம் இருக்கிறது, பின்னூட்டமென்பதால் இத்துடன் நிறுத்திக்கொள்ளுகிறேன்,
ReplyDeleteதகவல் அறியும் உரிமைச் சட்டத்தை எப்படி நீர்த்துப் போகச் செய்யயலாம் என்பற்கு தமிழ்நாடு அரசாங்கம் செய்யும் நியமனங்களே சாட்சி.இது தொடர்பாக ஒரு குழு அமைக்க தயாராவோம்.
ReplyDeleteஆசிரியர், ஏவுகணை மாத இதழ்
(web site is under construction)
தேவை சமுதாயப்புரட்சி, தவிர நச்சுக்குண்டு போட்டாலும் இந்திய அரசியல்வாதிகளை, பயமுறுத்தவோ திருத்தவோ கொல்லவோ, முடியாது, கருணாநிதி, போனால் ஜெயலலிதா, ஜெயலலிதா போனால் கருணாநிதி இவர்களை விட்டால் வேறு வழியில்லையா, மாற்றுங்கள்,, அதிரடி மாற்றம் செய்யுங்கள் ,, மாடுகள் நிச்சியம் வழிக்கு வரும், ஒருகதைக்கு வைத்துக்கொள்ளுவோம் இப்போஇருக்கும் அரசியல்த்தலைகள் திடீரென பேயடித்தோ, வாந்திபேதி வந்தோ,,, பாம்பு கடித்தோ,, இடிவிழுந்தோ,,, வீதி விபத்திலோ,,, (மக்களின் அதிர்ஸ்டம் காரணமாக) செத்துபோய்விட்டனரென்று பேச்சுக்கு வைத்துக்கொண்டால், மக்களும் சேர்ந்து செத்துவிடுவார்களா, MGR விதிவிலக்காக அடிமட்ட மக்கள்மீது விசுவாசம் வைத்திருந்ததால் பல மக்கள் அவருடன் சேர்ந்து செத்தனர், மாற்றுங்கள் மாற்றம் ஒன்றுதான் மக்களால் செய்யக்கூடியது, வரப்போகும் புதிய வரவுகள்பயந்து செயல்ப்படும், கறுப்பு நரிகளை கடவுளாக்காதீர்கள், கறுப்பு ஆடுகளான அதிகாரவர்க்கத்தை திருத்த ஒரேவழி மாற்றம்தான், வல்லரசாகுது, வல்லரசாகுது என்று சொல்லிச்சொல்லியே உங்களுக்கு பொல்லடி விழுகிறது ,தயவுசெய்து மாற்றுங்கள்,,
ReplyDeleteநல்ல பதிவு. Just for your info : ´IAS IPS அதிகாரிகள் மாநாட்டில் பேசிய கருணாநிதி cyber crime களைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் ´ . திடீர்ன்னு சொல்லுருரத பாத்தா, அநேகமா உங்களுடைய சென்ற பதிப்ப படிசுருப்பர் போல இருக்கு , அல்லது உங்க ஜாபர் அவர் கவனத்துக்கு கொண்டு பொய் இருப்பாரு போல இருக்கு ...
ReplyDeleteDear Savukku, Tamil Nadu needs people like you. we all are with you.
ReplyDeleteI like all your post. Specially, the way you treat Jafer is really superb. The way you deal him, he should hang himself. what a shame less creature.
Just a matter if interest, why you target Jafer so much. (Its not wrong) there are may such cancers are in the society. among the top is the Karunanidhi. if he does the proper administration, this small criminals like Jafer are easily controlled. The Nerhu indoor stadium is meant for games. but what is the reallity more then the games, these joker Karunanidhi sits and enjoy the smell of those who fat. and TV channels and Kollywood conduct their shows.
You should get the details from RTI, how many games had been conducted there either by Pvt nor Tamil nadu sports authority and how may shows of other nature were conducted there.
Pls. let me know your E-mail. Since, I live out side India, I not able to join my hands to you.
you shold get the information
Dear Savukku,
ReplyDeleteYour each and every article is super . But we are tired Sir . We can't change the blood and behavior of these white color culprits . For a change please write about honest officers working both in IAS & IPS . It will be a honor to them and we will also happy to know about them . Because working honest is most difficult between these white color culprits and dirty politicians. So please honor them .
R.Jagan , Dubai.
சவுக்கு, கலைஞர் கைவண்ணம் பற்றி இன்னுமா உங்களுக்குத் தெரியவில்லை?
ReplyDeleteஎப்படி இவ்வளவு தகவலையும் திறட்டுறீங்க உண்மையிலையே உங்கள் சேவை பாராடுக்குரியதுதான்
ReplyDeleteமாற்றுங்கள் மாற்றம் ஒன்றுதான் மக்களால் செய்யக்கூடியது..../////தமிழகத்தில் பெரும்பான்மையான மக்களை களவாணி கூட்டங்களாக மாற்றி பல வருடங்கள் ஆகிவிட்டது..இதில் மாற்றம் என்பது குதிரை கொம்புதான்..ஒட்டுக்காக பணம் வாங்கும் ஒட்டுண்ணி கூட்டங்கள பெருகி..வெகு நாட்களாகிவிட்டது தன் சொந்த மக்கள் இலங்கையில் குழந்தைகளோடு போரில் சாகும் சமயம்,காமெடி சானல் பார்த்து.. சினிமாவை ரசித்து கொண்டிருந்தார்கள்.. ஆனால் இன்றைய தினசரி ஒன்றில் காஷ்மீரில் இளைஞர்கள் தங்களது மக்களுக்காக போராடியதை பார்த்தேன்.. தமிழ்நாட்டு சினிமா ரசிக மக்களிடமிருந்து எந்த மாற்றத்தையும் எதிர்பார்க்காதீர்கள்..
ReplyDeleteTO ALL MEMBERS OF NATIONAL MEDIA TIMES NOW,ND TV,CNN IBN
ReplyDeleteDear Sir,
Please put your Chennai reporter to explosive stories put up in www.savukku.net
This is real explosive material and you can get exclusive stories since there are mounts of documents with the blogger.
Unfortunately the blogger is fighting a losing battle with tbe police and bureaucrats.
Don't get put off by the photo of LTTE Leader Prabhakaran because the blogs are actually taking on the tamil nadu govt including how the information commissioner position is rigged and the state IG Jaffer is involved in clandestie activities
Rest is up to you to take it on since Tamilnadu is approching election and it is upto you to take on people voice
கருணாநிதி கவுன்ட்-டவுன் எங்க போச்சு, சவுக்கு-கு பயம் வந்து விட்டதா?
ReplyDeleteI see many old comments got removed.
ReplyDeleteசவுக்கு இது ஒன்றும் வரலாற்றுப் பக்கங்களில் இடம் பிடிக்கக் கூடிய அளவுக்கு மிகப் பெரிய சாதனை அல்ல.
ReplyDelete//ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தின் மிக மோசமான வீழ்ச்சி அணு சக்தி ஒப்பந்தம் என்றால், வரலாற்றுப் பக்கங்களில் இடம் பிடிக்கக் கூடிய அளவுக்கு மிகப் பெரிய சாதனை இந்த தகவல் அறியும் உரிமைச் சட்டம்.//
(உலக வர்த்தக சபை) WTO வின் அடிப்படை விதியின் படி, அந்நிய முதலீடு வெளிநாட்டில் செய்யப்பட வேண்டும் எனில் அந்த நாட்டில்(இந்தியா)"தகவல் அறியும் சட்டம்" அமுலில் இருக்க வேண்டும் என்பதால் தான் இந்த சட்டம் ஓட்டை உடைசலாய் இங்கே இருக்கிறது.
பயிருக்கு பாயும் நீர், வாய்க்கால் வழியோடி அங்கே சில களைகளுக்கும் கிடைப்பதாய்
நமக்கும் சில நன்மைகள். அவ்வளவே! களைகள் சில சமயம் பிடிங்கி எறியப்பட்டிருக்கிறது.
(அதிகத் தண்ணீர் குடித்ததாய் அரசு நினைத்ததால்)
அடிச்சு நொறுக்குங்க. அதிமுக, திமுக எதுன்னாலும் இவங்க தகவல் அறியும் உரிமை சட்டத்துக்கு எதிரானவர்கள் தான். உரிமை ஆர்வலர்கள் கட்டாயம் இபோதுல்லத்தை பாதுகாக்க வேண்டும்
ReplyDeletehow do you collect all the information? this e information journal is new to Tamilnadu. It is well done. keep it up
ReplyDeleteRti network must
ReplyDeleteForm a Big Network. We ready to Support You
ReplyDelete