Monday, August 23, 2010

கமிஷனர் கண்ணாயிரம்.



கருந்தேள் கண்ணாயிரம், கைதி கண்ணாயிரம் கேள்விப் பட்டிருக்கிறோம். அது என்ன புதுசா ? கமிஷனர் கண்ணாயிரம் என்று கேட்கிறீர்களா ?

நம்ப சென்னை மாநகர கமிஷனர் ராஜேந்திரன்தான் அந்த கண்ணாயிரம். இவர் பெயர் ஏன் கண்ணாயிரம் என்றால், இவர் கண் வைக்காத இடமே இல்லை. அது பற்றி விரிவாக சொல்ல இயலாது.



சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வல்லம்பர் இனத்தைச் சேர்ந்த ராஜேந்திரன், அடிப்படையில் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்தான்.

இவர் தந்தை, போஸ்ட் மேனாக இருந்தவர். அம்மா டீச்சர். குடும்பத்தில் இவரை கஷ்டப்பட்டுத்தான் படிக்க வைத்தார்களாம். முதலில் பேங்க்கில் கிளார்க் பணியில் சேர்ந்தார். அதன்பிறகு, சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி ஐபிஎஸ் பணிக்கு வந்தார்.

இவருக்கு இரண்டு மகள்கள் என்பது ஊருக்குத் தெரியும்.
ஆனால், ஒரு மகன் உண்டு என்பது யாருக்காவது தெரியுமா... தெரியாது.

காரணம், அந்த மகன் இவர் முதல் மனைவியின் மகன். இந்தப் பையன் சிந்தாதிரிப் பேட்டையில்தான் தற்போது இருக்கிறானாம்.

இவர் சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தில் டி.ஐ.ஜி&யாக இருந்த போது, இவருடைய முதல் மனைவியின் மகன் ஒரு திருட்டு வழக்கில் சிந்தாதிரிபேட்டை போலீஸார் கைது செய்துவிட, ‘உங்க அப்பா யார்ரா?’ என்று போலீஸார் அதட்டல் போட, ‘எங்கப்பா ஒரு டி.ஐ.ஜி. பெயர் ராஜேந்திரன்’ என்று சொன்னானாம்.

ஆடிப் போன போலீஸ், அப்போது உளவுத்துறை கண்காணிப்பாளராக இருந்த கந்தசாமியிடம் சொல்ல, அவர் ராஜேந்திரனிடம் தகவல் சொல்லி, அந்தப் பையனை பக்குவமாக வெளியே அழைத்து வந்தார்களாம்.



அப்பத்தான் இவருக்கு முதல் மனைவி இருக்கும் விவரமே வெளியே தெரியவந்ததாம். முதல் மனைவியை இவர் இதுவரையில் விவகாரத்துச் செய்யவில்லையாம்.

ஆனால், இரண்டாவது மனைவியைத்தான் மனைவி என்று ரெக்கார்டுகளில் பதிவு செய்திருக்கிறாராம். இது தொடர்பாக அகில இந்தியப் பணி நடத்தை விதிகள் என்ன கூறுகிறது தெரியுமா ?

THE ALL INDIA SERVICES (CONDUCT) RULES, 1968

19. Restriction regarding marriage.- 19 (1) No member of the Service shall enter into, or contract a marriage with a person having a spouse living; and

19 (2) no member of the Service having a spouse living, shall enter into, or contract, a marriage with any person :

Provided that the Government may permit a member of the Service to enter into or contract, any such marriage as is referred to in clause (1) or clause (2) if it is satisfied that-

(a) Such marriage is permissible under the personal law applicable to such member of the Service and the other party to the marriage and

(b) there are other grounds for so doing.

ஆக, இவர் இரட்டைத் திருமண வழக்கில் சிக்க வேண்டியவர். தோண்டித் துருவி விசாரித்தால் நிறைய பூதங்கள் இவர் விவகாரத்தில் புறப்பட்டு வரும் என்று தகவல்கள் கூறுகின்றன.

அவசரப்படாதீர்கள்... இவரைப் பற்றி இன்னும் நிறைய கதைகள் இருக்கிறது. வல்லம்பர் இனத்தைச் சேர்ந்த இவர், தன்னை முக்குலத்தோர் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறவர்.

இவர் தற்போது பெசன்ட் நகரில் பிரமாண்ட பங்களா கட்டிக் கொண்டு வாழ்ந்து வருகிறார். அந்த பங்களா பல லட்ச ரூபாய் மதிப்புள்ளது. இந்த பங்களா அமைந்திருக்கும் மனை, வீட்டு வசதி வாரியத்திடம் இருந்து வாங்கியது.

கடந்த வாரம் வரை இவருக்கு லெப்ட், ரைட், சென்டராக இருந்தவர், சண்முகம் என்ற ஆய்வாளர். இப்போது இவருக்கு நேர்ந்த கதி, பதிவின் இறுதியில்.

இந்த சண்முகம் 1991ம் ஆண்டு தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்புக்கு வந்த போது, அப்போதைய அமைச்சர் டி.எம்.செல்வகணபதியிடம் பி.எஸ்.ஓவாக இருந்தவர்.

சண்முகமும் செல்வகணபதியும் வன்னியர் என்பதுதான் இங்கே இருவரையும் இணைத்து வைக்கிறது.

இந்த சண்முகம் வன்னியர், அந்த காலத்திலிருந்தே மு.க. ஸ்டாலினின் உற்றத் தோழரான ராஜா சங்கருக்கும் உற்றத் தோழர்.

செல்வகணபதிக்கு பி.எஸ்.ஓவாக இருக்கும்போதுதான், ராஜேந்திரனோடு நெருக்கமாகிறார் இந்த பொட்டு சண்முகம்.

காரணம், தான் ஒரு தேவர் என்று சொல்லிக் கொள்ளும் ராஜேந்திரன், சசிகலாவுக்கு தூரத்து உறவு என்றும் சொல்லிக் கொள்வார். அந்த அடிப்படையில்தான், சசிகலா மூலம் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் இவர் உளவுத் துறை எஸ்.பியாக இருந்தார்.

பிறகு, அமைச்சராக இருந்த செல்வகணபதியிடமிருந்து, உளவுத்துறைக்கு மாற்றம் செய்து கொண்டு வந்தார், இந்த ராஜேந்திரன். அதுமுதல், ராஜேந்திரன் எங்கு போனாலும், இவரும் பின்னாலேயே போய்விடுவார். இவருக்குத் தெரியாமல் கண்ணாயிரம் அசைய மாட்டார். கண்ணாயிரத்தின் கண் அசைவைப் பார்த்து அவரின் விருப்பங்களை நிறைவேற்றுவதில், சண்முகம் வல்லவர். சண்முகத்தின் தொழில் திறமையைப் பார்த்து, கண்ணயிரம், தான் பணியில் இருந்து ஓய்வு பெறும் வரை வேறு எங்கும் மாறுதலில் செல்லக் கூடாது என்று கூறி விட்டார்.

தற்போது சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக இருக்கும் ராஜேந்திரன் அறைக்குப் பின்னாலேயே இவருக்கு அறை ஒன்று ஒதுக்கப்பட்டிருந்தது.

சென்னை மாநகர போலீஸ் உளவுப் பிரிவின் துணை ஆணையராக இருக்கும் சத்தியமூர்த்தி முதல்கொண்டு, சென்னையின் எல்லா துணைக் கமிஷனர்களும் அவர்களுக்கு கீழ் பணியாற்றும் எல்லா போலீஸாரும் கமிஷனருக்கு போடும் சல்யூட்டைக் காட்டிலும் சண்முகத்துக்கு கொஞ்சம் விரைப்பாகவே சல்யூட் போட்டு, அடிமைத்தனத்தை அப்பட்டமாக வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்கள், கடந்த வாரம் வரை.

சென்னை தி.நகர் ஜி.என்.செட்டி ரோட்டில் இருக்கும் ஒரு பிரபல ஸ்டார் ஹோட்டலில் ஷண்முகத்துக்கு நிரந்தரமாக அறை ஒன்றை ஹோட்டல் நிர்வாகம் கொடுத்திருக்கிறது. அங்கு அடிக்கடி போய் உட்கார்ந்து கொள்ளும் சண்முகம், அங்கிருந்தபடியே சென்னை மாநகர போலீஸை இயக்கிக் கொண்டிருந்தார். அவர் அங்கு அமர்ந்து கொண்டு செய்யும் சட்டவிரோத காரியங்கள் கொஞ்ச நஞ்சமில்லை. அனைத்தும் கண்ணாயிரத்தின் கண்ணசைவோடு தான்.



சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தில் இருந்த கண்ணாயிரம், அப்போது அங்கே தன்னுடன் இருந்த சண்முகம் மூலமாக துணை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பரிந்துரை செய்ததின் பேரிலேயே தமிழகத்தின் சட்டம் & ஒழுங்கு ஏ.டி.ஜி.பியாக நியமிக்கப்பட்டார்.

ஆனால், அந்தப் பொறுப்பில் இருந்து கழன்று கொண்டு தனக்கு சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் பதவி கிடைக்க வேண்டும் என்று பலமாக காய் நகர்த்தினார் ராஜேந்திரன்.

மாநகர கமிஷனராகப் போடுவதற்கு இரண்டு பேர்களை பரிசீலனையில் வைத்திருந்ததாம் அரசு. ஒருவர் கண்ணாயிரம்.

இன்னொருவர், நரேந்திர பால் சிங். அவர், குற்றப் பிரிவு கூடுதல் டிஜிபியாக பணியாற்றிக் கொண்டிருந்தவர். நரேந்திர பால் சிங்கும் சாமானியப்பட்டவர் அல்ல. மாமூல் வாங்குவதில் மன்னர்.

மாதந்தோறும், அவர் மாதாந்திர குற்ற ஆய்வு கூட்டம் ஒன்று நடத்துவார். “குற்ற ஆய்வுக் கூட்டம்” என்றால், ”மாமூலைக் கொடுடா மண்டு” என்று அர்த்தம். நம்பள யாரு கேக்கப் போறா என்று, நரேந்திர பால் சிங், மாதாந்திர மாமூல் வேட்டையில் இருக்க அது கண்ணாயிரத்துக்குத் தெரிந்து விட்டது. ‘இதுதான் சமயம்...’ என்று துள்ளிக் குதித்த கண்ணாயிரம், தனக்கு நெருக்கமான ராமானுஜம் மூலமாக காய் நகர்த்த ஆரம்பித்தார். அப்போது லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக இருந்தவர் ராமானுஜம்.

இந்தத் தகவல் அறிந்த, ராமானுஜம் சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்துக்குள் புகுந்து ரெய்டு செய்ய தன் துறை ஆட்களுக்கு உத்தரவிட்டு விட்டார். அவர்களும் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்குச் சென்று விட்டார்கள். இந்த திடீர் சோதனைக்கு தலைமை தாங்கிச் சென்றது, தற்போது லஞ்ச ஒழிப்புத் துறையில் தலைமையக கூடுதல் எஸ்.பியாக இருக்கும் எஸ்.ராஜேந்திரன்.

மாமூல் வசூலிக்கும் மீட்டிங்குக்கு முன்பாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் குவிந்துவிட, அப்போது அங்கு எஸ்.பியாக இருந்த ராஜேஸ்வரி, தகவலை நரேந்திர பால் சிங்கிடம் சொல்லிவிட்டார். நான் வரும் வரை பொறுத்திருக்கச் சொல்லுங்கள் என்று கூறிய நரேந்திர பால் சிங், அலுவலகம் வந்ததும், நீங்கள் உங்கள் சோதனையை தொடருங்கள் என்று கூறி விட்டு முதல் மாடியில் இருந்த தனது அறைக்குச் சென்று விட்டார். அந்த பெண் எஸ்பியின் பேச்சைக் கேட்டுக் கொண்டு, கூடுதல் எஸ்.பி.ராஜேந்திரனும், சிங் வரும் வரை ஒரு மணி நேரம் மங்குணி அமைச்சர் போல காத்திருந்ததுதான் வேடிக்கை.

தனது அறைக்குச் சென்ற நரேந்திரபால் சிங், அப்போது டிஜிபியாக இருந்த கே.பி.ஜெயினிடம் முறையிட்டிருக்கிறார். ஜெயின், ராமானுஜத்திற்கு போன் போட்டு, ”என்னது இது. சின்னப் புள்ளத் தனமா இருக்கு” என்று கூறவும், ராமானுஜம், தனது மங்குணி அமைச்சருக்கு போன் போட்டு, உடனே திரும்பி வாருங்கள் என்று கூறுகிறார். அவர் பெயரைக் கேட்டு மங்குணி அமைச்சர் தனது படை பரிவாரங்களுடன் திரும்புகிறார்.

லஞ்சமாக வாங்கிக் குவித்த பணத்தையெல்லாம் கையோடு பிடித்திருந்தும், லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாருக்கு வேறு வழியில்லை. திரும்ப வேண்டியதாகி விட்டது. அந்தப் பிரச்னை அப்படியே வெளியே தெரியாமலும் அமுக்கப்பட்டு விட்டது.

இருந்தாலும், ராமானுஜமும் ராஜேந்திரனும் சேர்ந்து கொண்டு இந்தப் பிரச்னையை வெளியே கசியவிட்டார்கள். ஏற்கனவே பல நாட்கள் உளவுத் துறையில் இருந்ததால், தனது தொடர்புகளை பயன்படுத்தி, ராமானுஜம் இந்தத் தகவலை பத்திரிக்கைகளுக்கு தெரிவிக்கிறார்.

விவகாரம் துணை முதல்வர், முதல்வர் என்று எல்லாதரப்பிலும் எடுத்துச் சொல்லப்பட்டது.

இது போதாதா? விளைவு துணை முதல்வர் ரெகமென்ட் செய்த கண்ணாயிரம், சென்னை மாநகர போலீஸ் கமிஷனராகி விட்டார்.

ஏற்கனவே கமிஷனராக இருந்த ராதாகிருஷ்ணன் நாயுடுவுக்கு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் மற்றும் போலீஸ் மோதலில் சிக்கல் இருந்ததால், அவரும் அங்கிருந்து தன்னை மாற்றிக் கொண்டுவிட படாதபாடு பட்டுக் கொண்டிருந்தார். மாற்றும் போது வேறு ஏதாவது டம்மி போஸ்டாக போட்டு விட்டால் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்த போது, கண்ணாயிரத்தின் காய் நகர்த்தல்கள் பலனைத் தர, இருவரும் மியூச்சுவலில் டிரான்ஸ்பர் ஆகி விட்டார்கள்.

இப்படி சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக வந்த பிறகு கண்ணாயிரம் அடிக்கும் கூத்துக்கள் மேற்சொன்னப்படிதான் போகிறது.

இன்று வரையில் ‘நேர்மை(?)’யான அதிகாரியாக வேஷம் போட்டுக் கொண்டிருக்கும் ராமானுஜத்துக்கும் கண்ணாயிரத்துக்கும் நட்பு தொடருகிறது.

ராமானுஜத்தின் மகளுக்கு விரைவில் திருமணம் நடக்கப் போகிறது. பொறுப்பு முழுக்க சண்முகத்திடம் கொடுக்கப்பட்டுவிட்டது.

பெண்ணுக்கு நூறு பவுன் நகை வரையில் ஏற்பாடு செய்து கொடுப்பதாகச் சொல்லி, நல்லி சில்க்ஸ் அதிபரிடம் சொல்லிவிட்டார்களாம். அவரும் நகைக்கு ஏற்பாடு செய்து கொடுத்து விட்டாராம். திருமணம் எழும்பூர் ராஜா முத்தையா செட்டியார் மகாலில் நடக்கிறது.

செட்டியாரிடம் பேசி மகாலையும் இலவசமாக ஏற்பாடு செய்து கொடுத்து விட்டாராம் சண்முகம். சாப்பாடு முதல் கொண்டு எல்லாமே சண்முகமும் சென்னை மாநகர போலீஸாரும்தான் ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்களாம்.

எல்லாமே கண்ணாயிரத்தின் உத்தரவின் பேரில்தான் நடக்கிறதாம். விழாவுக்கு தி.மு.கவின் பெருந்தலைகள் அத்தனை பேரும் வருவார்களாம். பரிசுப் பொருட்களை அள்ளித் தருவார்களாம். அதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கண்ணாயிரம் ராமானுஜத்திற்கு வாக்கு கொடுத்திருக்கிறாராம்.

இந்த லட்சணத்தில் ராமானுஜம் தான் ஒரு நேர்மையான அதிகாரி என்று ஒரு இமேஜை மெயின்டெயின் பண்ணிக் கொண்டு இருக்கிறார். நம்ப மறுப்பவர்கள், நல்லியை அணுகவும்.

கண்ணாயிரத்திற்கு இரண்டு மகள்கள் என்று சொன்னேன் அல்லவா ?. இருவருமே அனிமேஷன் கோர்ஸ் படித்தவர்கள்தான். முதல் மகளுக்கு திருமணமாகி விட்டது.

அவரும் அனிமேஷன் கோர்ஸ் படித்தவர்தான். அவர்கள் வேலைக்குச் செல்லாமல், வீட்டிலேயே இருந்திருக்கின்றனர். சண்முகம் மூலமாக துணை முதல்வர் மு.க.ஸ்டாலினின் நண்பர் ராஜா சங்கரிடம் சொல்ல, அவர் இப்போது முதல்வர் தயவில் தயாரிக்கப்படும் படங்கள் அத்தனைக்கும் ராஜேந்திரன் மகள்கள் மற்றும் மருமகனை அனிமேஷன் சம்பந்தப்பட்ட பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்ளச் சொல்லி உத்தரவு போட்டு விட்டார்.

இது ஒருபுறமிருக்க, கடந்த சில நாட்களுக்கு முன்பாக கண்ணாயிரம் பேட்சைச் சேர்ந்த பல போலீஸ் அதிகாரிகளும் மத்திய அரசு திட்டம் ஒன்றின் கீழ் ஹைதராபாத் மற்றும் லண்டனுக்கு பயிற்சிக்காக சென்று திரும்பினார்கள்.

கண்ணாயிரம் ஹைதராபாத் பயிற்சி பள்ளியில் இருந்த எல்லா நாட்களும் அங்கு வந்திருந்த போலீஸ் அதிகாரிகள் அவ்வளவு பேருக்கும் மாலையில் விருந்தும், காக் டெயில் பார்ட்டியும் வைத்துள்ளார். இதற்கான மொத்தச் செலவுகளையும் சென்னை போலீஸார் ஏற்பாடு செய்தார்கள். இந்தச் செலவு மட்டும் பல லட்சத்தைத் எட்டியிருக்கிறது. தங்கள் பேட்ச் மேட்டுகளிடம் தான் எவ்வளவு பெரிய ஆள் என்று காட்டிக் கொள்வதற்காகவே, கண்ணாயிரம் இது போன்ற பார்ட்டிகளை கொடுத்ததாக கூறுகிறார்கள்.

டி.கே.ராஜேந்திரன் தலைமையில் கே.பி.மகேந்திரன், எஸ்.கே.டோக்ரா மற்றும் லல்லாம் சங்கா ஆகிய நான்கு அதிகாரிகள் மட்டும் ஹைதராபாத் மற்றும் லண்டன் பயணம் பற்றி முதல்வரிடம் சொல்லி வாழ்த்துப் பெற்றனர்.



ஏற்கனவே, தனது பெயரைச் சொல்லி, தனது தம்பிகள் மூலமாக கட்டப் பஞ்சாயத்து செய்து வரும் ராதாகிருஷ்ணன் மீது கடும் அதிருப்தியில் இருந்த ஜாபர் சேட், பாண்டியன் மூலமாக, ராதாகிருஷ்ணன் மற்றும் கண்ணாயிரத்திற்கு இந்த நான்கு அதிகாரிகளும் சந்திக்கையில் நேரம் கிடைக்காத வண்ணம் ஏற்பாடு செய்திருக்கிறார்.

மற்ற நான்கு அதிகாரிகளும் பார்த்து விட்டார்களே, அவர்களுக்கு மட்டும் எப்படி நேரம் கிடைத்தது என்று அதிர்ச்சி அடைந்த கண்ணாயிரமும், ராதாகிருஷ்ணனும் தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி மறு நாள் கருணாநிதியின் அப்பாயின்ட்மென்ட் வாங்கி விட்டு சந்தித்து வாழ்த்துப் பெறுகின்றனர்.



கருணாநிதி ஜாபரிடம் என்னய்யா இது, ஏன் தனித்தனியா வந்து பார்க்கிறார்கள் என்று கேட்க, இதுதான் சாக்கு என்று, ராதாகிருஷ்ணனைப் பற்றியும், கண்ணாயிரத்தைப் பற்றியும் கருணாநிதியிடம் இருவரைப் பற்றியும், ஏராளமாக புகார் சொல்லுகிறார் ஜாபர் சேட்.

ஜாபர் சேட், ராஜேந்திரனை கமிஷனர் பதவியில் இருந்து மாற்றிவிட காய் நகர்த்தத் தொடங்கி விட்ட தகவல் கண்ணாயிரத்துக்கு கிடைக்கிறது.

என்னடா செய்வது என்று கண்ணாயிரம் யோசித்துக் கொண்டிருந்த வேளையில், அவர் மேசையில் இருந்த பேக்ஸ் மிஷினில் ஒரு புகார் வருகிறது. அந்தப் புகார் என்னவென்றால், ஜாபர் சேட் மனைவி ஏற்கனவே தனது கணவருக்கு வீடு இருக்கும் விவகாரத்தை மறைத்து, தனக்கோ, தனது கணவருக்கோ, தனது பிள்ளைகளுக்கோ வீடோ, மனையோ, அடுக்கு மாடி குடியிருப்போ இல்லை என்று சான்றளித்து வீட்டு வசதி வாரியத்தை ஏமாற்றி, மோசடி செய்து 1.25 கோடி மதிப்பிலான வீட்டு மனையை திருவான்மியூரில் பெற்றிருக்கிறார். அந்த மனையில் முதல்வர் செயலர் ராஜமாணிக்கத்தின் மகன் துர்கா சங்கர் மற்றும் லேண்ட் மார்க் நிறுவனத்துடன் இணைந்து 12 வீடுகளை கட்டி வருகிறார், இவரை நம்பி பணம் கொடுத்து வீடு வாங்கும் அப்பாவிகளை ஏமாற்றுகிறார் என்றும், அந்த வீட்டின் கட்டுமானத்தை நிறுத்துமாறும், ஜாபர் சேட்டின் மனைவி மீது மோசடி வழக்கு பதிவு செய்யுமாறும், ஜாபர் சேட் மீது குற்றத்திற்கு உடந்தையாக இருந்தார் என்று வழக்கு பதிவு செய்யுமாறும் அந்தப் புகாரில் இருக்கிறது.

அந்தப் புகாரை கையில் எடுத்த கண்ணாயிரம், கூடுதல் டிஜிபி யாக இருந்தாலும், தனது பதவிக்கு கீழாக ஐஜியாக இருக்கும் ஜாபர் சேட்டை சென்று அவர் அலுவலகத்தில் சந்திக்கிறார். அவர் மனைவி மீது வந்திருக்கும் புகாரின் மீது நடவடிக்கை எடுக்க மாட்டேன் என்றும், தன்னை கமிஷனர் பதவியிலிருந்து மாற்ற வேண்டாம் என்றும் கேட்கிறார். பதிலுக்கு ஜாபர் சேட் அவரிடம் ஒரு கோரிக்கையை வைக்கிறார். உடனடியாக ஏதாவது ஒரு வழக்கு போட்டு சவுக்கையும், தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் செயலர் புகழேந்தியையும் ஒரு வாரத்துக்குள் கைது செய்ய வேண்டும் என்று கூறுகிறார்.

கண்ணாயிரத்துக்கு நெருக்கடி. செய்தால் பெரும் சிக்கலாகும். செய்யாவிட்டால் கமிஷனர் பதவி போய் விடும். என்ன செய்வது என்று முழித்துக் கொண்டு உள்ளார் என்று கூறப் படுகிறது.

ஆனால், ஜாபர் சேட், தான் சொன்ன காரியத்தை இவர் செய்து முடிக்கவில்லை என்பதால் கண்ணாயிரத்தை மாற்றி விட்டு, டி.கே.ராஜேந்திரனை கமிஷனராக போட்டால், அரசுக்கு நல்ல பெயர் கிடைக்கும், கண்ணாயிரம் போனில் இப்படியெல்லாம் பேசுகிறார், இவருடனெல்லாம் பேசுகிறார் என்று டேப்பை போடுகிறார். இதைக் கேட்டு ஒன்றும் சொல்லாமல் கருணாநிதி மவுனமாக இருந்ததாக கூறப் படுகிறது.

கண்ணாயிரத்தோடு இத்தனை நெருக்கமாக இருந்த சண்முகம், கடந்த வாரம் மாறுதல் செய்யப் பட்டு “காத்திருப்போர் பட்டியலில்“ வைக்கப் பட்டுள்ளார். இத்தனை செல்வாக்காக இருந்த சண்முகம், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப் பட்டிருப்பது பல புருவங்களை உயர்த்தியிருக்கிறது.

இந்த சண்முகம் காத்திருப்போர் பட்டியலுக்குப் போனதற்கு, இரண்டு கதைகள் காவல்துறை வட்டாரத்தில் உலா வருகின்றன.

பெண் சோக்கு உள்ள எல்லா மாநகர ஆணையர்களும், ரகசியமாக ஒரு விபச்சார தடுப்பு பிரிவை வைத்திருப்பார்கள். அந்தப் பிரிவில் உள்ள அதிகாரிகள், நட்சத்திர ஓட்டல்களில் திடீரென்று புகுந்து, திரைப்பட நடிகைகள் யாருடனாவது இருக்கையில் உள்ளே நுழைந்து, கைது, செய்தித் தாளில் புகைப்படம் என்று மிரட்டுவார்கள். மிரண்ட நடிகைகள் என்ன சொன்னாலும் கேட்பதாக கூறியவுடன், கமிஷனரிடம் போனைப் போடுவார்கள். அந்த கமிஷனர், டீல் பேசி விட்டு சிறப்புப் படையை திரும்ப வரச் சொல்லி விடுவார்.

இது போல, “தி பார்க்“ ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஒரு பிரபலமான மூன்றெழுத்து நடிகை இது போல சிக்கியதாகவும், அவரைப் பிடித்தது சண்முகம் என்றும், கண்ணாயிரத்திடம் போனில் பேசியவுடன் சண்முகம் திரும்ப அழைக்கப் பட்டார் என்றும், இதற்குப் பிறகு, கண்ணாயிரமும் அந்த மூன்றெழுத்து நடிகையும் மிக நெருக்கமானதாகவும் கூறப் படுகிறது. இந்த சண்முகம், அந்த நடிகையை தொடர்பு கொண்டு, தனி ஆவர்த்தனம் நடத்த முயற்சி எடுத்ததாகவும், இது தெரிந்த கண்ணாயிரம், இவரின் மாறுதலுக்கு பரிந்துரைத்ததாகவும், கூறப் படுகிறது.

மற்றொரு கதை, பல கோடிகள் புரளும், பெரிய மனிதர் சம்பந்தப் பட்ட ஒரு ரியல் எஸ்டேட் டீலில் சண்முகம் தலை நுழைத்து, ஒரு பெரிய தொகையை அடிக்க முயற்சிக்கும் போது, மாட்டிக் கொண்டு, மாறுதல் செய்யப் பட்டதாகவும் கூறப் படுகிறது.

எது எப்படியோ. காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் சண்முகம், கடும் கோபத்தில் இருக்கிறார். இவர் ஜாபர் சேட்டை சந்தித்து, ஏன் என்னை காத்திருப்போர் பட்டியலில் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்கிறார். அவரை சமாதானப் படுத்த, ஜாபர் சேட் கொஞ்ச நாள் மருத்துவ விடுப்பில் செல்லுங்கள், பிறகு நல்ல போஸ்டிங் வாங்கித் தருகிறேன் என்று வாக்குறுதி கொடுத்து, சண்முகத்தை விடுப்பில் செல்லச் சொல்லியிருக்கிறார்.

ஆனால் சண்முகம் இந்த சமாதானத்தால் சமாதானம் அடையாமல், கண்ணாயிரத்தின் ரகசியங்களை ஒரு முக்கிய நபரிடம் கூறத் தொடங்கியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. அவரை தொடர்பு கொள்ள சவுக்கு முயற்சித்து வருகிறது. ஓரிரு நாட்களில் சந்திக்கக் கூடும். சந்தித்த பின் கிடைக்கும் தகவல்கள் சவுக்கு வாசர்களுக்கு அல்லாமல் வேறு யாருக்கு ?

இப்போது சொல்லுங்கள். கமிஷனர் கண்ணாயிரம் என்ற பெயர் இவருக்கு பொருத்தம் தானே ?

சவுக்கு

37 comments:

  1. சவுக்கு சுளீர் சுளீர் என்று சுழல்கிறது. அப்படியே ஒரு மேட்டர் ஒன்றையும் கவனியுங்கள். கோவையில் ஒரு பஸ்ஸை மக்கள் சிறை பிடித்ததாகவும், அது மதுரை உயர் நீதிமன்ற நீதிபதிக்கும் சொந்தமானது என்று சொன்னவுடன் போலீஸார் பயந்து பின் வாங்கியதாகவும், மக்களை மிரட்டி விட்டு அந்த பஸ் டிரைவர், பஸ்ஸை எடுத்துக் கொண்டு சென்றதாகவும் செய்தியைப் படித்தேன். அது என்னவென்று கொஞ்சம் விசாரித்து எழுதுங்களேன். அந்த பஸ் பெயர் சத்யஸ்ரீ - கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் ஓடிக்கொண்டிருக்கிறது

    ReplyDelete
  2. சவுக்காரே சூப்பருங்கோ!
    இந்த நாதாரிகளை நார் நார கிலிக்கரீங்க!!

    ReplyDelete
  3. உங்கள் தகவல் சரியானதே. அந்த நீதிபதிக்குச் சொந்தமானதுதான். அந்த நீதிபதி அத்தனை சொத்துக்கும் கணக்கு காட்டியிருக்கிறார். இவர் நீதிபதியாவதற்கு முன்பே, இவர் பற்றிய விரிவான விசாரணையில் சவுக்கு இறங்கியது. நெடுங்காலமாக இவர் சொந்த பஸ் வைத்து தொழில் செய்வதாக உயர்நீதிமன்றத்திற்கு தகவல் தெரிவித்திருக்கிறார். அதனால், சட்ட பூர்வமாக இவர் மீது நடவடிக்கை எடுக்க இயலாது.

    ReplyDelete
  4. Everything is okay,,I agree but in all the stories,finally it came to an end with "Jaffer".

    Is it possible to wrote something without jaffer?

    ReplyDelete
  5. //அந்த நீதிபதிக்குச் சொந்தமானதுதான். அந்த நீதிபதி அத்தனை சொத்துக்கும் கணக்கு காட்டியிருக்கிறார். இவர் நீதிபதியாவதற்கு முன்பே, இவர் பற்றிய விரிவான விசாரணையில் சவுக்கு இறங்கியது. நெடுங்காலமாக இவர் சொந்த பஸ் வைத்து தொழில் செய்வதாக உயர்நீதிமன்றத்திற்கு தகவல் தெரிவித்திருக்கிறார். அதனால், சட்ட பூர்வமாக இவர் மீது நடவடிக்கை எடுக்க இயலாது.// அப்படியானால் அந்த நீதிபதி நிரபராதி என்று அர்த்தமா,இல்லை தலைவர் கருணாநிதியைப்போல விஞ்ஞானபூர்வமாக சுவடு தெரியாக்கலையைப்பயன்படுத்துகிறாரா,அவர் நியாயபூர்வமாக நடப்பவராக இருந்தால் தேவையில்லாமல் அவரது பெயரை அசிங்கப்படுத்தலாகாது என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்,

    ReplyDelete
  6. What to do with these officers?
    We can punish the politicians at least every 5 years(or lesser).How the public can control them ?

    What you show as picture is just the tip of an iceberg (probably in the City of Chennai only)

    What about the entire Tamilnadu ?

    Tell us what can be done to change this.

    ReplyDelete
  7. சவுக்கு உங்களின் உடனடி பதில் அருமையாக இருக்கிறது. வாசகர்கள் தங்கள் பகுதிகளில் நடக்கும் விவகாரமான சம்பவங்களை சவுக்கில் பின்னூட்டமிடலாமே. செய்வார்களா?

    ReplyDelete
  8. very good savukku, apdiya karunaanidhi saidha motha oolalila madippu evlonnu sonna nalla irukkum

    ReplyDelete
  9. தகவல்கள் மலை போல் உள்ளது.. இப்படி இவனுக இருந்தா எப்படி நம்ம நாடு முன்னேறும்.. கூடிய சீக்கிரம் நைஜீரியா,நமீபியா போன்ற ஆப்பிரிக்க நாடுகள் போல் ஆகிவிடுவோம்னு தெளிவா தெரியுது...

    ReplyDelete
  10. Why the both officers not weared cross belt while seeing high authority ( CM )

    ReplyDelete
  11. //தகவல்கள் மலை போல் உள்ளது.. இப்படி இவனுக இருந்தா எப்படி நம்ம நாடு முன்னேறும்.. கூடிய சீக்கிரம் நைஜீரியா,நமீபியா போன்ற ஆப்பிரிக்க நாடுகள் போல் ஆகிவிடுவோம்னு தெளிவா தெரியுது..// தினேஷ் எந்த நட்டிலை தம்பி இருக்கிறீங்க,இந்தியா ஊழல் மற்றும் வறுமையில் ஆப்பிரிக்காவை வின் பண்ணி ஓடிக்கொண்டிருக்கிறது,

    ReplyDelete
  12. ""கூடிய சீக்கிரம் நைஜீரியா,நமீபியா போன்ற ஆப்பிரிக்க நாடுகள் போல் ஆகிவிடுவோம்னு தெளிவா தெரியுது""


    correct thaliva

    ReplyDelete
  13. த‌மிழின‌ மான‌ங்கெட்ட‌ த‌லைவ‌ர் த‌ள்ளாடி த‌டுக்கி விழும் வ‌ய‌திலும் உங்க‌ள் ச‌னி நீடிக்க‌ பின்வ‌ரும் பொன்னான‌ வாக்குறுதிக‌ளை அளித்துள்ளார்

    1. ஆளுக்கு ஒரு திருவோடு (வ‌ரி வில‌க்கு கிடையாது)
    2. மாத‌மிருமுறை தீப்பெட்டி (மின்சார‌ம் அர‌சிய‌ல் வியாதிய‌ஸ்த‌ர்க‌ளுக்கு ம‌ட்டும்)
    3. குறுக்கு வ‌ழியில் ப‌ண‌க்கார‌ராக‌ குறிபேடு (ம‌ருவ‌த்தூராரை, நித்யான‌ந்தாவை மிர‌ட்டிய‌ வித‌ங்க‌ள்)
    4. ந‌டிகைக‌ளுட‌ன் உல்லாசம் மேற்கொள்ள‌ அவ‌ர்க‌ளுக்கு த‌னி உற்சாக‌ ந‌க‌ர‌ம்
    5. ம‌க‌ளின் பூரிப்பை அதிக‌ரித்திட‌ ராசாவுக்கு துணைப் பிர‌த‌ம‌ர் ப‌த‌வி
    6. பெண்க‌ள் ந‌ல‌ம் பேண‌ குழ்பூ த‌லைமையில் திரும‌ண‌‌த்திற்கு முன் த‌டுக்கி விழ வாய்ப்பும் வாழ்க்கையும் பெற‌ த‌னி அமைச்ச‌க‌ம். 5திற்கும் மேற்ப‌ட்ட‌ ஆண்களை வ‌ழுக்கி விழ‌ செய்யும் பெண்க‌ளுக்கு சிற‌ப்பு ச‌லுகைக‌ள்
    7. புதிய‌தாக‌ க்ற்ப‌ழிப்புத் துறையும், குடிமை பொருள் வ‌ழ‌ங்க‌லுட‌ன் குடி பொருட்க‌ளும் வ‌ழ‌ங்க‌ த‌னி துறைக‌ள் அமைக்க‌ப‌ப்டும்
    8. காவ‌ல் நிலை‌ய‌ங்க‌ளில் சொகுசு ப‌டுக்கை வ‌ச‌திக‌ள்
    9. அர‌சு அதிகாரிக‌ள் ஒரே நாளில் இத‌ர‌ மொழிக‌ள் க‌ற்க‌ ஜாஃப‌ர் த‌லைமையில் த‌னி துறை (கோவை பார்ட்டி கை கொடுக்கும்)
    10. அனைத்து வீடுக‌ளுக்கும் குறிப்பாக‌ ப‌டுக்கைய‌றைக‌ளில் கேம‌ரா இல‌வ‌ச‌மாக‌ பொருத்தி ச‌ன் / க‌லைஞ‌ர் தொலைக்காட்சிக‌ளில் நேர‌டி ஒளி ப‌ர‌ப்பு செய்ய‌ப்ப‌டும்

    ReplyDelete
  14. The systematic indecent and fabricated stories for virtual assault on selected police officers indicates that a group of police officers who are enemical to these officers are the Actual Brain behind Savukku and it's team of perverts. The Tamils are the best perverts in the world who can reduce to such petty levels. Savukku is attempting to destablize the State with this clandestine tactics of hitting the Police officers in order to demoralise the Senior Police officers in their functioning. The success of Tamil Nadu Police against the clandestine activities of LTTE Terrorists and Naxalites in the State has irked the Think Tank of these perverted elements to rally behind Savukku. It looks like that some scoundrels in Police department who have been punished for acts of corruption, misappropriation and enemical to the targetted officers are also in hand in glove with this humbug!

    ReplyDelete
  15. சவுக்கு ஆனாலும் இவ்வளவு கவலைப் படக் கூடாது! திருக்குவளைக் காரர் செய்யாத ஸ்டெப்னி வேலையையா கண்ணாயிரம் செய்து விட்டார் :)

    ReplyDelete
  16. Wow...Savukku sir, what an English...By the way, that actress name starts with 'third no.'...right...please confirm the same...else, my head will get exploded:):P

    -Arun

    ReplyDelete
  17. I am really taken by sweet surprise on your prowess in English!

    Not that you are not capable of such a Language, but because you are good at both Tamil and English, which is a rare skill, these days.

    Good luck

    ReplyDelete
  18. well savukku,appreciate you.but you be carefully.

    ReplyDelete
  19. Dear Savukku Sir,

    Ecellent sir.Welldone.kepp rocking. yesterday I saw him(Kannaiyram) through TV channel and he said about parents wellfare and people awareness .I thought he is good guy.Wat a human being police officer. After your article he also same like our hero Jaffer uncle.

    Except our Hero uncle,can you tell us corrupted officers and Journalist. Meantine if you establish who is sincere officers,we can indentify.

    Savukku sir really all your article very great!!
    We are always with you. Dnt worry . Be happy.

    Tamilan.

    ReplyDelete
  20. Savukku,
    The information in your articles are good. But i dont understand why you publish caste related info of the officers. Though the content is good, becuase of the style of the article, people will think you have personal agenda against these officers. Carry on the good work of identifying corrupt officer.
    BTW, the countdown for DMK govt should be till May 2011 right?

    ReplyDelete
  21. 5.// ம‌க‌ளின் பூரிப்பை அதிக‌ரித்திட‌ ராசாவுக்கு துணைப் பிர‌த‌ம‌ர் ப‌த‌வி// puriyavillaiye,தயவுசெய்து விளக்கம் தரவும் மண்டை என்னவோ செய்கிறது,பூரிப்பு விடயந்தான் ,மகள் வீட்டிலை ஓத்துக்குவாங்களா,அப்பா தெருஞ்சுதான் நடக்குதுங்களா,செம்மொழி மானாட நிகழ்ச்சிப்ப தனியா ரெண்டுபேரும் திரிஞ்சதா பேசிக்கிறாங்க, நீங்க சொல்லுற பூரிப்பு ஸ்பெக்ரம்,ஊழலோடு தொடங்கிய ஊடலா,தயவுசெஞ்சு என் தலைவெடிக்கிறத்துக்கு முன் பூரிப்பை புட்டுவையுங்க, இல்லேன்னா தொடர்ந்திட்டேயிருப்பேன்,குய்பூ விவகாரமெல்லாம் வாணாம் புளிச்சுப்போன சமாச்சாரம்,

    ReplyDelete
  22. I agree with the term Tamil perversion.But have to point out that it has started only from the best wishes of the Karunanidhis party.They have started the culture of RECORDDANCE in all the exhibitions and temple festivals in Tamilnadu.All the sponsors and beneficiaries were DMK party men. Further when it was an accepted tradition in the whole world of democracy that the morality of the leaders was the supreme to be a leader in public life,it was a the Tamilians who proved the world that only scoundrels,thieves,bootleggers,womanizers and all immoral can become their leaders.They elected them to rule then where is the place for morals. I hope at least the present day readers of Savukku understand who are the scoundrels.

    ReplyDelete
  23. Good Story but bit length take care of screen play u r producer have invested so be careful

    ReplyDelete
  24. why only ips officers? for a change how about this? what is the connection between kanimozi and jagath casper(fraud)?

    ReplyDelete
  25. You are having a count down for Karunanidhi Rule. But you ask Karunanidhi to be cautious in his decisions in election year to ensure victory. Two stances are ridiculously contradict. All your posts are revolve around Jaffer Sait. While your posts convince that Jaffer Sait is a corrupt officer, in taking up tirade of this intensity against him betrays you in hiding your intentions. Most ridiculous of all is that your claim that Karunanidhi has earned prestige by appointing Dinamani Vaidyanathan, in Classical Tamil Conference Committee and Vaithi has not earned honour from his inclusion. His penchant for being in power center and coloumns of his own news paper is well known. Your observation shows that your imbalanced and inebriated by the showers of praise for your cynical writings. Do you know Vaithi's predecessor Sambandham never took part in this sort of official committees and kept himself off the limelight, as he regarded it as principles of true journalist. I wonder how bad tastes of third rated right wing fascist mathi has earns your appreciation. I am writing this because i love to visit Savukku and admire bold journalism like character shown by you in bringing out facts that mainstream media fails to do. due to font problem I could not type in Tamil and I regret that. If you correct yourself when it comes to overstepping and lopsided comments your site could become a great contributor to the society and democratising TamilNadu. Best of Luck.

    mmmmm
    I don't want to mention my name.

    ReplyDelete
  26. // ம‌க‌ளின் பூரிப்பை அதிக‌ரித்திட‌ ராசாவுக்கு துணைப் பிர‌த‌ம‌ர் ப‌த‌வி//athuதான் நான் முன்னையே கேட்ட விசயந்தான், வீட்டிலை ஓத்துக்கிட்டாங்களா, அவங்க புருசன் என்ன செஞ்சிட்டிருக்காரு,கோடிக்கணக்கா வர்ர காசுக்காக புருசனும் போனாபோகுதுன்னு கண்டும் காணாம அவரும் ஓத்துப்பாரா, என்ன கொடுமடா இது,

    ReplyDelete
  27. பல தகவல்கள சொல்றீங்க
    ரொம்ப நன்றி சவுக்காரே

    //“தி பார்க்“ ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஒரு பிரபலமான மூன்றெழுத்து நடிகை இது போல சிக்கியதாகவும், //
    எல்லாத்தையும் உடைச்சி எழுதுற நீங்க
    இந்த நடிகையோட பேர மட்டும் சொல்லலீங்களே ஏன்?

    ReplyDelete
  28. first savukku thalaivanukku oru voo poduranga! savuku adi seruppadi viluntha mathiruthan irukku thalaiva, innum neriya vishayangal unga kitta irunthu expect panrom, commissioner t. rajendran pathirikaikku petti kudukkum pothu mattum than veera vesam podukirar. athu verum publicitykkuthan. thinamum yethavathu oru sakku vachi press meet, yeppudiyavathu avaroda foto papperla vanthuranum. avar oru vilambar virumbi mattume.
    but seayalil onnum avarala seyya mudiyathu. yeena vasool panrathula mattumthan avaroda kavanam poguthu. savukku sonnathu athanaiyum vunmai than.
    wish u all the best, savukku sir, thodarnthu unaga saattayai sullattrunga

    ReplyDelete
  29. Savukku prides himself as a person to expose all corrupt deeds of politicians freely and frankly. He started well. So we should think he has principles.

    His principles became clear, to our delight, when he retaliated nicely to a man who wrote in support of police officers.

    Now, he is silent on a comment which asks him to expose the actress. Why double standards?

    Anth moonrelzhuthu nadiaga - this is the style of yellow journalism, who dont want own responsbility for what they write as a precaution to escapte libel suit. They can say, we did not mean that actress.

    What about savukku? He is also playing the same game of yellow journals ? Can you reply with the same speed with which you replied to the supporters of corrupt police officers?

    ReplyDelete
  30. I have no regret in writing in English. Because you have proven yourself to be a master of English.

    Let me move on to the matter.

    So, do you stand behind such comments or not>

    If you do, then you are like any other yellow journals indulging in character assassination of people.

    If you are not, you should delete such comments already on, and not allow any such comments in future.

    In case you do want, the ask such people to post with proofs like photos and letters exchagned between the illicit lovers etc.

    Savukku, I am frank with you. Your ambition to ascend moral highground and expose corruption deeds of the high and mighty in TN. We are proud of you, if that is so.

    But you will be losing credibility and end in the pit of yellow journalism, if you allow anything without proof.

    Honesty is the best policy - I think, it is your motto. Let such honesty be fool proof.

    People will laugh at you. Because how long one can pose?

    ReplyDelete
  31. Dear readers, sorry for the delayed response. The name of the acttress is not exposed because, it is the usual response of yellow magazines to name the actresses and not the police officers. Savukku is not inclined to expose the actresses for they are victims of these corrupt police officers.

    The only comment allowed to be published without proof against a journo was published in a different context, which the concerned person was made aware of. Other comments, against some persons, without any proof containing personal attacks were never published. Other than that, the comments containing personal attacks against politicians are understood by savukku as the anger shared bby savukku and hence they are published.

    Regarding Dinamani's Vaidhyanathan, it is not only Vaidhyananthan. Karunanidhi included Jouros in the official committees of Tamil Conference to satisfy his ego, that they would not write anything adverse about him. The claim that it was Vaidhyanathan's pride to attend the conference is not particularly about Vaidhyanathan. It is meant for all journalists whom Karunanidhi considers would become their stooges once they are included in the official committeee. Though other journalists chose to become Karunanidhi's stooges, Vaidhyanathan chose to differ. And Savukku doesnt approve Vaidhyanathan accepting the official posting, which could be seen from savukku's posing titled செம்மொழி சொம்பு விருதுகள்.

    The countdown script developed some errors and the timings started running erroneously. Our efforts to set it right did not yield the desired results. Hence it has been removed. Nothing else like leaning with Karunanidhi or going soft on Karunanidhi.

    ReplyDelete
  32. Why are you selectively publishing comments? While yo seem to be doing a good job on the one hand by exposing a few, what you intend to do should not get enimical towards a few individuals and targetting them quite often. Why cant you make this blog an expression of real social justice by covering all those who err?

    ReplyDelete
  33. You say "Other comments against persons without proof will not be allowed"

    A blatant lie.

    You have allowed the comments on kanimozhi and raja.

    They still stand in spite of being pointed out!

    Double talk.

    ReplyDelete
  34. DEAR SAVUKKU,
    DONT FALL INTO THE TRAP SET BY THESE ANONYMUS OFICERS. THESE PEOPLE WANT TO LOOT OUR COUNTRY.

    GOPALASAMY. SAUDI ARABIA

    ReplyDelete
  35. I endorse Gopalaswamy.

    The anonoymous man who commented on kanimozhi and raja relationship must be a man from the police. His intention is to trap you. That is why, I am asking you to be careful and not allow such comments. Let him post with identity so that you can call for proof. If he complies with that, you can allow the comment with proof.

    Everying else should not be allowed. Because, he escpates and you get trapped.

    ReplyDelete
  36. சவுக்கு சாட்டயாகி, சாட்டை வாளாகி, வாள் வேலாகி, வேல் வில்லாகி, வில் துப்பக்கியாகி, துப்பாக்கி பீரங்கியாகி, பீரங்கி ஏவுகனயாகி, ஏவுகணை அணுகுண்டாகி அதிகார வர்கத்தில் செய்யும் அட்டுழியங்களை ஆதாரத்தோடு தாக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  37. please give comment about Ramesh Inspetor of police Ayanavaram

    ReplyDelete